வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 
     
     
     
   
யாவரும் கேளிர்
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் யாவரும் கேளிர் வாயில்

யாவரும் கேளிர் - 45

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

சிட்டுக்குருவி வாழ்ந்த இடம் தெரியல, தேனீக்கள் பாதி அழிஞ்சு போச்சாம். நம்ம கிராமத்துலகூட குடிக்க தண்ணீ,,,ணீ,,,ய கூட. காசுகொடுத்து வாங்க வேண்டியதாபோச்சு . மழைகாலம் மாறிப்போச்சு, மறைச்சு வித்த மாட்டுக்கறி மலிவான விலையில மார்கெட்டுல கிடைக்குது. யாருமே கூலிக்கு விவசாயவேலைக்கு வரமாட்டேங்குறாங்க.ஊருக்குள்ள சேலைகட்டுன பொம்மனாட்டியெல்லாம் மலேசியாகாரன் உடுத்துவானே கைலி அதப்போல கவனுபோட்டுகிட்டு அலையுராங்க .என்னான்னு கேட்டா நைட்டியாம். இங்க அம்மாவுக்கு லேசா காச்ச, நீ நல்லாயிருக்கெயா. நாங்க உன் கல்யாணத்தை நேரா பாக்க முடியலைன்னாகூட எங்கஆசி உனக்கு எப்பவுமே இருக்கும். ஒன்ன நம்பி வர்ற பொண்ண நல்லா வச்சுக்க. ஒனக்கு வரப்போர பொண்ணு ஒனக்கு கிடச்ச அம்மா, எனக்கு மக. நம்பள நம்பி வர்றவங்கல கணணு கலங்காம பாத்துக்கனும். நீ ஊருக்கு கூட்டிட்டு வா. அப்ப எல்லாரும் பாத்துக்குறோம். சரிப்பா என்று கைப்பேசியை துண்டித்தான். அவனுக்கு லேசாக தலை கனத்தது. அப்பா அம்மாவுக்கு சொல்லி இருந்தால் ஒரு வேலை அவர்களுக்கு பிடிக்காமல் போயி திருமணம் நின்று விட்டால்? என்று சுயநலமாக சிந்தித்து நான்குபேர் முன்னிலையில் திருமணம் செய்ததை அப்பாவிடம் அலைவரிசை மூலமாக அவன் உரைத்தபோது அப்பாவின் ஒலிக்கு குற்றவாளியாகவும். அவனுக்கு நேர்மையாகவும் நின்றான். அவன் நடந்தபோது குறைந்த தூரம் கூட நீண்டுகொண்டே போனது. அவனின் உடலை அவளின் நினைவலைகள் நிர்மூலமாக்கின. அவன் தலைகவிழ்ந்து நடந்தபோது கைப்பேசி சினுங்கியது. அழைப்பின் ஒலி
“எக்ஸ்கியூஸ் மீ பிக்கப் த போன்” என்றது. அவன் இன்னும் அழைப்பு பட்டனை அழுத்தவில்லை. மீண்டும் அழைப்பு ஒலி...
“ஹலோ...”
மீண்டும் ... “பிக்கப் பிக்கப்...”
மீண்டும் “போனை பேசி காச கரைங்க...”
மீண்டும் “டேய் போனை எடுடா...”
மீண்டும் “டேய் மொல்லமாறி முடிச்ச அவுக்கி போனை எடுடா...”அவன் அழைப்பு பட்டனை அழுத்தி
“ஹலோ”
மறுமுனையில் அரிதா “என்ன போனை எடுக்க இவ்வளவு நேரம்”
“சாரி எங்க அப்பாகிட்ட பேசினேன் அதான்”
“மாமா என்ன சொன்னாரு... சீக்கிரம் உங்க அம்மா, அப்பாவ பார்க்கணும் போல இருக்கு.”
“நானும்தான் அடுத்த மாசம் போயிடலாம்”
“சரி சீக்கிரம் ரூமுக்கு வாங்க நம்ம ஊரு முருகன் கோயில் இங்க இருக்கு. அங்க போயிட்டு வரலாம்”
