வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 
     
     
     
   
யாவரும் கேளிர்
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் யாவரும் கேளிர் வாயில்

யாவரும் கேளிர் - 26

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

கத்த கத்த ராகம், முக்க முக்க ரோகம் பிறந்த இடம், பாடகர்கள் தொடங்கி பல கவிஞர்கள் கண்ட களம், முற்றும் துறந்து முனிவராகியவர் முதல் தாமஸ் ஆல்வா எடிஷன் வரை தங்கள் கற்பனையின் விருட்சகம் விளைந்த இடம். வீட்டின் அழகை தன் அழகால் காட்டி கொடுக்கும் கழிவறை. தடுக்கி விழுந்து இறந்தவர்களால் கழிவறை கல்லறையானதும் உண்டு. மானிடர்கள் முழுமையாக சுதந்திரம் பெற்றுக்கொள்ளும் முடிவில்லா கற்பனையின் கடல், துயரத்தை போக்கும் தூர் வாரி, காதலர்கள் தங்களை கலவாடிக்கொள்ள காலம் காலமாக தேர்ந்தெடுக்கும் பொக்கிஷம், மனைவிக்கு அறியாமல் கணவனும் கணவனுக்கு அறியாமல் மனைவியும் கள்ளக் கணக்கு பார்க்க குருந்தகடு, நினைவை அல்லது கனவை கற்பனையாக்கி எண்ணங்களை தின்னமாக்கி ஏட்டில் பதியும் இருண்ட அறை. துயரத்தை நான்கு சுவற்றுக்குள் அழுது துரத்தும் தெருக்கோடி, சுய இன்பம் பெறும் சொர்க்க வாசல்.

ஆதலால் பல கற்பழிப்புகளை தடுத்த வழக்காடுமன்றம் கழிவறை. கழிவறையில்அவனும் புதிய அவதாரமாக தரித்தான். அங்கே அவனை அறியாமல் குறுகிய நீர்வீழ்ச்சி கொட்டிய அருவியால் அவன் நண்பன் சலீம் இருந்த கட்டடம் மட்டுமல்ல அதன் கீழே உள்ள கட்டடமும் நனைந்து கொண்டு இருந்ததை அந்த நடு சாமத்துலயும் கீழே இருந்தவர்கள் வழக்காக்கி வந்துள்ளது போலீஸ். அங்கே சலீம் போலீஸிடம் அவன் என் நண்பன் இன்றுதான் சென்னையில் இருந்து வந்துள்ளான். அவன் தண்ணீரின் தரம் அறியாமல் நடந்துவிட்டான் என்று கூறி, மன்னிப்பு கேட்ட போது அவன் உணர்ந்தான் தன் தவறை. போலீசும் இது போல் இனி நடக்காமல் பார்த்துக் கொள்ளவும் என்று கூறி சென்றவுடன் குளித்தும், அக்டோபர் மாதக் குளிரிலும், வெக்கையுடன் விசாலமான அறையில் அடைக்கப்பட்டவன் போல் சோபாவில் அமர்ந்து இருந்தான் செல்லப்பா. அதற்குள் அவனின் வெப்பத்தை தணிக்க மிதமான வெப்பத்துடன் பிளாக் காபி இட்டு அதை செல்லப்பாவின் கையில் திணித்துவிட்டு ஊம்பிகுடித்துக் கொண்டே இங்கேயெல்லாம் குடிக்கிற, குளிக்கிறதுக்கும் நாங்க உபயோகிக்கும் எல்லா தண்ணியுமே கடல் நீரை குடிநீரா மாற்றிதான் உபயோகிக்றோம்.

அதான் நீ குளிக்கும் போது தண்ணீர் கசிந்து உனக்கு தெரியாம நம்ம பெட்ரூம் வழியா அதான் இங்க எல்லாம் மரத்தாளான வீடுங்க தானே அதன் இடையில் கசிந்து நமக்கு கீழே தூங்குறவங்க மேலே மழையா பொழிஞ்சு இருக்கு, அதப்பாத்துட்டு அவுங்க கம்ளைண்ட் கொடுத்ததால்தான் போலீஸ் வந்தது. அது பரவாயில்ல நாளைக்கு வீட்டுக்காரன் எவ்வளவு டேமேஜ் கிளைம் பண்ணப்போறானோ. அதை கேட்ட செல்லப்பா சாரி சலீம்....ம்...ம்... சாரி சொன்னா சரியாயிடுமா? சாரி சொல்லுறத விட்டுட்டு இனிமே சாரிய மறக்க கத்துக்க. தான் தவறு செய்ததை நினைத்து வருந்தும் செல்லப்பாவை பார்த்து சிரிடா, சிரிக்கவும் கத்துக்க அப்பதான் வருத்தமெல்லாம் வந்த வேகத்துலயே ஓடிப்போகும். சூடா கொடுத்த காப்பியை ஏன்டா ஆர வச்சுக்குகிட்டு இருக்கே.... குடிச்சுட்டு படுத்து தூங்கு காலையில பாத்துக்கலாம் என்று கூறி அவனை படுக்கச் சொன்னான்.

