வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 
     
     
     
   
யாவரும் கேளிர்
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் யாவரும் கேளிர் வாயில்

யாவரும் கேளிர் - 46

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

அந்திசாயும் பொழுது, மதிமயங்கும் நேரம் தூங்காமலே கனவு வரத்தூண்டும். செவ்வானம் இளமை கிளர்ச்சியூட்டும் ஏசியின் காற்று 150 கிலோ வேகத்திலும் பஞ்சனையில் அமர்ந்து இருந்தும் படுத்துரங்கும் சுகம்.

அவள் காரை ஒட்ட, அவன்-அவள் வாசனையில் அவன் உடல் அவள் மீது படுமாறு முயன்றும், முடியாமல் அதை அறிந்த அவள், கியர் மாற்றும் போது அவன் கையோடு உரசினாள். அதை அவன் அளவாக உணர்ந்து அவனுக்கும். அவளுக்கும் காம கிளர்ச்சி விட்டுவிட்டு உராய்ந்து கொண்டே இருந்தது. அவ்வேளையில் உண்மைகளை கொறைக்கத் தொடங்கினாள்.
“உங்களுக்கு என்ன பிடிக்கும்”
“உன்னைத்தான்”
“அறுக்காத, நமக்கு கல்யாணமாகி ஒரு மாசமாச்சு ஆசை அறுபது நாள்
மோகம் முப்பது நாள்னு சொல்வாங்க. மோகம் முப்பதுநாள் முடிஞ்சு போச்சு.
ஆசை முடியரதுக்குள்ள நீங்க ஆசைப்படுற மாதிரி நான் நடந்து
இப்ப இருக்குற மாதிரி எப்பவும் நீங்க என்மேல ஆசையோட இருக்க உங்களுக்கு பிடிச்ச மாதிரி நான் இருக்கணும்.அதனால உங்களுக்கு என்னென்ன பிடிக்கும்னு சொல்லுங்க.....”
செல்லா, “எங்க அம்மா, அப்பாவை பிடிக்கும்”
“எனக்கும் எங்க அம்மா, அப்பாவை பிடிக்கும். அவுங்க இல்லாம
போயிட்டாங்க. அதுக்கு பிறகு இப்ப உங்கள பிடிச்சிருக்கு. நீங்க
காதலிச்சு இருக்கீங்களா?”
“இல்லேன்னு சொல்லலையே”
“உன்னத்தான்னு சொல்லிடாதீங்க”
“ஆமான்னு சொல்லலையே”
கார் சிக்காகோ நடுநகரத்தில் சென்று கொண்டு இருக்கிறது.
செல்லா “பள்ளிக்கூடம் படிக்கும்போது ஒவிய டீச்சர் மேலே ஒரு ஒருவித தாகம்.
காலேஜ் படிக்கும்போது இருவரும் விரும்பிய காதல்.”அது சிலமாதங்களிலேமுடிந்தகாமம். அவ கூட படுத்து இருக்கீங்களா?”
“பத்துமுறை இருக்கும்”
“பரவாயில்ல என்னவிட கம்மிதான்”
“ வேரென்ன சொல்லுங்க”
“இதையெல்லாம் வெளிப்படையா கேட்குறீயே அது பிடிக்குது”
“ நீங்களும்தான், எல்லாத்தையும் ஒப்பனா சொல்லுறீங்களே அது ரொம்ப
பிடிச்சிருக்கு”
“இதுயெல்லாம் இளமை மேல படிஞ்ச ஒன்று”
“சரி அழகான பிடிச்ச விஷயம்”
செல்லா: உன்கூட சேர்ந்து அஞ்சு பிள்ளைக்கு அப்பனா இருக்கணும்.
அரிதா : ஒ... இவ்வளவுதானா. நான் பத்துன்னு நெனச்சேன்.
செல்லா: ஞானக்கிறுக்களான ஹைக்கூ கவிதைகள்.
அரிதா : கோயா பெயிண்டிங்.
செல்லா: தொலைநோக்கு பார்வை, சுதந்திர கருத்துடன் முற்போக்கு சிந்தனையை கூர்மையுடன் கூறும் யாரையும் பிடிக்கும்.
அரிதா : சில நேரங்களில் விளைவுகளை ஏற்படுத்தும் உண்மைகளை உறக்கச்சொல்லும் நல்ல பண்புள்ள மனிதனான எவரையும்.
செல்லா: நீ நிக்கிற இடத்துல நிக்கனும்னா நிக்காம ஒடிக்கிட்டே இருன்னு சொன்ன வைரமுத்துவ.
அரிதா : மானிட வாழ்கை முறையை வெளிப்படையா சொன்ன ஒஷோவை
செல்லா: எல்லோருக்கும் கல்வி வேண்டும்னு சொன்ன காமராஜரை.
அரிதா : இருக்க இடம் கொடுத்து. அவங்களோட. பிறகு தனதுஉரிமைக்காக போராடிய நெல்சன் மண்டேலாவை.
செல்லா: இளைஞர்களின் எண்ணங்களை விரிவுபடுத்தி எழுதத்தூண்டிய எழுத்துச் சித்தர் எதையும் இரண்டுவரியில் சொன்ன இலக்கிய செல்வம் வள்ளுவரை .
அரிதா : உலகமுழுக்க அன்னை என்றும். மறைந்தும்,அழியாப்புகழ் கொண்ட.அன்னை தெரசா.
செல்லா: வெள்ளைத்தாளில் கருவிதைகளாய் தவழும் எழுத்துகளை .
அரிதா : மழை.
செல்லா: அதை கொண்டு வரும் கருத்த மேகங்கள் .
அரிதா : அந்த சமயங்களில் வீசும் சுகமான மழைகாற்றில் பாட, (என்று அவள் பாடினாள். அதை கேட்ட அவனோ)
செல்லா: ஆஹ....வென ரசித்தான்.

