வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 
     
     
     
   
யாவரும் கேளிர்
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் யாவரும் கேளிர் வாயில்

யாவரும் கேளிர் - 34

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

அமெரிக்காவின் புருக்கிலின் வீதீயிலே தனிமையிலே உலாவருவது நம் உயிருக்கு விலை பேசுவதாகவும், ஆப்பிரிக்காவின் ஜோன்ஸ்பார்க்கின் நகரத்தில் நாம் இரவு வேலை ஒருவனாக கழித்தல் அடக்கத்துக்கு ஊன் கெடைப்பது அரிது, அதேபோல் பொதுவாக குற்றங்கள் புரியும் வெளிநாட்டினர் தேர்ந்து எடுப்பது சுரங்க வழி நடைபாதையைதான்.

குறுக்கு வழிக்காக அமைத்த சுரங்க வழி பாதைகள் பெரும் குற்றங்களுக்கு ஆதாரமாக அமைந்து விட்டன, என்பதை நாம் அறியாத உலாவும் உண்மைகள். அதை மீண்டும் ஊர்சிதப்படுத்த செல்லாவும், அபியும், சுரங்க பாதையை நோக்கி நடந்தபோது எதிர்திசையில் நான்கு செவ்விந்தியர்கள் வந்துகொண்டு இருந்தனர். செல்லா அபியிடம் இன்னும் எவ்வளவு தூரம் ரயில்வே ஸ்டேசனுக்கு நடக்கனும்..
ஏன் முட்டி வலிக்குதா
இல்லை ஆத்திரத்த அடக்கினாலும் மூத்துரத்த அடக்கமுடியாதே, அதான்
சரிவாங்க மேலே பங் இருக்கு போயிட்டு வரலாம்,என்று இருவரும் சுரங்க பாதையில் இருந்து திரும்பி இறங்கியபடிகளை நோக்கி ஏறினர். அதை அறிந்த செவ்விந்தியர்கள் நிதானித்தனர். செல்லாவும்,அபியும், பங்கில் உள்ள அங்காடியுள் நுழைந்தனர். செல்லாஅவசர காலகடனை கழித்து ஆசுவாசப்பட்டான். அதற்குள் அபி இரண்டு கப் காப்பி வாங்கியபோது, அங்காடி நிருவனரான அமெரிக்கன் Are You Indian? என்றபோது அங்கே செல்லாவும் வந்துவிட்டான். இருவரும் Yes என்றனர். Which place in india? செல்லா சென்னை என்றான்.

Oh.. A. R. Rehman Place? Tamilnadu? என்று கூறி ‘வணக்கம்’ உரைத்து கைகூப்பினான். அபியும், செல்லாவும் நன்றி நவிழ்ந்து, காப்பிக்கு பணம் வழங்கியபோது, வாங்க மறுத்தான் செல்லா வி? என்றபோது I Know India Poor Country.. I SAW ‘SLAMDOG MILLIONAIR’ IT IS REALY POOR PEOPLE, QUITE BAD என்றான்.

