வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.

தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

 

 
     
     
     
   
பயணக் கட்டுரை
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


சக்தி ஜோதி

கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.
தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

இனி அவரைப் பற்றியும் அவரது நிறுவனம் பற்றியும் அவரது பயணத்திற்கான காரணம் பற்றியும் ஒரு விரிவான அறிமுகம்.

சக்தி ஜோதி அவர்கள் "நிலம் புகும் சொற்கள்" என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை:

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளையானது 21-12-2001 அன்று திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்டது. தற்பொழுது 680 கிராமங்களை உள்ளடக்கி திண்டுக்கல், தேனி, ஈரோடு மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.

பார்வையும் நோக்கமும்

“வளர்ச்சியை நோக்கி....” சமூகத்தின் அனைத்து நிலையினரையும் வளர்ச்சியின் அடுத்த நிலை நோக்கி வழிநடத்திச் செல்வதையே, சமூகத்தின் மீதான நீள்பார்வையாகக் கொண்டு செயல்படுகிறது. கிராமப்புற வளங்களை மேம்படுத்துவதும், கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மனிதர்களை சமுதாயத்தின் மைய நீரோட்டத்தில் இணைப்பதற்காக ஒட்டு மொத்த ஆதார சக்தியை திரட்டித் தருவதற்காகவும், பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்திற்காகவும் சமூகத்தின் அனைத்து வகையான முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

சமூக மேம்பாட்டு செயல்பாடுகள்

மகளிர் மேம்பாட்டில்….
1. 2880 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் 680 கிராமங்களில் 34,800 உறுப்பினர்களுக்கு மேல் சக்தி அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
2. பாரத ஸ்டேட் வங்கியுடன் 18 கிளைகளுடன் இணைந்து சுய உதவிக் குழவினருக்கு கடனுதவிப் பெற்றுத்தரப்படுகிறது. இது வரை 56 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
3. மேலும் ர்னுகுஊ வங்கியுடன் இணைந்து 3 கோடி வரை கடனுதவி பெற்றுத் தரப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழல் மேம்பாட்டில் ...
சுற்றுபுறச் சூழல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக வருடம் 1000 மரக்கன்றுகளை நடுதல், இதுவரை 7,000 மரக்கன்றுகளை சக்தி அறக்கட்டளையின் சார்பாக நடப்பட்டுள்ளது.

நீர்வடிப் பகுதி மேம்பாட்டு திட்டம் :
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (நபார்டு) உதவியுடன் கிராமப்புறங்களின் இயற்கை வளங்களை மேம்படுத்துவது, மண் அரிப்பைத் தடுப்பது மேலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது மூலமாக கிராமங்களிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து கிராம மக்களின் வாழ்;க்கைத்தரம் மேம்பாடு அடைய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கியின் வணிக வழிகாட்டியாக (Business Facilitator)

திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் கடன் மற்றும் சேமிப்பு சம்பந்தமான வசதிகளை வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுத்தரும் வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது.

மருத்துவ முகாம்கள் :

கண் பரிசோதனை முகாம்இ எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்இ தாய்இ சர்க்கரை நோய் விழிப்புணர்வு, சேய் நல பரிசோதனை முகாம் உட்பட 15 வகையான மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 28இ000 மக்கள் பயனடைந்துள்ளனர்.

சக்தி சுய தொழில் பயிற்சி நிலையம் :
பயிற்சிகளில் சில…….
1. நான்கு இடங்களில் தையல் பயிற்சிப்பள்ளி
2. சானிடரி நாப்கின் பயிற்சி
3. கண்ணாடி மற்றும் பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி
4. ரெக்ஸின் மற்றும் ஜூட் பை தயாரிப்பு பயிற்சி
5. செருப்பு தயாரித்தல் பயிற்சி
6. கயிறு (ஊழசை Pசழனரஉவ) தயாரித்தல்
7. உணவு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
8. இயற்கை விவசாயப் பயிற்சி

