வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

இந்த கூட்டில் நான் இடும் முட்டை எப்படிப்பட்டதாக இருக்கும்!
எனக்கு
தெரியாத இலக்கியங்களை தெரிந்துகொள்வதற்காகவும்,
புரியாத சமுதாய நிகழ்வுகளை புரிந்துகொள்வதற்காகவும்,
நான் எடுக்கும் சிறு முயற்சியாக இருக்கும்.

எழுத்துலகில் தவழ்ந்துவரும் மழலை நான், தவறு இருந்தால் மன்னிக்கவும்.

இந்த பயணத்தில் இல்லா நெற்றிக்கண்ணை நான் திறக்க முற்பட்டால் நன்நெறி கூற நக்கீரர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில்!!
- பூபதி

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
என் பேனாவின் கால் தடங்கள் ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 



பூபதி

ஊர் : உழைப்பிற்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந்தவன்.

தொழில் :பிடித்தமான தொழிலை தேடி இன்று வரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

விருப்பம் : மனித விருப்பங்கள் மாறக்கூடியது என்பதற்க்கு நானும் ஓர் உதாரணம்.

விரும்பி படிப்பது: பாரதி, பாரதி சார்ந்த எழுத்துக்களை.

விருப்பமானவர் : பன்றி ஏன் தெருவிற்கு வந்தது என பகுத்தறிவு பேசிய பாவேந்தர்.

பிடித்த எழுத்தாளர் : இன்னும் பிடிபடவில்லை.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பூபதி தொடர்கள் வாயில்


விஞ்ஞானி

பூபதி  

காலையில எந்திரிச்சதிலிருந்து உட்கார நேரமில்லாமல் வேலை செய்ய வேண்டியிருக்கு. மணி நாலு ஆயிடுச்சி. என்ன ராமசாமி உன் நண்பன் ஊரில் இருந்து வந்திருக்கான் போய் பார்க்கலையானு பக்கத்துவீட்டு சுப்பரமணி கேட்டதிலிருந்து அதே ஞாபகமா இருக்கு. போய் பார்க்கனும்தான் ஆனால் நினைத்ததை நிறைவேற்றிக்கொள்கிற பிழைப்பா பிழைக்கிறோம், போகலாம், பார்க்கலாம்.

இன்னிக்கு வேலையில அவ்வளவா ஈடுபாடே இல்ல. நண்பன் வந்திருக்கானு சொன்னதிலிருந்து அவன் ஞாபகமாவே இருக்கு. நண்பன் என்றால் எதோ ஒன்னா படிச்சவனோ, திடீர்னு புடிச்சவனோ இல்ல நாற்பது ஐம்பது வருசமா பழக்கம். அவனுக்கு இப்போ வெளியூரில் வேலை, ஆனால் இங்க வந்தான்னா கண்டிப்பா என்ன பார்க்காம போக மாட்டான். வழக்கமா வேலை முடிய இரவாகிவிடும் ஆனா இன்னிக்கு எப்படியாவது முதலாளிகிட்ட அனுமதி வாங்கிட்டு கொஞ்சம் நேரமாகவே கிளம்பிடனும்.

ம் சொல்லுங்க

இன்னிக்கு கொஞ்சம் முன்கூட்டியே கிழம்பனும்

என்ன விசயம்

ஊரில் இருந்து நன்பன் வந்திருக்கான் பார்க்க போகனும்

நண்பனா! வேலை எதுவும் பாக்கி இல்லையே?

இன்னைக்கு செய்ய வேண்டியதெல்லாம் முடிச்சிட்டேன்

சரி போயிட்டு வாங்க, பொழப்பு கெடக்கூடாது அவ்வளவுதான்.

நண்பனை பார்க்க போறேன்னு சொன்னதும் முதலாளி ஏன் ஆச்சரியமா பார்க்கிறார்! நாற்பது வயதை தாண்டியவனுக்கு நண்பன் இருக்க கூடாதா என்ன!

சாயங்காலம் வெளியில வந்து வெளிச்சத்த பார்த்தே ரொம்ப வருசம் ஆயிடுச்சி. இருட்டிய பிறகு வீடு போய் சேர்ந்தே பழக்கப்பட்டுவிட்டதால, வெளிச்சத்தில் போகும்போது புதுசா ஒரு ஊருக்கு போகிறமாதி ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்படுகிறது.

நாற்பது வயதை தாண்டிய பிறகும் மாதச்சம்பளத்தை எதிர்பார்த்து வாழ்வது, நான் வாழ்க்கையை சரியாக வாழவில்லை என்பதன் அடையாளமாக இருக்குமோ என்னவோ

என்னய்யா ராமசாமி சாயங்கால நேரத்தில் வீட்டுக்கு போற, பொழப்பில்லையா இன்னிக்கி?

