வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

இந்த கூட்டில் நான் இடும் முட்டை எப்படிப்பட்டதாக இருக்கும்!
எனக்கு
தெரியாத இலக்கியங்களை தெரிந்துகொள்வதற்காகவும்,
புரியாத சமுதாய நிகழ்வுகளை புரிந்துகொள்வதற்காகவும்,
நான் எடுக்கும் சிறு முயற்சியாக இருக்கும்.

எழுத்துலகில் தவழ்ந்துவரும் மழலை நான், தவறு இருந்தால் மன்னிக்கவும்.

இந்த பயணத்தில் இல்லா நெற்றிக்கண்ணை நான் திறக்க முற்பட்டால் நன்நெறி கூற நக்கீரர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில்!!
- பூபதி

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
என் பேனாவின் கால் தடங்கள் ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 



பூபதி

ஊர் : உழைப்பிற்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந்தவன்.

தொழில் :பிடித்தமான தொழிலை தேடி இன்று வரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

விருப்பம் : மனித விருப்பங்கள் மாறக்கூடியது என்பதற்க்கு நானும் ஓர் உதாரணம்.

விரும்பி படிப்பது: பாரதி, பாரதி சார்ந்த எழுத்துக்களை.

விருப்பமானவர் : பன்றி ஏன் தெருவிற்கு வந்தது என பகுத்தறிவு பேசிய பாவேந்தர்.

பிடித்த எழுத்தாளர் : இன்னும் பிடிபடவில்லை.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பூபதி தொடர்கள் வாயில்


வேற்றுமைச் சிந்தனைகள் உள்ள ஒற்றுமைகள்

பூபதி  

“ஒற்றுமை” இந்த ஒரு வார்த்தையை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்த, நாம் பல வேற்றுமை சிந்தனைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் மேற்கொண்டிருக்கும் இந்த ஒற்றுமை சிந்தனைகள் உண்மையானது அல்ல என்பதே உண்மை ஏனெனில் நமக்கு ஒற்றுமை என்பதுதான் முக்கியமாக இருக்கிறதே தவிர நம்முடன் ஒற்றுமையாக இருப்பவர்களை நாம் முக்கியமாக கருதுவதில்லை.

சில முரண்பாடான விசயங்களை நம் வாழ்க்கையில் நாம் அவ்வப்போது செய்கிறோம். உதாரணமாக சுதந்திரமாக திரிந்துகொண்டிருக்கும் பறவைகளை பிடித்துக் கொண்டுவந்து, சுதந்திரம், சமாதானம் என்ற பெயரில் மீண்டும் அவற்றை பறக்கவிடுகிறோம். நம்முடைய சுதந்திரத்தை, நம்முடைய சமாதானத்தை பறைசாற்றிக்கொள்ள, அதற்கு சிறிதும் தொடர்பு இல்லாமல் வாழும் பறவைகளின் வாழ்வில் சில விசயங்களை நாம் வலுக்கட்டாயமாக நுழைக்கிறோம். அந்த பறவைகள் ஏற்கனவே சுதந்திரமாகத்தானே இருந்தது என்பது பற்றியெல்லம் நமக்கு கவலையில்லை. அவற்றை வழுக்கட்டாயமாக கொண்டுவந்தாவது நம்முடைய சுதந்திரத்தை பிரகடனப்படுத்த வேண்டும் என்பதுதான் நம் நோக்கம். இந்த செயல்பாடுகளை நாம் பறவைகளோடு மட்டுமல்ல பல நேரங்களில் மனிதர்களிடமும் செயல்படுத்திவிடுகிறோம்.

இந்த ஒற்றுமை சித்தாந்தங்களை நாம் நிலை நாட்ட விரும்பும்போது மற்றவர்களின் நிலை பற்றியோ அல்லது அவர்களின் விருப்பு, வெருப்பு பற்றியோ நாம் அக்கறை கொள்வதில்லை. அவர்களுக்கு அதில் விரும்பம் இருக்கிறதா இல்லையா என்பது பற்றியெல்லாம் யோசிக்காமல் நாமாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம். சில கூட்டுக்குடும்பங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதை காண முடியும். வெளியில் ”நாங்கள் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறோம் பாருங்கள்” என்ற ரீதியில் நடந்து கொள்வார்கள் ஆனால் வீட்டுக்குள் போய் பார்த்தால் ஒவ்வொருவரும் தங்களுடைய மனதில் எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதறும் எறிமலைபோல் புகைந்து கொண்டிருப்பார்கள். ஆனாலும் அவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். காரணம் மற்றவர்கள் முன் அவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று காண்பிற்பதற்காக. அங்கு நிகழும் சிறு சம்பவங்கள் கூட பெரிய விபரீதங்களை ஏற்படுத்திவிடும் என்ற அச்சம் நிலவிக்கொண்டே இருக்கும். ஆனாலும் அங்கு அதிகார நிலையில் உள்ள நபர்கள், மற்றவர்களிடம் ”நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் பாருங்கள்” என்ற நிலையை வெளிப்படுத்தவே விரும்புவார்கள். இதனால் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் உள்ளுக்குள்ளே பொறுமிக்கொண்டும், பிரச்சனைகளை தாங்கிக்கொணும் வாழ்வார்கள்.