யுரேகா மாலை நேர பயிற்சிப் பள்ளி :
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்காக 10 மையங்களில் மாலை நேர சிறப்பு பயிற்சி நடத்தப்படுகிறது

ஹெலன் பகல் நேர குழந்தைகள் காப்பகம் :
கொடைக்கானல் மலைப்பகுதியில் வடகவுஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் மேல்பள்ளம் காலணியில் மலைவாழ் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

சக்தி இறகு பந்துக் கழகம் :
கிராமப்புற இளைஞர்கள் மாணவர்களுக்காக உன் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

பொது சுகாதாரம் :
அய்யம்பாளையத்தில் பெண்களுக்காக பொது கழிப்பறை கட்டித் தரப்பட்டுள்ளது.

சிறப்பு நிகழ்ச்சிகள் :
1. குழந்தைகள் தினம் மாரத்தான் போட்டி
2. பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள்
3. கல்லூரி மாணவர்களுக்காக தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
4. இளைஞர்களுக்காக புகை, மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
5. உலக மகளிர் தின கருத்தரங்கம்
6. உடல் ஊனமுற்றோருக்காக சுய முன்னேற்ற சிறப்பு பயிற்சிகள்.

விருதுகள் :
1. பாரத ஸ்டேட் வங்கி விருது – 2 முறை
2. மாவட்ட ஆட்சியர் பசுமை விருது - 2 முறை
3. லைவ் விருது - லயோலா கல்லூரி
4. மக்கள் தொலைக்காட்சி விருது
5. சி.பா.ஆதித்தனார் விருது
6. நேரு யுவகேந்திரா தேனி மாவட்டம் மற்றும் மாநில விருது
7. நபார்டு விருது.

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பயணக் கட்டுரை TS சக்தி ஜோதி தொடர்கள் வாயில்

சீனப் பயணக் கட்டுரைகள் - 21

சக்தி ஜோதி  

எல்லா நாளும் நம் வாழ்க்கையில் முக்கியமான நாளாக இருந்தாலும் பிறந்த நாள் என்பது கூடுதல் சிறப்பு பெற்ற ஒரு நாளாக கருதப்படுவது எப்போது என்றால் நமக்கு பிடித்தமானவர்களால் நம்முடைய பிறந்த நாள் கொண்டாடப்படும்போது தான். அப்படி ஒரு சிறப்பு பெற்ற நாளாக திருமதி சாரதா அலிகானின் பிறந்தநாள் நிகழ்ச்சியை பியூஷோ மாகாணத்தின் இறுதி நாளில் நிகழ்த்தப்பட்ட இரவு உணவு நிகழ்ச்சியோடு கலந்து கொண்டாடினோம். சீனாவில் வந்து மொத்த இந்தியாவின் நூறு இளைஞர்கள் மத்தியில் தன் பிறந்த நாளை கொண்டாடுவது தன் வாழ்வில் என்றும் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக கருவதாக கூறினார்.

இந்திய கலைகள் கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், பாங்கடா மற்றும் சீனாவின் பல்வேறு ஆடல்கள் குறிப்பாக ஹூப்ஸ் நடனம், மேஜிக் ஷோ என இரவு விருந்து, திருவிழா போலவே நடந்தது. கேரளாவின் நந்தகுமார் தன்னுடைய சுவாசமே சங்கீதம் தான் என்றார். உண்மையில் அவர் பாடும்போது அவரின் குரல் ஒலி சீனர்களின் சுவாசமாக மாறியது. சீனர்களின் விதவிதமான நடனங்களும் அரங்கேறியது அதில் குறிப்பாக பிரம்பு வளையத்தை உடலில் மாட்டிக்கொண்டு ஆடுகின்ற ஹூப்ஸ் நடனம் அனைவரையும் கவர்ந்தது.

