திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார்.
திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.
"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர்.
யாவரும் கேளிர்
யாவரும் கேளிர் ஆசிரியர் பற்றி
------------------------
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்
கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்
ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:
2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.
செல்லப்பா அவல நிலையுடன், கலவர மனதுடன் ஜடமாக விமான இருக்கையில் அமர்ந்து இருந்தான் . அவன் அருகே இந்தியர் ஒருவர் அமர்ந்து இருக்க அவர் செல்லப்பாவை கண்டவுடன் ஆர் யூ செளத் இண்டியன். நோ இண்டியன். அவர் வாய்விட்டு சிரித்துவிட்டு இல்லே மலையாளி தானே. இல்ல தமிழன். ஒ... தமிழா, அப்ப திருநெல்வேலியா. அதுவும் இல்ல தஞ்சாவூர். ஒங்க கலர பார்த்தா கேரளா பார்டர் மலையாளி மாதிரி தெரிஞ்சது. ஒ அப்படியா. திரி அவர்ஸ் டிராவல் பண்ணனும் ஏன் இறுக்கமா இருக்கீங்க, ரெண்டு ரவுண்டு பக்காடி போடுங்க பக்காவாயிடுவீங்க.
செல்லப்பா காதருகே வந்து ஃபிளைட்ல குடிக்கிறது எல்லாம் ஃப்ரிதான், நம்மகிட்ட அதுக்கும் சேர்த்துதான் பணத்த டிக்கெட்டோட சேர்த்து வாங்குறாங்க. அதே வேகத்தில் பக்காடியாவை அவன் கையில் திணிக்க செல்லப்பா வேண்டாம் என மறுக்கிறான். ஏன் குடிக்கமாட்டீகளா. இல்ல சென்னையில இருந்து நியூயார்க் போனப்போ ஒயினும், பக்காடியாவும் சாப்பிட்டேன், இப்ப வேற ஏதாவது.... ஓ அப்படியா... என்று கூறிக்கொண்டே ஜைரஸ் கிரிமுடன் கொஞ்சம் பிளாக் லேபில் கலந்து ரெண்டையும் மிக்ஸ் பண்ணிக் கொண்டே இதுக்கு பேரு காக்டெயில் என்று அவன் கையில திணிக்க அதை அவன் குடித்துக் கொண்டே உடல் சூடாக இருக்கம் கலைந்தவனாக உங்க பேரு? K.குரியன். முழுப்பேரும் குஞ்சன். நான் தான் எல்லாரும் கூப்பிட கூப்பிட குஞ்சன் குறுகி குஞ்சு ஆகிடப்போவுதுன்னு குரியன்னு மாத்தினேன். என் பேர் செல்லப்பா, அது சரி அறிமுகம் இல்லாத ஆளூகிட்ட இப்படி கேப்வுடாம கடலை போடுறீங்களே வெட்கமா இல்லையா?. நாங்க வெட்கப்பட்டா... ஒரு விஷயம் சொல்றேன் கேளுங்க அம்பது பேரு எவரஸ்ட் மேலே ஏறினாங்க கடைசியில அஞ்சு பேரு மேலே ஏறி போயிகிட்டு இருக்கும் போது நாலுபேறாள முடியல கடைசியில ஒருத்தன் தான் ஏறி இருக்கான். அவனுக்கு தாங்க முடியாத சந்தோஷம், தான் மட்டும் ஏறிட்டோம்னு. மலை உச்சியில இருந்து தம்புடிச்சுகிட்டு பலம் கொண்ட மட்டும் கத்துனான்.
