வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 
     
     
     
   
யாவரும் கேளிர்
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் யாவரும் கேளிர் வாயில்

யாவரும் கேளிர் - 44

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

அதிகாலை 2 மணி செல்லா குரட்டையோடு உறங்கிக்கொண்டு இருந்தான். அவன் கைப்பேசியின் அழைப்புச் சத்தம் அவன் தூக்கத்தை கலைக்க, அவனோ கனவில் கைப்பேசி சத்தம் ஒலிப்பதாக உறக்கத்தை துரத்தினான். மீண்டும் கைப்பேசி ஒலிக்க அவனின் தூக்கம் அரைத்தூக்கமாக குறைந்து அவன்படுத்தபடியே கைப்பேசியை கையில் எடுக்கும்போது “எந்த சாவு கிராக்கி அர்த்த ராத்திரியில தூக்கத்த கெடுக்குறது” என்று கூறியபடி கைப்பேசியை அழுத்தினான்.

“ஹலோ, என்ன தூங்குறீங்களா?”
அரைத்தூக்கத்திலேயே செல்லா “ நீங்க யாரு?”
“நான் தான் அரிதா பேசுறேன்”
செல்லா படுக்கையிலிருந்து துள்ளி குதித்து எழுந்துகொண்டே
“நீங்களா.....? இந்த அர்த்த ராத்திரியில, என்ன வேணும்
சொல்லுங்க....சொல்லுங்க”
“சா,,,,ரிங்க. உங்கள தூக்கத்துல இருந்து எழுப்பிட்டேனா”
“இல்லவே இல்லைங்க”
“இல்ல நைட் 2 மணிக்கு போன் பண்ணியிருக்கேன்ன”
“நான் தூங்குனாத்தானுங்க எழுப்புறதுக்கு”
“ஏன் தூங்கலையா..?”
“எப்ப பார்த்தாலும் உங்க நினைப்புதானுங்க. கண்ணை திறந்தா,
கண்ணை மூடினா.”
“பரவாயில்லையே நல்லா பேச கத்துகிட்டு இருக்கீங்க”
“தமிழ் நாட்டுக்காரன் கிட்ட பேச்சு மட்டும் இல்லன்னா அடையாளமே
இல்லாம போயிடும்ங்க”
அரிதா சிரித்தாள் .
“ரொம்ப அழகா சிரிக்கிறீங்க”
“இரவெல்லாம் பகல் கனவா?, அதவிடுங்க உங்ககிட்ட ஒண்ணு
சொல்லணும்”
“சொல்லுங்க, சொல்லுங்க”
“நான் கல்யாணம் பண்ணிக்கலாம்ண்ணு இருக்கேங்க”
“என்னைய தானே?”
“ம்.... ”
“மேடம் ஒரு நிமிஷம் லைன்ல இருங்க”
“இனிமே என்ன அரிதான்னே கூப்பிடலாம்”
“அரிதா ஒரே ஒரு நிமிஷம் லைன்ல இருங்க”
செல்லா செகண்ட் லைனில் அபிக்கு(இலங்கைக்கார நண்பன்)
போன் செய்ய “என்ன செல்லா இந்த நேரத்துல போன் பண்ணுற
நாளைக்கு முகூர்த்த நாளா? ஒருவாட்டி பாரேன்”!
“எதுக்கு இந்த ராத்திரியில கேட்குற நாளைக்கு காலைல
பார்த்துக்கலாமே”
“இல்லப்பா நாளைக்கு நான் கல்யாணம் பண்ணிக்கணும். அரிதா
ஒகே சொல்லிட்டா அதான்”
“ஆச்சரியமா இருக்கே”
“மனித வாழ்கையில ஆச்சரியமான விஷயம் எப்பவாச்சு நடக்கும்
அது என் வாழ்கையில இப்ப நடந்திருக்கு”
