வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

இந்த கூட்டில் நான் இடும் முட்டை எப்படிப்பட்டதாக இருக்கும்!
எனக்கு
தெரியாத இலக்கியங்களை தெரிந்துகொள்வதற்காகவும்,
புரியாத சமுதாய நிகழ்வுகளை புரிந்துகொள்வதற்காகவும்,
நான் எடுக்கும் சிறு முயற்சியாக இருக்கும்.

எழுத்துலகில் தவழ்ந்துவரும் மழலை நான், தவறு இருந்தால் மன்னிக்கவும்.

இந்த பயணத்தில் இல்லா நெற்றிக்கண்ணை நான் திறக்க முற்பட்டால் நன்நெறி கூற நக்கீரர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில்!!
- பூபதி

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
என் பேனாவின் கால் தடங்கள் ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 



பூபதி

ஊர் : உழைப்பிற்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந்தவன்.

தொழில் :பிடித்தமான தொழிலை தேடி இன்று வரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

விருப்பம் : மனித விருப்பங்கள் மாறக்கூடியது என்பதற்க்கு நானும் ஓர் உதாரணம்.

விரும்பி படிப்பது: பாரதி, பாரதி சார்ந்த எழுத்துக்களை.

விருப்பமானவர் : பன்றி ஏன் தெருவிற்கு வந்தது என பகுத்தறிவு பேசிய பாவேந்தர்.

பிடித்த எழுத்தாளர் : இன்னும் பிடிபடவில்லை.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பூபதி தொடர்கள் வாயில்


அடுத்த கட்டம்!


பூபதி  

அடுத்த கட்டம் என்பதற்கான அர்த்தத்தை அனைவரும் பொதுவாக தவறாகவே புரிந்துவைத்துள்ளோம். ஒரு துறையில் தொடர்ந்து வளர்ச்சியடைவது என்பது வேறு, அதை வேரோடு அகற்றிவிட்டு வேறு துறையில் நுழைவது என்பது வேறு. ஒரு துறையில் தொடர்ந்து வளர்ச்சியடைய அறிவும், ஆர்வமும் இருந்தால் போதும். ஆனால் அடுத்த கட்டத்தில் நுழைய அசாத்தியமான துணிவு வேண்டும்.

என்னடா உன் நண்பன் என்ன செய்ய போகிறானாம்? என என்னுடன் பணியாற்றும் சிலர் கேட்கும்போது, இந்த .......... துறையில் தொழில் துவங்கப்போகிறாராம் என நான் சொன்னதும், கொஞ்சம் நல்லாயிருந்தா அடங்கியிருக்க மாட்டீங்களே! அந்த துறைக்கு போய் என்ன செய்யப்போகிறானாம்! தேவையில்லாமல் ஏதாவது செய்து துன்பத்தை ஏந்திக்கொள்வதே வேலையாக போய்விட்டது. உங்களை திருத்தவே முடியாது என என்னுடன் பணியாற்றுபவர்கள் சலித்துக்கொள்வார்கள்.

அவர்கள் குறிப்பிட்ட அந்த நண்பர் வேறு யாருமல்ல என்னுடன் பணிபுரிந்துகொண்டிருந்த சக பணியாளர்தான். ஆரம்பத்தில் வேலைக்கு வந்தபோது காலில் கத்தியை கட்டிவிட்ட சேவல்போல சிலிர்த்துக்கொண்டு இருந்தவர் சில வருடத்தில், நம்பிக்கை தளர்ந்ததினாலா அல்லது நிறுவனத்தின் அரசியல் புரிந்ததினாலா என தெரியவில்லை, அடிக்கடி “இன்னும் ஆறே மாதம், அவ்வளவுதான் நான் வேலையை விட்டு போய்விடுவேன்” என்று சொல்ல ஆரம்பித்தார். ஆனால் பல ஆறு மாதங்கள் கடந்துபோய்க்கொண்டே இருந்தது. இன்னும் மூன்றே மாதம்... அடுத்த ஏப்ரல் மாதம் நின்றுவிடுவேன்... முதலில் இவரின் இந்த பேச்சை கேட்கும்போது இவரெல்லாம் எங்கே வேலையைவிட்டு நிற்கப்போகிறார் என்று ஏளனமாக எண்ணிக்கொள்வேன். பிறகு இதே பேச்சை தொடர்ந்து கேட்க கேட்க எனக்கு அது சிரிப்பை வரவழைக்கும் சிறுபிள்ளைத்தனமான பேச்சாக தோன்றியது. நாளடைவில் அவர் சொல்வதைக்கேட்டு நான் நிச்சயம் சிரிப்பேன் என அவரும் சிந்தித்திருப்பார் என நினைக்கிறேன். ஏனெனில் வழக்கமாக சொல்லும் வார்த்தைகளுடன் சில வார்த்தைகளை சேர்த்துக்கொண்டார் இப்படி “சிரிக்காதீங்க, சீரியஸாக சொல்கிறேன், இன்னும் மூன்று மாதம் மட்டும்தான்” அடப்போய்யா என நினைத்துக்கொண்டிருந்த எனக்கு அவரின் அடுத்தடுத்த வார்த்தைகள் சற்று அதிர்ச்சியை கொடுத்தது, இல்லைங்க இப்போவெல்லாம் எனக்கு பயமாக இருக்கிறது! இப்படியே வாழ்க்கை போயிடுமோன்னு தோணுது, பின்னாடி ஏதாவது பிரச்சனைனா...!

