வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 
     
     
     
   
யாவரும் கேளிர்
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் யாவரும் கேளிர் வாயில்

யாவரும் கேளிர் - 13

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

மணியக்காரர் படுத்திருக்கும் மாட்டுக்கொட்டகையில் மாடுகள் அவிழ்க்கப்பட்டு மணியக்காரரின் கழிவைமட்டும் ஒதுக்கிவிட்டு, மாட்டுச்சாணத்தை அள்ளிக்கொண்டு இருக்கிறாள் வேலாயி கிழவி. அப்போது மணியக்கார தாத்தா அவரின் பலம் கொண்டமட்டும் சத்தமாக ஏப்பம் விடுகிறார். வேலாயி கிழவி சாணத்தை அள்ளிக்கொண்டே, “இந்த பொட்டக்கெழவன் செத்து தொலைக்கமாட்டாங்கிறானே... கிடா எருமையாட்டம் என்னமா கணைக்கிறான் பாரு...”மணியக்காரர் சற்று வாயைத் திறந்து மூடுவதால், அவரிடமிருந்து சத்தம் ஏதும் வராததால் தான் அவரை திட்டியது கேட்டுவிட்டதோ என்று எண்ணி,” என்ன மணியார்ர ஒம்மவளுவ காப்பித்தண்ணி ஏதும் குடுத்தாளுவளா?” என்று கேட்க அதற்கு அவரிடமிருந்து பதில் ஏதும் வராததால் மீண்டும் “ஏங்கறேன் ஒங்களத்தான்” என்றாள். அப்போதும் அவரிடமிருந்து சத்தம் வரவில்லை. ஆனால் அவர் படுத்து இருக்கும் கயிற்றுக்கட்டிலின் நடுவே அவரின் மலமும், ஜலமும் தரையில் கொட்டுகிறது.

அதைப்பார்த்த வேலாயி கிழவி மேலும் எரிச்சலுடன், “ஜடம்... ஜடம்...நான் கூப்புடறதும் அந்த செவுட்டுக்காதுல கேக்கல. அதுக்குபோறதும் அதுக்குதெரியல” என சொல்லிக்கொண்டே மணியக்காரர் அருகில் சென்றவள் அவரைப் பார்த்து “ அய்யய்யோ ராஜா மணியார்ரு போயிட்டார்ம்மா...” என்று கூச்சலிட, அங்கே அவரின் மகள்கள் ஒடிவர, ஒருத்தி மட்டும் வேலாயி கிழவியின் வாயைப் பொத்துகிறாள்.பின்பு மணியக்காரர் கிடந்த மாட்டுக்கொட்டகை கழுவப்பட்டு, அவரை மறைத்திருந்த கோணியை அவிழ்த்து, பக்கத்திலுள்ள பாழடைந்த கிணற்றில் போட்டுவிட்டு,அவரை கழுவி, பட்டுவேட்டியால் போர்த்தி நடுவீட்டில் வைக்கப்படுகிறார். ஏற்கனவே இறந்துவிடுவார் என வாங்கி வைத்திருந்த பன்னீர் பாட்டிலை உடைத்து அவரின் வாயில் ஊற்றி, வெத்திலபாக்கை வாயில் திணித்து, வெள்ளைத்துணியால் வாயை இருக்கிக் கட்டி (இறந்தவர்களின் வாயில் பன்னீர் ஊற்றுவது வாசனைக்காக அல்ல, அய்ம்புலன்கள் வழியே விஷக்கிருமிகள் பரவாமல் இருக்கவும், வாயில் வெத்திலப்பாக்கு வைப்பதும் அப்படியே.

வெத்திலை மிகச்சிறந்த கிருமிநாசினி என்பதை கிராம மக்கள் நன்றாக தெரிந்து வைத்திருப்பதாலும்தான். இழவு வீட்டிற்கு சென்று வருபவர்கள் தான் உடுத்திய உடைகளை துவைத்தும், குளிப்பதும் கிருமிகள் பரவாமல் தடுக்கும் சுகாதாரத்திற்காகவும் தான் என்பதை நாம் அறிவோம்.)

ஒத்த ரூபா காசு ஒன்றை தாத்தாவின் நெற்றியில் ஒட்டிவிட்டு, மூன்று மகள்களும் ஊரே கேட்கிறமாதிரி, “என்னப் பெத்த ராஜா,,,,,ஜா,, எங்கள இப்படி நட்டாத்தில வுட்டுட்டுப் போயிட்டயே”யே ,, என்று ஒப்பாரி நாடகத்தில் , ஊர்மக்களும்சேர்ந்தனர், ஒருபக்கம் கரகாட்டம்,மறுபக்கம் அங்கே ஒரமாக சீட்டாட்டம், இன்னொரு பக்கம் ஆரானின் திடீர் சாராயக்கடை என மணியக்காரரின் வீடு அல்லோலப்படிகிறது. செல்லப்பாவும் அங்கு வந்துவிட்டான். அவன் சாரதாவிடம் “ஏம்மா அவர் செத்தப்பிறகு இவ்வளவு செலவு பண்றாங்களே அவர் உயிரோடு இருக்கும்போது ஒரு நல்ல ஆஸ்பத்திரியில் சேர்த்து கவனமா பாத்திருந்தா இன்னும் கொஞ்சகாலம் எல்லாத்துக்கும் உதவியா இருந்திருப்பாரில்ல? “ இதைக்கேட்ட சாரதா, “ டேய் வாய மூடடா... அந்த மனுசன் உசுரோட இருந்து இவங்ககிட்ட அவஸ்த்தப்படறதவிட போய்ச்சேந்ததே பரவாயில்ல...” ஊர்ப்பெண்கள் எல்லோரும் ஒன்றுகூடி ஒப்பாரிவைத்து அழுகின்றனர்.

