திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார்.
திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.
"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர்.
யாவரும் கேளிர்
யாவரும் கேளிர் ஆசிரியர் பற்றி
------------------------
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்
கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்
ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:
2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.
செல்லா படுத்திருக்க அபி கண்ணாடி முன் இழந்து கொண்டிருக்கும் இளமையை சரிசெய்து கொண்டு இருக்கிறான். கண்ணாடி முன் தலைவாறும் போது தன் பிம்பத்தை பார்த்து 40 வயது நெருங்கிவிட்ட போதிலும் இன்னும் 25 வயது போல் இளமையாகவே இருப்பதாக எண்ணிக்கொள்கிறான். செல்லாவிடம் அபி
“வெளியே போகலாமா?”
“இல்லப்பா ஹாஸ்பிட்டல்ல இருந்து டிஸ்சார்ஜ்-ஆகி இன்னைக்குதானே வந்தோம் அதனால ரொம்ப டயடா இருக்குப்பா.”
“ஹாஸ்பிட்டல்ல 10 நாள் என்ன வெட்டியா முறிச்ச?”
“ரொம்ப கஷ்டமான வேலை என்ன தெரியுமா? வேலையில்லாம பொழுத கழிப்பதும், அடிபட்டு ஹாஸ்பிட்டல்ல இருப்பதும்தான்.”
“சரி நா போயிட்டு வர்றேன்”
செல்லா அமைதியாக இருந்தான். மீண்டும் அபி
“நான் எங்கே போறேன்னு சொன்னா உன்னுடைய உடம்பு வலி எல்லாம் பஞ்சா பறந்திடும்.”
“அப்படியா!”
“எங்க போறேன்னுதான் கேளே”
செல்லா தன் மனதிற்குள்ளே “பெரிய கலெக்டர் உத்தியோகம்.. இதுல நான் வேற எங்கே போறேன்னு கேட்கணுமா என்று எண்ணிக்கொண்டு இருக்கும் போதே அபி அவனாகவே,
“Saturday night, week end வேற, அதுவும் மாசத்துல முதல் week அதோட அரிதாவும் வரப்போறா இந்த party அல்வா சாப்பிடுறமாதிரி இருக்காது?”
செல்லா “என்ன சொன்ன”
“அதான்... இந்த party அல்வா சாப்பிடுற மாதிரி இருக்காதான்னு சொன்னேன்”
“அது இல்ல அபி அதுக்கு முன்னாடி என்ன சொன்ன?”
“வேற ஒன்னுமில்ல நம்ம ரூம்ல இருந்து மூணாவது ரூம்ல இருக்காளே அதான் ஹாஸ்பிட்டல்ல உன்னைய வந்து பார்த்தாளே ஏற்கனவே வேற ஒருத்தன் கழட்டி விட்ட கட்டுத்தரி இல்லாம தவிக்கும் உன்னோட கனவுக்கன்னி அரிதா, அவளும் இந்த party-க்கு வர்றாளாம்.”
செல்லா படுக்கையில் இருந்து துள்ளி குதித்தெழுந்தான். பசுவை துரத்தும் கன்று போல் அபியிடம் அன்பு மழையாக வழிந்தான். தானும் அவனுடன் வருவதாக சொன்னான். கார் பறந்தது. அபியிடம் ஒரு சில கேள்வியையே பலமுறை திரும்பத் திரும்ப ஒரே வார்த்தையாக “எப்போது பார்டியில் கலந்துகொள்வோம், எவ்வளவு தூரம் உள்ளது? வந்துவிட்டனவா?” என கேட்டு நச்சரித்துக் கொண்டே இருந்தான். அவனின் அவசரத்தால் இரத்தங்கள் சிறுநீராக பிரிந்து சிறுநீரகப்பை நிரம்பி அதுவும் வெளிவர செல்லப்பாவுக்கு அவசரமூட்டின. “எப்பப்பா வரும் ஒன்னுக்கு வேற போகணும்” என்றான். இருவரும் party hall-லில் நுழைந்தனர். பெரும்பாலும் அனைவரும் கருமைநிற ஆடை அணிந்திருந்தனர். அதிக மின்சாரத்தை குறுக்கி குறைந்த வெளிச்சத்தில் மெழுகுவர்த்தியாக்கி அனைவரின் கைகளிலும் மதுக்கோப்பைகளாக அவர்கள் காட்சியளித்தபோது இருளுக்குள் குறைந்த ஒளியும், மதுக்கோப்பைகளும், மனிதர்களும் வெளிப்படும்போது பல ஒவியங்கள் பிறந்து மறைகின்றன.
