வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி

கவிஞர் விக்ரமாதித்தன் நம்பி.. தமிழின் மிக முக்கியமான ஆளுமை.. எப்போதும் விக்ரமாதித்தன் ஒருவரை கவிஞர் என்று அங்கீகரித்தால் அவரது கவிதை சக்தி வாய்ந்த சொல்லாடல்களின் கூடலாக இருக்கும். எப்போது விக்ரமாதித்தன் நம்மை கவிஞர் என்று சொல்லுவாரோ என்று பல பெருங்கவிகள் ஏங்கியக் காலங்கள் கூட உண்டு... இப்போதும் தொடர்ந்து நல்ல கவிதைகளை அடையாளம் கண்டு அதனை ஊரறிய செய்து வருகிறார் விக்ரமாதித்தன். அந்த வகையில் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு கவிஞரின் சில கவிதைகளை எடுத்துக் கொண்டு அது பற்றி விவாதிக்க இருக்கிறார்.

 

 

 

 

 
     
     
     
   
அரும் பெறல் மரபின் கரும்பு இவண்...
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


மேலும் ஒளிப்படங்களைக் காண:

விக்ரமாதித்தன் நம்பி

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS அரும் பெறல் மரபின் கரும்பு இவண்... தொடர்கள் வாயில்


அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - மனுஷ்யபுத்திரன்

விக்ரமாதித்தன் நம்பி  


விக்ரமாதித்யனின் கவிதை அனுபவம் - மனுஷ்யபுத்திரன்

தமிழ் வாழ்க்கை
அழைப்பு மணிகள்
வேலை செய்யாவிட்டாலும்
வந்த யாரும் திரும்பிப் போனதில்லை

குளியலறைக்குத் தாழ்ப்பாள் இல்லாத
இந்த ஒன்றரை வருடத்தில்
யாருடைய அந்தரங்கத்திற்கும்
அபாயம் நிகழ்ந்துவிடவில்லை

நாற்காலியின் ஒடிந்த கால்
திறு சமன் குலைவுக்குமேல்
விருந்தாளிக்கு
ந்த அவமதிப்பையும் ஏற்படுத்தாது

ஒரு வாரமாய்
பிரேக் சரியில்லாத வாகனத்தில்தான்
கடந்து திரும்புகிறேன்
தெய்வம் துணையிருக்கும் இந்த நகத்தை

அடிவயிற்றின் இடப்பக்க வலி
இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது
குறிப்பிட்ட கோணத்தில்
கொஞ்சம் படுத்துக் கொண்டால்
சமாளித்துக் கொள்ளலாம்
எல்லா இடத்திலும்
சீர்படுத்த வேண்டியவை ஏராளம்
என்றாலும் சிக்கலற்றது
தமிழ் வாழ்க்கை

- மனுஷ்யபுத்திரன்

(நூறு பூக்கள் மலரட்டும்)
சென்னை சங்கமத்தின் தொகைநூல் – பக்கம் 81)

மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் எல்லாமே. பொதுவாக, எளிமையானவையாகவும் நேரடியானவையாகவும் இருப்பனதாம். அவரது கவிதை மொழியும் அப்படித்தான். புதிதாக, நவீன கவிதை படிக்க வரும் வாசகர் ஒருவருக்குத் தயக்கமில்லாமல் மனுஷ்யபுத்திரன் தொகுப்புகளை எடுத்துக் கொடுக்கலாம். இப்படியெல்லாம் இருப்பதைக் குணமாகவோ குற்றமாகவோ குறிப்பிடவில்லை, இங்கே, இந்தத் தன்மைகளோடு இருப்பன அவர் கவிதைகள் என்றே சுட்ட வந்தது.

தமிழ் வாழ்க்கையும் அச்சு அசலான மனுஷ்ய புத்திரனின் கவிதை இயல்புகள் உள்ள கவிதைதான். அதே சமயம், இந்தக் கவிதையின் எளிமை, ஏமாற்றுகிற எளிமை பொருள் சீரியது சொல்முறை சற்றே பூடகமானது.

முதல் ஐந்து அடுக்குளும் விவரிப்புகள் எனில் வெறும் விவரிப்புகளில்லை விஷயத்தை விளங்க வைக்க வரும் விவரிப்புகள். இறுதியில்தான் விஷயமே வாக்குமூலம் போல, கவிதைப்பொருள்தான் இதைச் சிறந்த கவிதையாக்கியிருக்கிறது கவிஞனின் விஷயத்தெரிவுதான் முக்கியமானது.

அழைப்பு மணிகள் / வேலை செய்யாவிட்டாலும் / வந்த யாரும் திரும்பிப் போனதில்லை.

எப்படி. கதவைத் தட்டிக் கூப்பிட்டுவிடுவார்கள் போல. (தமிழன் பண்பு தமிழ் வாழ்க்கை இப்படி) மேனாடுகளில் அப்படி இல்லை ஆள் இல்லையென்று அவர்கள் பாட்டுக்குப் போய்விடுவார்கள் கதவு தட்டுவது அநாகரிகம், அங்கே. இங்கே உள்ள நடைமுறை வேறே.

குளியலறைக்குத் தாழ்ப்பாள் இல்லாத/இந்த ஒன்றரை வருடத்தில் /யாருடைய அந்தரங்கத்திற்கும்/அபாயம் நிகழ்ந்து விடவில்லை.

