வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி

கவிஞர் விக்கிரமாதித்தனுக்கு கவிஞர் சமயவேல் எழுதிய கடிதங்கள். 

 

 

 

 

 
     
     
     
   
கரிசக் காட்டிலிருந்து
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


மேலும் ஒளிப்படங்களைக் காண:

விக்ரமாதித்தன் நம்பி

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS கரிசக் காட்டிலிருந்து தொடர்கள் வாயில்


விகரமாதித்தனுக்கு சமயவேல் கடிதங்கள் - 1


சமயவேல்.  

அன்பிற்கினிய நம்பிக்கு,

இன்னும் ஒரு வாரத்தில் அங்கு வரலாம் என்று இருக்கிறேன். கோர்ட் பிரச்சனை காரணமாக ஒரு முடிவும் எடுக்க முடியாமல் நாட்கள் கழிந்து விட்டன. அந்தப் பிரச்சனை இன்னும் ஒரு வாரத்திற்குள் எப்படியும் முடிந்து விடும்.

நண்பர்கள், அப்பா, பாட்டி அனைவரும் நலம். வீட்டில் அனைவருக்கும் என் அன்பைச் சொல்லுங்கள்.

அன்புடன்

சமயவேல்.

வெம்பூர்
19/11/79

அன்பிற்கினிய நம்பிக்கு.

உங்கள் கடிதம் கிடைத்தது. ஒரு தகவலுக்காக நீங்கள் தெரிவித்திருக்கும் விஷயம் எல்லோரும் எதிர்பார்த்தது தான். ஆனால் எத்தனை நாளைக்குத் தான் இப்படி ஓடும் என்று நினைக்கும் போது தன் வருத்தமாக இருக்கிறது.

கிராமங்களை சமூகம் பார்வையில் ஆராய்வது நிஜமாகவேதான் எழுதியிருக்கிறீர்களா என்று தெரியவில்லை. தமிழ் எக்ஸ்ட்ரா க்களின் தார்மீக ஆதரவைப் பெறுவது என்றெல்லாம் எழுதியிருந்தது உங்களது வழக்கமான கேலியா என்கிற சந்தேகத்தைத் தோற்றுவித்து விட்டது.

உங்கள் திட்டம் நல்ல திட்டம்தான். எனக்குக் கூட இந்த ஆசையெல்லாம் இருந்திருக்கிறது. ஆனால் நடைமுறை சாத்யம் பற்றி யோசிக்க வேண்டாமா?

பார்சனல் ஆக நமக்கு நாம் ஒரு தளம் ஏற்படுத்திக் கொள்ளாதவரை நம்மால் எதையும் உருப்படி யாகச் செய்ய முடியாது. எதைச் செய்தாலும் அது நம்மை ஒரு தாங்கிக் கொள்ள முடியாத அயர்வுக்கும் சோர்வுக்கும் கொண்டுதான் விடும். நாம் எழுதி முடியாமல் போனது கூட இதனால் தான்.

இதுவும் வேண்டும் அதுவும் வேண்டும் என்கிற தான் இந்த காலகட்டத்தில் சாத்யம். மீறி களத்தில் குதிக்குப் போவது அடுத்த சந்நதி தான்.

இங்கே மழை இன்னும் விட்டபாடில்லை. ஊருக்கு வந்ததிலிருந்து எங்கும் போகவில்லை. எனக்கு டைபாய்டு வந்ததைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். இப்பொழுது தான் ஒரளவு எழுந்து நடமாட முடிந்திருக்கிறது.

ஜோதியைக் கூட இன்னும் பார்க்கவில்லை. நாளைக்குத்தான் போகலாமென்றிருக்கிறேன்.

அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை வாக்கில் அங்கு வர முயற்சிக்கிறேன்.

குழந்தை எப்படி இருக்கிறான்.

குழந்தைகளைப் பார்த்தாவது நாம் வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. வேறு வழியே இல்லை.

பி.கு.

இன்னொரு சிறந்த திட்டம் ஒன்று சொல்கிறேன். அது முடியுமா என்று யோசியுங்கள்.

