வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

இந்த கூட்டில் நான் இடும் முட்டை எப்படிப்பட்டதாக இருக்கும்!
எனக்கு
தெரியாத இலக்கியங்களை தெரிந்துகொள்வதற்காகவும்,
புரியாத சமுதாய நிகழ்வுகளை புரிந்துகொள்வதற்காகவும்,
நான் எடுக்கும் சிறு முயற்சியாக இருக்கும்.

எழுத்துலகில் தவழ்ந்துவரும் மழலை நான், தவறு இருந்தால் மன்னிக்கவும்.

இந்த பயணத்தில் இல்லா நெற்றிக்கண்ணை நான் திறக்க முற்பட்டால் நன்நெறி கூற நக்கீரர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில்!!
- பூபதி

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
என் பேனாவின் கால் தடங்கள் ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 



பூபதி

ஊர் : உழைப்பிற்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந்தவன்.

தொழில் :பிடித்தமான தொழிலை தேடி இன்று வரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

விருப்பம் : மனித விருப்பங்கள் மாறக்கூடியது என்பதற்க்கு நானும் ஓர் உதாரணம்.

விரும்பி படிப்பது: பாரதி, பாரதி சார்ந்த எழுத்துக்களை.

விருப்பமானவர் : பன்றி ஏன் தெருவிற்கு வந்தது என பகுத்தறிவு பேசிய பாவேந்தர்.

பிடித்த எழுத்தாளர் : இன்னும் பிடிபடவில்லை.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பூபதி தொடர்கள் வாயில்


பல்லிளிக்கும் பகுத்தறிவு சிந்தனைகள்

பூபதி  

சில சமயங்களில் கொள்கைக்கு முரணான விசயங்கள் நடக்கும்போது பிரச்னையை முடிவுக்கு கொண்டுவரவோ அல்லது அதை அதிகரித்து கொள்கையை நிலை நாட்டவோ தொண்டர்கள் தீக்குளிப்பது வழக்கம். வழக்கம் மட்டுமல்ல நம் கலாச்சாரமும் கூட. தலைவன் என்றுமே தீக்குளிக்க மாட்டார்! ஏனெனில் கொள்கைகள் என்பது தொண்டனுக்கு மட்டும் தான்; தலைவனுக்கு அல்ல. அப்படியானால் தலைவர்களுக்கு கொள்கைகள் கிடையாதா? தொண்டனுக்கு சொன்ன கொள்கைகளை தலைவர்கள் பின்பற்ற மாட்டார்களா? தலைவர்களுக்கும் கொள்கைகள் உண்டு. தொண்டர்களைப்போல அவர்களும் கொள்கைகளை உயிரென மதிப்பவர்கள்தான். ஆனால் தங்களுக்கு ஆதாயம் வரும் விசயங்களில் மட்டும்தான் தலைவர்கள் கொள்கைகளை கை விட்டு விடுகிறார்கள்.

பகுத்தறிவு கொள்கைகள்:

தமிழகத்தில் கொள்கைகள் என்றாலே நினைவிற்கு வருவது பகுத்தறிவுக் கொள்கைகள் தான். ஏனெனில் தமிழகத்தின் தடத்தை மாற்றியமைத்ததில் பகுத்தறிவு கொள்கைகளுக்கு பெரும் பங்கு உண்டு. நான் பகுத்தறிவு இயக்கத்தை சார்ந்தவன் என்று பெருமைபட சொல்லிக் கொள்பவர்கள் இன்றளவும் உண்டு. இப்படித்தான் வாழ வேண்டும், இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று தங்களுக்கென்று சில கொள்கைகளை அடிப்படியாக கொண்டு வாழ்பவர்கள் இவர்கள். மேலோட்டமாக பார்த்தால் நமக்கு ஒன்றும் புரியாது. கூர்ந்து கவனித்துப்பார்த்தீர்களானால் இவர்கள் கொள்கைகளை முழுமையாக பின்பற்றுபவர்கள் அல்ல என்பது தெரியவரும். இந்த விசயம் வெளியே தெரியாத வகையில் கொள்கையில் சில பாகுபாடுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய வியாபாரம் சார்ந்த விசயங்களில் இவர்கள் கொள்கைகளை பயன்படுத்துவதில்லை. ஆனால் பொது வாழ்வு என்று வரும் போது மிகத்தீவிரமாக இவர்கள் கொள்கைகளை பின்பற்றுவார்கள்.