அதற்குப்பிறகு அவர் வேலையை விட்டு நிற்பதைப் பற்றி பேசும்போதெல்லாம் எனக்கு சிரிப்பு வருவதில்லை. காரணம், பாவம் அவர் என்ற நினைப்பினால் அல்ல பயம். அவர் உணர்ந்த அந்த பயம்! அதை நானும் உணர்ந்திருக்கின்றேன். நான் பயத்தை உணர்ந்த அந்த தருணங்கள் என்னுள் ஏற்படுத்திய தடயங்களை, புதிய தடங்களை என்னால் எப்போதும் மறக்க இயலாது.

எனக்கு மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிகழக்கூடிய அற்புதமான நிகழ்வு அது. உங்களை ஒரு பைத்தியக்காரனாக, ஒரு குழப்பவாதியாக, ஒரு நிம்மதியற்றவராக வெளிப்படுத்தும் தருணம் அது. அந்த தருணத்தை உணர நாம் சும்மாயிருக்க வேண்டும்!. சும்மாயிருப்பதென்றால் எப்படி?

மலை மீது நின்று கொண்டிருந்த ஒருவனைப் பார்த்த அந்த வழியாக சென்றுகொண்டிருந்த மூன்று நபர்களின் விவாதம் இப்படி செல்கிறது

காணாமல் போன தன்னுடைய பிராணியை தேடிக்கொண்டிருப்பான்

இல்லை, தன் நண்பனை தேடிக்கொண்டிருக்கிறான்

இல்லை இல்லை, காற்று வாங்குவதற்காக அங்கே போயிருப்பான்

விவாதத்தில் முடிவு கிடைக்காமல் முடிவாக அவனிடமே கேட்டுவிடுவோம் என அவர்கள் மேல் நோக்கி செல்கிறார்கள்.

நீங்கள் பிராணியைத்தானே தேடிக்கொண்டிருக்கின்றீர்கள்? இல்லை
நண்பனைத்தானே தேடிக்கொண்டிருக்கின்றீர்கள்? இல்லை
காற்றுதானே வாங்கிக்கொண்டிருக்கின்றீர்கள்? இல்லை

அப்படியானால் இங்கே நிற்பதன் அவசியம் என்ன?

”சும்மா”

சும்மாயிருத்தல் என்ற வார்த்தையை நம் வாழ்வில் எந்த வகையில் பயன்படுத்துகிறோம்!. எந்த வேளையிலும் எந்த வேலையையும் செய்யாமல், சிவனே என்றிருப்பதே சிறப்பு என்ற ரீதியில் மட்டுமே பொருள்கொள்கிறோம். ஆனால் உண்மையில் சும்மாயிருத்தல் என்பது எந்த வேலையும் செய்யாமல் சுகமாயிருத்தலை குறிபதல்ல. நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டிய பணியைக்கூட செய்ய விடாமல் கடுமையாக பாதிக்கக்கூடிய மனநிலையில் நீங்கள் இருக்க காரணமான நிலையே சும்மாயிருத்தல்.