ஊரில் இருந்து சேகர் வந்திருக்கானில்ல, அவன பார்க்கத்தான் போயிட்டிருக்கேன்.

நல்ல ஆளுங்கய்யா நீங்க ரெண்டு பேரும். இத்தன வருசம் ஆன பிறகும் நட்பு பாராட்டிட்டு இருக்கீங்க.

பொண்டாட்டி போனதுக்கப்புறம் பொழப்புதான் பொண்டாட்டி மாதிரி ஆயிடிச்சி. எதப்பத்தியும் யோசிக்காம பொழப்பை பார்த்துக்கொண்டிருக்கிற எனக்கு அவன் வரும்போதுதான் ஆறுதலா இருக்கு.

சரி சரி நானும் விசாரிச்சதா சொல்லு

ஆங் ஆகட்டும்

பகலில் என்னைப் பார்த்தா இப்படித்தான் விசாரித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களை சொல்லி குற்றமில்லை என் வாழ்க்கை முறை அப்படி. தனிக்கட்டையான எனக்கு மரியாதையான வாழ்க்கையை கொடுப்பதே நான் செய்யிற பொழப்புதான். அதனால மனிதர்களிடம் நான் அதிகம் பழகுவதற்கு வாய்பில்லாமல் போய்விட்டது.

இருந்த ஒரு துனையும் இறந்த பிறகு, சேகர் மட்டும்தான் உறவு போல இருக்கான். மற்றர்வகளிடம் நான் பழகுவதில்லை என்பதால் அவர்களும் என்னுடன் பழகுவதில்லை. ஆனால் சேகர் அப்படியில்லை நான் அவனிடம் பேசுகிறேனோ இல்லையோ, அதெல்லாம் எதிர்பார்க்க மாட்டான் அவ்வப்போது என்னை தொடர்புகொண்டு நலம் விசாரிப்பான். நமக்கென்று ஒரு மனிதன் இருக்கிறான் என்பதே மனதிற்கு ஆறுதலாக இருக்கும்.

பல வருடங்களுக்கு முன்பே அவன் இந்த ஊரை விட்டு போயிட்டான். ஏதேதோ சொல்லுவான் எனக்கு ஒன்னும் புரியாது. விஞ்ஞானியாக இருக்கான்னு நானே ஊகிச்சுக்குவேன். அவ்வப்போது தொலைக்காட்சியில் அவனை காட்டுனாங்கனு மத்தவங்க பேசிக்குவாங்க.

யோசிச்சிக்கிட்டே நடந்துவந்ததுல நேரம் போனதே தெரியல இந்த தெருவிலதான் அவன் வீடு இருக்கும். பக்கத்தில் கூட ஒரு பிள்ளையார் சிலை இருக்கும்.... ஆங் அதோ அங்கிருக்கு

ஏன் அவன் வீடு இவ்வளவு அமைதியா இருக்கு! வழக்கமா அவன் வந்தான்னா திரும்ப ஊருக்கு போற வரைக்கும் படித்த பல பேர்கள் அவன் வீட்டில் இருந்து பேசிக்கொண்டே இருப்பார்களே!

யாரு ராமசாமியா? ஏனப்பா சேகர் வந்தாத்தான் இந்த வீட்டு பக்கம் வருவியா?

அப்படி இல்ல ஆத்தா, பொழப்பை பார்க்கனுமில்ல, அதானே சொறு போடுது.

உள்ளதான் இருக்கான் போயி பாரு

வாடா, ம் எப்படி இருக்க? அப்புறம்?

அப்புறமா! அப்புறம் என்ற வார்த்தையே அடுத்து பேசுவதற்கு எதுவும் இல்லை என்பதை உணர்த்தியது ராமசாமிக்கு. நண்பனை பார்க்கலாம், பழையதைப்பற்றி நாலு வார்த்தை பேசலாம் என்று வந்த ராமசாமிக்கு ஏமாற்றமாக இருந்தது.

இறுக்கமான சூழ்நிலை அங்கு நிலவியது.

வழக்கமா இந்த மாதிரி இருக்க மாட்டானே! கலகலப்பா இருப்பானே இன்னிக்கு என்ன ஆச்சு இவனுக்கு.

என்னடா சாமி எதையோ யோசிக்கிற?

ஒன்னுமில்லையப்பா, சும்மாத்தான்

எதுவும் பேசாமல் இருக்கிறேன்னு தப்பா நெனச்சிக்காத சாமி, மனசே சரியில்ல.

பேச முடியாத அளவுக்கு மனதுக்கு என்னவாம்.

பத்து நாளைக்கு முன்னாடி ராக்கெட் ஏவினோம் தெரியுமில்ல?

அதெல்லாம் கவணிக்கிற வாழ்க்கையா நான் வாழ்கிறேன் நீயே சொல்லு.