இவர்கள் எவ்வளவோ அவனிடம் வழக்காடியும் வெள்ளைக்காரர் பணம் பெற மறுத்து போது, வேறு வழியின்றி செல்லாவும் அபியும், அந்த இடத்தைகாலி செய்தனர், சினிமா இந்தியர்களை பிச்சைக்காரர்களா ஆக்கிடுச்சே! என்றான் செல்லா. அபி அதிக ஆஸ்கார் வாங்கின மிக முக்கியமான படங்கள்ள இரண்டு இந்தியாவில எடுத்தது ஒன்னு ‘காந்தி’மற்றொன்று ‘சிலம்டாக் மில்லினர்’ இரண்டு படங்களுமே இந்தியா பின் தங்கிய நாடுன்னுதான் சித்தரிச்சு இருக்கு, அதான் நமக்கும் இப்படி ஒரு நிலை. சமிபத்தில ஒரு செய்தி படிச்சேன் இந்தியாவில மிகவும் பின் தங்கிய மாநிலமான ஒரிசாவுல காலகன்டி மாவட்டத்திலுள்ள லான்சிகர் என்ற ஒரு இடம் இருக்காம்? செல்லா குறுக்கிட்டு அங்கே நெறய நக்சலைட்டுங்க இருக்காங்கலாமே?அதற்க்கு காரனம் அவுங்களோட வறுமை அதே நேரத்துல பெட்ரோல் டீசல் வாகனங்களோ, சினிமா தியேட்டர், டிவி, மின்சாரம், தொலைபேசி, ரேடியோ, அறியாத உலகம்? கிட்டதட்ட 50 மயில் சுற்றளவில் வசிக்கும் 70 சதவிகிதம்அழிந்து போன சிட்டுக்குருவிகள், அறியவகை பாம்புகள், நாம் அறியா வகை பறவைகள், கற்பு, கல்யாணம்,வாய்ச்சொல் அறியாமல் ,சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் என்ற மொழிக்கு அர்த்தமூட்டி, ஏற்றத்தாழ்வு இன்றி பிடித்தவர்களுடன் இஷ்டம் போல் வாழும் மலைவாழ் மக்களையும் சேர்த்து நான்கு பக்கமும் அரண் போல் வளர்ந்துகொண்டு இருக்கும் மலைகளில் அலுமினியம் விளைந்து கிடைப்பதை அறிந்த நம் அறிஞர்கள், அதை எடுக்க நீ...நா...என்று முட்டிக்கொண்டபோது முந்திக்கொண்டது ஒப்பந்தத்தில் வேதாந்தா என்ற கம்பெனி இந்திய அரசாங்கத்தோட அத்தாட்சி பெற்று பல ஆயிரம் கோடியில் தொழிற்ச்சாலை தொடங்கி அந்த மலையை தொடர்ந்து இருக்குற கிராமங்களுக்கு அவங்களோட தேவைகளை பூர்த்தி செய்து அலுமினுயம் எடுக்க தொடங்கி கொண்டிருக்கும் வேலையில் N.G.O காரர்கள் மிகப்பெரும் முட்டுக்கட்டையாகியுள்ளனர் அதற்க்கு அவர்கள் கூறும் காரனங்கள், காடுகள் அழிப்பு, இயற்கை பாதிப்பு, மலைவாழ்மக்கள் சுதந்திரம் பறிப்பு, ஆனால் மக்களின் எண்ணம் வேறாக உள்ளது, அக்கம்பெனி ஆங்கே நிறுவப்பட்டால் அம்பதானாயிரம் பேருக்கு வேலை கிட்டும், குழந்தைகளுக்கு நிரந்தர கல்வி கெடைக்கும், ஒரிசா மட்டுமில்லாம மொத்த இந்தியாவே கொஞ்சம் பொருளாதார வளர்ச்சியை எட்டும், செல்லா, என்னத்த பொருளாதாரம் வளர்ந்தாலும் இயற்கை அழிவுதானே....

அபி அப்படியா சரி உங்களால டிவி பார்ப்பதை நிறுத்த முடியுமா? முடியாதே, கம்யூட்டர் இல்லாம இருக்க முடியுமா?

அது எப்படி அபி நம்மலோட மெமரியே அதுதானே, சரி விமான பயனம், வீட்டுக்கு உபயோகபடுத்துற பாத்திரபன்டங்கள் கார், பைக், இதுயெல்லாம் இல்லாம உங்களால வாழ முடியுமா?

இதுயெல்லாம் இல்லாம நான் மட்டுமில்ல எவறும் இருக்க முடியாது,அப்படியாராவது இருந்த அவுங்க காட்டுவாசியாதான் இருப்பாங்க,காட்டுவாசிங்க எல்லாம் இப்ப நாட்டுவாசியாயிட்டு இருக்காங்க, நாட்டுவாசிங்க யெல்லாம் நக்ஸ்லைட்டா காட்டுக்குள்ள வாழ்ந்துகிட்டு இருக்காங்க அதனாலதான் அரசு சொல்லுது. நமக்கு அலுமினுயம் தேவைகள் அதிகமாக இருப்பதால் தனியார் கம்பெனிக்கு அப்ரூவல் கொடுத்து இருக்காங்க. ஆனால் இந்தியாவில கெடைக்கப்போகும் அலுமினுயத்தால, நம்பர் ஒன்னா இருக்கிற டென்மார்க் கம்பெனிகள் அடி வாங்கிடுவோம்னு பயந்து ஒரிசாவில் உள்ள N.G.O க்களுக்கு பணத்தை வாரிவழங்கி இந்தியாவில அலுமினிய உற்பத்தியை தடுக்குறாங்களோன்னு சந்தேகபார்வையா உள்ளது?