அவ்வேளையில் அரிதா மட்டும் வெள்ளையில் கரும்புள்ளிகள் கொண்ட ஆடையில் முழங்காலுக்கு மேல் அவளின் தொடை லேசாக அறிய தாடைக்கு கீழ் அவளின் கொங்கைகள் எந்த நிமிடத்திலும் வெளியே குதித்துவிடும் போல் தவிக்கையில் அவள் அந்த கூட்டத்துக்குள் புள்ளிமானாக செல்லாவுக்கு காட்சி தந்தாள். அவனோ வள்ளியை மனம் முடிக்க இட்டுகட்டிய வேடனாக அவளை ரசித்துக்கொண்டே இருந்தான்.
அபி “அதோ உன்னோட நாயகி சிலேடைக்குள் சில்லரையாக சிரித்துக்கொண்டு இருக்கிறாள். அவளின் அங்கங்கள் அறிய பலபேரை ஜொள்ளுவிட வச்சுகிட்டு இருக்கா.”
“எனக்கு ஒண்ணு செய்வியா?”
“என்ன அரிதாவ அறிமுகப்படுத்தணுமா?”
“அதுதான் வேண்டாம்ன்னு சொல்ல வர்றேன்”
“ஏன் ஏற்கனவே உன்ன ஹாஸ்பிட்டல்ல பார்த்துட்டான்னா?”
“அதுதான் இல்ல பஞ்சுக்குள்ள மறஞ்சு இருந்த என் மூஞ்சிய பார்க்கலயே”
“அப்ப அவகிட்ட நீ பேசுனா உன் குரல வச்சு கண்டுபிடுச்சுடுவாயில்ல”
“அதுதான் நடக்கப்போறது இல்ல”
“பின்ன?”
“எதையும் சாதிக்ககூடிய உலகில் மிகச்சிறந்த மொழி மெளன மொழி. அத கடைபிடிக்க போறேன்.”
“ அடச்சீ.... அதுக்கா நா உன்ன இங்க கூட்டி வந்தேன்”
“அபி சும்மாயிரு. அரிதாவின் நடை, உடை, பாவனை, சிரிப்பு என எல்லாத்தையும் ரசித்து நான் மிகச்சிறந்த அவளின் ரசிகனானால் தான் அவள் என் மனைவியாகும் போது சுவையுடன் ருசிக்க முடியும்”
“எது எப்படியோ இருப்பா... நா போய் ஒரு ரவுண்டு எடுத்துட்டு வர்றேன்”
அபி செல்லாவின் கையில் ஒரு கிளாஸ் ஒயினை தினிக்க அபியும் விஸ்கியை கையில் பிடித்தபடியே செல்லாவுடன் பால்கனியில் புகையை ஊம்பிக்கொண்டிருந்த அரிதாவை நோக்கி நடந்தனர். அரிதா அருகில் இருவரும் சென்று அவளை பார்த்துக்கொண்டு இருந்தனர். அரிதாவிடம் செல்லா “please lighter -என்றான். அவள் கையில் இருந்த lighter-யை அவனிடம் கொடுத்தாள். அதைக்கண்ட அபி அங்கிருந்து வழுக்கினான், செல்லாவும் அரிதாவிடம் “ஒரு நிமிடம்” என்று கூறி ஹாலின் உள்ளே வந்து புகைத்துக்கொண்டிருந்த ஒருவரிடம் “please can you give a cigarrete” என்றான். புகைத்துக்கொண்டிருந்தவன் சிகரெட்டை நீட்டினான். சிகரெட்டை வாயில் வைத்து lighter-ல் பற்ற வைக்க முயற்சித்தான். பல முறை முயற்சித்தும் சிகரெட்டில் நெருப்பு பிடிக்காத போது ஒரு பெண்ணின் கை அவனின் சிகரெட்டை பற்றவைத்தது. ஒருவர் முகம் ஒருவர் அறியாத சிகரெட் லைட்டர் வெளிச்சத்தில் அரிதாவின் முகம் விரிந்து மறைந்தது. இவனும் அரிதாவை கண்டு வெட்கி வெட்கத்தை வெளிப்படுத்தாமல் புகையை ஊம்பிய போது விக்கினான். அவள் அவன் அருகே வந்து இருளுக்குள் அவள் மட்டும் விளக்காக சிகரெட் first time-ஆ என்றாள். ஆம் என்றான். அப்பொழுது அவள் நானும் முதல் முறையாக ஒரு fashion-க்காக ஆரம்பித்தேன். அதுவே இப்போ passion-ஆகி போனது. அதே வேளையில் தனது வலக்கையில் உள்ள wisky-யை ஊம்பி அருந்தினாள். இதுவும் விருப்பமில்லாமல் விரும்பி குடிப்பது போல் தொடர்ந்தேன்.
