வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.

தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

 

 
     
     
     
   
பயணக் கட்டுரை
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


சக்தி ஜோதி

கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.
தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

இனி அவரைப் பற்றியும் அவரது நிறுவனம் பற்றியும் அவரது பயணத்திற்கான காரணம் பற்றியும் ஒரு விரிவான அறிமுகம்.

சக்தி ஜோதி அவர்கள் "நிலம் புகும் சொற்கள்" என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை:

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளையானது 21-12-2001 அன்று திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்டது. தற்பொழுது 680 கிராமங்களை உள்ளடக்கி திண்டுக்கல், தேனி, ஈரோடு மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.

பார்வையும் நோக்கமும்

“வளர்ச்சியை நோக்கி....” சமூகத்தின் அனைத்து நிலையினரையும் வளர்ச்சியின் அடுத்த நிலை நோக்கி வழிநடத்திச் செல்வதையே, சமூகத்தின் மீதான நீள்பார்வையாகக் கொண்டு செயல்படுகிறது. கிராமப்புற வளங்களை மேம்படுத்துவதும், கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மனிதர்களை சமுதாயத்தின் மைய நீரோட்டத்தில் இணைப்பதற்காக ஒட்டு மொத்த ஆதார சக்தியை திரட்டித் தருவதற்காகவும், பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்திற்காகவும் சமூகத்தின் அனைத்து வகையான முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

சமூக மேம்பாட்டு செயல்பாடுகள்

மகளிர் மேம்பாட்டில்….
1. 2880 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் 680 கிராமங்களில் 34,800 உறுப்பினர்களுக்கு மேல் சக்தி அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
2. பாரத ஸ்டேட் வங்கியுடன் 18 கிளைகளுடன் இணைந்து சுய உதவிக் குழவினருக்கு கடனுதவிப் பெற்றுத்தரப்படுகிறது. இது வரை 56 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
3. மேலும் ர்னுகுஊ வங்கியுடன் இணைந்து 3 கோடி வரை கடனுதவி பெற்றுத் தரப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழல் மேம்பாட்டில் ...
சுற்றுபுறச் சூழல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக வருடம் 1000 மரக்கன்றுகளை நடுதல், இதுவரை 7,000 மரக்கன்றுகளை சக்தி அறக்கட்டளையின் சார்பாக நடப்பட்டுள்ளது.

நீர்வடிப் பகுதி மேம்பாட்டு திட்டம் :
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (நபார்டு) உதவியுடன் கிராமப்புறங்களின் இயற்கை வளங்களை மேம்படுத்துவது, மண் அரிப்பைத் தடுப்பது மேலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது மூலமாக கிராமங்களிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து கிராம மக்களின் வாழ்;க்கைத்தரம் மேம்பாடு அடைய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கியின் வணிக வழிகாட்டியாக (Business Facilitator)

திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் கடன் மற்றும் சேமிப்பு சம்பந்தமான வசதிகளை வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுத்தரும் வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது.

மருத்துவ முகாம்கள் :

கண் பரிசோதனை முகாம்இ எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்இ தாய்இ சர்க்கரை நோய் விழிப்புணர்வு, சேய் நல பரிசோதனை முகாம் உட்பட 15 வகையான மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 28இ000 மக்கள் பயனடைந்துள்ளனர்.

சக்தி சுய தொழில் பயிற்சி நிலையம் :
பயிற்சிகளில் சில…….
1. நான்கு இடங்களில் தையல் பயிற்சிப்பள்ளி
2. சானிடரி நாப்கின் பயிற்சி
3. கண்ணாடி மற்றும் பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி
4. ரெக்ஸின் மற்றும் ஜூட் பை தயாரிப்பு பயிற்சி
5. செருப்பு தயாரித்தல் பயிற்சி
6. கயிறு (ஊழசை Pசழனரஉவ) தயாரித்தல்
7. உணவு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
8. இயற்கை விவசாயப் பயிற்சி

யுரேகா மாலை நேர பயிற்சிப் பள்ளி :
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்காக 10 மையங்களில் மாலை நேர சிறப்பு பயிற்சி நடத்தப்படுகிறது

ஹெலன் பகல் நேர குழந்தைகள் காப்பகம் :
கொடைக்கானல் மலைப்பகுதியில் வடகவுஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் மேல்பள்ளம் காலணியில் மலைவாழ் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

சக்தி இறகு பந்துக் கழகம் :
கிராமப்புற இளைஞர்கள் மாணவர்களுக்காக உன் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

பொது சுகாதாரம் :
அய்யம்பாளையத்தில் பெண்களுக்காக பொது கழிப்பறை கட்டித் தரப்பட்டுள்ளது.