நமது சமகாலத்திய மணி, நம்பி, ஜயதேவன் போன்ற தமிழ் இளைஞர்களின் சுய, பொது, இலக்கிய, அரசியல் வாழ்க்கையைப் பற்றி ஒரு புத்தக அளவில் செய்ய முடியுமா.

இதைச் சீக்கிரமாகவும் செலவின்றியும் செய்து முடிக்க முடியுமென நம்புகிறேன்.

அன்பிற்குரிய நம்பிக்கு,

உங்கள் கடிதம் பிடைத்தது. என் தாமதம் தெரிந்தது தான். சோம்பேறித் தனம் என்னுடையது அல்ல. காய்தம் வாங்கக் கூட காசில்லாத வீட்டு நிலை தான்.

அப்பா பந்தன்குடியில் சிமெண்ட் பேக்டரியில் வேலை பார்க்கிறார். மூன்று வாரத்திற்குப் பிறகு முந்தா நாள் தான் பில் பாஸ் பண்ணினார்கள்.

முந்தா நாள் தான் ஜோதி இங்கு வந்திருந்தார். கோவில்பட்டி பேஸ். மணி ஜாயின் பண்ணியாயிற்று. ராத்திரி தேவதச்சனோடு உதிரிப் பூக்களில் அம்மாவின் சாவைக் காட்டினார்கள். அம்மா செத்துப் போனாள். பால் ஊற்றின பிற்பாடு தான் எல்லோரும் சேர்ந்து அம்மாவைக் கொன்று போட்டார்கள்.

புருஷன் ஒருத்தனால் மட்டும் சாகிறதில்லை அம்மா. இளம் வயது அம்மா.

அம்மாவுக்குப் பின்னால் ஒரு பெரிய வலை இருக்கிறது.

பாவம் மகேந்திரன். சிறு பையன்.

வில்லுப்பாட்டுக் காரன்தான் எனக்கு இங்கே தெரிந்த கிராமியக் கலைஞர்கள். வேறு

அலைந்து தான் அங்கு பிடிக்க வேண்டும்.

அலையப் பணம் வேண்டும்.

விசிட்டர் பணம் வந்ததும் கிளம்பலாம் என்றிருந்தேன்.

எப்பொழுது வருதோ? (பணம் இப்பொழுதுதான் வந்தது)

மதுரைக்குப் போகிற மாதிரி இல்லை.

இப்போதைக்கு ஊரை விட்டு எங்கும் போகிற மாதிரி உடம்பு இல்லை.

ஒரு நாள் கோவில் பட்டி அலைச்சல் அலுப்பு.

இன்னும் தீரவில்லை. உடம்பு அவ்வளவு தான். நிலைமை நீடித்தால் ஒரு வருஷமே? ரெண்டு வருஷமோ?

நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பைச் சொல்லுங்கள்.

அன்பிற்கினிய நம்பிக்கு,

ஏன் கடிதமே எழுதவில்லை ரொம்ப வேலையோ.

இப்போதைக்கு

நான் ஊரிலேயே இருப்பதாகத் தான் இருக்கிறேன். எனினும்

ஆகஸ்டு 18 ம் தேதி அங்கு ஒரு சர்வீ°ஸ் கமிஷன் பரீட்சை இருப்பதால் ஆகஸ்டு இரண்டாம் வாரம் வாக்கில் அங்கு வரலாமென இருக்கிறேன்.

மற்றபடி அம்மா, அப்பா, நண்பர்கள் ராமச்சந்திரன், மனோ, ருத் வெள்ளைத் துரை எல்லாம் எப்படி இருக்கிறார்கள்.

பிரியங்களுடன்

வெம்பூர்
பந்தல் குடி வழி
626 113.

புளியம்பூக்கள் கவிதைகளிலிருந்து

பாழ் என விரியோடி
விழ நாளை எண்ணும் கீழச் சுவர்
துண்டு துண்டாச் சிதறிய
கோபுரத்தின் பெரிய கூண்டில்
வெள்ளாடு முதுகு தேய்க்கும்
முன்பக்க பீடங்களாக
ஒன்று, விடாமல் அனைத்தையும்
காக்கை எச்சங்கள் அலங்கரிக்கும்

அடிப் பத்ரகாளீ
அடுத்த கும்பாபிஷேகம் எப்போ வரும்.

