வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

இந்த கூட்டில் நான் இடும் முட்டை எப்படிப்பட்டதாக இருக்கும்!
எனக்கு
தெரியாத இலக்கியங்களை தெரிந்துகொள்வதற்காகவும்,
புரியாத சமுதாய நிகழ்வுகளை புரிந்துகொள்வதற்காகவும்,
நான் எடுக்கும் சிறு முயற்சியாக இருக்கும்.

எழுத்துலகில் தவழ்ந்துவரும் மழலை நான், தவறு இருந்தால் மன்னிக்கவும்.

இந்த பயணத்தில் இல்லா நெற்றிக்கண்ணை நான் திறக்க முற்பட்டால் நன்நெறி கூற நக்கீரர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில்!!
- பூபதி

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
என் பேனாவின் கால் தடங்கள் ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 



பூபதி

ஊர் : உழைப்பிற்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந்தவன்.

தொழில் :பிடித்தமான தொழிலை தேடி இன்று வரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

விருப்பம் : மனித விருப்பங்கள் மாறக்கூடியது என்பதற்க்கு நானும் ஓர் உதாரணம்.

விரும்பி படிப்பது: பாரதி, பாரதி சார்ந்த எழுத்துக்களை.

விருப்பமானவர் : பன்றி ஏன் தெருவிற்கு வந்தது என பகுத்தறிவு பேசிய பாவேந்தர்.

பிடித்த எழுத்தாளர் : இன்னும் பிடிபடவில்லை.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பூபதி தொடர்கள் வாயில்


மனிதநேயம் – மாறுதலுக்கு உட்பட்டது

பூபதி  

அருகில் இருந்து அரவனைக்காமல், விதிகளை விதைத்துவிட்டு விலகிச் சென்றுவிட்ட விவேகமற்ற கடவுளை அவ்வப்போது மனித ரூபத்தில்தான் காணமுடிகிறது, மனிதநேயம் என்ற பெயரில். ஆனால் அந்த மனிதநேயம் கூட விவேகமுள்ள விளம்பரதாரர்களைப்போல “நிபந்தனைகளுக்கு உட்பட்டது” என்ற வாசகத்தை கொண்டிருப்பது வருதமளிக்கிறது.

