வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

இந்த கூட்டில் நான் இடும் முட்டை எப்படிப்பட்டதாக இருக்கும்!
எனக்கு
தெரியாத இலக்கியங்களை தெரிந்துகொள்வதற்காகவும்,
புரியாத சமுதாய நிகழ்வுகளை புரிந்துகொள்வதற்காகவும்,
நான் எடுக்கும் சிறு முயற்சியாக இருக்கும்.

எழுத்துலகில் தவழ்ந்துவரும் மழலை நான், தவறு இருந்தால் மன்னிக்கவும்.

இந்த பயணத்தில் இல்லா நெற்றிக்கண்ணை நான் திறக்க முற்பட்டால் நன்நெறி கூற நக்கீரர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில்!!
- பூபதி

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
என் பேனாவின் கால் தடங்கள் ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 



பூபதி

ஊர் : உழைப்பிற்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந்தவன்.

தொழில் :பிடித்தமான தொழிலை தேடி இன்று வரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

விருப்பம் : மனித விருப்பங்கள் மாறக்கூடியது என்பதற்க்கு நானும் ஓர் உதாரணம்.

விரும்பி படிப்பது: பாரதி, பாரதி சார்ந்த எழுத்துக்களை.

விருப்பமானவர் : பன்றி ஏன் தெருவிற்கு வந்தது என பகுத்தறிவு பேசிய பாவேந்தர்.

பிடித்த எழுத்தாளர் : இன்னும் பிடிபடவில்லை.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பூபதி தொடர்கள் வாயில்


அவசியமான அரசியல்

பூபதி  

வணிகத்துறையில் ஒரு குறிப்பிட்ட பொருளை விற்க பல கடைகள் இருந்தால் அந்தப் பொருளின் விற்பனை வளர்ச்சி, விற்பனை வீழ்ச்சி மற்றும் அந்த பொருளின் விலை ஆகியவற்றை அந்தப் பொருளை வாங்கிப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள்தான் தீர்மானிப்பார்கள். அதே சமயத்தில் அந்தப் பொருளை விற்க ஒன்றிரண்டு கடைகள்தான் இருக்கிறது, அங்கு மட்டும்தான் அந்தப் பொருள் கிடைக்கும் என்ற பட்சத்தில் அந்தப் பொருளின் விலை உட்பட அனைத்து விசயங்களும் விற்பனையாளர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். அவர்கள் சொல்லும் விலைக்குத்தான் பொருளை வாங்கியாக வேண்டும். இந்த விசயம் வணிகத்துறைக்கு மட்டுமல்ல அனைத்து துறைகளுக்கும் பொருந்தும், அதில் அரசியலும் அடங்கும்.

அரசியலைப் பொருத்த வரையில் இவர்கள் அல்லது அவர்கள் என்ற நிலைதான் இங்கு உள்ளது. அதையும் மீறி ஒரு சிலர் புதிதாக வந்தாலும் பெரிய கட்சிகள், தொகுதி பதவி என்று எதாவது ஒன்றை கொடுத்து புதிதாக வந்தவரை தங்கள் கட்சியில் கூட்டணி என்ற பெயரில் இணைத்துக்கொள்கிறார்கள். புதிதாக வந்தவர்களுக்கு வெற்றி மற்றும் அங்கீகாரம் மிக முக்கியம் என்பதால் கிடைக்கின்ற பெரிய கட்சியில் இணைந்துகொள்கிறார்கள். இதன் மூலமாக தனித்தன்மையுடன் ஒருவர் தோன்றுவது தடுக்கப்படுகின்றது. எனவே நாம் சார்ந்திருக்க வேண்டியது இரண்டே கட்சிகள் என்பதால் அந்த இரண்டு கட்சிகளின் சிந்தனையை மக்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்ற கட்டாய சூழ்நிலை உள்ளது. ஒருவரை விட்டால் இருப்பது மற்றொருவர் தான் என்கின்றபோது மக்களுக்கும் வேறு வழியில்லாமல் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றார்கள். சூழ்நிலை இப்படியில்லாமல் பல கட்சிகள் வளர்ச்சியடைந்த நிலையில் இருந்தால், உருவாக வேண்டிய சூழ்நிலையை மக்களால் தீர்மானிக்க முடியும். அப்படி ஒரு மாற்றம் வரவேண்டுமானால் அரசியலுக்கு வர விரும்புவோரின் எண்ணிக்கை அதிரிக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக அப்படி ஒரு வாய்ப்பு உருவாகவே முடியாமல் போய்விட்டது.

