வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

இந்த கூட்டில் நான் இடும் முட்டை எப்படிப்பட்டதாக இருக்கும்!
எனக்கு
தெரியாத இலக்கியங்களை தெரிந்துகொள்வதற்காகவும்,
புரியாத சமுதாய நிகழ்வுகளை புரிந்துகொள்வதற்காகவும்,
நான் எடுக்கும் சிறு முயற்சியாக இருக்கும்.

எழுத்துலகில் தவழ்ந்துவரும் மழலை நான், தவறு இருந்தால் மன்னிக்கவும்.

இந்த பயணத்தில் இல்லா நெற்றிக்கண்ணை நான் திறக்க முற்பட்டால் நன்நெறி கூற நக்கீரர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில்!!
- பூபதி

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
என் பேனாவின் கால் தடங்கள் ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 



பூபதி

ஊர் : உழைப்பிற்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந்தவன்.

தொழில் :பிடித்தமான தொழிலை தேடி இன்று வரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

விருப்பம் : மனித விருப்பங்கள் மாறக்கூடியது என்பதற்க்கு நானும் ஓர் உதாரணம்.

விரும்பி படிப்பது: பாரதி, பாரதி சார்ந்த எழுத்துக்களை.

விருப்பமானவர் : பன்றி ஏன் தெருவிற்கு வந்தது என பகுத்தறிவு பேசிய பாவேந்தர்.

பிடித்த எழுத்தாளர் : இன்னும் பிடிபடவில்லை.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பூபதி தொடர்கள் வாயில்


மறைந்துபோன கடிதமும்...

பூபதி  

அரசியல் வாழ்வில் நமது கலைஞர் அவர்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது எது? கடினமான உழைப்பு என்பார்கள் சிலர், அவரின் அரசியல் அனுபவம் என்பார்கள் சிலர். ஆனால் உண்மையில் அவரின் வெற்றிக்கு காரணம் அவரின் கொள்கைகளும், அந்த கொள்கைகளை அவர் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதும்தான்.

கலைஞர் அவர்களின் செயல்பாடுகள் எப்போதும், எந்த சூழ்நிலையிலும் ஒரே மாதிரி தான் அமைந்திருக்கும். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அவர் தன்னுடைய செயல் முறைகளை மாற்றியமைத்துக் கொண்டதில்லை. அதேபோல பழமையான விசயங்களை போற்றுவதிலும் அவருக்கு நிகர் வேறு யாருமில்லை. அவரின் வளர்ச்சிக்கு காரணமான கொள்கைகள் எது? எந்தமாதிரியான பழமையான விசயங்களை அவர் கடைப்பிடிக்கின்றார் என்பது பற்றி பிறகு பார்ப்போம்.

தற்போது உள்ள தொழில் நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி தொலைதூரத்தில் உள்ள இரண்டு நபர்கள் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் விதம் பின்வருமாறு அமைந்திருக்கும். ”நாளைக்கு என் வீட்டில் விசேசம், நீ வந்திடு - இல்ல முடியாது, கொஞ்ச வேலை இருக்கு - முடிந்தவரை வருவதற்கு முயற்சி செய்”. இதே நபர்கள் குறிப்பிட்ட சில வருடங்களுக்கு முன்பு அதாவது தொழில் நுட்ப வசதிகள் பெருகாத நாட்களில் ஒருவரை ஒருவர் கடிதத்தின் மூலம் தொடர்புகொண்டால் எப்படி இருந்திருக்கும்? அன்புள்ள... என்று ஆரம்பித்து சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நல விசாரிப்புகளோடு சொல்ல வந்த விசயத்தைச் சொல்லி, அந்த குடும்பத்தாரின் நலனுக்கான பிரார்த்தனையோடு முடியும் வகையில் அழகாக ஒரு கடிதம் எழுதப்பட்டிருக்கும். தற்போது இந்த கடித முறை நகைப்பிற்குள்ளான ஒரு விசயமாக அமைந்துவிட்டது. தொலைபேசியில் தகவல் சொல்லாமல், இந்த காலத்திலும் கடிதம் எழுதிகிறான் பார் என்று கிண்டல் செய்யும் காலம் இது. ஆனாலும் அந்த பண்பாட்டைக் காப்பாற்ற தமிழகத்தில் சிலர் இப்போதும் முயற்சி செய்துகொண்டு தான் இருக்கிறார்கள்.

தொழில் நுட்ப வசதி காரணமாக அடிக்கடி ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதால், ஒவ்வொரு முறையும் நீ நலமாக இருக்கிறாயா? என்பது போன்ற வார்த்தைகளுக்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது. என்ன விசயம் என்பதை பற்றி மட்டும் பேசக்கூட இப்போது நேரம் இல்லாத அளவுக்கு காலம் மாறிவருகிறது. சொல்ல வந்த விசயத்திற்கு மேல் தேவையில்லாமல் ஏதாவது பேசினால் கேட்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுவிடும் சூழ்நிலை தற்போது உள்ளது.