புது சட்டை அணிகிறோம் என்ற மகிழ்ச்சி நீங்கிய பின்பும் அதில் தடவிய மஞ்சல் நீங்காமல் இருப்பதுபோல, செம்மொழி மாநாடு முடிந்த பிறகும் அதன் அடையாளங்களை இழக்காமல் இருக்கும் பேருந்து நிற்குமிடத்தில் நின்று கொண்டிருந்தேன். என்னைச் சுற்றி ’டேய் அவ என்ன பாக்குறாடா’ என்கிற சிறியவர்கள் முதல், ’அந்த காலத்தில் நாங்களெல்லாம்’ என்கிற பெரியவர்கள் வரை, வகை வகையான மனிதர்கள். மனிதர்களால் காத்திருத்தல் என்கிற ஒரு அனுபவத்தை மட்டும் முழுமையாக அனுபவிக்க இயலாது என்பதை நிரூபிக்கும் வகையில் ச் ச் என்கிற சலித்துக்கொள்ளும் சத்தத்துடன் பேருந்து வரும் திசை நோக்கியபடியே அனைவரின் பார்வையும் அமைந்திருந்தது. அடிக்கடி கை கடிகாரத்தைப் பார்த்து பதட்டப்படும் மக்களின் மனதை மகிழ்விக்கும் விதமாக தூரத்தில் சொகுசுத்தன்மையில்லாத ஒரு பழைய பேருந்து கண்ணில் பட ஆரம்பித்தது. கூட்டத்தினுள் தங்களை தயார் படுத்திக்கொள்ளும் சலசலப்பு. திடீரென்று ஒரு வண்டி விழும் சத்தம். என்னாச்சு! என்ன சத்தம்? கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒரு நபர் அருகில் இருந்த வண்டி மீது விழுந்துவிட்டார். அந்த காட்சியை பார்த்ததும் அங்கிருந்த அனைத்து மக்களுக்கும் ஒரு உணர்வு ஏற்பட்டதே! அதற்கு விலையே கிடையாது. மனிதநேயம் இன்னும் மறைந்துவிட வில்லை என்பதை நிரூபிக்கும் அவர்களில் ஒருவர் ஓடிச்சென்று விழுந்தவரை தூக்கி அருகில் உட்கார வைத்தார். மற்றொருவர் கீழே விழுந்தவரின் பொருட்களை எடுத்து ஓரமாக வைக்கிறார், ஒருவர் ஓடிச்சென்று அருகில் இருந்த கடையில் தண்ணீர் வாங்கி வந்து குடிக்கச் சொல்கிறார். அதைத் தொடர்ந்து ஆதரவான வார்த்தைகள் – ஏங்க உடல் நிலை சரியில்லையா? என்னது சாப்பிடலையா! என்ன ஆளுங்க நீங்க சரியான நேரத்தில் சாப்பிடனும். ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிட்டா என்னாகிறது!. இந்தாங்க இதை குடிங்க முதலில்... விழுந்த நபர் தன் விழுதுகள் வீணாக போய்விட்டதை உணர்ந்த அரசமரம் என்று நினைக்கிறேன். காலம் கடந்த பின்பும் பணிக்குச் செல்வதற்காக பயணம் மேற்கொள்ள வந்திருக்கிறார். நைந்த உடல், அவரின் வாழ்வு அவரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்த்தியது அவரின் வெள்ளை தாடி. மனிதனை மனிதன் வெறுக்க காரணமான வரலாற்றுக் காரணிகள் அனைத்தும் அங்கே பொய்யாகிக் கொண்டிருந்தது. மனிதநேயத்தை முக்கியமாக கருதாமல் மணி நேரமே முக்கியமாக கருதிய பேருந்து யாரும் ஏறாததால் ஏமாற்றத்துடன் அங்கிருந்து நகர்ந்தது.

இந்த நிகழ்ச்சி நடந்த அதே பேருந்து நிற்குமிடத்திற்கு அவ்வப்போது ஒரு மனிதர் வருவார். உடை அணிந்திருப்பார் ஆனால் அதை உடை என்று சொல்ல இயலாது. எதேதோ செய்வார் ஆனால் என்ன செய்கிறார் என்று புரியாது. மெய் எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தி செலவில்லாமல் செம்மொழி மாநாடு நடத்துவார். யாரிடமும் பிச்சை கேட்க மாட்டார். யாரையும் தொந்தரவு செய்யமாட்டார் அந்த மன நலம் பாதிக்கப்பட்ட நபர். அங்கு நின்றுகொண்டிருக்கும் மக்களாகிய நாங்கள் அவரை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை. மலையைத்தாண்டி நம்மை வந்தடையும் ஆதவனின் வெளிச்சம் போல, அவரையும் தாண்டி பேருந்து வரும் திசை நோக்கியே எங்களின் பார்வை அமைந்திருக்கும். ஒருவர் கீழே விழுந்ததும் ஏன் நாங்கள் பதறினோம்? ஒரு மன நலன் பாதிக்கப்பட்டவரை கண்டதும் ஏன் எங்கள் மனமிரங்கவில்லை? காரணம், நம் மனிதநேயம் என்பது உடல் ரீதியானது மட்டுமே மன ரீதியானது அல்ல. புறத்தோற்றத்தில் வாடிய பயிறை கண்ட போதெல்லாம் வாடும் நாம் அகத்தில் வார்த்தை என்னும் வாளால் எத்தனை பேர்களை வெட்டியிருக்கிறோம்! மனரீதியான விளைவுகளை மனிதநேயம் என்ற வரைமுறைக்குள் நாம் கொண்டுவருவதில்லை. அப்படிப்பட்ட சிந்தனையை கொண்டிருப்பதால்தான் அன்றாடம் மனிதநேயமில்லாமல் பல மனங்களை கொன்று கொண்டிருக்கிறோம்.

