திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார்.
திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.
"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர்.
யாவரும் கேளிர்
யாவரும் கேளிர் ஆசிரியர் பற்றி
------------------------
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்
கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்
ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:
2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.
உங்கள் அனைவரையும் என் கதையின் வாசகர்கள் என்று கருதுவதைவிட என்னை எழுத ஊக்குவித்தவர்கள் என்பதே உண்மை. வண்க்கம்..
“யாவரும் கேளீர்” பிறந்த கதை கொஞ்சம் சொந்தக்கதை, கொஞ்சம் நான் கேட்டகதை, இன்னும் கொஞ்சம் நான் அனுபவுச்சு நானே மறந்த கதை. இதில் முற்பது சதவிகிதம் நான் கதையும் விட்டிருக்கிறேன். உலகில் உயர்தனிச் செம்மொழிகள் ஆறு. கிரேக்கம், லத்தீன், ஈப்ரூ, சீனம், சமஸ்கிருதம், தமிழ் ஆகியவை ஆகும். இந்த ஆதிமொழிகளில் ஈப்ரூ மொழி (ஏசுநாதர் பேசிய மொழி) பேச்சு வழக்கில் இல்லை. சீன மொழியிலும், தமிழ் மொழியிலும்தான் இன்று பேசும் மனிதர்கள் உள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகள் பலமையான மொழிகள் இரண்டில் ஒன்றாக திகழும் நம் தமிழ் மொழியை காப்பதற்கு தமிழ் ஸ்டுடியோவின் திரு.அருண் மற்றும் அவர் நன்பர்கள் ஒரு அணிலாக இருக்கின்றனர் என்பதில் எனக்கு பேரானந்தம் திரு.அருண் அவர்களுக்கு மிகுந்த நன்றி சொல்லி அவரிடம் கிடைத்த நட்பையும். அவர் மூலமாக உங்கள் அனைவருடன் ஏற்பட்ட தொடர்பையும் நன்றி என்ற சொல்லால் இழக்க விரும்பவில்லை. திரு. அருண் அவர்கள் முதலில் சினிமாவை பற்றி எழுதித்தாருங்கள் என்று கேட்டபோது சினிமாவில் நான் தேர்ச்சி பெறவில்லையே என்று மறுத்துவிட்டேன். பிறகு உங்கள் வாழ்நடை பற்றி எழுதித்தாருங்கள் என்றபோது நான் இன்னும் வாழ்கையை தேடி ஒடிக்கொண்டுதானே இருக்கிறேன் நான் நிற்கவே இல்லையே என்றேன். பிறகு ஒளிப்பதிவு பற்றி எழுதித்தாருங்கள் என்றார். நான் ஒவ்வொரு முறையும் ஒளிப்பதிவாளனாக முயலும்போதும் மீண்டும் அ-என்ற ஆரம்ப சொல்லுக்கே வந்துவிடுகிறேனே என்றேன்.
ஒரு கட்டுரையாவது எழுதித்தாருங்கள் என்றார். அதற்கான அறிவு வளர்ச்சியும் முதிர்ச்சியும் நான் அடையவில்லையே என்று நான்கூற ஏதாவது எழுதித்தாருங்கள் என்றார். அதற்கு என் வாழ்கையில் நடந்த பல உண்மைகளை சில ஏடுகளில் கதைகளாக எழுதி வைத்துள்ளேன் அதில் ஒன்றை ஐந்து வாரம் மட்டுமே வருமளவு இருந்த “யாவரும் கேளீர்” தொடரை அவரிடம் வழங்கினேன். அவர் முதல்வாரம் தொடங்கி மூன்று வாரம் கழித்து இன்னும் ரெண்டு வாரம் தாங்கள் எழுதிக்கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றார். இதற்கிடையில் நானும் வாசகர்கள் வரவேற்பை கண்டு எழுதத் தொடங்கி முடித்ததுதான் ஐம்பதாவது வாரம். இந்த ஐம்பது வாரங்களில் நிறைய அற்புதமான உணர்வுகள் ஏற்பட்டன. எழுத்து ஒரு தியானம் வாரத்திற்கு இரண்டு மணி நேரம் என்னால் முழுமையாக அமைதி நிலை பெற முடிந்தது. நான் உரங்கச் செல்லும் முன் நான் உலகில் எங்கிருந்தாலும் இந்த ஒர் ஆண்டில் வாசகர்கள் கருத்துக்களை வாரம் தவறாமல் படித்துவிட முடிகிறது. இந்த கதை 90% நான் விமானங்களில்தான் எழுதி இருக்கிறேன். வாரத்தில் இரண்டு முறையாவது விளம்பர படங்களுக்கு பாம்பே, டெல்லி, ஹைதராபாத், கல்கத்தா, சிங்கப்பூர், மலேசியா, பாங்காங்க் என பறந்துகொண்டு இருக்கும்போது எழுதியுள்ளேன் என்ற, அந்த அனுபவம் மிகவும் அற்புதமானது. ஒரிசா, காசி இதைப்பற்றி எல்லாம் எழுதும் போது எல்லாம் அந்த வாரங்களில் அந்த ஊர்களுக்கு சென்றிருக்கின்றேன். இந்த கதையை எப்பொழுது முடிக்கலாம் என எண்ணியபோது அது மீண்டும் மீண்டும் வளர்ந்து கொண்டே இருந்தன. எனது ஊரில் ஒரு இறப்புக்காக குடும்பத்துடன் காரில் சென்றபோது நானும் என் மூன்று வயது மகனும் முன்னிருக்கையிலும்.
