வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 
     
     
     
   
யாவரும் கேளிர்
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் யாவரும் கேளிர் வாயில்

யாவரும் கேளிர் - 7

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

ஐப்பசி மாதம் பொறந்து தீபாவளியும் வந்துவிட்டது. வழக்கம்போல இந்த ஐப்பசியில ஆரம்பிக்கிற அடைமழையும் தூற, வானம் மப்பும் மந்தாரமா மோடம்போட்டு, நேரம்காலம் என்னன்னு அறியமுடியாம வீடுகளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்க வைத்துவிட்டது. பசுமைகட்ட துவங்கிய பயிரெல்லாம் மழைநீரில் மூழ்கி மூச்சுத்திணறி மூக்கை மட்டும் நீட்டி வானத்தைப் பார்த்துக் கிடக்கிறது கொட்டுகிற மழை எப்போது நிற்குமென. பொதுவா தீபாவளி வந்தாலே விவசாயிங்க கையிலே காசு,பணம் இருப்பது அரிது. மழைக்காக வேண்டிக்கிடந்த மக்கள், அடிக்கிற அடைமழையில அடிப்பயிர்கள் அழுகிப்போய் விடக்கூடாதென மழை நின்றால் போதுமென நாத்திகர்கள்கூட ஆத்திகர்களாகி மழையைத் துரத்த வேண்டி நிற்கின்றனர். சிறுவர்கள் வாசலுக்கு வந்து பட்டாசு வெடித்து சந்தோஷப்பட முடியாமல் அடைமழை செய்துவிட்டதே என வருத்தப்பட்டுக் கிடக்க, தீபாவளி நாள் முழுவதும் விடியவிடிய கொட்டிய மழையால் தீபாவளி நாளும் கழிந்து மழையும் லேசானது.

மனிதனை அடித்து சாப்பிடும் மிருகத்தைதவிர மனிதனோடு அன்பாக பழகும் ஆடு, மாடு, கோழிகளை அடித்து சாப்பிடுவது மனித சுபாவம் அல்லவா? அப்படிதான் தீபாவளி மறுநாள் ஆடுகளை கொன்று கறியாக்கி கூறு போட்டுக்கொண்டிருக்கும் வேலையில் செல்லப்பாவை புத்தாடை சகிதமாக தனது கிராமத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரமாக இருக்கும் பள்ளிக்கு சைக்கிளில் அழைத்துச்செல்ல சாமிஅய்யா, (பணிபூண்டாருக்கு 50 வயதாகியும் குழந்தை இல்லாமல் இருந்து கோயில் குளமாக உருண்டு பிரண்டு குழந்தை வரம் வாங்கி கிடைத்தவன் செந்தாழம்பூ, சாமிஅய்யா அருகில் வர ஊரில் அனைவரிடமும் அன்புடன் பழகும் செந்தாழம்பூ) சாமிஅய்யாவை இடைமறித்து தனது கைபையில் வைத்திருந்த ஆட்டுக்கறியை சாமிஅய்யாவிடம் கொடுத்து தனது வீட்டில் சேர்க்க சொல்லிவிட்டு செல்லப்பாவை அவன் தனது பைக்கில் அழைத்துசெல்ல, சாமிஅய்யா பணிபூண்டார் வீட்டில் ஆட்டுக்கறியை கொடுக்கும் போது “லேட்டா பொறந்தாலும் நல்ல அறிவாளியா தான் பொறந்து இருக்கான், என்று சாமிஅய்யா சொல்ல அதை கேட்ட பணிபூண்டார் கோயில் கோயிலா விழுந்து கும்பிட்டு பொறந்தவன்ல” என்றார். (அவர்கள் கோயில் கோயிலாக உருண்டு புரண்ட போது ஹார்மோன் அளவு சீராகி (OVARY) க்குள் ஆண்டுக்கொண்டிருக்கும் விந்துக்களின் விந்தையால்தான், கரு உற்பத்தி ஆனது என்பது வேறு விஷயம்).