அவள் வாய்விட்டு சிரித்தாள்.அவனும் சிரித்தான்.காரும் 200கிலோமீட்டர் வேகத்தில் சீரிப்பாய்ந்தது. சிக்காகோ மேம்பாலத்தின் முடிவை அடையும் போது வளைந்த சாலையில் தொடக்கத்தை தொட்டபோது எதிர்திசையில் வின்மில் ஏற்றிக்கொண்டு ட்ரைலர் சென்றுகொண்டு இருந்தது. அரிதாவும், செல்லாவும் வந்த கார். கண் இமைக்கும் நேரத்தில்? எதிர் திசையில் வந்த ட்ரைலர் மீது மோதியது.......! மோதிய வேகத்தில் அரிதாவும், செல்லாவும் வந்தகார் சுக்குநூறாக சிதறியது. கார் நேர் எதிரே மோதியபோது செல்லாவின் பக்கம் கார் கதவு உடையப்பட்டு அவன் வெளியே எறியப்பட்டு அருகே ஓடிக்கொண்டுருந்த ஆற்றில் வீசப்பட்டான், நேர் எதிரே அரிதா ட்ரைலரில் மோதி பிஞ்சு உடல் உருகுலைந்து பியிந்து பஞ்சாக எட்டுதிசையும் பறந்தன. ட்ரைலரும் சிறிது தூரம் ஒடி நின்றன. ஆற்றில் எறியப்பட்டு காயமின்றி கரை ஒதுங்கியபோது கண்விழித்தான். அவன் கைகளில் ஏதோ ஒன்று துடிப்பதை உணர்ந்தான். அது என்னவென்று பார்த்த போது ரத்த நாளங்களுடன் அரிதாவின் இதயம்மட்டும் துடித்துக்கொண்டு இருந்தன. அதை கண்ட அவன் அரி...தா...தா.... என்று கதறினா........னா....ன். கரையில் புரண்டு ஒலமிட்டா....ன்.....அரிதாவின் இதயத்தின் லப்டப் சத்தம் காற்றாக அடங்கிபோனது.....!

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.