வேலை செய்கின்ற நிறுவனத்தில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், எந்த பிரச்சனையுமில்லாமல் நேரங்காலத்தில் வீடு போய் சேர்ந்துவிட்டால் காலையில் இருந்து மாலைவரை ஏற்பட்ட அனைத்து விதமான பிரச்சனைகளையும் அடியோடு மறந்துவிடலாம். ஒருவித மன நிம்மதி கிடைக்கிறது, நம்ம வீடு, நம் மக்கள், கட்டாயத்தின் பேரில் விருப்பமில்லாமல் எதுவும் செய்ய வேண்டியதில்லை என்கிற ஒருவகையான சந்தோசம். திட்டினாலும் நம் திறமையை பாராட்டினாலும் அவர்கள் நம் ஆட்கள் என்ற உணர்வு உள்ளுக்குள் எப்போதும் இருக்கும். ஆனால் வேலை முடிந்ததும் அப்படி நிம்மதியாக வீடு போய் சேர முடிவதில்லை.

இருட்டி விட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும், இருட்ட ஆரம்பித்துவிட்ட ஒரு சூழ்நிலை என்று சொல்லலாம். எப்போது வேண்டுமானாலும் வேகமாக வருவேன் என்கிற எச்சரிகையோடு மெல்ல தூறிக்கொண்டிருந்த மழையில், வேலையை முடித்துவிட்டு வீட்டை நோக்கி மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தேன். காலையிலிருந்து மாலைவரை பணியாற்றிவிட்டு வீடு திரும்பும் போது மிதி வண்டியை பயன்படுத்துவது மனதை மேலும் சலிப்படையச் செய்கிறது. யோசித்துக்கொண்டே சாலையில் செல்லும் மற்றவர்களையும் கவணித்தேன். பல நபர்கள் மோட்டார் வாகணத்தில் சென்று கொண்டிருந்தார்கள். எவ்வளவு சோர்வு இருந்தாலும் இது போன்ற வாகணத்தில் செல்வது ஒரு ஆனந்தமான பயணம்தான். போதுமான இறை கிடைத்துவிட்ட சந்தோசத்தில் கூடு திரும்பும் பறவைகள் போல சென்று கொண்டிருந்தார்கள். மிதிவண்டி மூலம் செல்பவர்கள் இறை கிடைக்காத பறவைகள் போல ஒருவித சோர்வுடன் காணப்பட்டார்கள் என்னைப்போல. நேரம் ஆக ஆக மிதிவண்டியை மிதிப்பதற்கு சற்று சிரமமாக இருப்பதுபோல் தோண்றியது. எதோ ஒரு உணர்வில் கீழே குணிந்து பார்த்தேன், அட கடவுளே! முன் சக்கரத்தில் காற்று மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது. நான் செல்லும் பாதையில் பழுதுபார்க்கும் கடை எதுவுமில்லாததால், முழுவதுமாக காற்று இறங்கிவிடுவதற்குள் வீடு சென்றுவிட வேண்டும் என்ற சிந்தனையில் வேகமாக மிதித்துக் கொண்டிருந்தபோது என் அலைப்பேசி அலறியது. வாகணத்தில் செல்லும் போது அலைப்பேசியை எடுக்காதீர்கள் அழைப்பது எமனாகவும் இருக்கலாம் என்ற வாசகம் நினைவுக்கு வந்தது. இருந்தாலும் மிதி வண்டியில் செல்லும் என்னையெல்லாம் மதித்து எமன் அழைக்கமாட்டார் என்ற நம்பிக்கையில் அழைப்பேசியை அரவனைத்தேன். வீட்டில் இருந்துதான் அழைத்திருந்தார்கள். வரும்போது சில பொருட்களை வாங்கிவரச் சொன்னார்கள். அந்த பொருட்களை வாங்க வேறு பாதையில் செல்ல வேண்டும். அதுவரை என் மிதிவண்டியில் மூச்சு இருக்குமா! அல்லது என் மூச்சை வாங்கிவிடுமா! என்று யோசித்துக்கொண்டே பாதையை மாற்றி செல்ல ஆரம்பித்தேன். மிதிப்பது மேலும் மேலும் சிரமமாகிக்கொண்டே இருந்தது.