செல்லா அபியிடம், வளர்ந்துகொண்டு இருக்கும்போது இந்தியாவை ஏழ்மையாக்கிட்டு இருக்காங்க அதேநேரத்துல இந்தியாவை ஏழ்மையா காட்டிஆஸ்கரும் வாங்கி அதுல ரெண்ட நம்மவர்களுக்கு கொடுத்து வாயடடுச்சு புட்டாங்கெ என்றபோது செல்லா, அபி எனக்கு வருத்தமா இருக்கு.

ஏன்?

பின்னனென்ன எங்க நாட்டு செய்திய நீங்க விரல்நுனியில வைச்சு இருக்கீங்களே, அபி, நமக்கு மட்டும் எப்பவுமே ஒரு பழக்கம் உண்டு நம் முதுகுல உள்ள அழுக்க மறந்து அடுத்தவன் முதுகுல உள்ள அழுக்க சொரிஞ்சு சொல்லுவோம் அப்படிதான் இதுவும் என்றபோது சுரங்க பாதையை அடைந்து கொண்டிருக்கும் அவ்வேலையில் அபி சிரித்தான் அதைகண்ட செல்லா எனக்கும் சொல்லிட்டு சிரிங்கலேன்.. நானும் சிரிப்பேனே.. நான் படிச்ச செய்திய உங்ககிட்ட சொல்லி உங்க காதல மறத்து போக வைச்சுட்டேன் பாத்தீங்களா?

உண்மைதான்.. பொது நலத்த பத்தி விவாதிக்கும்போது கொஞ்சம் சுயநலத்தை மறந்துகிடந்த இடைவெளியை நீங்க ஞாபகபடுத்திட்டீங்க பாருங்க,அப்ப ஒங்க காதலை மறக்கபோவது இல்ல..

அபி நீங்க எனக்கு நல்ல நன்பனா இருக்கனும்னா,நான் உங்க கிட்ட மறைக்குர விக்ஷயங்களை நோன்டாதீங்க என்றபோது அபி அமைதியானான் செல்லாவும் சுரங்கபாதைக்குள் அபியுடன் நடந்தனர்.

எதிர்திசையில் செவ்விந்தியர்கள் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர். செல்லா அவனுக்குள் எப்படியாவது அரிதாவை நம்மை தேடிவரவைக்கனும் என்று எண்னம் விரிந்தபோது இமை மூடும் இடைவெளிக்குள் அவன் முகம் இரும்பு கொண்டு உடைத்ததுபோல் செவ்விந்தியர்களின் கைகாளால் கண்களிலும் குத்தப்பட்டு வீக்கம் தொடங்க, மூக்கு தன்டையுடைந்து மூக்கோடும் வாயோடும் ரத்தம் கொட்ட அபிஅடி முதுகில் வாங்கியுடனே கைகளை மேலேதூக்கி மன்டியிட்டு தன்னிடம் உள்ளதை அனைத்தையும் அவர்களிடம் கொடுத்துவிட்டான்.

செல்லா அடித்தவர்களை தடுத்ததால் நசுக்கப்பட்டான் அடிப்பட்ட இடங்களில் வலி படர்வதற்க்குள் செவ்விந்தியர்கள் செல்லாவின் கடிகாரம் முதல்கொண்டு அவன் அம்மா அனிவித்த வெள்ளி அருனாவரை அருத்துக்கொண்டு சென்றுவிட்டனர்,செல்லாவின் முகம்கிழிபட்டு ரத்தம் கொட்டுவதை அறிந்த அபி தரையில் சரிந்துகொண்டுருந்த செல்லாவை தூக்கி பதட்டமான போது செல்லா லேசாக சிரித்தான். இந்த நிலையில எதுக்கு இந்த சிரிப்பு நெனைச்சேன் சிரிச்சேன். என்ன எழவ நெனச்சீங்க, என்ன வந்து மீட் பன்னப்போற அரிதாவ.. என்றபோது, அபி செல்லாவை தொப்பென்று கீழே போட்டான், செல்லா அய்......யோ...யோ...அம்...மா...மா...வலிக்குதே என்று கத்த.......

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.