செல்லப்பாவின் களைப்பு அவனை நிலை சாயவைத்தது. அவன் படுத்து கண்கள் விழித்திருக்க இமைகளால் இருக மூடிக்கொண்ட போது இருட்டு வெளிச்சம் அறியப்பட்டு கண்கள் உறங்க மறுத்த வேலையில் சிதறிய நினைவுகளால் சிறிய சந்தோஷ வேலையில் சிந்திய தண்ணீருக்கு இங்கே எவ்வளவு அடக்கு முறை என்று எண்ணியபோது சமஸ்கிருத சாம்ராஜ்யமான கேரளாவும், வரலாற்று சுவடுகளால் நமக்கு வழித்தடங்களாக காட்சிதரும் கர்நாடகாவும், காவிய களமான தமிழ்நாடும், பினக்கு இல்லா நட்புடன் வாழ்ந்தவர்கள் இன்று எனக்கு சொந்தம் உனக்கு இல்லை என்று தண்ணீரால் முரன்டுபிடிக்கிறார்களே? இது இப்படியே நீடித்தால் இனி வருங்காலங்களில் கலவரங்களும் கொலை கொள்ளை வழக்குகள் இந்த தண்ணீருக்குதான் நடக்கப்போகுதோ? என்று எண்ணிய போது அவனை அறியாமல் அவன் நண்பன் சலீம் கீழே கொட்டியிருந்த தண்ணீரை துடைத்துக் கொண்டு இருந்த சத்தம் கேட்டு அவன் விழித்து படுக்கையை விட்டு எழுந்தான்.

அதை கண்ட சலீம் நீ தூங்கிட்டேன்னு நெனைச்சுதான் நான் தொடச்சுகிட்டு இருக்கேன், நீ என்னடான்னா முழிச்சுக்கிட்டயே. நாம புதுசு ஒரு இடத்துக்கு போனோம்னா இது மாதிரி ஏதாவது தப்பு பண்ணுறது வழக்கம்டா. அதகேட்ட செல்லப்பா அப்ப நீயும் ஏதாவது பண்ணுனியா. ஆமாம் என்று விழுந்து விழுந்து சிரிச்சான். டேய் எனக்கு சொல்லிட்டு சிரிடா நானும் சிரிக்கிறேன். சரி, சொல்ரேன் கேளு நான் புதுசா இங்க வந்தப்போ பக்கத்து வீட்டுல சிங்கபூர் தமிழ் ஆண்ட்டி ஒருத்தங்க இருந்தாங்க. சாப்பாடு ஒத்து வராம அவெங்கதான் அப்ப அப்ப இட்லி, வடை, சாம்பார்ன்னு கொடுப்பாங்க எனக்கு, ஒரு நா அவுங்க வீட்டுக்கு காலையில எப்பவும் போறதவிட கொஞ்சம் சீக்கிரமாவே அங்க போனேன். டைனிங் டேபிள்ள இருந்த டிபன் எடுத்த போது அங்கே எனக்கு எதிரில் இருந்த கண்ணாடிய எதேச்சையா பாத்தேன். அதுக்குள்ள நிர்வானத்தோட அழகான ஒரு சிற்பத்தைக் கண்டேன். ஆ..கா..அமெரிக்காவுல அழகான பெண்சிற்பமா..?என்று அதுகிட்ட நெருங்கிய போது அது இந்த பக்கம் அந்த பக்கமா மூவ் ஆச்சு அதை நான் உத்துபாத்தப்.....போ...? எனக்கு தூக்கி வாரிபோட்டுச்சு. அதை பாத்த உடனே அவுங்க வீட்ட விட்டு ஒடியாந்து வெளியில நின்னுகிட்டு பாத்துட்டே....னே... பாத்துட்டே....னே, என்று ரஜினி பெணாத்துவாரே அதுபோல பெணாத்தியபோது என் பின்னால இருந்து ஒரு கை என் வாயை இருக்கி பொத்தியது. திரும்பி பாத்தா அந்த ஆண்ட்டி என் முன்னால வந்து துறந்த வீட்டுல நாய் பூந்தமாதிரி கதவதட்டாம உள்ள வந்துட்டு என்னத்தபாத்த.....? ஊருஒலகத்துல இல்லாதது என்றார்.

நான் உங்களன்னு சொன்னப்போ..! இன்னொருவாட்டி பாக்குறியான்னாங்க, கண்ணமூடிக்கிட்டு புடிச்சேன்பாரு ஒட்டம், அதை கேட்ட செல்லப்பாவும் சிரிக்க பிறகு ஏய் சலீம் இன்னமும் அந்த ஆண்ட்டி பக்கத்துவீட்டுல இருக்காங்களா? ஏன் நீயும் அவெங்கள பாக்கணுமா? இல்ல சும்மா கேட்டேன், நானும் சும்மாதான் உன்ன சிரிக்க வைக்க நான் விட்ட கதை அவ்வளவுதான். இருவரும் சிரித்துக்கொண்டு இருக்கும்போது செல்லப்பா ஒனக்கு பெரிய மனசுடா. அதைகேட்ட சலீம், இல்லடா நமக்கு தெரிஞ்சு யாரும் வருந்த கூடாது... என்ற போது காலிங் பெல் சவுண்ட், யார்ரா இந்த நேரத்துல பெல் அடிக்கிறாங்க... என்றான் செல்லப்பா. அய்யோ போச்சுடா இன்னைக்கு தூங்குனாப்புல தான். என்னடா சொல்றே. சரி ஏங்கூட வா ஒங்கிட்ட யார் என்ன கேட்டாலும் பொய் சொல்லாம உண்மையை மட்டும் சொல்லு என்று கூறிக்கொண்டே கதவை திறந்தான். வந்தவர்கள். அமெரிக்காவின் புலன் ஆய்வுத்துறையினர் என்று அறிந்தான்.....

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.