வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 
     
     
     
   
யாவரும் கேளிர்
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் யாவரும் கேளிர் வாயில்

யாவரும் கேளிர் - 47

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

அரிதாவின் அப்பா, அம்மா, வசித்த பண்ணைவீட்டின் நடுயறையில் அரிதாவின் உடல் ஒன்றுசேர்த்து வைக்கப்பட்டு இருந்தது. செல்லா அழுது, அழுது வற்றிய கண்ணீர், அவன் மீண்டும் அழ கண்ணீர் சுரந்து கொண்டு இருக்கும் வேளையில். அனைவரும் அமைதியாக இருக்கும்போது ஒருவர் மட்டும் அபி காதில் கிசுகிசுத்தார். அபி, செல்லா அருகே வந்து அவன் தோள்மீது கை அமர்த்தி, “அரிதாவின் லாயர் உன்னிடம் ஏதோ தனிமையில் பேசவேண்டும்” என்றபோது செல்லா, அபி பக்கம் திரும்பினான். இடுகாட்டின் முகப்பில் அழகாய் பூத்து குலுங்கும் பூக்கள் நடுவில் செல்லா நின்று கொண்டு இருக்க அவன் அருகே வந்த வழக்கரிஞர் அவர் கையில் இருந்த பேப்பரை படித்து முடித்தார். அதில் அரிதாவுக்கு சொந்தமான 500 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து அனைத்தும் எனக்கு பிறகு என்னை இன்று சந்தோஷமாக வைத்திருக்கும் என் கணவர் செல்லப்பாவிற்கு சொந்தமானது என்று உயில் எழுதி இருந்தாள்.

அவனுக்கு மீண்டும்,மீண்டும் வழக்கரிஞர் படித்த ஒருசில வரிகள் அவனை விம்பி,விம்பி அழ வைத்தன. “ நான் இறக்க தொடங்கிய முற்பட்டபோது என்னை காப்பாற்றியவர். நான் கற்பிழந்தவள் என்று தெரிந்தும் என்னை கரம்பிடித்தவர். நிலையில்லா என் சந்தோஷத்தை நிரந்தரமாக்க விரும்பியவர். காதல் வேறு, காமம் வேறு. ஆசை வேறு, அன்பு வேறு என்று நிறம் பிரித்தவர். என்னிடம் நிறைய எதிர்பார்ப்புகளுடன் வந்து என் சந்தோஷத்தை தவிர அனைத்தையும் உதறியவர். கரம்பிடித்த நாள் முதல் அவர் உழைப்பின் ஊதியத்தில் மட்டுமே வாழவேண்டுமென அடம்பிடித்தவர். அவருக்கு நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என ஆசை இருக்கிறது. ஆதலால் எனக்கு பிறகு என் சொத்துக்கள் அனைத்தும் அவருக்கே சொந்தம்” என எழுதியிருந்தாள். யாழியும் அங்கே வந்துவிட்டாள். யாழி,“செல்லா வாங்க எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாங்க உங்களுக்காகதான் காத்து இருக்கிறோம்” . செல்லா மூடியிருந்தஅரிதாவின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்கவேண்டுமென யாழியை பார்த்தான். அவள் அரிதாவின் முகத்தை மறைத்துக்கொண்டிருந்த வெள்ளை திரையை நீக்கினாள். அரிதாவுக்கு முருகன் கோவிலில் செல்லாயிட்ட திருநீர் அவள் நெற்றியில் கலையாமல் இருந்தது. அப்போது அவன் நினைவுகள் பின்னோக்கியது. கோயில் படிக்கட்டில் இருவரும் அமர்ந்து இருக்கும் வேளையில்,