பின்னிருக்கையில் மனைவி, மகள் மற்றும் எனது உறவினர்கள் அமர்ந்திருக்க பேப்பர்களிலும் போகோ அலைவரிசைகளிலும்.தாழ்களில் மட்டுமே தம் வாழ்கைகளை வீட்டறைக்குள் கண்டுகொண்டிருந்த என் மகன் சென்னையில் இருந்து தஞ்சாவூர் சென்று கொண்டிருந்த குளிர்சாதன வசதி கொண்ட காரில் சுடும் வெயிலை உணராத அவன் வழிநெடுக சாலையில் செல்லும் வாகனங்கள் முதல் மரங்கள், பசுமை, வானம் என அனைத்தையும் கேள்விக்கணைகளாக என்னை துளைத்தான். நானும் அவன் வயது ஒத்தவனாகமாறி அவனுக்கு பதில் கூறிக்கொண்டு இருந்தேன். எதிர்பாராத விபத்து எல்லாம் முடிந்தது என்று நினைத்தபோது நிலைகுழைந்தோம். சுயநினைவுக்கு வந்தபோதுதான் ஒருவருக்கும் ஒன்றும் ஆகவில்லை என அறிந்தோம். கார் மட்டும் துகள்களாகி போனது. அந்த அதிர்வு இன்னமும் என்னைவிட்டு அகலமருக்க அதன் வெளிப்பாடுதான் அரிதாவுக்கும் செல்லாவுக்கும் ஏற்பட்ட விபத்து. அதன் பிறகு முடிவை நோக்கி முடிந்துவிட்டது. இதை தொடங்கி இன்றுவரை இந்த தொடர் எழுதிய எனக்கு பிரதி எடுக்க இதை முதலில் படித்து கருத்து சொல்ற என் இல்லால் சர்மிளாவுக்கும், பிறகு ஒவ்வொரு வாரமும் பிரதி எடுக்கும் எனது உதவியாளர் சண்முகானந்தன் அவர்களுக்கும், ஒவ்வொரு வாரமும் தவறாமல் படித்து வாரத்திற்கு ஒருமுறை. சாதாரணமாக ஒரு மணி நேரமாவது எனக்கு விமர்சனம் வழங்கிய இயக்குனர் திரு R.பாண்டியராஜன் அவர்களுக்கும். மற்றும் திரு. அருண் அவர்களுக்கும் வாசகர்ளாகிய உங்கள் அனைவருக்கும் நான் பல நேரங்களில் நடைமுறை சொல் வேண்டும் என்பதற்காக. இலக்கிய பிழையின்றி. எழுத்தை பிழையாக்கி .என்னை வேறு ஒரு தளத்திற்கு வழிகாட்டியுள்ள. எனக்கு வாழ்க்கையின் அழகியலாகிய இலக்கியத்தின் மீது என்பதை விட தமிழ் மீது வெறி என்பதை விட காதல். அந்தக் காதலை மீண்டும் ஒரு சில வருடங்கள் கழித்தோ, மாதங்கள் கழித்தோ, இந்த எழுத்துலகில் என்னாலும் சஞ்சரிக்க முடியும், என்று உணர முடிகிறது. மேலே குறிப்பிட்ட மற்றும் தமிழ் ஸ்டுடியோவின் என் தொடரை மட்டுமல்ல. மற்றும் அனைத்து தொடர் வாசகர்களுக்கும் மிகுந்த வணக்கத்துடன்............!
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.