சும்மாயிருத்தல் என்பது சோம்பேரித்தமான நிலை அல்ல, உங்களை மீண்டும் மீண்டும் சோர்வடையச் செய்யும் நிலை அது. அது ஒரு அற்புதமான தருணம். அனைவரும் அடைந்துவிட முடியாத தருணம். தானாக நிகழக்கூடியது. ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நிகழும் அடுத்த கட்டத்திற்கான அழைப்பு அது.

ஒரு நாளில் நீங்கள் நிச்சயம் செய்தே ஆக வேண்டிய பணிகளை மட்டும் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் நிச்சயம் சந்தித்தே ஆக வேண்டிய நபர்களை பட்டியலிட்டுக்கொள்ளுங்கள். அவற்றை தவிர்த்து நீங்கள் மேற்கொண்டிருந்த அனைத்தையும் தவிர்த்துவிடுங்கள். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் நீங்கள் அந்த நாளில் உயிரோடு உலாவுதற்கான அவசியம் என்ன என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

காலையில் எழுந்ததும் நான் நன்றாக நடை பயிற்சி செய்வேன் என்கிறீர்களா! இதுவரை நடந்தது போது நாற்காலியிலேயே அமர்ந்திருங்கள். தினமும் கடவுளைக்காண கோவிலுக்கு செல்வேன் என்கிறீர்களா! இதுவரை கண்டது போது வீட்டிலேயே காத்திருங்கள். இப்படி ஒவ்வொன்றாக ஓரம் கட்டிக்கொண்டே வாருங்கள். இறுதியாக பட்டியலில் இரண்டு மூன்று விசயங்கள் மட்டுமே இருக்கும். நிச்சயம் வேலைக்கு செல்ல வேண்டும். அவற்றையும் தவிர்க்க இயலுமா! எல்லோராமும் முடியாது. அதனால்தான் சொல்கிறேன் இது எல்லோருக்கும் வாய்க்காது. முடிந்தால் வேலைக்கு செல்ல வேண்டியதன் அவசியத்தையும் அறுத்துவிட்டு சும்மாயிருங்கள். அல்லது அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு சும்மாயிருங்கள். சும்மாயிருங்கள், காத்திருங்கள் நிச்சயம் உங்களுக்குள் அது நிகழும். எனக்குள் நிகழ்ந்தது.

ஒரு நிறுவனத்தில் பத்தாண்டுகள் பணியாற்றினேன். அந்த நிறுவனத்தில், ஒரு நிலையான இடத்தில் நிற்க கொஞ்ச காலம், குறிப்பிட்ட பதவிக்காக குறிப்பிட்ட காலம், சம்பள ஏக்கத்தில் சில காலம், நண்பர்களோடு நாட்களை கடத்தியது சில காலம் என அனைத்து விசயங்களும் முடிந்துவிட்டது. இவை நடந்து முடிய எட்டு ஆண்டு காலங்கள் கடந்துபோனது. ஒன்பதாவது வருடம் எந்த வேலையுமில்லாமல் ஓரமாக அமர்ந்திருந்தேன். பேசி பேசியே அந்த வருடமும் கடந்துகொண்டிருந்தது. நான் பணியாற்றிக்கொண்டிருந்தது பெரிய நிறுவனம். போதுமான அளவு சம்பளத்துடன் என் வீட்டின் அருகிலேயே அமைந்திருந்தது. நான் செய்தே ஆக வேண்டும் என்ற ரீதியில் எந்தப் பணியும் எனக்கில்லை. மற்றவர்களுக்கும் வேலை இல்லை என்றால் என்னோடு பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு வேலையிருக்கும் பட்ச்சத்தில் நான் தனியாக அமர்ந்திருப்பேன் எந்த வேலையுமில்லாமல். உடலுக்கு முழு ஓய்வு கொடுத்திருந்தேன், அப்போதுதான் மெதுவாக தன்னிச்சையாக சில கேள்விகள் தோன்ற ஆரம்பித்தது. நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்! எங்கு இருக்கிறேன்! எவ்வளவு சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறேன்! கேள்விகள் தானாக தோண்றும், தானாக மறையும். சில சமயங்களில் தினமும் இதுபோன்ற கேள்விகள் தோண்றும். சில சமயங்களில் வாரத்தில் ஒரு முறை அல்லது மாததில் ஒரு முறை தோண்றும். நான் பதில் சொல்லா விட்டாலும் பல்லைகாட்டிக்கொண்டு என் முன்னே வந்து நிற்கும்.