கடிதம் எழுதும் வழக்கத்தை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக சிலர் அவ்வப்போது கடிதம் தொடர்பான பரிசுப் போட்டியை நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். சிறந்த முறையில் எழுதப்படும் கடிதத்தை தேர்வு செய்து பரிசு கொடுப்பார்கள். அப்படியாவது பழமையான அந்த முறை மீண்டும் செழிப்படையாதா என்ற எண்ணத்தில் இது போன்ற போட்டிகளை நடத்துகின்றார்கள். இப்படி போட்டிகளை நடத்தி ஊக்குவித்தாலும் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் காணப்படவில்லை. காரணம் தொலைபேசியை பயன்படுத்தினால் வேலை முடிந்ததுவிடும் அதற்குப்போய் கடிதம் வாங்கி எழுதி... என்ற எண்ணம் அனைவருக்கும் வந்து விட்டது. அதற்கும் நேரமில்லை என்றால் அலைபேசி மூலமாக குறுஞ்செய்தியை அனுப்பினால் இன்னும் சுலபமாக வேலை முடிந்துவிடும்.

இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையிலும் சிலர் கடிதம் எழுதும் முறையை மீண்டும் புதுப்பிக்க முயற்சி எடுக்கின்றார்கள். அப்படி முயற்சி செய்பவர்களில் அல்லது கடித முறையை இந்த நவீன காலத்திலும் தொடர்பவர்களில் மிக முக்கியமானவர் நம் கலைஞர் அவர்கள். அவருடைய செயல்பாடுகளை கூர்ந்து கவணித்தால் இந்த விசயம் உங்களுக்கு புரியும். எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் தன்னுடைய கடிதம் எழுதும் பழக்கத்தை அவர் கைவிட்டது கிடையாது. அவசியமான பிரச்சனையாக இருந்தாலும் சரி, ஓர் இனம் அழியும் பிரச்சனையாக இருந்தாலும் சரி கடித முறையை அவர் கைவிட்டது கிடையாது. நேரடியாக தொடர்புகொண்டால் ஒரு பழமையான பாரம்பரியம் பாதிக்கப்படுமே என்ற எண்ணம் அவருக்கு எப்போதும் உண்டு. அவரின் இந்த வளர்ச்சிக்கு இந்த கொள்கைப்பிடிப்பே முக்கியக்காரணம்.

அவரின் செயல்பாடுகளை முன்மாதிரியாகக் கொண்டு பலர் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். பலர் அவர் உடன் எப்போதும் இருந்துகொண்டு அவரின் செயல்பாடுகளை பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்களால் கலைஞர் அளவிற்கு முன்னேற்றம் காண முடியவில்லை. காரணம் அவர்களால் எல்லா சூழ்நிலையிலும் கொள்கைகளை பின்பற்ற முடியாததுதான் காரணம். கலைஞர் அவர்களை கைது செய்த போது கொள்கைப்படி கடிதம் எழுதாமல், அனைத்து வித தொழில் நுட்ப சாதனங்களையும் பயன்படுத்தி டெல்லிக்கு தகவல் அனுப்பினார்கள். மத்தியில் பதவி என்ற சூழ்நிலை வந்த போதும் கடிதம் எழுதாமல் கலைஞரை கையோடு அழைத்துச் சென்றுவிட்டார்கள். இப்படி ஒவ்வொரு முறையும் கலைஞரைச் சார்ந்தவர்கள் கொள்கையில் இருந்து தவறிவிடுகின்றார்கள். இதுதான் கலைஞர் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

மக்களுக்கு ஒரு பிரச்சனை என்று வரும்போதெல்லாம் கடிதம் எழுத கலைஞர் தவறியதே இல்லை. சமீபகாலமாக அந்த கொள்கையை கைவிட்டுவிட்டாரோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் ஒரு வயது முதிய தாய்க்கு சிகிச்சை அளிக்க முடியாதா என்று தமிழகம் கொந்தளித்த போது மீண்டும் அறிவித்தார் கலைஞர் “மத்திய அரசுக்கு நான் கடிதம் எழுதத் தயார்” என்று. இந்த செய்தியை படித்ததும் அவர் கொள்கையில் இருந்து இன்னும் விலகவில்லை என்று தெரியவந்தது.

தன்னுடைய எதையும் தாங்கும் இதயத்தை அறிஞர் அண்ணா தன் தம்பியான கலைஞரிடம் மட்டும்தான் கொடுத்துவிட்டு சென்றார். அதனால்தான் கலைஞரால் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கலங்காமல் கடிதம் எழுத முடிகின்றது. அவரின் இதயத்தைப் போன்றதல்ல நம் இதயம், நம்மால் எல்லா சூழ்நிலையிலும் உட்கார்ந்து கடிதம் எழுதிக்கொண்டிருக்க முடியாது. எனவே மிக சாதாரணமான, நம்மால் தாங்கிக்கொள்ள கூடிய விசயங்களில் மட்டுமாவது கடிதம் எழுதுவோம். அந்த பழக்கத்தை அழிந்துவிடாமல் காப்பாற்றுவோம்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.