திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார்.
திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.
"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர்.
யாவரும் கேளிர்
யாவரும் கேளிர் ஆசிரியர் பற்றி
------------------------
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்
கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்
ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:
2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.
வெளிச்சத்தை இருள் துரத்திக்கொண்டிருக்க, இருள் வெற்றியடைந்ததற்கு ஆதாரமாக கிராமம் இருளில் மூழ்கிக்கொண்டிருக்கிறது.. ஆங்காங்கே வெண்கல விளக்குகள் வீடுகளுக்குள்ளும், தெருவில் ஒரு பர்லாங்குக்கு ஒருத் தெருவிளக்கும் எரிந்துக்கொண்டிருந்தது. கிராமங்களில் பொதுவாக இரவு உணவு ஆறுமணிக்குத் தொடங்கி ஏழுமணிக்கெல்லாம் முடிந்து ஊரே உறங்கிவிடும்.
ஊர் உறங்கத் தொடங்கும் வேளையில் மணியக்கார தாத்தாவின் சத்தம் “பிடாரிக்கோயில் ஆலயமணியைப்போல்” ஒலிக்க, ஊரே எழுந்து தாத்தா நடந்துவரும் தெருவைப் பார்த்துக்கொண்டிருக்க, தாத்தா தன் கம்பின் துணைகொண்டு வழித்தடத்தை தட்டிக்கொண்டே சத்தமாக, “மரம் இல்லன்னா மழை இல்ல, மழை இல்லன்னா வெவசாயம் இல்ல; வெவசாயம் இல்லன்னா கிராமங்கள்ல வேலையே இருக்காது.
அப்படி ஒரு நிலம வந்தா ஒட்டுமொத்த கிராமங்களும் அழிஞ்சிப் போயிடும்னு விஞ்ஞானிங்க சொல்றாங்க... ஏற்கனவே குளங்கல கூறுபோட்டு வீட்ட கட்டிட்டானுங்க, மண்ரோடு எல்லாம் சிமெண்ட் ரோடாகி மழைத்தண்ணி பூமிக்குள்ள போகமாட்டேங்குது. மேட்டூர் தண்ணிலதான் ஒருபோகமாச்சும் வெவசாயம் நடக்குது. இனிமே அதுக்கும் கஷ்டம்தான். ஒகேனக்கல்ல ஏதோ மின்சாரத் தொழிற்சாலைன்னு ஒண்ணு வரப்போவுதாம்.
அது வந்துச்சின்னா சுத்தம்... இப்படி ஒருபக்கம் நடக்க இன்னொருபக்கம் நாசா விஞ்ஞானிங்க கரண்ட்ல வெளியாகிற வெளிச்சத்தில பூமி வெப்பமாகி, மழையும் போயி, பனிமலைங்க உருகி கடல் பெருசாகுதுன்னு சொல்றாங்க... காலம்போன கடைசியில இப்ப என்னடான்னா வீட்டுக்கொரு மரம் வளங்கன்னு நாடு சொல்லுது. இந்த ஊருப்பசங்க என்னான்னா இருநூறு வருசமா ஊருல பாதியா, இந்த ஊருக்கே அடயாளமா இருக்கிற ஆலமரத்த வெட்டிப்புட்டு, அந்த இடத்தில கோயில் கட்டப்போறாங்களாம். ஒரு படையே தங்கற அளவுக்கு இந்த ஊருக்கு உசுரா இருக்கிற இந்த மரத்தப்பத்தி, நேத்து மீச மொளச்ச பயலுங்களுக்கும், வெவரம்கெட்ட சில பெருசுங்களுக்கும் என்னத்தத் தெரியும்? இத்தன வயசாயும் பச்சரிசியாட்டம் இருக்கிற எம்பல்லுக்கு ஆதாரமே இந்த ஆலம் விழுதுதான். “ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி”ன்னு பெரியவங்க சொல்லுவாங்க. ஊர் புள்ளைங்க இந்த விழுதுகள்ல ஊஞ்சல் ஆடி பொழுதுபோக்கவும், காக்கா குருவிங்க கூடுகட்டி வாழவும், இந்த பழங்கள தின்னுப் பசியாறவும், நம்ம காலு கையில அடிப்பட்டு வீங்கிப்போச்சுனா ஆலமரத்துல அடிமரத்தக் கொத்தி, அந்த பால எடுத்து வீக்கமுள்ள இடத்துல தடவி, அதுமேல மண்ண தூவினா, ரெண்டு நாள்ல ஜிவ்வுன்னு வீக்கமெல்லாம் வாடிபோயிடும். இவ்வளவு ஏண்டா நீங்க, நான் னு எல்லாரும் குடிக்கிற சாராயத்துக்கு ஊறவைக்கவும் இந்த பட்டையதானே உறிக்கறீங்க? ஊர் நடுவுல இருக்கிற இந்த ஆல மரத்த வெட்டுனா அது இந்த ஊரையே கொளுத்துன மாதிரி...
