வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 
     
     
     
   
யாவரும் கேளிர்
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் யாவரும் கேளிர் வாயில்

யாவரும் கேளிர் - 28

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

அதிகாலை நேரம். நியூஜெர்ஸி தெருவெங்கும் மக்கள் அவசர அவசரமாக ரயிலை பிடிக்கவும், பஸ்சை பிடிக்கவும் ஒடிக்கொண்டு இருக்கின்றனர். அவர்களில் பலபேர் அவசர சாப்பாடு, அவசர வேல, அவசர காதல், அவசர கல்யாணம், அவசர பிரிவு, என அதிவேகத்தில் வந்த துன்பத்தையும் ஏற்றுக்கொண்டு, இருபது வருஷம் வாழ வேண்டிய வாழ்வை ஆறு வருஷத்தில் வாழ்ந்து, கொண்டிருக்கும் நபர்கள் மத்தியில்.... அந்த சாலையை கடக்கும் போது இந்தியாவில் ஏதோ ஒரு பெரு நகரத்தில் உள்ள சாலையில் இருப்பது போல் உணர்வை தூண்டும். தெருவெங்கும் இந்திய மக்களின் நடமாட்டம். ஒரு கடையின் பெயர் வேலு ஹோட்டல், அதை தாண்டி அடுத்த கடையின் பெயர் ஆந்திரா மெஸ். அதையும் தாண்டி போனால் பஞ்சாபி தபா என திரும்பிய பக்கமெல்லாம் இந்திய வாசனை. நாம் அந்த தெருவில் நடக்கும் போது அமெரிக்காவுக்குள்ளேயே நாம் அமெரிக்காவை தேடவேண்டிய நிலைமை.

நம் கிராமங்களில் அதிகாலையில் உடல் நிலை சரியில்லை என்றாலும், வேலை என்றால் உத்வேகத்துடன் செல்லும் போது, நான் நாத்து பறிக்கப்போறேன் என மற்றவர்கேட்கும்படி கூறும் விவசாயி முகத்தில் புன்னகை பூ பூக்குமே, உழைத்து திரும்பும் போது களைப்பு அவனை அடைகாப்பது போல், அதிகாலையில் நியூஜெர்ஸி நகர சாலையில் வேலைக்கு போகும் அனைவரின் முகங்களிலும் ஆயுள்ரேகைகள் அறிய களைப்புடனும், பதபதப்புடனும் இன்று நம் வேலை போகுமோ? அல்லது நாளை நம் வேலை போகுமோ? நாம் சம்பாதிக்கும் பாதி தொகைக்கு மேல் வரி கட்ட வைத்துவிட்டனரே! என்ற வேதனையில் ஒவ்வொருவரும் வேலைக்கு செல்ல செல்ல அதிகாலை நடுபகலை நோக்கி நகரும் வேலையில் செல்லப்பாவும், சலீமும் சாலையில் நடக்க செல்லப்பா அநியாயமா செத்துப்போயிட்டாங்களேடா ஒரு குடும்பமே.... என்று சொல்ல அதை கேட்ட சலீம்.. அந்த ஒரு குடும்பம் மட்டுமில்லடா தினமும் பலபேர் செத்துகிட்டு இருக்காங்க, அதைவிட என்ன கொடுமைன்னா இந்தியாவுல இருந்து இங்க வந்து வேலை செய்றவங்களுக்கு வரி வேற கடுமையா இருக்குடா..

ஏன்டா அப்டி..

அப்பதான் நம்ம இந்தியாவில இருந்து இங்க யாரும் வேலைக்கு வரமாட்டாங்கன்னு செய்யுறாங்கடா..