வந்தவங்க யாருமே செத்துப்போன மணியக்காரருக்காக அழவில்லை. அவரவர் குடும்பப் பிரச்சனைகளை சொல்லி அழவே இதுபோன்ற அநேக மரணங்கள் இருக்கின்றன மனிதாபிமானம் அற்றுப்போய். பெரும்பாலும் கிராமங்களில் வயதானவர்கள் இறந்துவிட்டால் பலபெண்கள் தங்கள் வீடுகளில் நடக்கும் வருத்தமான நிகழ்வுகளை வெளிப்படுத்தவே இதுபோன்ற இறந்தவீடுகள் இருப்பது வழக்கமான ஒன்று.

எல்லோரும் அழுது அழுது ஒய்ந்தபின் ஒருத்திமட்டும் ஆத்திரத்தை அடக்க முடியாமல் ஒவென கதறியழுகிறாள். .... அதை பார்த்த செல்லப்பா சாரதாவிடம் “ தாத்தாமேலே அவ்வளவு பாசமா அம்மா அவங்களுக்கு.” “அவ தாத்தாவுக்குகாக அழுலடா ஒடிப்போன அவபுருஷன நெனைச்சு அழுறா “ஈ எறும்பு தீண்டாமல் ஈன்றெடுத்த மூன்று மகள்களையும் பொத்தி பொத்தி வளர்த்த ஒரு கிழம், மணியக்காரரின் பிணம், இன்று ஒட்டிய வயிறோடும், குழிவிழுந்த குருட்டுக் கண்களோடும் உடைந்தும் தேய்ந்துபோன எழும்புகளோடும் சாம்பலாய்ப் போனது. (இதற்குத்தான் காடு வாவா வீடு போபோ என்றனரோ ) காடுபோய் சேர்ந்ததே கட்டை எனக் காத்துக்கிடந்த உறவுகள் அவசர அவசரமாய் அவர் வாழ்ந்த இடத்தை கழுவி அள்ளி அள்ளிக் கொட்டி நிரப்புகின்றனர் தங்கள் வயிறுகளை. விலா எழும்புகள் தெரிய மரித்துப்போன ஒர் உயிருக்கு ஈமச்சடங்கு என்ற நாமம் சூட்டி விலா புடைக்க தின்கின்றனர்.

அதுமட்டுமா அதோ அங்கே வந்து குவிந்த கோடித்துணிகளை ஒடோடி பிரித்துக்கொள்கிறார்கள் அவர் ஆசையாய் பெற்றெடுத்த அன்புமகள்கள் மூவரும். கோடிகளைப் பிரித்துகொள்வதில்கூட விலைகளை தெரிந்துக்கொள்ள, வந்து விழுந்த வேட்டிச்சேலைகளில் தொங்கும் வில்லைகளை தேடுகின்றன , என எண்ணிப்பார்க்கையில் விம்மித் தொலைக்கிறது இதயம். மரணங்களில்கூட மாலைகள் போடுகிற வழக்கம் இந்த நம்மண்ணில் தொடரும் கலாச்சாரம். மணியக்காரரைத் தூக்கிப் போனபிறகு கூட்டிப்பெருக்கிய குப்பைகளில் குவிந்துக்கிடந்தன சாமந்தியும், மல்லிகையும், வாடாமல்லியும், மரிக்கொழுந்தும், ரோசாவும், செண்பகமும் ஒன்றுக்கும் உதவாமல், இங்கே அரசியல்வாதிகளுக்கும், ஈமச்சடங்குகள்க்கும் விழுகின்ற பூமாலைகளில் எத்தனை மருத்துவக்குணங்கள்.

மருந்தாய் இருந்து மனிதனைக் காப்பாற்றும் மகத்துவம் பெற்ற பூக்களை கூட்டி அள்ளி கொட்டப்படுகின்றன குப்பைகளில். எரிந்த மனிதனின் உடல்போல் அதுவும் மக்கிப்போகிறது. உயிருள்ள எதையும் உருவாக்கத் தெரியாதவன் மனிதன், அழிக்கமட்டுமே ஆயிரம் யுக்திகளை கற்று வைத்திருக்கிறான், கடைசியில் அவனையும் அழித்துக்கொள்கிறான். என்னே மானுட இழிகுணம்! மிதிபட்டு வீழ்வதா? ....

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.