நாட்கள் நகர நகர கேள்விகள் தோண்றுவதற்கான கால இடைவெளி குறைந்துகொண்டே வந்தது. கேள்விகளும் கேட்பதற்கு ஆள் இல்லாமல் அதிகரித்துக்கொண்டே இருந்தது. எவ்வளவு பணம் சம்பாதிக்கின்றாய்? உன் வயதென்ன? இது போதுமா? ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டால் என்ன செய்வாய்? என்ன தெரியும்? வயதென்ன? இது போதுமா?.... எதேச்சையாக எழுந்துகொண்டிருந்த கேள்விகள் மெல்ல மெல்ல பயமாக பரிமாற்றமடைந்துகொண்டிந்தது.

மெல்ல மெல்ல பகலெல்லாம் பயம் படர ஆரம்பித்தது. என்னால் அங்கு சும்மா அமர்ந்திருக்க முடியவில்லை. எப்போதும்போல் எல்லோரும் என்னிடம் சிரித்து பேசுகிறார்கள் நானும் சிரிக்கிறேன். ஆனாலும் முழுமையாக சிரிக்க முடியவில்லை. கேள்விகள் தொடர்கிறது, இது போதுமா? உன் வயதென்ன? என்ன செய்ய போகிறாய்? சினிமாவிற்கு செல்கிறேன் ரசிக்கின்றேன்.. ஆனாலும் அந்த கேள்விகள் தொடர்கிறது. இதற்குமேல் தாங்க முடியாது என தெரிந்ததும் முடிவெடுத்தேன், அந்த நிறுவனத்திற்கு இனி செல்லப்போவதில்லை. எல்லோருக்கும் ஆச்சரியம், ஏன் நல்லாத்தானே இருக்கிறது, நல்ல சம்பளம்தானே! வீட்டின் பக்கத்திலேயே அமைந்திருக்கிறதே! எல்லாம் உண்மைதான் ஆனாலும் நான் வேலையை விட்டு நிற்கப்போகிறேன். பைத்தியக்காரட்தனமான முடிவாகவே அனைவரும் கருதினார்கள். நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனாலும் என்னால் அங்கு தொடர்ந்து சும்மாயிருக்க முடியாது. நிறுவனத்தின் மேலாளர் வெளியே போய் என்ன செய்யப்போகிறாய்? உனக்கு என்ன தெரியும்? என்று கேட்டார் என்னிடம் பதில் இல்லை. நான் வெளியே போகிறேன் என்பதைத் தவிர.

இறுதியாக பத்தாவது வருடத்தில் அங்கிருந்து வெளியேறிவிட்டேன். வெளியேறிவிட்டேன் என்று சாதாரனமாக சொல்லிவிட்டேனே ஒழிய வெளிறிப்போய்விட்டேன் என்பதே உண்மை. அடுத்த ஆறு ஏழு மாதங்கள் நான் அனுபவித்த மனச்சோர்வும், உடற்சோர்வும் அளவில்லாதது. ச்சே பேசாமல் அங்கேயே இருந்திருக்கலாம் என்ற எண்ணம் கூட தோண்றியது. வாங்கிக்கொண்டிருந்த சம்பளம் அளவிற்குக்கூட மீண்டும் சம்பாதிக்க முடியுமா என்ற சந்தேகம் தோன்றியது. இதுக்குத்தான் அப்பவே சொன்னேன் என்ற அனுதாபமிக்க வார்த்தைகளோடு அடுத்தவர்கள் என்னை அனுகும்போதெல்லாம் மனதினுள் தாழ்வு மனப்பாண்மை, எரிச்சலும் ஏற்படும். அப்புறம் வேலை கிடைத்துவிட்டதா! என நண்பர்கள் அன்பாக கேட்டாலும் அவமானமாகத்தான் இருந்தது. அனைத்துவிதமான எதிர்மறையான எண்ணங்களும் என்னைத்தாக்கியதால் என் தோற்றமே மாறியிருந்தது. இறுதியாக அந்த வருடத்தின் இறுதியில் ஒரு நிறுவனத்தில் சேர்ந்துகொண்டேன். சேர்ந்துகொண்டேன் என்ற வார்த்தை, நான் அந்த வேலையை தேர்வு செய்ததாக தோற்றமளிக்கும் உண்மையில் சேர்த்துக்கொள்ளப்பட்டேன். முன்பு நான் வாங்கிய சம்பளத்தைவீட குறைவுதான். ஆனாலும் வேலையில் சேர்ந்துவிட்டேன் என்பதே வெற்றியாக தோன்றியது. புதிய வேலையில் சேர்ந்து மூன்று வருடம் ஆனா பிறகும் நான் பயித்தியக்காரத்தனம் செய்ததாகவே எண்ணிக்கொண்டிருந்தேன். அந்த நண்பன் தன் பயத்தை என்னிடம் சொல்லும் வரை. அவர் கூறிய பிறகுதான் புரிந்தது இது அனைவருக்கும் நிகழும் அற்புதமான பயம் என்று. வருடங்கள் பல கடந்துவிட்டது, இப்போது நான் முன்பு இருந்த நிலையைவீட உயர்வாகவே இருக்கிறேன். ஆனாலும் அந்த கேள்விகள் என்னை இன்று வரை தொடர்கிறது. எங்கு இருக்கிறாய்? இது போதுமா? ஏதாவது நிகழ்ந்துவிட்டால்?... இந்த கேள்விகள் எனக்குள் ஏற்படுத்தும் பதட்டமும் பயமும் என்னை நிச்சயம் அடுத்தடுத்த கட்டத்திற்கு அழைத்துச்சென்று கொண்டே இருக்கும்.