வேகாத வெயில்ல களைச்சி வர்றவங்களுக்கு பெத்தத் தாய்மடியாட்டம் நிழல்தர இத வெட்டிப்புட்டு ஊர பொட்டலாக்கி கோயில் கட்டவாப் போறீங்க? ஏலேய் கோயில கட்டி வருஷா வருஷம் திருவிழான்னு நீங்கதாண்டா கட்டி அழனும். இந்தமரம் இருந்தா ஒங்க கட்ட செலவுக்கு ஒதவும்டா சாண்டா குடிக்கீங்களா...” என சத்தம் போட்டுக்கொண்டு செல்ல, அதை வேடிக்கைப்பார்த்த ஒருவன், “கிழட்டு கிருத்துவம் என்னப்பேச்சு பேசுதுன்னு பாரு” என்று சொல்ல அதைக்கேட்ட தாத்தா “குட கூழுக்கு அழுவுதாம், கொண்ட பூவுக்கு அழுவுதாம்” தாத்தாவின் புலம்பலால் ஊரே பாதி உறக்கத்தில் இருக்கும் வேலையில் சாரதாவும், சாமிஅய்யாவும் செல்லப்பா உறங்கிவிட்டதாக எண்ணி வீட்டின் நடுவே தொங்கிக்கொண்டிருக்கும் அழுக்கு துணி மூட்டையில் ஒரு சேலையை மட்டும் சாரதா ஒரு கையால் இழுக்க வீட்டுக்குள் ஒரு தனி அறை வந்துவிட்டது. சாமிஅய்யாவும், சாரதாவும் கலவிக் கழிந்து ஒருவருக்கொருவர் தங்கள் ஆடைகளை சரிசெய்துக் கொண்டனர்.
இருள் என்பது குறைந்த வெளிச்சம் என்றார் பாரதி. “இலைமறை காய்கள் அறியும் போல்” சாரதாவின் கொங்கைகள் மட்டும் அழுக்குபடிந்த அரைகுறை சேலை மறையால் அறிய இருள் என்ற வெளிச்சம் வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் ‘சாமியையாவிடம், சாரதா “ சின்னுபய சாராயம் எரிக்க இன்னைக்கு கடுக்காய் கிடைக்காம பேட்ரியை அதிகமா போட்டுட்டானாம். அந்த சாராயத்த குடிச்சதுனால மணியக்காரத் தாத்தாவுக்கு போதை அதிகமாயி ஊர்க்காரங்ககிட்ட சண்டை போட்டுகிட்டு போறார்னு வேலாயிக் கெழவி சொல்லிக்கிட்டு போச்சு” என அவள் சொல்லி முடிக்கும் போது சாமிஅய்யாவின் குறட்டை சத்தத்தை அவள் கேட்க, அதை கேட்டுக்கொண்டே அவளும் உறங்கிவிட்டாள். இருவரும் உறங்கிய பிறகு மெதுவாக எழுந்து தொழுவத்துக்குப் போகிறான் செல்லப்பா. மச்சக்காளை பதட்டமாக நின்று கொண்டிருக்கிறது. தன்னருகே அவன் வருவதைப்பார்த்து உடல் இலவசமாக நடுங்குகிறது....
தொடரும்...
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.