கத்தி முடிச்ச பிறகு தொண்ட வத்தி... அந்த குளிர்ல ஒரு டீ குடிச்சா தேவலாம் என்று வாய்க்குள்ள முனு முனுத்தான் அவனுக்கு பின்னாடி இருந்து ஒரு சத்தம். சாயா, சாயா, சாயான்னு திரும்பி பாத்தா ஒரு மலையாளி சாயா கப்போட நின்னுகிட்டு இருந்தான். அப்படிதாங்க மலையாளி. எங்களுக்கு அறிமுகம் தேவையில்ல. எங்களோட வாயும் கையும் உள்ளவரை... சரி சிக்காக்கோவுக்கு இதுக்கு முன்னாடி போயிருக்கியா. செல்லப்பா இல்லை, என்று கூற சிக்காக்கோ பத்தி தெரியுமா? சிக்காக்கோ தெரியும். ஆனா அதப்பத்தி முழுசா தெரியாது. சரி சிக்காக்கோல தான் முதல் முதல்ல பைனான்ஸ் தொழில் உருவாச்சு தெரியுமா? செல்லப்பா முழிக்க அது மட்டுமில்ல,உலகத்தை உழுக்கிய ஹிரோஷிமா, நாகசாக்கி மேல போட்ட நியூக்ளியர் அனு குண்டு தயாரிச்சது சிக்காக்கோ பலகலைகழகம் தான் தெரியுமா, நாமெல்லாம் மே டேன்னு சொல்றோமே அது ரஷ்யாவுலயும், சீனாவுலயும் தோன்றுரதுக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னாடியே சிக்காக்கோவுல தொடங்கி புரட்சி உருவாகி ஒரு நாளைக்கு இவ்வளவு நேரம் தான் வேலை செய்வோம்ன்னு போராட்டம் தொடங்கி வெற்றியும் பெற்றாங்க, முதல் முதல்ல மாபியா கேங்க் ஸ்டார், கேளிக்கை விடுதின்னு உருவானது இங்கதான்.
இலவச ஹோட்டல் ஒன்னு இருந்துச்சு அத நடத்துனது வேற யாருமில்ல மாபியாவ உருவாக்கின கேங்க் ஸ்டார் ALCAPONE என்றவன். இவன் ஒரு பார் கேர்ள்ல கல்யாணம் பண்ணிக்கிட்டான். இவனுக்கு பல ஆயிரம் கோடி சொத்து இருந்துச்சு ஆனா இவன் பேருல ஒரு குழி சொத்துகூட கிடையாது. இவன் செய்த குற்றங்களுக்கு ஆதாரங்கள் இருந்தது அரிது. நம்மல்ல நெறையப்பேர் நாயகன் படம் காட்பாதர் காப்பின்னு நெனைப்பதுண்டு. ஆனா இன்றைய சினிமா கலைஞர்களுக்கு காட்பாதர் படத்த ஒரு முன்னோடியா நினைக்க காரணமா இருந்த காட்பாதர் ALCAPONE வாழ்க்கை தான். நம்ம மணிரத்தனமும் கொஞ்சம் வரதராசன் வாழ்க்கையை கலந்து கமல் கலக்கி இருப்பாரோன்னு தோணுது. மதுவின் அரை மயக்கத்தில் செல்லப்பா, மொத்த மொல்லமாரி முடிச்சவிக்கி தனத்துக்கு முன்னோடியான ஊருன்னு சொல்லு சேட்டா. அதே, எனக்கு ஒரு டவுட்டு உங்க கலர பாத்தா நீங்க மலையாளிதானே. அடச்சீ நான் தமிழன்யா... ரெண்டும் ஒன்னுதான். மலையாளமும், தமிழும் சமஸ்கிருதத்துல இருந்துதான் வந்துச்சு என்று சொல்லும்போது செல்லப்பா உறங்கிப்போனான். அரிதாவின் கம்பெனி மூடப்பட்டு தனக்கு கீழ் பணியாற்றிய தோழிகளுடன் அறையெடுத்து தங்கிக்கொண்டு அந்த இரவு நேரத்தில் தன் இன்னல்களை மறக்க மது அருந்திக்கொண்டு இருக்கும்போது அவள் தோழி முதலில் நாம் குடிப்பழக்கத்தை ஒரு ஆசைக்காக் அருந்துகிறோம் பிறகு நாளடைவில் அது இல்லாமல் நம்மால் இருக்க முடியவில்லை. மதுவை நாம் குடிக்கிறோமா? அல்லது மது நம்மளை குடிக்கிறதா? என்றாள்...
தொடரும்...
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.