அரசியலுக்கு பல பேர்கள் வர வேண்டுமானால், அரசியல் பற்றிய விவாதங்கள் தொடர்ந்து நடக்க வேண்டும். விவாதிக்கும்போதுதான் அரசியலில் தற்போது எந்த மாதிரியான சூழ்நிலை நிலவுகின்றது. அரசியலில் தற்போது எந்த மாதிரியான மாற்றம் தேவை என்பது பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் அரசியல் ரீதியான விவாதங்களின் அவசியத்தை யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை. உணர்ந்தாலும் அதை செயல்படுத்த இந்த சமுதாயம் விடுவதில்லை.

நான்கு நபர்கள் ஒன்றாகக் கூடும் இடங்களில் கண்டிப்பாக இந்த வாசகம் இருக்கும் “தயவு செய்து இங்கு அரசியல் பேசாதீர்கள்.” வியாபாரம் செய்யும் இடத்தில் தேவையற்ற சலசலப்பு எழுவதை தவிர்க்கவும், தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கவும் மேலும் வியாபாரம் பாதிக்கக்கூடாது என்பதற்காகவும் இப்படி எழுதி வைக்கிறார்கள். அதனால் எழுதிவைப்பவர்களை குறை சொல்ல வாய்ப்பில்லை. ஆனால் படிக்குமிடம், பணியாற்றுமிடம் தவிர மற்ற இடங்களில்தான் மக்கள் தங்களுடைய கருத்துக்களை ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பரிமாறிக்கொள்ள முடியும். அங்கேயும் தடை செய்யப்படுவதால் அவர்களுக்குக் கிடைக்கும் கொஞ்ச வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போகிறது.

நான் வேலைக்கு செல்லும் வழியில் நான்கு நபர்கள் கையில் மண்வெட்டியுடன் ஒரு சுவருக்கு கீழே உட்கார்ந்திருப்பார்கள். லாரியில் கொண்டுவரப்படும் மணலை மண்வெட்டியைக் கொண்டு கீழே தள்ளுவது அவர்களது பணி. மணல் லாரியை கண்டதும் போட்டி போட்டுக்கொண்டு வேகமாக சென்று அந்த வேலையை பெற்றுக்கொள்வார்கள். லாரி வரும் வரை இயல்பாக பேசிக்கொண்டிருப்பார்கள். ஒரு நாள் வழக்கமாக நான் அந்த வழியில் வந்த போது அங்கு யாரையும் காணவில்லை. என்ன நடந்ததோ தெரியவில்லை புதிதாக அவர்கள் அமர்ந்திருக்கும் சுவரில் கரியினால் ஒரு வாசகம் புதியதாக எழுதியிருந்தார்கள். “தயவு செய்து இங்கு யாரும் அரசியல் பேசாதீர்கள்”ஆச்சரியமாக இருந்தது அது வியாபாரம் நடக்கும் கடையல்ல, வேறு எந்த அமைப்பும் அங்கு இல்லை அது ஒரு இடிந்துபோன சுவர், நான்கு ஐந்துபேர் அமர்ந்துகொள்ளலாம் அவ்வளவுதான். அங்கு என்ன பிரச்சனை வந்துவிடப்போகிறது! ஆனாலும் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது அதனால்தான் அப்படி எழுதிவைத்துள்ளார்கள்.

அரசியல் பேசினாலே பிரச்சனை ஏற்பட்டுவிடுமா? அரசியல் அவ்வளவு ஆபத்தானதா? அப்படி எந்த காரணமும் இல்லை. உண்மை என்னவெனில் மக்கள் அரசியலை விவாதிப்பதில்லை அரசியல்வாதிகளைப் பற்றி மட்டுமே விவாதிக்கின்றார்கள். இதுதான் பிரச்சனை ஏற்படுவதற்கான காரணமாக அமைந்துவிடுகிறது. உன் தலைவன் சரியானவரா, என் தலைவன் என்ன செய்தார் தெரியுமா என வீம்பாக பேசும் நபர்களிடம்தான் பிரச்சனை உருவாகுமே தவிர, அரசியலை விமர்சனம் செய்யும் விவாதத்தில் பிரச்சனைகள் எழ வாய்ப்பே இல்லை.