வழக்கமாக அந்த பாதை மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டே இருக்கும். வேலைக்கு சென்று திரும்பும் ஆண்கள் மற்றும் பெண்கள் அங்குவந்துதான் பேருந்தில் ஏறுவார்கள். மிகவும் முக்கியமான இடம். ஆனால் ஏனோ தெரியவில்லை நான் செல்லும் போது ஏதோ நடந்துள்ளது என்பது போன்றதொரு சூழ்நிலை நிலவியது. வாகணங்களும் பெருமளவில் காணவில்லை. ஒரு சில வாகணங்கள் அந்த பாதை வரை சென்றுவிட்டு திரும்பி வேறு பாதையில் செல்ல ஆரம்பித்தது. காக்கி உடையணிந்த ஒருவர் அங்கே நின்று கொண்டு வரும் வாகண ஓட்டுனர்களிடம் ஏதோ பேசுகிறார். உடனே வாகணங்கள் திரும்பி வேறு பாதைக்கு செல்கிறது. அதை பார்த்துக்கொண்டே அருகில் சென்றதும்தான் விசயம் புரிந்தது. அந்த பாதையை அடைத்திருந்தார்கள். இது ஒரு வழிப்பாதை இதில் இனி செல்ல முடியாது என்று அறிவித்திருந்தார்கள். இது எப்போதிருந்து! முன்னதாக யாரும் அறிவிக்கவில்லையே! இருக்கிற பிரச்சனையில் இதுவேறயா! இந்நேரம் வீடு போய் சேர்ந்திருப்பேன், பொருள் வாங்க வந்து இங்கு மாட்டிக்கொண்டேனே. மழை சற்று வேகம் எடுத்துக்கொண்டிருந்தது. மாற்றுப்பாதைகள் தெரியும்தான் ஆனால் அதுவரை மிதிவண்டியில் காற்று இறங்காமல் இருக்க வேண்டுமே! லேசாக தலை வலித்தது. மன உளைச்சல் அதிகரித்ததுபோல தோண்றியது. கோபமா, வெறுப்பா அல்லது முடிவெடுக்கத் தெரியாத ஒரு நிலையா என்று புரியாத ஏதோ ஒரு உணர்வில் அங்கேயே நின்றுவிட்டேன்.