செல்லப்பா. இது என்னடா கொடுமையா இருக்கு. ஏன்னா போறபோக்கப் பாத்தா அவெங்களுக்கே சோறு கெடைக்காம போயிடும்ங்ற பயம் அதான். இன்னைக்கு நாம சம்பாதிக்கிறதுல பாதிவரியா நம்மல பாதுகாக்குற ராணுவத்துக்கே பத்தமாட்டேங்குது. உலகத்தின் பொருளாதார வலிமையை ராணுவம் பெற்றுக்கொள்ள நாம் அனைவரும் மனவலிமையை இழந்து கொண்டு இருக்கிறோம். இது ஒரு முடிவில்லா ஆரம்பம் என, இந்தியாவின் உணவு வகைகள் அனைத்தும் சுடச்சுட கெடைக்கும் கடையில் நுழைந்த போது செல்லப்பாவிற்கு ஒரே ஆச்சரியம். வாங்கோ, வாங்கோ வணக்கம் என்று வாய் நிறைய அழைத்தார். அதைக்கண்ட செல்லப்பா மேலும் ஆச்சரியம். சலீம், டேய் அவர் சினிமாவுலதான் வில்லன் நிஜத்துல ரொம்ப நல்லவர் என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே இன்னைக்கி உங்களுக்கு என்னோட விருந்து என்ன வேணும்னாலும் ஆர்டர் பண்ணுங்க. செல்லப்பா அவரிடம் இந்தியாவில இருந்து இப்ப யாரும் உங்கள நடிக்க கூப்பிடுறது கெடையாதா. அப்ப அப்ப யாராவது கூப்பிடுவாங்க துக்கடா கேரக்டருக்கு.

போனு வரும்போதுயெல்லாம் நானும் இங்க பிசியா இருக்குறேன்னு வேண்டான்னு சொல்லிடுவேன். ஆனா எனக்கு மீண்டும் நடிக்க ஆசைதான். நல்ல கேரக்டரா இருந்தா நான் கைக்காசு செலவு பண்ணி இந்தியாவுக்கு போக ரெடி. ஆனா முதல் படத்துல இருந்து வில்லனா நடிச்சதால அதுவும் ஹீரோ படத்துல கொடுமையான இன்ஸ்பெக்டரா நடிச்சு அதுல பிறவிக் கலைஞன் என்னை இரும்பால அடிச்சு கொல்வாரே அத நா இப்ப பார்த்தாலும் பயமா இருக்கும். அது மாதிரியான கேரக்டரை ஜனங்க மறந்தாலும் சினிமாக்காரங்க மறக்க மாட்டேங்கிறாங்க. அதுமட்டுமில்லாம நாம பொறந்த உடனேயே இறக்கும் நாள் நம்மை துறத்துகின்றன, அதையும் தெறிந்து வாழ்கிறோம்யில்லையா. அந்த நாட்களின் உண்மையை விரும்புரதுநால போலியா நடிக்க விரும்பல, அதான் புடிச்ச இந்த வேலையை செய்றேன்.

அது கெடக்கட்டும் ஒங்களுக்கு என்ன சாப்பிடவேணும். சலீம் ருசியா சாப்பிட நீங்க என்ன கொடுத்தாலும் ஒகே சார். சலீமுக்கு முதல்ல சூடா இருக்கிற வடையை தயிர்ல போட்டுவை என்று கூறி அடுக்களையை நோக்கி சென்றார். செல்லப்பா, டேய் பிறவிக் கலைஞன் சார் கூட அஞ்சாறு படம் நடிச்சும், இன்னும் ஏழு அடியை தொட்டுகிட்டு ஹீரோவாகி இருக்கலாம். இல்ல அவருக்கு அவரே ஏதாவது ஸ்டார் பட்டம் வச்சிருந்திருக்கலாம். என்ன ஒன்னு அவருக்கு அவரே போஸ்டர் ஓட்ட வேண்டி இருந்திருக்கும். கொஞ்சம் யோசிச்சு இருந்தா அரசியலுக்கும் வந்திருக்கலாம். ஆனால் இதெல்லாம் விட்டுட்டு, ஆசானுபாகுவானா இருந்துகிட்டு இங்கே இந்த ஒட்டல்ல வேலை செய்யுறாரே என்றான்.