அரிதா “நீ ஏன் திருநீர் பூசல?”
செல்லா “எனக்கு கற்சிற்பத்தின் மீது நம்பிக்கை இல்லை.”
“ஒரு துளி, அதை விடசிறு, ஒட்டை வழியாக சென்று, நீயும், நானும், எப்படி இவ்வளவு பெரிய உருவமானோம்.”
“அதுதான் எனக்கும் புரியல”
“அதத்தான் நான் கடவுள் என்கிறேன்”
“அப்ப அவர் நம் முன்னாடி வரவேண்டியது தானே.”
“நம்பிக்கைக்கு உருவம் இருக்காது”
“அது எப்படி”
“ அப்படித்தான். இந்தா” என்று அவன் நெற்றியில் திருநீரை வைக்க முயன்றாள். அவன் அடம்பிடித்தான்.
“சரி என்ன நம்புரயில்ல”
“நம்பிக்கைக்கு உருவம் கேட்டயே அது நீதான்”
“இத நீ கோயில் பிரசாதமா நினச்சு பூசிக்க வேண்டாம். இது மாட்டுச்சாணம். இதுல நிறையா ஆண்டிபயாடிக் இருக்கு. நீங்க நோய்நொடி இல்லாம இருக்கணும், இப்பவாவது பூசிக்கீங்களே.” என்றாள்.

அவன் நெற்றியை அவள் அருகே கொண்டு வந்து அவள் திருநீர்யிட முற்படும்போது அவன் எழுந்து ஒடினான், அவளும் துரத்தினாள்.அவளால் அவனை பிடிக்கமுடியாமல் தடுமாறி படியில் விழுந்து “அம்மா” என்று அலறினாள். அவன் அவள் அருகே ஒடி கீழே விழுந்துகிடந்தவளை தூக்கியபோது அவள் பேச்சுமூச்சற்று இருந்தாள். அவன் பதஷ்டமாக அவளை உழுக்கியபோது அவள் உணர்வற்று இருந்தாள். அவன் அவளை தூக்கிக்கொண்டு கடைசி படிவரை ஒடிவந்து “அரிதா” என்று கதறினான். அவள் கன்னத்தோடு அவன் கன்னமாக இருக்க அனைத்துக்கொண்டான். அவள் கண் விழித்து சிரித்தாள். அழுது கொண்டு இருந்தவன் அவள் சிரிப்பதைக் கண்டு கையில் இருந்தவளை தொப்பென்று கீழே போட்டான்.அவள் வலியை தாங்கிக்கொண்டு சிரிக்க. பிறகு அவளை தூக்கியபடி அவனும் சிரிக்க. பிறகு இருவரின் முகமும் அருகருகே வர அவ்வேளையில் “நான்தான் ஒனக்கு விபூதி வைக்கலையே எப்படி உன் நெற்றியில் விபூதி” என்றாள். செல்லா “அப்படியா?” என்றபோது அரிதாவின் கண்களில் அவன் முகம் தெரிய அதில் அவன் நெற்றியில் விபூதி இருந்ததை கவனித்தான்.

அரிதா “பார்த்தீங்களா கடவுள் உங்களுக்கு விபூதி வச்சிருக்காரு”
செல்லா “அதில்ல ஒன் முகத்தோட முகமா கட்டிபிடிச்சு அழுதப்ப ஒட்டியிருக்கும்.”
அரிதா “சரி ஒருநிமிஷம்” என்று சொல்லி முருகன் கோபுரத்தை நோக்கி கண்ணைமூடி கைகூப்பி சத்தமில்லாமல் முனுமுனுத்தாள். பிறகு கண்களை திறந்து “வாங்க போகலாம்” என்று அவள் கூற இருவரும் கார் அருகே வந்தனர்.
செல்லா “ஒன் சாமிகிட்ட என்ன கேட்ட” என்று காரின் முன்கதவை திறந்தான்.”
அரிதா “ஒருவேளை உங்களுக்கு முன்னாடி நான் செத்துபோயிட்டா நீங்க அழாம இருக்கணுன்னு” என்றாள். அவன் காரின் கதவை மூடினான்.

அவனுக்கு நினைவு திரும்ப கதறி அழுதான். அனைவரும் அவனை சாந்தப்படுத்தினர். யாழி மட்டும் அவரைவிடுங்கள் அவர் அழுது முடிக்கட்டும் என்றாள். அவன் அழுது கொண்டே அவள் நெற்றியில் இருந்த விபூதியை தொட்டு தன் நெற்றியில் தடவிக்கொண்டான். அவ்வேளையில் சாமியைய்யாவிடம் இருந்து தொலை அழைப்பு செல்லாவின் கைப்பேசியில் நிற்காமல் சிணுங்கிக்கொண்டே இருந்தன..........

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.