நல்லதுதான். யாரும் திடுதிப்பென்று வந்து, குளியலறைக் கதவைத் திறந்துவிட மாட்டார்கள். (குளியலறை தனியே தமிழ்வாழ்க்கையில் வந்ததே, சமீபகாலத்தில் தானே அதனால்தானே என்னவோ.)

நாற்காலியின் ஒடிந்த கால்/சிறு சமன் குலைவுக்கு மேல்/விருந்தாளிக்கு/எந்த அவமதிப்பையும் ஏற்படுத்தாது.

சரிதான், வந்த விருந்தினரை விழத் தட்டிவிடாது, பிறகென்ன.

ஒரு வாரமாய்/பிரேக் சரியில்லாத வாகனத்தில் கடந்து திரும்புகிறேன்/தெய்வம் துணையிருக்கும் இந்த நகரத்தை ஒன்றும் ஆகிவிடவில்லை பெரிய விஷயம்தான்.

அடிவயிற்றின் இடப்பக்க வலி/இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது/குறிப்பிட்ட கோணத்தில் கொஞ்சம் படுத்துக் கொண்டால்/சமாளித்துக் கொள்ளலாம்.\

என்னய்யா இது, அநியாயம். எல்லா இடத்திலும்/சீர்படுத்த வேண்டியவை ஏராளம்/என்றாலும் சிக்கலற்றது/தமிழ் வாழ்க்கை.

ஓ.. , தமிழ்வாழ்க்கையே இப்படித்தானா.

கவனியுங்கள். அழைப்புமணி பழுதென்றால் எலக்ட்ரிசியனைக் கூப்பிட்டுச் சரி செய்திருக்கலாம். குளியலறைக் கதவுக்குத் தாழ்ப்பாள் போடச் சொல்ல எவ்வளவு நேரமாகப் போகிறது, ஒன்றரை வருஷம் அப்படியே இருக்கிறது.
மெனக்கெடுவதில்லை, எதுக்குமே.

நாற்காலையைச் சரிப்படுத்த முடியாதா. முடியும். பத்து நிமிஷ வேலைதான், தொழிலாளிக்கு. ஆளுக்குச் சொல்லி விட மடி.

பிரேக் சரியில்லாத வாகனத்தில் போய்வருவது எவ்வளவு ஆபத்தானது.

அடிவயிற்று இடப்பக்க வலியை அப்படியே வைத்திருப்பதை என்னவென்று சொல்ல.

இந்த வலிகளுக்கெல்லாம் இப்படி நேரடி அர்த்தம் கொள்வதா, கடைசிப் பத்தி சொல்கிறது. இவை யாவும் உதாரணங்கள் அதாவது, விஷயத்தை முன்வைக்கக் கட்டப்பட்ட புனைவுகள்.

மனம் போல வாழ்வு தமிழ் மனம் போலவே தமிழ் வாழ்க்கையும்.

தமிழ்ச்சமூகத்தில் சீர்படுத்த வேண்டியவை, எவ்வளவோ இருக்கின்றன, எனில் நோயோடவே வாழப் பழகிப் போனவர்கள் போல வாழப் பழகிவிட்டோம் நாம். கவிதை, இதையே மொழிகிறது.

தன்மை ஒருமையில் கூறுவதாலேயே, தன்னைப் பற்றிய கவிதையில்லை இஃது ஓர் உத்தி, சொல்முறை.

சிறு விஷயங்களையும் உடனுக்குடன் கவனித்துச் சரிசெய்வது, ஓர் உயர்ந்த வாழ்க்கைமுறை பிழைகளைத் திருத்திக்கொள்வது, தவறுகளை நேர் செய்வதெல்லாம் நல்ல நெறிகள் அப்படியப்படியே விட்டுவிடுவது, ஆகா நெறி.

சீர்குலைவுகளுக்கு நடுவே சாவகாசமாக இருந்து கொண்டிருப்பதுதான் தமிழ்வாழ்க்கையா.

பிரச்சனைகளுக்கு மத்தியில் பேசாமல் போய்க் கொண்டிருப்பதுதான் தமிழ்ப்பண்பா. கவிதை எழுப்பும் கேள்விகள் இவை.

சமூகச் சார்பான கவிதை. அரசியல் இல்லாத சமூகமா, ஆதலால், இஃது அரசியல் கவிதையும்தான். எளிமையாக இருப்பதாலேயே இளப்பமாகக் கருதிவிட முடியாதது.

மனுஷ்யபுத்திரனின் சமூக ஈடுபாடும், தமிழ் வாழ்வுகுறித்த அக்கறையும்தாம் தமிழ் வாழ்க்கை கவிதையின் ஊற்றுக்கண்ணும் தோற்றுவாயும் ஆகும். கவிதையின் பொருள் காரணமாகவே, காலத்தில் பெறுமதி பெறும் கவிதையாக நிற்கும் இது.

பை – பாஸ் கவிதைகள், டொமஸ்டிக் கவிதைகள் எழுதிக் கொண்டிருப்பவன் அல்லன் கவிஞன், ஓர் இனத்தின் வாழ்வியலை ஆவணப்படுத்துபவனே உண்மையான கவிஞன். அவன்தான் இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ்க் கவிதையிலேயே இடம் பெறுவான்.

மனுஷ்யபுத்திரன் அப்படியான கவிஞன்தான் இந்தக் கவிதையே சாட்சியம்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

</