அன்பிற்கினிய நம்பிக்கு

சாவகாசமாக எழுதிக் கொள்ளலாம் என்று
நினைத்து கடைசியில் இப்பொழுது தான் சாவகாசம் வாய்த்திருக்கிறது - அத்தோடு எழுதுவதற்கும் பெரிதாக ஒன்றும் விஷயமில்லைதானே.

ஊருக்கு வருகிற அன்று நீங்கள் மீண்டும் அனந்தைப் பார்க்கப் போயிருப்பதாக ரவி சொல்லியிருந்தார். ஆனால் விசிட்டர் நின்று விட்டதாக சாவியில் படித்தேன். ஒரு வேளை அவரது புதிய பத்திரிகையில் சேர்வதாக இருக்கிறீரோ என்னமோ.

ஊருக்கு எப்பொழுது வருகிறீர்கள். நான் இன்னும் பத்து நாட்களாகவது இங்கு இருக்க வேண்டியது வரும் என்று நினைக்கிறேன். வழக்கம் போல

அதே கேள்விகளுடனும் பதில்களுடனும் ஊர் ரொம்பவும் அலுப்பூட்டுவதாகத்தான் இருக்கிறது. ஆனாலும் வேறு மார்க்கமேதும் இல்லை. ஜீவித்திருக்க வேண்டிய கட்டாயமும், நியாயமும் எல்லாவற்றையும் செரித்துக் கொள்ளுவதற்கான பயத்தை வழங்குகின்றன. வாழ்க இயற்கை. வாழ்க சமூகம்.

அம்மா ஊருக்கு (வடக்கு) போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்களே போய் விட்டார்களா?. புதிய வேலை காரணமாக நீங்கள் ஊருக்கு வருவதை ஒத்தி போடுவீர்கள் என நினைக்கிறேன். ஊருக்கு வருகிற, இருக்கிற நாட்களை எழுதுங்கள் நான் வர முயற்சிக்கிறேன்.

ஜோதிக்கு ஏதோ ஹெர்னிக் ஆபரேஷன். நெல்லை குணசீலன் ஆஸ்பத்திரியில் இருக்கிறோம். கோவில்பட்டி, திருநெல்வேலி என்று போய் இலக்கியக் கவிதை என்று என்னத்தைப் புதிதாகப் பேசப் போகிறோம். வரும்போது லயலைக் கூடப் பார்த்து அம்மா சௌக்கியம் மட்டும் விசாரித்து விட்டு வந்து விட்டேன். பேசுவதற்காக சாயங்காலம் வரச்சொல்லியிருந்தார். சாய்ங்காலம் போகவில்லை.

இருப்பு, தத்துவம், பார்வை, செயல், சாதனை ஏதுமற்ற ஒரு ஜீவனுக்கு எந்த மனிதனுடனும் பேசுவதற்கு என்ன இருக்கிறது.

வரலாறு முழுவதையும் சாட்டைக்காரர்கள் தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த காலகட்டத்தின் சாட்டைக்காரர்களில் ஒருவனாக இருப்பதற்கான தகுதி எதுவும் எனக்கு கிஞ்சித்தும் இல்லை.

(மந்தைகள் உள்ளவரை சாட்டைகள் இருக்கும். மத்-3.27) தோழர்கள் வெள்ளைத்துரை, ஜீவா உங்களைப் பார்க்க வந்திருப்பார்கள். தோழர்களுக்கு என் வாத்சயம் நிறைந்த வாழ்த்துக்களைக் கூறுங்கள்.

தோழா ராவுக்கு தனியாகவும் கடிதம் எழுதியுள்ளேன்.

அன்புடன்
சமயவேல்.
வெம்பூர் போஸ்ட்
பந்தல்குடி வழி
626 113.


 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

</