இப்பயெல்லாம் நானே வெறுக்க நெனச்சாலும் அதுவே என் வேதனைக்கு மருந்தாகி என்னைவிட்டு போக மறுக்கிறது. செல்லா அவளிடம் “சிகரெட் நிறைய குடிப்பீங்களோ?”.
அரிதா “சிகரெட் எல்லாம் பிடிக்கமாட்டேன் ஒரு நாளைக்கு நாலு தடவை கஞ்சாவை புகைப்பேன்”.
“கஞ்சா எல்லாம் குடிப்பீங்களா? அது உடம்புக்கு ரொம்ப கெடுதளுங்க”.
“ஏன் இந்தியாவுல தடை விதிச்சிருக்காங்களே அதனாலயா? இந்தியாவுல கள்ளுக்கடைக்கும், கஞ்சாவுக்கும் தடை விதிச்சதுனாலதான வெளிநாட்டுல தயாரான விஸ்கியும் சிகரெட்டும் ஏகபோகமா வியாபாரமாக்க வெள்ளக்காரங்க பண்ணின வேலை அது. சரிங்க உங்ககிட்ட ஒண்ணு கேட்கட்டுமா? கள்ளு குடிச்சும், கஞ்சா அடிச்சும் யாராவது செத்திருக்காங்களா?”
செல்லா “ஆமாங்க கேள்விப்பட்டதே இல்லைங்க.”
“அதான் பார்த்தீங்களா சிகரெட் குடிச்சு கேன்சர் வந்து செத்தவங்களும் இருக்காங்க,விஸ்கி குடிச்சு குடல் அரிச்சு அழுஞ்சு போனவங்களும் இருக்காங்க.. நம்ம ஊருல. ஆமா நீங்க தமிழ்நாட்டுல எங்க” அதற்குள் “அரிதா” என்று அழைக்கும் குரல் கேட்டு “ஒரு நிமிஷம்” என்று தன் கையில் வைத்திருந்த கஞ்சாவை அவனிடம் கொடுத்துவிட்டு அவள் சென்றாள். அவள் அவனைவிட்டு மறைந்த உடன் அவன் அவள் புகைத்த புகையை ஒரு முறை ஊம்பினான். அவ்வேளையில் அபி அவனருகே சென்று “பேசவேமாட்டேன்னு சொன்ன?”
“அவள் பேசியவுடன் பேசாம இருக்க முடியலயே”
“சிகரெட்டே புகைக்காத நீ புகைத்துக்கொண்டு இருக்கற?”
“இல்ல அவளின் உதடுபட்ட தடங்களை என் உதட்டினில் பதித்து கொண்டு இருக்கிறேன்.”
“ச்சே இன்னும் கொஞ்ச நேரம் அவ இருந்திக்கலாம்னு நினைக்கிற இல்ல” என அபி கூற,
“பரவாயில்ல மதுவும் மாதும் கொஞ்சம் கொஞ்சமா பருகும்போது தான் மடைவெள்ளம்போல் போதை பெருகுது”. அபி, செல்லப்பா மருத்துவமனையில் படுத்திருக்கும்போது அவனது பக்கத்து அறையில் படுத்துக்கொண்டிருந்தவளான இலங்கை தமிழ் பெண்ணிடம் அரிதா வாய்விட்டு அழுதுகொண்டு இருந்தாள். அதை கண்ட செல்லா அவளை நோக்கி நடந்தான்.....
தொடரும்...
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.