திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார்.
திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.
"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர்.
யாவரும் கேளிர்
யாவரும் கேளிர் ஆசிரியர் பற்றி
------------------------
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்
கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்
ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:
2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.
Twin tower உடைந்த பிறகு அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லீம் மதத்தை சார்ந்தவர்களை மிகவும் கண்காணிக்கபட்டு. அவர்கள்பற்றியும் அவர்கள் வீட்டிற்கு ஆசிய நாடுகளில் இருந்து யார் வந்தாலும் மிகவும் துரிதமாகவும் சில நேரங்களில் கடுமையாகவும் விசாரிக்கப்படுகிறனர். அப்படித்தான் சலீம் வீட்டிற்கு வந்த செல்லப்பாவும் விசாரிக்கப்பட்டான். அவன் எதற்காக அமெரிக்கா வந்துள்ளான், அவனைப் பற்றிய விபரம் முழுமையாக சரியாக உள்ளதா என்று விசாரித்துவிட்டு சென்றபிறகு செல்லப்பா நம்மல விசாரணைங்கற பேர்ல நோண்டி நொங்கு எடுத்துட்டாங்களேடா, நாம ஒரு தப்பும் பண்ணலயேடா.
சலீம்“பண்ணியிருக்கோம்”.அதற்கு செல்லப்பா எப்படா... நாம இந்தியாவுல இருந்து வந்து இருக்கோம்,அதுவும் நா இஸ்லாமியனா வேற இருக்கேன். இதுல என்னடா தப்பு. எங்கள்ல சில பேர் செய்ற தப்புங்களால நாங்களும் சேர்ந்து வலியை சுமக்குறோம். நீங்க மட்டுமில்லடா நாம எல்லோரும்னு சொல்லு. சரிடா “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று கூறி சலீமும், செல்லப்பாவும் விடியல் பொழுதில் மஞ்சத்தில் உறக்கம்விளைய, கனாக்களுடன் இளைப்பாரிக் கொண்டு இருந்தனர். அரிதா... அரிதாவின் பூர்வீகம் கேரளாவும் தமிழ்நாடும் உராய்ந்து கொள்ளும் திருநெல்வேலி சதுக்கத்தில் உள்ள கேரள வாசனையில் பிறந்த தமிழ் குடும்பம். எப்போதும் வளமோடு இருக்கும் கிராமத்தில் வறுமையோடு கல்வியை மட்டும் மூலதனமாக கொண்டு ஊர் மக்கள் பெருமைபேசும், பெருமைமிகு கருமை நிறம் கொண்ட வெள்ளைச்சாமி தேவர். திருநெல்வேலியில் இருந்து அமெரிக்காவில் உள்ள சிக்காக்கோவிற்கு நூல் ஏற்றுமதி செய்து நூலிழையில் கிடைத்த வாழ்க்கையை பேரிழையும் பெரும் இழப்பும் ஏற்படாமல் சொர்ப்ப லாபத்தில் சுகத்தை தேடாமல் லாபத்தை முதலீடாக்கி அவர் மட்டுமல்லாமல் அவருடன் பிறந்த இரு தம்பிகளையும் சேர்த்து தன் வாழ்க்கையை வளமாக்கி நூல் ஏற்றுமதி மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பமும் ஏற்றுமதியாகி சிக்காகோவில் செட்லாகி வெள்ளைச்சாமி என்ற பெயரை white god garments pvt Ltd என்ற பெயரில் கம்பெனி தொடங்கி விஞ்ஞான யுகத்தில் தன் ஒரே மகள் அரிதாவை தன் கம்பெனிக்கு மேலாளராக நியமித்து வாழ்க்கையில் வளமோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் வெள்ளைச்சாமி தேவரை தவிர மற்ற இருவருக்குமே குழந்தையின்றி வரம் தேடித்தேடி தவம் கிடக்க கோயில்குளம் என்றபெயரில் குட்டிசுவர்களை சுற்றித்திரிந்து தங்கள் சந்தோஷங்களை இழக்காமல் முழுகவனமும் தொழிலில் செலுத்தி அண்ணண் மகளை தங்கள் மகளாக பாவித்து மும்மூர்த்திகளும் ஒற்றுமையோடு சீரும் சிறப்போடும் சிக்காக்கோவில் சிங்காரமாக வாழ்ந்து கொண்டு இருந்த போது அமெரிக்காவில் எந்த இணைய தளத்தை தொரந்தாலும், அங்காடிகள் தொடங்கி ஆடைகள் வரை, மானிடர்கள் தாங்கள் போதும் என்ற சொல்லையும், திருப்தி என்ற நிவர்த்தியையும், ஒரு சில நிமிடங்கள் மட்டுமே உணர வைக்கும். நிரம்பியவுடன் போதும் என்று சொல்லும் வயிறும், வயிற்றில் இருந்து நம் ஒரு விரல்கடை அளவு தள்ளியிருக்கும், நிரம்பியுடன் ஒரு சில நிமிடங்களில் வெற்றிடமாக்கி திருப்தி என்று சொல்லத்தோன்றும் காமம், திரும்பிய திசைகள் எல்லாம் முதலிடம் வகித்த அமெரிக்காவில் அனைத்து நாடுகளுக்கும் அண்ணணாக வாழ்ந்து கொண்டு இருந்து.