பணரீதியான கொள்கைகள்:

தமிழகத்தில் பகுத்தறிவுக் கொள்கையாளர்கள் குறைவு, பக்தி சார்ந்த மக்கள் மிக மிக அதிகம். பகுத்தறிவுக் கொள்கையாளராக இருந்தாலும், வெறும் கொள்கைகளை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய இயலாது. வாழ்வதற்கு வியாபாரம் செய்ய வேண்டும். வியாபாரம் என்று வரும்போது எனக்கென்று சில கொள்கைகள் உண்டு அந்த கொள்கைகளுக்கு உட்பட்ட வரையறைக்குள் எந்த தொழில் வேண்டுமானாலும் நான் செய்வேன் என்ற முடிவுடன் அவர்கள் இருந்தால் அவர்களால் பிழைக்க இயலாது. ஏனெனில் முக்கால் பங்கு மக்கள் பக்தி சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். எனவே வியாபாரம் என்று வரும் போது பகுத்தறிவாளர்கள் பக்திமான்களுடந்தான் வியாபாரம் செய்ய வேண்டும். இது போன்ற சூழ்நிலையில் அப்படி ஒரு பிழைப்பு எனக்கு தேவையில்லை எனக்கு கொள்கைதான் முக்கியது என்று அவர்கள் இருந்தால், அவர்கள் உண்மையான கொள்கையாளர்கள். ஆனால் பகுத்தறிவாளர்கள் இங்குதான் மிக புத்திசாலித்தனமாக நடந்து கொள்கிறார்கள். அதாவது வியாபாரம் என்று வரும் போது கொள்கைகளை தளர்த்திக்கொள்கிறாகள். பொது வாழ்க்கை என்று வரும்போது தீவிர கொள்கையாளராக மாறிவிடுகிறார்கள்.

நல்லதோ கெட்டதோ ஒரு செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மிக முக்கிய பங்காற்றுவது சினிமாத் துறை என்பதால் ஊருக்கு உபதேசம் செய்ய மிகவும் பயனுள்ள சாதனமாக இருக்கிறது. சினிமாத் துறையிலும் சில பகுத்தறிவாளர்கள் உண்டு. அவர்களுக்கும் இதே பிரச்னை உண்டு. அவர்களின் படத்தை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் பகுத்தறிவாளர்கள் அல்ல, பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் தான் எனவே இவர்கள் நடிக்கும் சினிமாவில் இவர்களுடைய கொள்கைகளை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தால் இரண்டு அல்லது மூன்று படங்களில் சினிமா உலகை விட்டு வெளியேறிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. பகுத்தறிவு இல்லாத ரசிகர்களை நம்பித்தான் இவர்களுடைய பிழைப்பு இருக்கிறது. அவர்களை அனுசரித்துத்தான் பிழைப்பு நடத்த வேண்டியிருக்கிறது. இதனால் இவர்களின் கொள்கைக்கு முரணான படங்களில் நடிக்க ஆரம்பித்தார்கள். படம் முடிந்ததும் கருப்பு சட்டை போட்டுக்கொண்டு பகுத்தறிவுக் கருத்து சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். நடிகர் கமலஹாசன் இதில் முக்கியமானவர் பகுத்தறிவு பேசிக் கொண்டு பக்தி சார்ந்த விசயங்களை இவரது திரைப்படத்தில் பயன்படுத்திக்கொண்டிருந்தார் இது தொடர்பாக விமர்சனம் அதிகரித்ததும் இந்த பிரச்னைக்கு முடிவுகட்ட மிக புத்திசாலித்தனமாக ஒரு பதில் சொன்னார் “பெரியார் சொன்னாலும் சரி, பெரியவாள் சொன்னாலும் சரி நல்ல விசயமாக இருந்தால் நான் ஏற்றுக்கொள்வேன்”.” என்பார். ’அப்படியானால் ஆன்மீகத்தில் உள்ள நல்ல விசயங்களை ஏற்றுக்கொள்கின்றீர்களா! நல்ல விசயங்கள் அடங்கிய ஆன்மீகத்தை ஒத்துக்கொள்கின்றீர்களா!’ என்றால் அதற்கு பதில் இருக்காது. உண்மை அதுவல்ல சினிமாவில் பகுத்தறிவுக் கருத்துக்களை சொல்லிக்கொண்டிருந்தால் எப்போதோ சினிமாவை விட்டு வெளியேறி இருப்பார். இவரைப்போல பகுத்தறிவு பேசிக்கொண்டு அதே சமயம் முரணான கருத்துகளுடன் நடிப்பவர் சத்தியராஜ். எதையும் வெளிப்படையாக பேசக்கூடியர். சாமி வருது சாமி வருது வழிய விடுங்கடா என சினிமாவில் பாடிவிட்டு கருப்புச் சட்டை போட்டுக்கொண்டு நாத்திகம் பேசக்கூடியவர். இவரிடமும் இப்படி கொள்கைக்கும், தொழிலுக்கும் முரண்பட்டு நிற்கின்றீர்களே என்று கேட்ட போது “அது தொழில், அதில் நம்முடைய கருத்துக்களை திணிக்க முடியாது” என்று தன் கருத்துக்களை வெளியிட்டார். தொழில் என்றால் சமூக சேவை அல்ல; அவருக்கு அது வருமானம் வரும் தொழில்.