பல வகையான வண்ணத்தில், வடிவத்தில் நான்கு சக்கர வாகணங்கள் அந்த வழியாக வருகிறது அந்த காக்கி உடையணிந்தவர் அருகில் சென்று விசயத்தை சொல்கிறார். இஸ்ட் ஒகே ஒகே என்று சுலபமாக கூறிக்கொண்டு மாற்றுப்பாதையை நோக்கி பயணிக்கிறார்கள். அடடா என்ன ஒரு வாழ்க்கை. நமக்கு பெரிய பிரச்சனையாக தெரிவது சிலருக்கு பிரச்சனை என்ற வட்டத்திற்குள்ளேயே வருவதில்லையே! கடவுளின் படைப்பில் என்ன ஒரு சமநிலை. எனக்குத் தெரிந்த பல பாதைகளில் சென்று பார்த்தேன் ஒவ்வொரு பாதையும் மூடப்பட்டு வேறு பாதையை முன்மொழிந்தது. முடிவாக எங்கிருந்து சென்றேனோ அங்கேயே என்னை கொண்டு சென்று உலகம் உருண்டையானது என்பதை உணர்த்தினார்கள். இதற்குமேல் முடியாது, மிதி வண்டியில் காற்று சுத்தமாக இறங்கிவிட்டது. வண்டியை தள்ளிக்கொண்டு மெல்ல நடக்க ஆரம்பித்தேன். மழையைப் பற்றிய சிந்தனை நீங்குமளவிற்கு நனைந்துவிட்டேன். ச்சே எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு இம்சைகள் என்று சலித்துக்கொண்டு சாலையை பார்க்கையில் பத்துக்கும் மேற்பட்ட பல பெண்கள் தோலில் ஒரு பையை மாட்டிக்கொண்டு மகாத்மா காந்தி நடப்பாரே அதைவீட வேகமாக நடந்து வந்துகொண்டிருந்தார்கள். ஏதாவது பந்தயம் நடக்கிறதா, ஏன் இவ்வளவு வேகம் என்று யோசிக்கும்முன்பாகவே என்னை கடந்து சென்றார்கள். அதில் ஒரு பெண், தம்பி பேருந்து எங்கு நிற்கும் என்று தெரியுமா - அதோ அங்கு நிற்குமே – அங்குதான் இனிமேல் நிற்காதாமே நான்கு கிலோ மீட்டர் நடந்தே வந்துவிட்டேன் பேருந்து எங்கு நிற்கும் என்று தெரியவில்லை என்று புலம்பிக்கொண்டே தன் நடையின் வேகத்தை அதிகரித்தார். வேலைக்கு சென்று திரும்பும் பெண்கள் அவர்கள். மாலையில் பாதை மாறவேண்டும் என்ற விசயம் தெரியாமல் மாட்டிக்கொண்டவர்கள். ஒவ்வொருவர் முகத்திலும் நம்மால் என்ன முடியும் என்ற ஆதங்கம். வெளிக்காட்டினாலும் என்ன பிரயோஜனம் என்பதால் அடக்கிய கோபம். வீட்டில் நடக்கப்போகும் விபரீதங்களை வெளிப்படுத்தும் உணர்வுகள் என அனைத்தும் அவர்கள் முகத்தில் தெரிந்தது.

ஒவ்வொருவர் குடும்பத்திலும் ஒவ்வொரு பிரச்சனைகள் அதை சமாளிக்கவே சரியாக போகிறது வாழ்க்கை இதில் இப்படிப்பட்ட சோதனைகள் ஏற்பட்டால் அவர்களின் நிலையை சொல்லவா வேண்டும். இருட்டிவிட்ட நிலையில் மழையில் நனைந்துகொண்டு பெண்கள் நடந்துபோகிறார்கள். மகாத்மா கண்ட கணவு ஒருவேலை பலிக்கிறதோ!. எந்த புத்திசாலியின் நடவடிக்கை அது என்று தெரியவில்லை முன்னதாக அறிவிக்காமல் இனி இது ஒருவழிப்பாதை என்று சொல்லி அனைவரின் மனதிலும் வலியை ஏற்படுத்திருக்கிறார்கள். இந்த தவறான செயலால் எவ்வளவு மன ரீதியான பாதிப்புகள். எவ்வளவு மக்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பேருந்தை நம்பி வாழும் வாழ்க்கையை கொண்டவர்களின் நிலையை வெரும் எழுத்தால் எழுதிவிட முடியாது. அவர்களின் நிலை என்னைவீட மிக மோசமாக இருந்தது. இப்படி நடந்துகொண்டே சென்று எப்போது வீடு போய் சேர்வார்கள். திரும்பிப் பார்க்கிறேன் இன்னும் பல பெண்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்.