செல்லப்பாவை பள்ளியில் விட்டுவிட்டு புதுக்கோட்டையில் நடக்கிற ஜல்லிக்கட்டுக்கு சென்றுவிட்டான் செந்தாழம்பூ... வீட்டிலிருந்து வந்த களைப்பில் வகுப்பறையில் அமர்ந்திருக்கின்றான் செல்லப்பா. எப்போதும் வாய்நிறைய வெத்திலையைக் குதப்பிக் கொண்டும், கண்ட இடத்தில் துப்பிக்கொண்டும் பாடம் நடத்தும் தமிழ் வாத்தியார் கருப்புசாமி அருகில் போகவே மாணவர்கள் அஞ்சுவார்கள். ஏனென்றால் அவர் நடத்துகிற பாடப்பொழிவைவிட வெத்திலைச்சாறு அபிசேகம் மாணவர்களை நனைய வைக்கும். அவர் வாயிலிருந்து வரும் தமிழ் சொற்கள் தமிலாகி அவர்களை துன்புறுத்தும் என்பது வேறுவிஷயம். வெத்திலைமுட்டி கருப்பசாமி பாடம் முடிந்து செல்ல, ஒவிய ஆசிரியை மங்களம் வருகைக்காக காத்திருக்கின்றனர் மாணவர்கள்.

இந்த இருபத்தைந்து இளம்பருவத்து உயிர் ஒவியம் இடைத்தெரிய புடவை உடுத்தி, இடுப்பில் விளக்கெண்ணையைப் பூசி இருப்பாளோ ஈயம்பூசுன வெண்கலதவளைபோல் பளபளக்கிறதே,” என விடலைப்பயல்கள் முணுமுணுக்க மங்களம் டீச்சரும் வந்துவிட்டாள். வகுப்பறைக்குள் நுழைந்ததும் “குட்மார்னிங் டீச்சர்”
என ஒருமித்தக் குரலில் மாணவர்கள் சந்தோஷ மிகுதியில் சொல்கின்றனர். அவளும் பதிலுக்கு குட்மார்னிங் சொல்லிவிட்டு,” பாடத்தை அப்புறம் ஆரம்பிக்கலாம்... முதல்ல தீபாவளிக்கு உங்க வீட்ல என்ன பலகாரம்னு சொல்லுங்க” என்று எல்லோரையும் பார்த்துவிட்டு... “ம் நிலா நீ சொல்லு மொதல்ல” என்று கேட்க

, ஒரு பெண் எழுந்து,” எங்க வீட்டுல வடைங்க டீச்சர் “
“டேய் முனியப்பா உங்க வீட்டுல? ”
“எங்க வூட்ல கேவுறு (கேழ்வரகு) தோசையும்,தொட்டுக்க புளிச்சக்கீரையும்”
“சரி... டேய் பால்பாண்டி உங்க வீட்ல ...”
“எங்க வூட்ல பனங்கெழங்கு டீச்சர்...”
“என்ன பனங்கெழங்கா? அதென்ன... அப்படின்னு ஒரு பலகாரமா?”
“அது வந்து டீச்சர் தீபாவளிக்கு இரண்டு மாசம் முன்னாடியே எங்கம்மா வெறகுவெட்ட போகும்போதே, பனங்கொட்டய பொறுக்கிக்கிட்டு வந்து கொடத்தடியில [வீட்டிற்க்கு முன்பு கை கால் கழுவும் இடம்]

‘மண்கொடத்துக்கு அடியில மண்ணுக்குள்ள பொதச்சி வைக்கும். தீபாவளிக்கு மொத நாள் எடுத்துப்பாத்தா, அது மொளச்சி தும்பப்பூ கணக்கா வெள்ளவெளேர்ன்னு முட்டப்பனியாரமாட்டம் இருக்கும். அத கழுவி மண்பானையில மொதநாளே மூடிவச்சுடும். பொறவு நாங்க எண்ண தேச்சிகுளிச்சிட்டு அப்பா அம்மாவோட சேர்ந்து சாப்பிடுவோம். சீனிசக்கரையவிட தித்திப்பா இருக்கும்” என்று சொல்லும்போதே மங்களம் உமிழ்நீரை விழுங்கிக்கொண்டே வேறொருவனைப் பார்க்க, “எங்க வீட்ல இட்லிங்க டீச்சர்”...
“ம்...ராசு உங்க வீட்ல”
“எங்க வூட்ல நெல்லுச்சோறு டீச்சர்”
இதைக்கேட்ட மங்களம் டீச்சர் “நெல்லுச்சோறு கூட ஒரு பலகாரமா?”என ஆச்சரியத்தில் முணுமுணுக்க... செல்லப்பா எழுந்து “இதுல