அரசியல் பேசுவதாக நினைத்துக்கொண்டு, தனிப்பட்ட நபர்களான அரசியல்வாதிகளை விமர்சிப்பதால், தான் சார்ந்திருக்கும் ஒருவரை குறை சொல்கின்றார்களே என்ற ஆதங்கத்தில் உங்கள் தலைவன் சரியானவரா? அவர் என்னென்ன செய்தார் தெரியுமா... என்ற ரீதியில் பிரச்சனை ஆரம்பம் ஆகின்றது. ஆனால் விவாதப்பொருளான அந்த இரண்டு தலைவர்களாலும் அந்த மக்களுக்கு எந்த நன்மையுமில்லை என்பதை யாரும் உணர்வதில்லை. அப்படி உணர்ந்தாலும் மாற்றத்திற்கான மார்க்கம் என்ன என்று தெரிவதில்லை. அதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அரசியலை கட்டாயம் விவாதப்பொருளாக்கியே தீர வேண்டும்.

”தயவு செய்து இங்கு அரசியல் பேசாதீர்கள்” என்ற வாசகத்தை எவ்வளவு சீக்கிரமாக நாம் அழிக்கின்றோமோ அவ்வளவு நல்லது. அதற்கு பதிலாக “தயவு செய்து இங்கு அரசியல்வாதிகளைப்பற்றி பேசாதீர்கள் என்று எழுதிவைக்கலாம்” . அரசியல் நமக்கு மிகவும் இன்றியமையாதது. அதெப்படி அரசியல் வாதிகளைப் பற்றி பேசாமல் அரசியல் பேசுவது என்று நீங்கள் கேட்கலாம். பொதுவாக போலீஸ் துறை பற்றி விவாதம் செய்வது வேறு, எங்க ஊர் காவல் அதிகாரி என்ன செய்தான் தெரியுமா என்று தனிப்பட்ட காவலரை விமர்சிப்பது வேறு. இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் உணர வேண்டும். அரசியலை விவாதிக்கக் கூடாது என்பது மிகவும் தவறான சிந்தனை.

ஏதோ வருடத்திற்கு ஒருமுறை உறவினர் வீட்டுக்கு செல்வது போன்ற தொடர்புதான், மக்களுக்கும் அரசியலுக்கும் உள்ளது. ஐந்து வருடம் கழித்துதான் யார் நல்லவர்கள், யார் நன்மை செய்கின்றார்கள், யாரை நம்பலாம், யாரை புறக்கனிக்கலாம் என்ற பேச்சு மக்கள் மத்தியில் எழுகின்றது. இது மிகவும் தவறான பழக்கம். வெறும் ஓட்டுப் போடும் நபராக மட்டும் இல்லாமல் அனைவரும் ஏதாவது ஒரு கட்சியில் உறுப்பினராக சேர்ந்து அரசியலில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். கட்சிகளின் கொள்கைகள், செயல்பாடுகள் என அனைத்தையும் விவாதம் செய்து உண்மைகளை உணர வேண்டும். ஐந்து வருடத்திற்கு ஒருமுறைதான் அரசியல் சிந்தனை என்ற நிலை மாறி களத்திற்கு வந்து காரணம் தேட வேண்டும்.

இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும், புதியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என அவ்வப்போது சில கோஷங்கள் எழுவதும், வீழ்வதுமாக இருக்கிறது. அவர்கள் புதியவர்களை அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்வார்களே தவிர யாரையும் வரவிடமாட்டார்கள். தேவையான வயதை அடைந்ததும் உங்கள் பிள்ளைகளை ஏதாவது ஒரு கட்சியில் உறுப்பினராகச் சேர்த்து அவர்களுக்கு அரசியலை கற்றுக்கொடுங்கள். அதை உங்கள் கடமையாக கருதி செயல்படுத்துங்கள். பின்னர் தானாகவே அவர்கள் மாற்றத்தை உருவாக்குவார்கள்.


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.