“இருப்பா கொஞ்சம் யோசிச்சு முடிவு பன்னு இல்லன்னா வாழ்கை முழுதும் நிதானமில்லாம அழவேண்டி வரும். யோசிச்சு கொலம்ப இப்ப நேரமில்ல ,சீக்கிரம் சொல்லுப்பா. சரி நல்ல நாளா பார்த்து
பண்ணிக்கலாம், கல்யாணங்கறது ஆயிரம் காலத்து பயிர்”
“கல்யாணங்கறது ஆயிரம் காலத்து பயிறுங்கறது உண்மை தான்
அது ஒரு நாள் புயல் அடிச்சாலும் போயிடும், பல நாள் மழை
பேயலைன்னாலும் பட்டுப்போயிடும். அவளோட சரியான
சந்தோஷமான இந்த தருனத்துல அவ எடுத்தமுடிவ. நான் கப்புன்னு பிடிச்சுக்கணும்”
“சரிப்பா நான் கல்யாண ஏற்பாடு பண்ணுறேன் அது எப்பன்னு
அரிதாவ கேட்டுச் சொல்லு”
“அரிதா என்ன நானே சொல்லுறேன், நாளைக்கே வச்சுக்கலாம்.
நாளை இல்ல மறுநாள் நல்ல நாள். நாளை மறுநாளே
வச்சுக்கலாம்”
“சரிப்பா நீ சொன்னபடியே செய்யுறேன்”
“ஒகே, தேங்ஸ்” என கூறி செகண்ட் லைன் தொடர்பை துண்டித்து
மீண்டும் அரிதாவிடம் “ஹலோ” என கூற,
“என்னங்க ஒரு நிமிஷம்ன்னு சொல்லி பத்து நிமிஷம்
ஆக்கிட்டீங்க, என்கிட்ட பேசுறதவிட முக்கியமான விஷயமா?”
“, நம்ம கல்யாணம் பத்திதாங்க”
“அதுக்குள்ளயா?, யாருகிட்ட”
“என்னோட பிரண்டுகிட்ட, நாளைக்கு நல்லநாளான்னு பார்க்க
சொன்னேன்”
“என்ன! உங்கள கல்யாணம் பண்ணிக்குறேன்னுதானே
சொன்னேன், அதுக்குள்ள? எப்பன்னு நீங்களே முடிவு
பண்ணீட்டீங்க? ரொம்ப அவசரப்படுறீங்களே”
“நல்ல முடிவு எல்லாமே பதஷ்டமான சூழ்நிலையில அவசரமா
வர்றதுதாங்க, இந்த முடிவ நீங்க ஒரு நிமிஷத்துல எடுத்து
இருக்கலாம், ஆனா நா பல மாதமா காத்துட்டுருக்கேன்”
“சரி உங்க முடிவுப்படியே நடக்கட்டும்”
“தேங்ஸ், இப்ப சீக்கிரமா தூங்குங்க.சரிங்க. நானும் உங்க
நினைவுகளோடயே தூங்குறேன்” என்று கூறிவிட்டு கைப்பேசியை அணைத்துவிட்டு அவனையே அவன் கிள்ளிப் பார்த்தான். வாய்விட்டு கத்தி சிரித்தான். உடம்பில் ஒரு ஒட்டுத்துணி இல்லாமல் அவன் அறையில் உலாவினான். அறை முழுவதும் குளிர் அவனை நடுக்கினாலும் அவளால் ஏற்பட்ட வெப்பம் அவனை கதகதப்பாக்கியது. குளியலறை உள்ளே சென்று சவரை ஆன் செய்து குளிக்காமலே சோப்பை தடவிக்கொண்டு இருந்தான். உணர்வு ஏற்பட்டு குளித்து கழித்தான். அம்மா, அப்பா ஞாபகம் வந்து அரைகுளியலுடன் கைப்பேசியை எடுத்து அவன் கிராமத்தில் இருக்கும் அப்பாவிற்கு போன் செய்தான். ........அரிதா நன்றாக உறங்கிகொண்டுருந்தாள் மானிடபிறவிக்கு சந்தோஷ முக்தியில் களைப்பில் உரக்கம் வருது இல்ல துக்க சுமையில் துக்க சுமையில்தூக்கம் வருது அவள் உர்க்கமே அப்படியே.....

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.