“சரி” என்றான்.
தமிழ் சினிமா செட்டிங் போல் சிகாகோவில் முருகன் கோவில். அங்கே முருகனின் மூலவிக்கிரகத்தை சுற்றுகின்றனர். அனைவரும் அமைதியாக சென்றனர். பலபேர் முகம் இறுக்கமாகவும், சிலபேர் முகம் ஏக்கமாகவும், ஒரு சிலர் பதட்டமாகவும் இருந்தனர். அங்கு அன்றைய பொழுதில் அரிதாவும், செல்லாவும் மட்டுமே சந்தோஷ களிப்பில் இருந்தனர். ஒரு விஷயம் மட்டும் புரிந்தது. கோயில் என்பது அவரவர்கள் வரம் வேண்டி தொழும் மாயஉலகமாகவும் ,மக்களின் அமைதிக்களமாக அமைகிறது. அதில் ஒருவித சாந்தமான சூழ்நிலையால் அங்கே வரும் எல்லோரும் சாத்வீகமாகி போகின்றனர். கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதைவிட அங்கே சாத்விகம் சங்கமிக்கின்றன. தாங்களின் சுயநல வேண்டலால் அடுத்தவர்களை நினைக்கவும் மற்றவர்கள்மீது பொறாமை குணமும் அங்கே புதைந்து போகிறது.வீரன் கூட அங்கே நடத்தும் அங்கப்பிரதஷ்னத்தில் கோமாளி ஆகிறான். அனைவர் கைகளிலும் ஏந்தி நிற்கும் மலர்களால் ஏற்படும் நறுமணத்தால் வியாதிகள் கூட சற்று விளகிநிற்கும். அவ்வேலையில் செல்லாவும். அரிதாவும். அருகருகே மூலவிக்கிரகத்தை சுற்றும்போது அரிதா
“எனக்கு முருகனை ரொம்ப பிடிக்கும்”
“ஏன் அவர் ரெண்டு பொண்டாட்டிக்காரர் என்பதாலா?”
“அடச்சீ, நம்ம தமிழ் கடவுள்” என்றாள்.
அவன் லேசாக வாய்க்குள் முனுமுனுத்தான் “தமிழ் வாழ்க” என்று.
அதை கேட்ட அர்ச்சகர் “ஏங்க சத்தமா சொல்லுங்க”
“தமிழ் வாழ்க” என்று கத்தினான். அதை கேட்டு அங்கே இருந்த அனைவரும் சிரித்தனர். அரிதாவும் செல்லாவும் வெட்கத்துடன் அங்கேயிருந்து வெளியேறினர். ஆயிரம் தடுப்பு படிக்கட்டுகளில் 800வது படிக்கட்டில் இருவரும் கோயிலுக்கு உடைத்த தேங்காயை தின்று கொண்டு இருந்த போது அரிதா,
“எனக்கு சாமின்னா ரொம்ப பிடிக்கும்”
“எனக்கும்தான்”
“பின்ன ஏன் சாமிய கும்பிடவேயில்ல”
“நா இந்த சாமிய சொல்லல..... ஈ. வே. ராமசாமிய சொன்னேன்”
அரிதா ஆச்சரியமாக “ இன்சியலோட ஒரு சாமியா?, அது எங்க இருக்குங்க”
“அடச்சீ,மனிததெய்வம். கிராமத்தான் தமிழை. மேடைகளின் இலக்கியமாக்கிய தந்தை பெரியார்” என்றான்.
அவள் அவன்மீது கோபம் செல்லமாகி படிக்கட்டுகளில் அவனுக்கு அவளின் பின் அழகை காட்டிக்கொண்டு கோழியாக குதித்து ஓடினாள். அவள் அவனை கடந்து சற்று தூரமாக சென்று கொண்டு இருக்கும் போது. அவன் சத்தமாக அவளை நோக்கி
“ ஏய் ஒன்னையும் ரொம்ப பிடிக்கும்......எங்க ஊரு பெட்டைக்கோழி மாதிரி குதுச்சு ஓடுரியே அதையும் பிடிக்குது......” அவள் வெட்கிகளித்தாள்,,,,,.