சிறப்பு நிகழ்ச்சிகள் :
1. குழந்தைகள் தினம் மாரத்தான் போட்டி
2. பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள்
3. கல்லூரி மாணவர்களுக்காக தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
4. இளைஞர்களுக்காக புகை, மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
5. உலக மகளிர் தின கருத்தரங்கம்
6. உடல் ஊனமுற்றோருக்காக சுய முன்னேற்ற சிறப்பு பயிற்சிகள்.

விருதுகள் :
1. பாரத ஸ்டேட் வங்கி விருது – 2 முறை
2. மாவட்ட ஆட்சியர் பசுமை விருது - 2 முறை
3. லைவ் விருது - லயோலா கல்லூரி
4. மக்கள் தொலைக்காட்சி விருது
5. சி.பா.ஆதித்தனார் விருது
6. நேரு யுவகேந்திரா தேனி மாவட்டம் மற்றும் மாநில விருது
7. நபார்டு விருது.

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பயணக் கட்டுரை TS சக்தி ஜோதி தொடர்கள் வாயில்

சீனப் பயணக் கட்டுரைகள் - 11

சக்தி ஜோதி  

தண்ணீரைப் போன்றது இந்த உலகத்து மதங்கள் எல்லாம். தண்ணீர் மென்மையானது, பலமற்றது. ஆனால் இந்த பூமியை அசைக்கக் கூடிய வல்லமை படைத்தது. மிகப்பெரிய பாறைகளையும் துண்டாக்கக் கூடிய சக்தி உடையது. உலகின் எந்த மதமும் பேசுவது அன்பைப் பற்றி தான். சக மனிதரை நேசிக்க வேண்டும் என்பதை மிக வலிமையாக மதங்கள் எடுத்துச் சொல்கின்றன. உலகின் எங்கு வாழும் மனிதர்க்கும் தேவையானது அன்பு மட்டும் தான். மனிதர்களை மட்டுமல்ல இயற்கையையும் நேசிக்க வேண்டும் என்பதையும் மதங்கள் வலியுறுத்துகின்றன.

சீனாவில் தாவோயிசம், கன்ஃபூசியனிசம், புத்திசம், கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் இந்து என பல்வேறு மதங்கள் பின்பற்றப்படுகின்றன. ஆனால் மதங்கள் தோன்றுவதற்கு முன்பு சீனர்கள் இயற்கையை வழிபட்டனர். பின் வந்த நாட்களில் தங்கள் முன்னோர்களை வழிபட்டனர். பின்பு தாவோயிசம் உருவானது. தாவோ என்பது மார்க்கம் (பாதை). இயற்கையோடு இயைந்த வாழ்க்கைக்கான வழிகாட்டி என்று சொல்லலாம்.

பின்பு வந்த கன்ஃபூசியனிசம் மதம் அல்ல என்கிற வாதமும் உண்டு. இயற்கையோடு இணைந்து நல் ஒழுக்கத்துடன் வாழ்வதற்கான வாழ்வியல் தத்துவம். கன்ஃபூசியனிசத்தில் நான்கு தலைமுறை முன்னோர்களை வழிபடும் வழக்கம் உள்ளது. ஆள்பவன், ஆளப்படுபவன், தந்தை, மகன், தாய், மகள், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என ஒருவர் மேல், ஒருவர் கீழ் என்கிற பிரிவினையில் மூத்தவர் வழிநடத்த வேண்டும். இளையவர் பின்பற்ற வேண்டும் என்பது நியதி. நண்பர்கள் மட்டுமே சமநிலையில் வைத்துப் பார்க்கப்படுவார்கள். எப்படி ஆளுகை நடத்துவது என்பது பற்றி கன்ஃபூசியனிசத்தில் தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. மன்னர் ஆட்சியில் சீன ஆட்சிப் பணி தேர்வில் கன்ஃபூசியனிசம் ஒரு பாடமாக பின்பற்றப்பட்டது.