சினிமாத் துறையில் உள்ளவர்கள் மட்டுமல்ல, அரசியல் துறையிலும் வியாபாரத்திற்காக தங்களுடைய கொள்கைகளை விலக்கிக் கொள்பவர்கள் உண்டு. வருடத்தில் ஏகப்பட்ட பண்டிகைகள், திருவிழாக்கள் உண்டு. தொலைக்காட்சிகளுக்கு மிக முக்கியமான வியாபாரதினம் இந்த பண்டிகைகள். புதிய படம் போடுவது, நடிகர்களின் பேட்டி எடுத்து ஒளிபரப்புவது என மக்களை தங்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமே பார்க்கச் செய்ய ஒவ்வொரு தொலைக்காட்சி நிறுவனங்களும் முயற்சி செய்யும். பகுத்தறிவு பேசுபவர்களுக்கும் தொலைக்காட்சி உண்டு. பெரும் வருமானம் ஈட்டும் வாய்ப்பு பண்டிகைகள். ஆனால் கொள்கைக்கு முரணானது, கொள்கை பற்றி யோசித்துக்கொண்டிருந்தால் வருமானம் போய்விடும். கொள்கையும் வேண்டும், பண்டிகை தின வியாபாரத்தையும் பெற வேண்டும் என்பதற்காக புதிய வழி ஒன்றை கண்டுபிடித்தார்கள் அது “விடுமுறை’ தின கொண்டாட்டம்!” இப்போது இவர்கள் கொள்கைக்கு முரணாக பண்டிகை தினத்தை கொண்டாடவில்லை விடுமுறை தினத்தை கொண்டாடுகிறார்கள். எவ்வளவு புத்திசாலித்தனமான நடவடிக்கை இது. சிறந்த கொள்கையாளராக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? கொள்கைக்கு முரணான வரும் வியாபாரம் தேவையில்லை என்று சொல்லியிருக்க வேண்டும். விடுமுறை தினத்தை கொண்டாடுவதுதான் நோக்கம் என்றால் மாதத்தில் நான்கு விடுமுறை தினம் வருகிறதே அனைத்தையும் கொண்டாட வேண்டியதுதானே, இப்படி பெயரை மாற்றி ஊரை ஏமாற்றக்கூடாது.

ஏழைகளுக்கான கொள்கை:

பணம் என்று வரும் போது கொள்கையிலிருந்து தடம் புரளும் இவர்கள்தான் பொதுமக்களுக்கு பகுத்தறிவுச் சிந்தனைகளை பாடமாக நடத்திக்கொண்டிருப்பவர்கள். தொழில் வேறு பொதுவாழ்க்கை வேறு என்று பிரித்து வைத்திருக்கும் இவர்கள். பொதுமக்களை பொருத்த வரையில் தொழிலும் அவர்களது வாழ்க்கையும் இணைந்தே இருக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படி பொது மக்கள் செய்யா விட்டால் அவர்களுக்கு பகுத்தறிவு சிந்தனை இல்லை என்று கூறிவிடுகிறார்கள். தொழிலுக்காக இவர்கள் நாமம் போட்டுக்கொள்ளலாம், சாமி சிலை முன்பாக ஆடி பாடலாம் ஆனால் பொது மக்கள் தங்களின் தொழில் நன்றாக நடக்க வேண்டும் என விரும்பி பூஜைகள் செய்தால் இந்த பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள் கைகொட்டி சிரிப்பார்கள். பொது மக்கள் பணம் சம்பாதிக்கும் முறைகளில் கூட தங்கள் கொள்கையிலிருந்து நழுவாமல் இருக்க வேண்டும் என்பது இவர்களது கோரிக்கை, வேண்டுகோள், கட்டளை... அவை ஏழைப் பொதுமக்களுக்குத்தான், தனக்கல்ல!

முழுமை தன்மை:

பகுத்தறிவு என்பது தவறு. தேவையற்றது. அது நமக்கு வேண்டாம் என்று சொல்லவில்லை, அதே போல பக்தியும் வேண்டாம் என்று சொல்ல வில்லை நீங்கள் எந்தப்பாதையில் இருந்தாலும் அதில் முழுமையாக இருங்கள் பகுத்தறிவாதியா நீங்கள்! நல்லது அந்த கொள்கைகளை முழுமையாக பின்பற்றுக்கள் பணம் வரும் சமயங்களில் மட்டும் பல்லிளித்து நிற்காதீர்கள். அல்லது முழுமையான பக்தியாளராகி விடுங்கள் அதை விடுத்து போலித்தனமான கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லாதீர்கள்.

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.