கிராமம் இருளில் மூழ்க அடி பம்பு முதல். அழுக்குதுணிவரை. அப்பாடி இனிமே விடிஞ்சாதான் நமக்கு தொல்லை என்கிற இரவு பொழுதில் சாமியையா விளக்கொளியை அடக்கினான். அவர்கள் இல்லத்திலும் இருள் படர சாரதா அருகில் சாமியையா படுத்துறங்க,
சாரதா,”ஏங்க...க...”
சாமியையா “சொல்லு”
சாரதா “ ஒத்த புள்ளைய பெத்து ஒரு சொகத்தையும் அடையலயேங்க”
“அதான் ஒனக்கு நான் இருக்கேனே”
“எனக்கு நீங்க இருக்கீங்க. உங்களுக்கு அவனவிட்டா யாரு இருக்கா?”
“அவன் பொழைக்கிறதே குதிரை கொம்பா இருக்கோ என்னமோ”
“என்னங்க ஊருல இருக்கறவங்கயெல்லாம் ஒம்மவன் அமெரிக்காவுல லட்ச லட்சமா சம்பாதிக்கிறான்னு சொல்லுறாங்க, நாம என்னடான்னா பச்சதண்ணி கூட அவன் சம்பாத்தியத்துல சாப்புடாம இந்த கட்ட வெந்து போயிடுமோங்க”
சாமியையா சிரித்தான்.
“ஏங்க சிரிக்குறீங்க”
“அவன் சம்பாதிச்சு நாம பொழப்பு நடத்தலாம்னா நாம அவனை பெத்தோம்”
“எப்படியோங்க அவன பாத்து ரொம்பவருஷமாச்சுங்க, அவென பாக்குறபொழுது வரதா,,,,ன்னு தோணுதுங்க.”
அதான்“அடுத்த மாசம் வாரேண்ணு சொல்லியிருக்கானே”
“ஏங்க எனக்கு ஒரு ஆசைங்க”
“சொல்லும்மா”
“எனக்கு முன்னாடி நீங்க செத்துட கூடாது. ஆனா நா செத்த அடுத்த நாளே நீங்க செத்து போயிடணும்”
“ஏன் இப்படி ஒரு ஆசை”
“இல்ல நா சமச்சு போடாம நீங்க ஒருநா,,,, கூட சாப்பிட்டது இல்ல. நா உங்களுக்கு வாக்கப்பட்ட பிறகு”
“நானும் அதத்தானம்மா வேண்டிக்குறேன். நா செத்த பிறகு ஒன்ன கவனிக்க யாரு இருக்கா?. செல்லப்பாவுக்கு தெரிஞ்சு வர்ரதுக்குள்ள நம்ம கட்டை நாரிப்போயிடும்”
“ஏங்க”
“சொல்லு தாயி”
“ நா சீக்கிரம்செத்துப் போயிடுவேனா”
“ அட சண்டாளி மவளே,. அப்படியேண்டி உனக்கு தோணுது.
“அதான் டாக்டரு சொன்னாரே நான் திங்க ஆசைப்படுறதுயெல்லாம் வாங்கிக் கொடுங்கண்ணு. என்ன இருக்குற வரை சந்தோஷமா வச்சுக்குங்ககண்ணு.”சொன்னாரே.
“என்னபெத்த தாயீ பொறந்தவங்கஎல்லாம் ஒருநா சாகத்தான் போறாங்க. அது எப்பன்னு நாம யாருக்கும் தெரியுரது இல்ல.”
“ஏங்க”
“சொல்லு தாயீ”
“உங்க கால எம்மேல போடுங்க” அவன் காலை அவள்மீது ஒருக்களித்து போட்டான்.
அவள் “ஒனக்கையா இருக்குங்க, செல்லப்பா இன்னேரம் தூங்கிட்டு இருப்பான்ல”
“இல்லடி நமக்கு ராத்திரின்னா அவனுக்கு அங்க பகல்டி...

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.