சீனாவில் மதங்கள் என்பது கடவுள் சார்ந்த விஷயம் அல்ல. எனவே முதல் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து சென்ற புத்த மதம் சீனாவின் தாவோயிசம், கன்ஃபூசியனிசம் பின்பற்றக் கூடிய நெறிமுறைகளோடு தன்னை இணைத்துக் கொண்டு மிகப் பெரிய அளவில் வளர்ந்தது. இன்று சீனாவின் மக்கள் தொகையில் அறுபது சதவீதத்திற்கும் மேலானவர்கள் புத்த மதத்தையே பின்பற்றுகிறார்கள்.

இது தவிர மன்னர்கள் காலத்தில் வியாபாரத்திற்காக வந்த இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சீனப் பெண்களை மணம் செய்து கொண்டு சீனாவிலேயே தங்கி விட்டனர். இஸ்லாமியர்கள் மன்னர் ஆட்சியில் மன்னர்களின் நம்பிக்கை பெற்ற போர்ப்படைத் தளபதிகளாக பணி புரிந்தனர். இன்று சீனாவில் நாற்பது மில்லியன் கிறிஸ்தவர்களும், இருபது மில்லியன் இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள். யூதர்களும், இந்துக்களும் கூட இருக்கிறார்கள்.

மதங்களில் பழமைவாதிகள் இருப்பார்கள். அவர்கள் புதிதாக சிந்திக்க தடையாக இருப்பார்கள் என்கிற நோக்கில் 1949 ல் கம்யூநிசம் தீவிரமாக வளர்ச்சி அடைந்துக் கொண்டிருந்தக் காலக்கட்டத்தில் அனைத்து மதங்களும் சீனாவில் தடைசெய்யப்பட்டன. அதை மீறி மதங்களை பின்பற்றுபவர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். சிலருக்கு மரணத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்தக் காலக் கட்டத்தில் கோவில்கள் அரசு அலுவலகமாக செயல்பட்டது. இருப்பினும் 1970களுக்குப் பின் யாரும் எந்த மதத்தையும் பின்பற்றிக் கொள்ளலாம் என்று அரசு ஆணை பிறப்பித்து விட்டது. சீனாவில் ஒரு குடும்பம் மொத்தமும் ஒரு மதத்தைப் பின்பற்ற தேவையில்லை. அவரவருக்கு பிடித்த மதத்தை பின்பற்றி கொள்ளலாம். ஒரே குடும்பத்தில் இரண்டு, மூன்று மதங்களை நம்புபவர்கள் இணைந்து வாழ்வதை லூ ஹோவின் குடும்பத்தில் கண்டேன். தாவோயிசம் வழிகாட்டக் கூடிய எளிமையான வாழ்க்கையையும் புத்திசத்தின் பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் கலந்து பின்பற்றும் வீடாக ஜெர்ரியின் வீடு இருந்தது.

மேலும் சீனர்களிடம் உள்ள ஒரு வழக்கம், அவர்களில் சாதனையாளரான யாரையேனும் பாராட்ட வேண்டுமென்றால் அவர்களது முன்னோர்களுக்கு மரியாதை செய்து பாராட்டுவார்கள். அப்போது தான் இது மாதிரியான பாராட்டு தங்களுக்கும் கிடைக்க வேண்டுமென விரும்பி தங்களுடைய குழந்தைகளை சிறப்பான முறையில் வளர்ப்பார்கள் என்பது ஒரு நம்பிக்கை. இன்றும் கூட நான்கு தலைமுறை முன்னோர்களை வழிபடும் வழக்கம் சீனாவில் இருக்கிறது. நான்கு தலைமுறை முன்னோர்களை வைத்து வழிபடுவது என்பது கன்ஃபூசியனிசத்திலிருந்து வந்த பழக்கம். மதங்கள் பற்றி ஜெர்ரியின் அம்மா ஷங் யாங்யுடன் பேசிக் கொண்டே நாங்கள் சென்ற இடம் கியூ யான் லிங் பார்க். அங்கு மலைமேல் அமைந்துள்ள புத்தக் கோயிலுக்கு சென்று வழிபட்டோம்.