முன்னதாக யாரும் சொல்லவில்லையே! இல்லை இல்லை செய்தித்தாலிள் நான்கு நாட்களுக்கு முன்னதாக அறிவித்தார்களாம். காலையில் எழுந்து செய்தித்தாளை படித்துவிட்டு வேலைக்கு செல்லும் நிதானமாக வாழ்க்கையை இங்கு யார் வாழ்கிறார்கள். ஓடுவதும் ஓடி அடங்குவதுமே வாழ்க்கையாக மாற்றிவிட்டது. கொஞ்ச நாளைக்கு முன்பு வருங்கால முதல்வர்!!! நடித்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்பதை தினமும் செய்தித்தாளில், வானொனில் என அனைத்துவித அறிவியல் சாதனங்களிலும் அறிவித்துக்கொண்டே இருந்தார்கள். இதோ இன்னும் ஏழே நாட்கள், ஆறே நாட்கள்... அந்த படம் எப்போது வெளியாகும் என்று யாரைக்கேட்டாலும் சொல்லும் அளவிற்கு அந்த செய்தையை கொண்டு சேர்த்தார்கள். யோசித்துப்பாருங்கள் எந்த செய்திக்கு நாம் முக்கியத்துவம் தருகிறோம்! எந்த மாதிரியான செய்திகளை கொண்டு செல்ல அறிவியல் சாதனங்களை பயன்படுத்துகிறோம்! அது வியாபாரம் அதனால் அதை விளம்பரப்படுத்துகிறார்கள் என்பார்கள் சிலர். உண்மைதான் ஆனால் நாம் கவணிக்க வேண்டிய விசயம் ஒரு செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க அனைத்துவிதமாக வசதிகளும் இருக்கும்போது செய்தித்தாளில் மட்டும் தெரிவித்துவிட்டு செயலில் இறங்குவது மக்களுக்கு மன உளைச்சளைத்தான் ஏற்படுத்தும்.

இவையனைத்தும் மனரீதியாக ஏற்பட்ட கொடுமைகள் எனவே இவற்றை மனிதநேயம் கொண்டு மனிதர்களால் பார்க்க இயலாது காரணம் உடல் ரீதியாக யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படவில்லை வெறும் மன உளைச்சல்தான். அதனால்தான் அவ்வப்போது மக்களைப்பற்றி கவலைப்படாமல் இது போன்றதொரு முடிவுகளை எடுக்கின்றார்கள். நடந்தே வீடு வந்து சேர்ந்துவிட்டேன். சாய்ந்து படுத்துக்கொண்டேன் ஒருவித வலியை உணர்ந்தேன் உடலிலா அல்லது மனதிலா என்று தெரியவில்லை. சூரிய ஒளிக்காக ஓட்டின் நடுவே வைக்கப்பட்டிருந்த கண்ணாடியில் மழைத்துளி விழுவது நன்றாகத்தெரிந்தது. அப்படியே தூங்கி விட்டேன், தூக்கம் உற்சாகத்தையோ அல்லது தன்னம்பிக்கையையோ தருவதில்லை மாறாக இருக்கின்ற பிரச்சனையை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை கொடுக்கிறது.

அடுத்த நாள், முன்தினம் ஏற்பட்ட அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துடன் சாலையில் பயணித்தேன். மாற்றுப்பாதைகளை மனதில் வகுத்துக்கொண்டேன். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக ஒரு வழிப்பாதை என்று சொன்ன சாலை இருவழிப்பாதையைப்போல் பயன்பட்டுக்கொண்டிருந்தது. ஒருவேலை நேற்று கனவு ஏதாவது கண்டுவிட்டேனோ என்ற சிந்தனையில் அருகில் இருந்தவரிடம் இது ஒருவழிப்பாதை என்றார்களே என்று கேட்டேன். அதுவா நேத்து சோதனை முயற்சியாக செய்தார்களாம் என்றார். சோதனையா! ஹா ஹா ஹா பக்தா இதுவும் என் திருவிளையாடலில் ஒன்றே உம்மை சோதிக்கவே யாம் அப்படி செய்தோம் என்று சிவபெருமான் கூருகிறாரா என்று கூர்ந்து கவணித்தேன். வாகன இரைச்சலில் வல்லமைமிக்க சிவனின் குரல் கேட்கவில்லை. சட்டத்திற்கு புறம்பாக மான் அல்லது புலித்தோல் போர்த்திக்கொண்டு எங்காவது தென்படுகிறாரா என்று தேடிப்பார்த்தேன் ம்ஹும் காணவில்லை. அப்படியானால் சிவன் சோதிக்கவில்லை. வேறு யார் சோதித்தது!

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.