வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 
     
     
     
   
யாவரும் கேளிர்
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் யாவரும் கேளிர் வாயில்

யாவரும் கேளிர் - 4

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

செல்லப்பா, “அம்மா....அம்மா”-ன்னு கூப்பிட “என்னடா செல்லம்”? என சாரதாம்மாள் குரல் வீட்டின் பின்புறமிருந்து வர, அம்மாவை நோக்கி ஒடுகிறான். அங்கே மச்சக்காளைய அவள் மேய்த்துக்கொண்டிருக்கிறாள். பள்ளிக்கூடத்திலிருந்து பையன் பசியோட வந்திருப்பான் என எண்ணி,

”மாட்ட தூரமா நின்னுப் பாத்துக்க பக்கத்துல போயிடாத பாஞ்சிடும்.... போயி சோறு கொண்டாறேன்”.... அவள் மறைகிற வரைக்கும் தூர நின்று பார்த்துக் கொண்டிருந்த செல்லப்பா பின்னர், மச்சக்காளையை நோக்கி மெதுவாக செல்கிறான். கொஞ்சம் வேப்பந்தழைய ஒடிச்சி அதன் வாயருகே நீட்ட, அது கசப்புன்னு தெரிஞ்சு திரும்பிக்கொள்கிறது. பிறகு மெதுவாக வாலைத்தொட சீறிக்கொண்டுவருகிறது.
சற்று தூரமாக ஒடுகிறான். அதற்குள் சாரதாம்மாளும் தட்டுடன் வந்துவிட்டாள். அவன் சாப்பிட்டுக்கொண்டே, “ அம்மா..... அய்யா எப்ப வருவாரு?” [சாமி அய்யா சீக்கிரமா வந்துவிடக்கூடாது என மனசுக்குள் வேண்டிக்கொள்கிறான்.]

“உனக்குதான் இந்தப் பள்ளிக்கூடத்தில் படிப்பு முடியப்போவுதாமே. மத்தியானம் உங்க வாத்தியாரு இங்க வந்திருந்தாரு. நீ நல்லா படிக்கிறியாம். பட்டணத்தில ஏதோ கிறிஸ்டியன் ஸ்கூலு இருக்காம். பீசெல்லாம்கூட அவங்களே பாத்துக்குவாங்கலாம். அங்க சேர்ந்தா நீ பெரிய படிப்பு படிச்சி வேலையோட வெளிய வருவேன்னு சொன்னரு. அது விசயமாத்தான் போயிருக்காரு.”

செல்லப்பா சாப்பிட்டு முடிக்க, பாத்திரத்தை வாங்கிட்டு வீட்டுக்குள்ள போன சாரதாம்மா “ மாடுமேய்க்கிற சாக்கில படிப்ப மறந்து வீட்டுவேலையில மூழ்கிடாதே” என்று கூற..... செல்லப்பா ஒருமுறை வீட்டைநோக்கி அம்மாவைப் பார்க்கிறான்.

அவள் வீட்டுவேலைகளை கவனிக்கிறாள் என அறிந்து கொண்டவன் மச்சக்காளைக்கு அருகில் சென்று அதன் மச்சத்தின்மீது கைவைக்க முட்டிவிட்டது மச்சக்காளை. “அய்யோ அம்மா” என்ற அலறல்கேட்டு வெளியே ஒடிவந்தாள் சாரதாம்மாள். மச்சக்காளை முட்டவந்த பயத்தில் செல்லப்பா தன் கண்களை இறுக்கி மூடிக்கொண்டு மூச்சை இழுத்துப் பிடித்ததால் வயிறு ஒட்டிப்போன அவன் கவட்டைப்போல வளைந்துக் கிடந்த மச்சக்காளையின் கொம்புக்களுக்கிடையில் மாட்டிக்கொண்டான். கண்களைத் திறந்து தம் கட்டின மூச்சையும் விட்டுவிட்டான். ஒருக்களிச்சு உள்ளே போனவனுக்கு நேராக திரும்பியதால் வெளியில் வர இயலவில்லை. செல்லப்பாவின் சத்தம் கேட்டு சாரதாவும் அங்கு வந்து விட்டாள். கொம்புகளுக்கிடையில் மாட்டித்தவிக்கும் மகனை வெளியே எடுக்க வழித் தெரியாமல் தவிக்கிறாள் சாரதாம்மா. நேரம் ஆக ஆக பயம் தெளிந்து போன செல்லப்பா இப்போது மாட்டின் கழுத்தையும், திமிலையும் தொட்டுப் பார்த்து சிரிக்கிறான். மச்சத்தை மட்டும் தொட முடியவில்லை. பொழுது இருட்ட ஆரம்பித்துவிட்டது. தனக்கு ஏதோ ஆகிவிட்டதென இப்போது மச்சக்காளை பயத்தில் ....ம்மான்னு கத்த ஆரம்பித்துவிட்டது. மச்சக்காளை மாட்டிக்கிடிச்சின்னு செல்லப்பாவுக்கு உள்ளுக்குள்ள ஒரே சந்தோஷம். மகனுக்கு ஒண்ணும் ஆகாதுன்னு சாரதாம்மாவுக்கு நம்பிக்கை வந்துவிட்டது. மாடு கத்துன சத்தத்தில ஊரே கூடிவிட்டது. சாமிஅய்யாவும் வந்துவிட்டார். மகனைத் திட்டிக்கொண்டே செல்லப்பாவை வெளியே எடுக்க அவரும் முயற்சி பண்ணுகிறார். ஆனால் முடியவில்லை. சாரதாம்மாவைப் பார்த்து ....