பெரிய, பெரிய ஊதுபத்திகளை கட்டுக் கட்டாக பற்ற வைத்து வழிபாடு செய்கின்றனர். அந்த ஊதுபத்திகளை பற்ற வைப்பதற்கு சில வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. நமது ஊரில் கோயில்களில் கருவறையை சுற்றி வந்து வணங்குவது போல ஊதுபத்தியை பற்ற வைத்து சன்னதியைச் சுற்றி வந்து சன்னதியின் முன்னே ஒரு இடத்தில் வைத்து முழந்தாளிட்டு வணங்குகிறார்கள்.நானும் வணங்கினேன். என்ன வேண்டிக் கொண்டீர்கள் என்று ஜெர்ரி என்னிடம் கேட்டான். சந்தித்ததிலிருந்து ஒரு கணமும் அகலாமல் என் கையை பிடித்துக் கொண்டே இருந்த ஜெர்ரி உண்மையிலேயே என் மனதில் பதிந்து விட்டான். இந்த உறவு காலம் முழுவதும் நீடித்திருக்க வேண்டுமென நான் வேண்டிக் கொண்டேன். ஆனால் ஜெர்ரியிடம் எதுவும் சொல்லாமல் மௌனமாய் புன்னகைத்தேன்.

அதற்குப் பின்பு தண்ணீர் நிரம்பிய மிகப்பெரிய தொட்டிக்குள் வைத்திருக்கும் சிறிய மண் குடுவைக்குள் நாணயங்களைப் போட்டு தங்களின் அதிர்ஷ்டத்தை கணக்கிட்டு கொண்டிருந்தவர்களோடு நானும் சேர்ந்து கொண்டேன் என்னுடைய அதிர்ஷ்டத்தைக் கணக்கிட. நானும் சுனில்குமாரும் தண்ணீருக்குள் போட்ட அத்தனை நாணயங்களும் மிகச் சரியாக குடுவைக்குள் விழுந்தன. அதைக் கண்ட மயோ ஆச்சர்யப்பட்டு அவரும் நாணயங்களைப் போட்டார். அத்தனை நாணயங்களும் மிகச் சரியாக குடுவைக்குள் விழுந்தது இந்த முறை மட்டுமே என மகிழ்ந்தார்.

அரசு முறை அழைப்பில் சீனாவிற்கு வந்திருந்தாலும், இங்கே ஒரு குடும்பம் என்கிற உறவு ஏற்பட்டது எங்களுக்கு அதிர்ஷ்டம் தானே என்று நான் மயோவிடம் சொன்னேன். அதற்கு எனக்கும் அப்படியே என்று அவர் கூறினார். தண்ணீருக்குள் மிதந்து செல்லும் விதமான கனமில்லாத நாணயங்கள் இன்று மட்டும் மிகச் சரியாக குடுவைக்குள் விழுந்தது எங்களுக்கும் மகிழ்ச்சி என்று சொன்னார். புத்த கோயிலின் உள்ளே சென்று மிகப் பெரிய புத்தர் சிலையை வணங்கிய பின் வெளியே வந்து சிவப்பு நிறத்தில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய கதவின் நடுவே உள்ள சிங்க முகத்தை கண்களை மூடிக் கொண்டு சென்று தொட வேண்டும். அவ்வாறு தொட்டால் நாம் நினைத்தது எல்லாம் நடக்கும் என்ற நம்பிக்கையில் பலரும் கண்களை மூடிக் கொண்டு தொட்டனர்.

புதியதாக திருமணமானவர்கள், நண்பர்கள், உறவினர்கள், காதலர்கள் தாங்கள் பிரியக் கூடாது என்று கையைப் பிடித்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு சென்று சிங்க முகத்தைத் தொட்டனர். மத நம்பிக்கைகள் உலகில் எங்கேயும் ஒரே மாதிரித் தான் இருக்கிறது.

பின்பு குவான் இன் என்ற பெண் கடவுளை வழிபட்டோம். அழகு மிளிரும் அந்த சிலை அன்பையும், அமைதியையும் தனக்குள் பொதித்து வைத்திருந்தது. மிகவும் மென்மையான ஒரு உணர்வை அங்கு நான் உணர்ந்தேன். குவான் இன் உலகின் துயரங்களை எல்லாம் தனக்குள் வாங்கிக் கொள்ளும் அமைதியின் தெய்வமாக நம்பப்படுகிறது. சிவப்பு கயிறை குவான் இன் சிலை மற்றும் அருகே உள்ள மரங்களில் வேண்டுதலோடு கட்டி வைக்கின்றனர். உலக அமைதி வேண்டி நானும் கட்டி சிவப்பு கயிறை கட்டினேன். உலகின் எந்த மூலைக்குப் போனாலும் பெண் என்பவள் துயரங்களை தாங்கும் தேவதையாக இருக்கிறாள்.

பயணிப்போம்...

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.