கூட்டுக் குடும்பத்தில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் இந்த முரண்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அனைவரும் ஒற்றுமையுடன் நடந்து கொள்வதுபோல் நடிப்பதால் அவ்வளவாக இந்த விசயங்கள் வெளிவருவதில்லை. எப்போதாவது யாராவது இந்த விசயத்தை பெரிதுபடுத்தி வெளியிடும்போதுதான், அங்கேயும் பிரச்சனை உள்ளது என்ற விசயம் நமக்குத் தெரியவருகிறது.

சமீபத்தில் அப்படி இரண்டு விசயங்கள் வெளிப்பட்டது. அதில் ஒன்று தெலுங்கானா பிரச்சனை மற்றொன்று அஜித்குமாரின் பேட்டி. தமிழகத்தில் எந்த பிரச்சனை வந்தாலும் உடனே ஊர்வலம் கிளம்புவது, உண்ணாவிரதம் இருப்பது, தமிழ் உணர்வு பற்றி ஆவேசமாக பேசுவது, கண்டனம் தெரிவிப்பது, கருத்து தெரிவிப்பது என சினிமா துறையை சார்ந்தவர்களின் கடமைகளை பட்டியளிட்டுக்கொண்டே செல்லலாம். ”தமிழ் திரை உலகமே திரண்டது” என பெருமையாக பேசிக்கொண்டிருந்தவர்களின் முகத்திரையை கிழித்துள்ளது அஜிதின் பேச்சு. ஒற்றுமை உணர்வு என்றெல்லாம் அங்கே எதுவுமில்லை கட்டாயத்தினால்தான் கலந்துகொள்கிறார்கள் என்பது தெளிவாகிவிட்டது. கட்டாயம் என்றாலும் சிரித்துக்கொண்டே ஏன் கலந்துகொள்கிறார்கள்! கலந்துகொள்ளாவிட்டால் அவர்கள் தமிழர்கள் அல்ல, தமிழர்களை மதிக்கவில்லை... என்ற ரீதியில் பிரச்சனை உருவாக்கப்படுவதால், அதனால் தங்களின் தொழில் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு உண்டாகிறது.

அஜித்குமாருக்கு ஏற்பட்ட இதே நிலமை ரஜினிக்கும் முன்பு ஏற்பட்டது. அவர் இவ்வளவு துணிவாக பேச இயலாமலும், அந்த சூழ்நிலையை சமாளிக்க இயலாமலும் மாட்டிக்கொண்டு முழித்தார். தன்னால் முடியாததை மற்றொருவன் செய்கிறானே என்ற உணர்வில்தான் எழுந்து நின்று கைதட்டியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

அதே போல்தான் ஆந்திரா பிரச்சனையும். ஆந்திரா மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கவே விரும்பிகிறோம். ஆந்திராவை பிரிக்க அனுமதிக்க மாட்டோம் என்று அனைவரும் சொன்னால் அங்கு ஏன் பிரச்சனை வருகிறது. ஓட்டுக்களை மட்டும் வாங்கிக் கொண்டு ஒதுங்கிவிடும் அரசியல்வாதிகள் இப்போது வரிசையாக அந்த பகுதிக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். வாக்களித்த மக்களை நேரில் சென்று பார்க்கும் இந்த பண்பு முன்பு இருந்திருந்தால், அவர்களின் குறைகளை தீர்த்திருந்தால், அவர்கள் ஏன் விலகிச்செல்ல விரும்புகிறார்கள். அக்கரை கொள்ளமாட்டோம் ஆனால் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம் என்று வெறும் ஒற்றுமை கொள்கைகளை மட்டுமே வழியுருத்திக்கொண்டிருந்ததன் விளைவுகள்தான் அங்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

அதற்காக விருப்பம் இல்லாதவர்களை உடனே சுதந்திரமாக செயல்பட அனுமதித்துவிடலாம் என்று அர்த்தமில்லை. அவர்களிடம் நாம் உண்மையாகவே ஒற்றுமையுடன் வாழ விரும்புகிறோம் என்பதை நிருபிக்க வேண்டும். தெலுங்கானா போன்ற பிரச்சனைகள் மீண்டும் மீண்டும் வேறு வேறு இடங்களில் தோண்றிக்கொண்டுதான் இருக்கும். அம்மக்கள் தனியாக செல்ல வேண்டிய அவசியமில்லை என்று உணர்வதற்கு ஏற்ப பொருப்புள்ளவர்கள் நடந்துகொள்ள வேண்டும்.

நம்முடன் ஒற்றுமையுடன் இருப்பவர்களின் சுதந்திரத்தில் நாம் எந்தவிதத்திலும் தலையிடாமல் அவர்களை மதிக்கும் பண்புகளோடு ஒற்றுமைச் சிந்தனைகள் வளர வேண்டும். அந்த வகையான ஒற்றுமைதான் நிலைத்திருக்கும். அதுதான் உண்மையான ஒற்றுமையாக அமைந்திருக்கும். அப்படியில்லாமல், மற்றவர்களின் நிலை பற்றி கவலைப்படாத, மற்றவர்களின் சுதந்திரத்தில் தலையிடும் ஒற்றுமைகள் என்றாவது ஒருநாள் பல்லிளித்துவிடும்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.