இந்த ஹூப்ஸ் நடனம் பழங்காலத்தில் குறி பார்த்து சுடும்போது கவனம் சிதறாமல் இருக்க உடற்பயிற்சியாக, வேட்டையாடுபவர்கள் மத்தியில் துவக்கப்பட்டது. பிற்காலங்களில் இந்த உடற்பயிற்சி நடனக்கலையாக மாறியது. மூங்கில் வளையத்தை உடலில் மாட்டிக்கொண்டு வளையத்தை கீழே விழவிடாமல் பேலன்ஸ் பண்ணி ஆடுவதை இன்று கின்னஸ் சாதனையாக மாற்றியிருக்கிறார்கள். ஒருவளையம், இரண்டு வளையம் என்று உடலில் மாட்டிக் கொண்டு ஆடியது அல்லாமல் 2007ல் நூற்றி ஐந்து வளையங்கள் வரை மாட்டிக்கொண்டு ஆடி சாதனை படைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அறுபதுகளில் சர்க்கஸ் வளர்ச்சி பெற்ற பின்பு உடலில் வளையத்தை மாட்டிக்கொண்டு நடப்பது, ஓடுவது, ஆடுவது என்று பல்வேறு சாதனைகளும் இன்று நிகழ்த்தப்படுகிறது. உடலில் வளையத்தை மாட்டிக்கொண்டு ஆடிய உலக சாதனை பதினோறு மணி நேரம், முப்பத்தி இரண்டு நிமிடம் நிகழ்த்தப்பட்டுள்ளது. அத்தகைய சிறப்பு மிக்க நடனத்தை எங்களுக்கு சீனர்கள் ஒரு மணி நேரம் நிகழ்த்திக் காட்டினார்கள். உடலின் வேகம் மனதின் வேகத்தை விட அதிகமாக இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது.

நான்கு மணிநேரத்திற்கு மேலாக நடந்த இரவு உணவில் வயிறு நிரம்பியதற்கான சுவடே இல்லாமல் போனதால் பத்து மணிக்கு மேல் பியூஷோ நகரத்தில் கடைவீதிக்கு சாப்பிட சென்றோம். பல கடைகள் மூடி இருக்க திறந்திருந்த சில கடைகளிலும் சீனர்களின் உணவு பற்றிய பயத்துடனே ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா என்று சுற்றி வந்தோம்.

இறுதியாக ஒரு கடையில் பிஸ்கட் மற்றும் சாக்லெட் வகையறாக்களை வாங்கிக் கொண்டு திரும்பினோம். அந்த கடையில் தயாராகிக் கொண்டிருந்த ஒரு உணவு வகை அதன் தயாரிப்பு விதம் வித்தியாசமாக இருந்ததால் என்ன உணவு என்று கேட்டோம். அதற்கு கடைப் பெண்மணி சாஸேஜ் என்றுக் கூறினார். மாட்டுக்கறி மற்றும் பன்றிக்கறியின் மீதமிருக்கும் கழிவுகளை அரைத்து கூழாக்கி மாடு மற்றும் பன்றியின் குடல்களை கழுவி அதற்குள் அரைத்த கூழினை ஊற்றி நாலு அங்குலம், ஐந்து அங்குலம் அளவுகளில் அந்த குடலினை வெட்டி, இரண்டு பக்கமும் முடிச்சி போட்டு எண்ணையில் ப்ரை பண்ணி ப்ரட் போன்றவற்றிற்கு ஜாம் ஆக பயன்படுத்துவார்கள். இது பொருளாதார ரீதியாக சிக்கனமாக கருதப்படுகிறது. சமைத்த சாஸேஜ், சமைக்காத சாஸேஜ் என இரண்டு வகையில் விற்பனை செய்யப்படுகிறது என்று கூறினார்.

மறுநாள் பியூஷோ நகரத்தை விட்டு ஷாங்காய் நகரத்திற்கு பயணப்பட வேண்டியிருந்ததால் பியூஷோவின் இளைஞர்கள் இரவு வெகுநேரம் வரை எங்களோடு ஆடிப்பாடி மகிழ்ந்தனர். மறுநாள் காலையில் சினிட்டி, ஃப்ளோரா போன்ற சீன இளைஞர்களின் கண்ணீரோடு ஷாங்காய் நகரத்திற்கு பறந்தோம்.

பயணிப்போம்...

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.