ஆச்சரியப்படறதுக்கு ஒண்ணுமில்ல டீச்சர்...எங்க ஊரு வாத்தியார் வீடு, மணியக்காரர் வீடு, பிரசிடென்டு வீடு தவிர மத்த எல்லார் வீட்லேயும் தீபாவளி, பொங்கல்ன்னு வந்தாதான் நெல்லுச்சோறு... மத்த நாள்ல கேப்பக்களியும், கம்மங்கூழுந்தான் “...

“அப்படியா?... என மங்களம் டீச்சர் மேலும் ஆச்சரியப்பட “ஆமாம் டீச்சர் எங்களுக்கு அதிரசம்கூட அதிசயம்தான்...” என்று செல்லப்பா சொல்ல, சரிசரி என்று மங்களம் டீச்சர் கரும்பலகைபக்கம் திரும்பி வரைய ஆரம்பிக்கிறாள்....

இப்போது கரும்பலகையில் வரைந்த ஒவியம் முழுமை பெறுகிறது. அது லியோனார்டோ டாவின்சிபோல் உணர்வுமிக்கதாயும், வின்செண்ட் வன்கோக், ரெம்ரெண்ட், ரூபன், மைக்கேல் எஞ்சலோ போன்றோரின் ஒவிய நேர்த்தியுடனும், இரவிவர்மாவின் கலைநய மேம்பாட்டோடும், ஹிட்லரின் ஆளுமைமிளிர்வோடும் அழகுற வரையப்பட்டுக்கொண்ருந்தபோது. அந்த அழகிய ஒவியத்திற்க்குள் அவளின் காதலை, அதாவது அடுத்து வரப்போகும் ஆங்கில ஆசிரியர் ஸ்டீபனுக்கும், அவளுக்கும் இடையில் துளிர்த்த காதலை வெளிப்படுத்திய விதம், ஷெல்லியின் கவிதையாய் காண்போரின் கண்முன்னே... மங்களம் டீச்சர் ஒவியம் வரைகிறபோது அவளின் பின் அழகு, வரைந்துகொண்டிருக்கும் பொழுது கரைந்து உதிரும் வண்ணத் துகள்களாக (சாக்பீஸ் துகள்கள்) உன்பிம்பம் வீழ்ந்தால் கண்ணாடி உடையும், வைரமுத்துவின் சொல்போல் மாணவர்களின் எண்ண அலைகளை சிதிலங்களாயச் சிதைத்து சிந்தையை சலனப்படுத்தியது.

இது மாணவப்பருவத்தில் எற்படும் காமத்து பால் உணர்வா? அல்லது காமத்தால் ஏற்படும் காதலா? என குழம்புவதற்க்குள் பள்ளியின் மணி ஒலிக்க, அதன் ஒலியதிர்வுகள் நம்செவிகளை விட்டு அகலுமுன் வகுப்பறைகள் அனைத்தும் காலியாகிவிட்டிருந்தன. மச்சக்காளையை பார்க்கும் ஆவலுடன் செல்லப்பாவும் மற்றும் நான்கு நண்பர்களுடன் அவன் கிராமத்தை நோக்கி மச்சக்காளையைப் பார்க்கும் வேகத்தில் நடக்க, அவனைக் கடந்து பிளசர்காரில் போலிஸ் சென்றுகொண்டிருக்கிறது.போலிசைக்கண்டு கிராமத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் தலைதெறிக்க ஒடி கிராமத்தின் கடைகோடியில் உள்ள் காட்டாற்றில் பயந்து பதுங்கிகொள்கிறார்கள்.

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.