அடுத்த கட்டத்திற்குள் நுழைபவர்கள் எல்லோரும் முதலில் அவமானங்களையே சந்திக்கிறார்கள். இருப்பதைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் பறப்பதற்கு ஆசைப்பவனின் ஆரம்பகால சிந்தனைகள் பயித்தியக்காரத்தனமாகத்தான் இருந்திருக்கும். ஆனால் அவன் பறக்க ஆரம்பித்ததும். அலட்சிய சிந்தனைகள் அனைத்தும் அவனை அன்னார்ந்து பார்த்திருக்கும்.

இந்த கேள்விகள் பெரும்பாலும் அனைவருக்கும் தோன்றும் ஆனால் நம்மை சுற்றியிருப்பவர்களின் அறிவுரையினாலும் நமக்குள் ஏற்படும் அச்சத்தினாலும் கேள்வினால் ஏற்படும் மனச்சோர்வை ஏற்றுக்கொள்கிறொமே தவிர நாம் மாற்றத்தை விரும்புவதில்லை.

சிலர் விசயம் தெரிந்து தெளிவடைவார்கள், சிலர் விசயம் தெரியாமலேயே தெளிவடைந்துவிடுவார்கள். என் நண்பர் தெரிந்து தெளிந்தாரா அல்லது தெரியாமலேயே தெளிந்தாரா என தெரியவில்லை. மாற்றத்தை விரும்பி புதிய தொழில் தொடங்கும் என் நண்பர் அந்த தொழிலில் ஓகோவென வரலாம் அல்லது ஒப்பாரிவைத்து அழலாம். அது அவர் எடுத்துக்கொண்ட செயலையும் அதில் அவர் வெளிப்படுத்தும் திறனையும் பொருத்தது. ஆனால் அவர் அடைந்துள்ள அந்த கேள்வி நிலை அதாவது அந்த அடுத்தக்கட்டம் அற்புதமானது. அது அவரை அடுத்தடுத்த நிலைகளுக்கு அழைத்துச்சென்று கொண்டே இருக்கும். ஒரு முறை அந்த கேள்விகள் மனதினுள் தோன்றிவிட்டால் போது இறுதிவரை அந்த கேள்விகள் மறையாமல் நம்முள் இருந்துகொண்டேதான் இருக்கும். இனி அவரால் நிம்மதியாக எங்கேயும் நின்றுவிட முடியாது. காரணம், அங்கே தங்குவதற்கான தளம் என்று எதுவுமில்லை, அனைத்தும் ஓடுதளங்கள், அந்த ஓடுதளங்கள் மூலம் என் நண்பரும் பறக்கத்தொடங்குவார் திசைகளற்ற வெளியில்.

உங்களுக்கும் அந்த கேள்விகள் தோன்றியுள்ளதா! அச்சம் கொண்டீர்களா அல்லது அழைப்பை ஏற்றுக்கொண்டீர்களா....?

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.