“போயி அந்த பச்ச போத்தல்ல இருக்கிற வெளக்கெண்ணெய எடுத்துக்கிட்டு வா” என சொல்லிவிட்டு, ”இங்க என்ன வேடிக்கை...” என கூட்டத்தைப்பார்த்து முறைக்க, ஊர்மக்களும் கொஞ்சம் தூரமாக நின்று பார்க்கின்றனர். செல்லப்பாவின் உடம்பு முழுவதும் விளக்கெண்ணையை தடவி, செல்லப்பாவைப் பார்த்து கோபமாக “டேய்.... கொஞ்சம் மூச்ச இழுத்துப்புடிடா” என கூற, மகன் மூச்சை இழுத்துப்பிடிக்க, மெல்ல, மெல்ல கொம்புகளுக்கிடையில் மாட்டிக் கொண்டிருந்தவனை வெளியில் எடுத்துவிட்டார் சாமிஅய்யா. மச்சக்காளை மாட்டுத் தொழுவத்துக்குள் ஒடி உடல் நடுங்கிக்கொண்டே பயந்துபயந்து பார்க்கிறது. மகனை வெளியே எடுத்த சந்தோஷம் ஒரு பக்கம் சந்தையில் எல்லாரையும் முட்டிக்கொண்டு இருந்த காளைய அடக்கிவிட்டதாக நினைத்து வெற்றிநடைபோட்டு வீட்டுக்கு சாமிஅய்யா செல்லப்பாவை அழைத்துக்கொண்டு செல்கிறான்.

ஊர் மக்கள் கலைந்து செல்கிறார்கள். கலைந்து செல்லும் கூட்டத்தில் ஒரு கர்ப்பிணி பெண்ணும் செல்கிறாள். அவளின் வயிறு பெருசாக இருப்பதை பார்த்து சாமிஅய்யா “ எத்தனை மாசம்மா” என்று கேட்க, அவள் வெட்கப்பட்டுக்கொண்டே தன் சேலையால் பழுத்த பலாப்பழம் போல் பெருசாகவும், பனம்பழம்போல பழுப்புநிறமா மினுமினுத்த தன் வயிற்றை சேலையின் முந்தானையால் மறைத்துக்கொண்டே “ 7 மாசம் அண்ணே” எனக்கூற, அந்த கர்ப்பிணி பெண்ணை பார்த்து சாமிஅய்யா,” ஏம்மா வயித்த மறைக்கிற அதிகாலை வெளிச்சமும், அந்தி மாலை வெளிச்சமும் ஒன் வயித்துல படணும். குழந்தை பொறக்கிற வரையிலும் தினமும் சூரிய ஒளி படுற மாதிரி பாத்துக்க அப்பதான் பொறக்கப்போற குழந்தைக்கு தோல் உறுதியாவும், கண் பார்வை கூர்மையாவும், மஞ்சக்காமாலை வராமலும் இருக்கும்”....என்று கூறிவிட்டு உள்ளே செல்கிறார்

பயத்தால் நடுங்கிக்கொண்டிருக்கும் மச்சக்காளையை நோக்கி செல்லப்பா செல்கிறான்...

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.