திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார்.
திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.
"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர்.
யாவரும் கேளிர்
யாவரும் கேளிர் ஆசிரியர் பற்றி
------------------------
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்
கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்
ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:
2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.
பொதுவாக மருத்துவமனைகள் வழிபாடுதலங்களாக காட்சி கொடுப்பதும், மருத்துவர் முதல் கொண்டு நர்ஸ்கள் வரை நோயாளிகளிடம் நட்பாக இருப்பதும், பலநேரங்களின் காதல் காமமாவது வழக்கம் என்பதற்கு எடுத்துக்காட்டாக மைக்கேல் ஜாக்சன் மனைவிகூட நர்ஸ் என்பது ஊர்ஜிதம்.
செல்லாவின் மொத்த உடலும் வலி ஏற்படுத்தும்காயங்களையும் காட்டன்கள் மரைக்கப்பட்டு ஒரு கண் வெளியே அறியப்பட்டு படுக்கையில் கிடத்தி இருந்தான். அபி லேசான காயம் என்பதால் மருத்துவமனையைவிட்டு வீடு சென்றுவிட்டான். செல்லாவை நர்ஸ்கள் மிகவும் அன்போடும் அரவணைப்போடும் பார்க்கும் போது எல்லாம் செல்லாவின் எண்ணம் அரிதா மட்டும் அவளின் காதலியாக குறிக்கிடாவிட்டால் இதில் ஏதாவது ஒன்றை பிடித்து இருக்கலாமே என்று பலநேரங்களில் அவனுக்கு சபலம் தட்டி அவன் அவனுக்குள்ளே நோ...நோ... அரிதாதான் பெஸ்ட்... அரிதாதான் பெஸ்ட்... என்று தனக்கு தானே பிதற்றும் போது அரிதா அவன் அருகே வந்தாள். செல்லா அவளைக் கண்டவுடன் ஒருமுறை தனக்குதானே கிள்ளிப்பார்த்தான். அவன் கிள்ளப்பட்ட காட்டனும் காயப்பட்டன. உணர்வு அற்ற நிலையில் ஒருமுறை இருகண்களை இருக்க மூடித்திறந்தான். அப்போது அவள் அவன் அருகே வந்துகொண்டு இருந்தாள். அதைக்கண்ட அவன் மீண்டும் அவன் கண்களை மூடினான். அவள் அவன் அருகே வந்து எக்ஸ் கியூஸ் மீ என்றாள். அவன் லேசாக கண்களை துறந்தான். கனாவில் கண்ட மாது அவனுக்கு நிஜத்தில் அவன் முன் நிற்கும்போது அவளின் தலைக்குப்பின் பல்பு மறைந்து பல்பின் வட்டமிட்ட ஒளித்தோற்றம் மட்டும் அவள் தலையை சுற்றி அவனுக்கு அருள் ஈட்டித்தரும் லட்சுமியாக காட்சி தந்து மது அருந்தாமலேயே போதையூட்டினாள் அந்த மாது. அவன் இதமாக போதையில் களைத்து சிரித்த அவனை இருக்கப் பிடித்துக்கொண்டு இருக்கும் காட்டன்கள் அவனின் உணர்வுகளை மறைத்துக்கொண்டு இருந்தன.
அந்த நேரத்தில் அவளே அவனைப் பார்த்து நீங்க
செல்..ல்...லா என்றாள்.
அவனுக்கு அவள் கூப்பிட்டது செல்லமாக ஒலித்தது.
அவன் எஸ் என்றான்.
அபி சொன்னாரு உங்களுக்கு பெரிய அடின்னு நான் உங்க ரூமிலே இருந்து மூணாவது ரூம்ல தான் இருக்கேன், இருந்தும் நான்
உங்கள பார்த்தது இல்லை அதான் பார்க்க வந்தேன்.
செல்லா I saw u lot of times என்றான்.
அவள் சிரித்தாள். அவனோ சிரிக்க வழியின்றி சிரிக்க துடித்தான். அப்போது உடைந்த மூக்குத்தண்டு அவனுக்கு வலி கொடுத்தது. அந்த வலியுடன் எழ முற்பட்டபோது..
பரவாயில்லை படுத்திருங்கள், என்று கூறியபடி அவன் அருகில் அமர்ந்தாள். அவனின் பகல் கணவில் காளி ருத்துர தாண்டவம் போட்டன. அவளைப் பற்றிக்கொண்டு இருந்த காட்டன்கள் மீது..
அவள் என் பெயர் அரிதா என்றாள்.its french name? என்றான்..
நான் பக்கா தமிழச்சி நல்லா தமிழ் தெரியும் என்றாள்.
செல்லா வெட்கியபோது காட்டன் மானத்தை காப்பாற்ற அபூர்வமான பெயர் என்றான்.