டேய், டேய் மெதுவா பேசுடா இது அவரோட ஒட்டல்டா. இங்க அவரும் அவர் பார்ட்னரும்தான் இந்த கடையோட ஒனரே. காய்கறி வாங்குறதுல இருந்து அரிசி, பருப்பு வரை அலசிப்பார்த்து வாங்கிட்டு வந்து அவுங்களேதான் சமைச்சு போடுவாங்க, என்ற போது கையில் மசாலா தோசையுடன் வந்தவர், சலீமுக்கும், செல்லப்பாவுக்கும் வைத்துவிட்டு, (ஹீரோ பட இன்ஸ்பெக்டர்), செல்லப்பாவிடம் தன் அருகில் உள்ள நபரை இவர் என் பார்ட்னர் பாகிஸ்தானி என்று அறிமுகப்படுத்த, அவரும் செல்லப்பாவுக்கு வணக்கம் செலுத்திவிட்டு நல்லா சாப்பிடுங்க என்று அழகிய தமிழில் சொல்லிவிட்டு அடுக்களை நோக்கி அடுத்த தோசையை திருப்பி போட சென்றுவிட்டார். செல்லப்பா சலீமிடம் என்னடா அதிர்ச்சியா இருக்கே என்றான்.

தினம் தினம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் குண்டு மழை பொழிஞ்சு நட்பு உடையும் போது இங்க என்னடான்னா நம்மாளும், பாகிஸ்தானியும் சேர்ந்து சமைக்கிறதுல இருந்து சந்தோஷமா சாப்பாடு பரிமாறுறாங்களேடா. இப்படி இந்தியாவும், பாகிஸ்தானும் இருந்தா எப்படி இருக்கும் என்றான். சலீம் என்ன அரசியல் வழியா மனுஷன மனுஷன் கொல்ல வழிதேடாம எல்லாரும் சாதிபேதமில்லாம சமமா சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருப்பாங்க, என்ற போது பாகிஸ்தானி வந்து சலீமிடம் மட்டன், சிக்கன் ஏதாவது வேணுமா? நான் ப்யூர் வெஜிடேரியன் சார். உங்களத்தான் தெரியுமே அவருக்கு என்றபோது செல்லப்பா மட்டன் என்றான். பாகிஸ்தானி அங்கிருந்து நகர்ந்தவுடன் சலீமை பார்த்து ஆச்சரியமாக செல்லப்பா, நீ நான்வெஜ் சாப்டமாட்டியாட? என்ற போது ஆமாண்டா... சலீமுக்குள்ள சாமியாரா ஆச்சரியமா இருக்கேடா சலீம்.. இல்லடா நாம கோழி ஆடு, மாடுன்னு ஆரம்பிச்சு இப்ப மனுஷன் வரை வந்துட்டோம்டா. இதுக்கு மேலே என்ன இருக்கு. அதான் கொஞ்சமாவது மரக்கறிகள சாப்பிட்டு முரட்டு குணங்கள் மறந்து மனிதநேயத்தை வளர்த்துக்குவோமேன்னுதான்.

சரிடா நான் நாளைக்கு எத்தன மணிக்குடா வேலைக்கு சேரணும். இன்னைக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த ஊரவிட்டு நீ காலி பண்ணனும். இந்தநேரத்துல நியூயார்க்ல வேல கெடைக்கிறது குதிர கொம்பா இருக்கு. ஆல்ரெடி வேலை செஞ்சுகிட்டு இருக்கிறவங்க எல்லாம் எந்த நேரத்துல அவெங்க வேலை போயிடுமோன்னு உயிரை கையில புடிச்சுக்கிட்டு இருக்காங்க. சாப்பிட்டுட்டு உடனே மூட்ட முடிச்ச கட்டிக்கிட்டு உடனே கெளம்பு. அதை கேட்ட செல்லப்பா உடம்பு கதகதத்து வேர்வைசொட்ட பதட்டத்துடன் எங்கடா போறது என்றான்.

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.