சொந்த சிந்தனையில, ரொம்ப கடினமா உழைச்சி உருவாக்கினோம். ஒட்டுமொத்த நாடே எங்களின் வெற்றிக்காக காத்திருந்தது. வெற்றிகரமாகத்தான் புறப்பட்டது ஆனா கொஞ்ச நேரத்தில் என்ன கோளாருன்னு தெரியல இலக்கை நோக்கி செல்ல இயலாமல் ராக்கெட் கடலில் விழுந்துவிட்டது. நான்தானே குழு தலைவன். வருத்தம், அவமானம் என மனம் ரொம்ப நொந்துபோயிடிச்சிப்பா.

அட என்னப்பா ராக்கெட் தானே கடலில் விழுந்திச்சி கத்துக்கிட்ட வித்தையுமா விழுந்துடிச்சி. மறுபடியும் முயற்சி செய்தால் போகுது.

அதாவது சாமி ஆறுதல் சொல்வது ரொம்ப சுலபம்...அத அனுபவிச்சி பார்த்தாதான் அதன் வலி புரியும். எந்தவித சவாலும் இல்லாமல் சொல்கிற வேலையை செய்துகொண்டிருக்கிற ஒனக்கு அதெல்லாம் புரியாது.

சேகரின் இறுதி வார்த்தை ராமசாமியின் இதயத்தை சுர்க்கென குத்தியது. மேலும் சில நிமிடங்கள் அங்கிருந்துவிட்டு சரி நான் புறப்படுகிறேன் என ராமசாமி சொல்லியதை கேட்டு சேகர் அவ்வளவாக அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை. ஆங் சரி என்று மட்டும் சொன்னார்.

ராமசாமிக்கு நண்பனை பார்த்ததில் இந்த முறை அவ்வளவாக சந்தோசமில்லை. அனாவசியமாக பொழப்பை கெடுத்துக்கொண்டது போல் தோன்றியது. பேசாமல் வேலையை செய்து கொண்டிருந்தால், நாளைக்கு செய்ய வேண்டிய வேலைகளை இன்றைக்கே செய்திருக்கலாம்.

ஏதோ ராக்கெட் விட்டானாம் அது கடலில் விழுந்துவிட்டதாம்! ஹும் எனக்கு ஒன்றும் புரியாதாம்! அவன் விட்ட ராக்கெட்டை உருவாக்க இரண்டு மூன்று வருடம் உழைத்திருப்பானா! அதிகபட்சமாக பத்துவருடம் உழைத்திருப்பானா! முப்பத்திரண்டு வருடமாக பார்த்து பார்த்து நான் உருவாக்கினேண்டா ஒரு ராக்கெட், ஏவுரவரைக்கும் எங்கிட்ட அன்பாத்தான் இருந்திச்சி வெற்றிகரமாக இலக்கை அடைந்ததும் எனக்கு சமிஞ்சை கொடுப்பதை நிறுத்திடுச்சி. நான் உழைத்த உழைப்பு, நான் சேமித்த சேமிப்பு, நான் வாழ்ந்த வாழ்க்கை என அத்தனையும் பாழாய் போயிடுச்சி. நான் உருவாக்கின ராக்கெட் சுயமா சிந்திச்சிருந்தா சந்தோசப்பட்டிருப்பேன் ஆனா அது சுயநலமா சிந்திச்சிருச்சி.

யோவ் யோவ் ராமசாமி பார்த்து வாயா, இந்நேரம் வண்டில மோதியிருப்ப.

மன்னிசிருப்பா யோசிச்சிட்டே வந்தேன் அதான் கவணிக்கல

ரோட்டுல நடக்கும்போது அப்படியென்ன யோசனை, ஒன்ன விட்டுட்டு தனிக்குடித்தனம் போன மகனப்பத்தி யோசிச்சியா? அதான் போயிட்டான்ல விடுய்யா. புள்ள விட்டுட்டு போன பிறகும் பொண்டாட்டி செத்த பிறகும் யாருகிட்டயும் கையேந்தாம தனிச்சி நின்னு உழைச்சி வாழுற பாரு அத நெனெச்சி சந்தோசப்படுய்யா, சரி வரட்டா

ஆங் சரிப்பா, ராமசாமி அப்போதுதான் கவனித்தார். இருட்டத் தொடங்கிவிட்டது. இதுதான் இந்த இருட்டுதான் நான் வழக்கமாக பயணம் செய்யும் வாழ்க்கையின் அடையாளம். இந்த இருட்டுதான் என் நிரந்தர நண்பன். இருட்டை கண்டதும் ராமசாமிக்கு மீண்டும் தன் வாழக்கமான வாழ்க்கைக்கு வந்துவிட்ட உணர்வு ஏற்பட்டது. நாளைக்கு விடிவதற்கு முன்னால் பொழப்பை பார்க்க போகனும்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.