ஆமாம்.. அதனால் தான் நான் இழந்தது ஏராளம் என்றாள்.
அவனோ நீங்கள் இழந்ததைவிட பெறப்போவது தாராளமாக இருக்கப்போகிறது.
இனிமேலுமா?,
இனிமேல்தான் என்றான்.
என்னைப்பற்றி எதுவுமே அறியாம பேசுறீங்க.
ஒருத்தர ஒரு நிமிஷத்துல புரிஞ்சிக்கலாம். பல வருஷமா புரிஞ்சிக்காமலே போகலாம்.
அவன் அவனுக்குள்ளே உங்களப்பத்தி நெறைய தெரிஞ்சுக்கிடாம இருந்ததால தான் உங்களை எனக்கு பிடிச்சு இருக்கு.
அவன் நான் ஒங்ககிட்ட ஒன்னு சொல்லட்டுமா?.
சொல்லுங்களே. நீங்க ரொம்ப தைரியமா அன்பானவளா தெரியுறீங்க.
எனக்கு புரியல.
நான் யாருன்னு தெரியாம அடிபட்டத அறிஞ்சு வந்து இருக்கீங்க.
அவள், ஒரே காரிடரில் தினமும் நடந்து இருக்கோம். ஒரே கட்டடத்துல வசிக்கிறோம். நான் உங்களை பார்க்காம இருந்து இருக்கேனே, இன்னைக்கு எந்த வேலையும் இல்லாம ரூம்ல இருந்தப்ப ஒரே போ..ர்...ரா இருந்துச்சு, உங்க பக்கத்துல தங்கி இருக்குற பொண்ணு சிலோன் தமிழச்சி அவெங்கள கரும்புலின்னு நெனைச்சு இலங்கை இராணுவத்தினர் பலர் கற்பழிச்சு கடைசியில அவெங்க ஒரு பத்திரிக்கைக்காரங்கன்னு தெரிஞ்சு அவெங்கள நாடு கடத்தி.. அவெங்க எப்படியோ இங்க வந்துட்டாங்க. அவெங்களபத்தி அறிஞ்சு இங்க வந்தேன். அவெங்கள பாத்தப்போ எனக்கு ஆண் வர்கத்துமேலே வெறுப்பு வருது.
செல்லா - ஏங்க?.
பின்ன என்னங்க அவெங்களோட கற்பப்பையில் 1/2 கிலோ ஆணின் செமன் இருந்துச்சாம் என்ற செய்தி நெட்ல படிச்சேன் அவெங்கள பார்கனும்னு தோனுச்சு என்றபோது
அவன் எங்கே இருக்காங்க.
அவள் கை காட்டி அடுத்த அறை என்றாள். எனக்கு அறிமுகமில்லாத அவெங்கள பார்க்க வந்த போதுதான் முகம் தெரியா உங்களையும் பார்க்கத் தோணுச்சு.
நன்றி என்றான்.
அவள் லேசாக சிரித்தாள்..
அவனுக்கு அவளை பற்றி தெரிஞ்சும் அவன் அவளை அறியாததுபோல் நீங்க யாருங்க என்றான்.
தேடிக்கிட்டு இருக்கேன்.
என்ன வேலை பண்ணுறீங்க.
பிடிக்காத வேலை, என்னைய இருக்கமா புடிச்சுக்கிட்டு இருக்கு.
ஒங்களுக்கு என்ன வயசு ஆகுது.
26 வயசு.
நல்லா கமெடி பன்றீங்க,
வாழ்க்கையே நலினம் தானே!
அதுக்குள்ள ஞானியா...
அப்ப அப்ப கஞ்சா அடிப்பேன்.
அதற்குள் அங்கே நர்ஸ் வந்தால் don’t disturbed.. leave him alone என்றாள்.
அவள் அவனிடம் சரிங்க உங்க உடம்ப டாக்டருங்க பாத்துக்குவாங்க. நீங்க உங்க இருப்பிடம் வந்த பிறகு பாக்குறேன் என்ற போது அவள் மறைந்தாள்.
மறைந்ததை அறிந்த அவன் அவனை மறந்து துள்ளி குதித்தான். அவ்வேலையில் அவனின் காயங்களை மறைத்துக் கொண்டு இருந்த கட்டு உடைந்து அவனிம் ரத்தங்கள் வெளிப்பட்டு வலி பொருக்க முடியாமல் அம்...மா...மா... என்று கத்தினான்.....
பக்கத்து அறையில் தங்கியிருந்த தமிழ்பென் அவளுக்கு பனிவிடை செய்த சிங்கலப்பெண்ணிடம் யாரோ தமிழ்காரங்க போல வலிபொருக்க முடியாம கத்துராங்க,பாவம் என்றாள்...
தொடரும்...
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.