அண்டை நாடுகளான தம்பிமார்கள் சுயலாபத்துக்காக உள்நாட்டு கலவரத்தை தொடங்கி நாளடைவில் தீவிரமாகி, தீவிரவாதியானவர்களை சில நேரங்களில் ஊக்கப்படுத்தியும் பல நேரங்களில் ரசித்துக்கொண்டும் இருந்தபோது, தங்கள் ரசனை மிக்கவர்களே.. விமானம் மூலமாக வியாபார சந்தையான twin tower-யை உடைத்த பிறகு கற்பனையில் காட்சி தரும் ஒரு சொல் கடவுள், என்று எட்டுத்திக்கும் முதலிடம் வகிக்க, மனிதன் நிழல் கூட சோசியத்தை நாடும் அற்பம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், உடைந்து போனது twin tower மட்டுமல்ல? பெரும்பாலான நம் இந்திய மக்களின் பொருளாதாரமும், தொழிலும், உடைந்து போயின. அதன் இழப்பீடு இன்னும் இறுதி பெறாத வேளையில், அரிதாவின் கம்பெனியால் லாபத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு நஷ்டம் துரத்தும் வேகத்தை கனிக்க, தடுக்க முடியாமல் தவித்த வேளையில் வெள்ளைச்சாமி மிகுந்த வேதனை அடைந்து பிறகு ஒரு தீர்க்கமான முடிவுடன் தன் தம்பிமார்கள் குடும்பம் தன் குடும்பம் என அனைவரையும் ஒரு சேர அவரின் பங்களாவின் நடுவில் அனைவரும் அமர்ந்து இருக்க, வெள்ளைச்சாமி அருகே மனைவி அமர்ந்து இருக்க, அவர் எதிரே தம்பிகள் மற்றும் அவர்கள் மனைவிமார்கள் அமர்ந்து இருக்க, வெள்ளைச்சாமிக்கு பின்னாள் அரிதா நின்று கொண்டு இருக்க, அனைவரும் ஒன்றாக உண்டு களித்த வேளையில் வெள்ளையச்சாமி எல்லாரும் இங்க தான் இருக்கோமா என்ற போது, வெள்ளைச்சாமியின் மனைவி அத்தானுக்கு போதை அதிகமாயிடுச்சு, என்ற வேலையில் தம்பிமனைவி வயசுந்தான், என்ற போது அனைவரும் சிரித்தனர். அதைப்பார்த்த வெள்ளைச்சாமியும் வாய்விட்டு சிரித்தபோது அரிதாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. twin tower உடைந்த அன்றையிலிருந்து இன்று வரை சிரிக்காதவர் சிரிக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டப்போ? அவள் அதிர்ந்து போனால். கண் இமைக்கும் நேரத்தில் சித்தப்பாக்கள், சித்திகள், அம்மா அனைவரையும் தன் தந்தை சரமாரியாக சுட்டுக்கொன்று தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரபல தொழிலதிபர் வெள்ளைச்சாமி, கொலையும் தற்கொலையும் குழைந்த செய்தி உலகம் முழுக்க காற்றாக பரவி நியுஜெர்சியில் சலீமும் செல்லப்பாவும் வசித்த வீட்டின் கதவின் ஒட்டை வழியாக ஊடுருவியது செய்தித்தாள்களாக...........
தொடரும்...
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.