வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி

கவிஞர் விக்ரமாதித்தன் நம்பி.. தமிழின் மிக முக்கியமான ஆளுமை.. எப்போதும் விக்ரமாதித்தன் ஒருவரை கவிஞர் என்று அங்கீகரித்தால் அவரது கவிதை சக்தி வாய்ந்த சொல்லாடல்களின் கூடலாக இருக்கும். எப்போது விக்ரமாதித்தன் நம்மை கவிஞர் என்று சொல்லுவாரோ என்று பல பெருங்கவிகள் ஏங்கியக் காலங்கள் கூட உண்டு... இப்போதும் தொடர்ந்து நல்ல கவிதைகளை அடையாளம் கண்டு அதனை ஊரறிய செய்து வருகிறார் விக்ரமாதித்தன். அந்த வகையில் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு கவிஞரின் சில கவிதைகளை எடுத்துக் கொண்டு அது பற்றி விவாதிக்க இருக்கிறார்.

 
     
     
     
   
அரும் பெறல் மரபின் கரும்பு இவண்...
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


மேலும் ஒளிப்படங்களைக் காண:

விக்ரமாதித்தன் நம்பி

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TSஅரும் பெறல் மரபின் கரும்பு இவண்... தொடர்கள் வாயில்

அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - யூமா. வாசுகி

விக்ரமாதித்தன் நம்பி  


மனித மனங்களைக் காட்டும் கவிதை - ஒரு மனிதக் குரங்கு சித்திரம்

தன் நோட்டு புத்தகத்தில்
மனிதக் குரங்கென்று துள்ளிவர
பள்ளிச் சிறுமி குதூகலமாய்ச் சிரித்தாள்
தோட்டத்தில் நீர் ஊற்றிக் கொண்டிருந்த
ஒரு நீதிபதியைப் பார்த்து என் ஆனந்தம்
தூரிகை வர்ணத்தோடு கழுவப்பட்டது
கையிலிருந்த சஞ்சிகையை
காத்திருப்பில் வாசிக்கும்போது
பளிச்சிட்டு மறையும் குரங்கின்
மிரள் விழிகளுக்காக
மெலிதாகப் புன்னகைத்ததை – இல்லை
புன்னகைக்க நனைத்ததையறிந்து
குறிப்பெழுத பேனாவைத் திறந்துவிட்டார்கள்
பஸ் நிறுத்த நீதிபதிகள்
யதார்த்தத்தில் தலைநனைத்துத் தப்பித்தாயிற்று
சந்தடியான சாலையில் எதிரே பிரம்மாண்டமான
குரங்கின் வினையப்பரிதாபம் கண்டு
பொங்கிய பதில் சிரிப்பை நெரித்து அருகில்
நடந்து வந்து கொண்டிருக்கின்ற நீதிபதிகளிடம்
யாவும் ஒழுங்குபடிதான் அய்யா என இயல்பை
அறிக்கை செய்துகொண்டு நடந்தேன்
உதிர்ந்த கூரிதழ்ப்பூவைக் கையிலெடுதது
இப்படியானதுதான் அதன் பல் வரிசையினை
சொல்வதற்குள்
நண்பனின் கண்கள் வழியே கூர்ந்த
நீதிபதியை ஏய்க்க அதை
கடவுள் படத்தில் மேலேயே செருகியாயிற்று
யாரிடமோ எதுவோ பேசிக்கொண்டிருக்கையில்
உனக்கு இவ்வளவு தன்னிரக்கம்
தேவையற்றதென்றேன்,
துப்புக்கிடைத்த எதிர்நீதிபதி விழிப்படைந்து
விதிகளைக் துழாவியபடி
யாரைச் சொல்கிறீர்கள் எனக் கேட்கவும்
அபராதமாய்
மதுவருந்த அழைத்து
சட்டப்புத்தகத்தினடியில் தலை நசுங்கவிருந்த
சகஜத்தை காப்பாற்றியழைத்துப் போனேன்
மூன்றாவது பெக் பருகி முடித்ததும் பாரிலிருந்த
எல்லோருக்குமாகவும் சத்தமிட்டுச் சொன்னேன்
ஒரு மனிதக்குரங்கு தாவும் சித்திரம் எவ்வாறு
ஒரு சிறுமிக்கு
சிரிப்பூட்டியது என்பதை
குரங்கு போலவே விளக்கவும்
குடித்திருந்த நீதிபதிகள் என்னைப் போலவே
குறுக்கும் நெடுக்குமாய்த் தாவிச் சிரித்தார்கள்

யூமா . வாசுகி
(இரவுகளின் நிழற்படம் தொகுப்பு, பக்கம் 88-89)

யதார்த்தமே புனைவுகூட்டி மொழியப்படும் கவிதை, இது முதல் மூன்று வரிகளிலேயே இதைக் காணலாம்.

பள்ளிச்சிறுமிக்குப் படம் வரைந்து தருவதில் தொடங்கும் கவிதை. அவளுடைய குதூகலச்சிரிப்பு, ஓவியங்களின் ஆனந்தம் என வளர்ந்து, அந்நேரத்தில் அண்மையில் இருக்கும் ஒருவரைப் பார்த்து உள்சுரங்கி, அடுத்தடுத்து நேர்வனவெல்லாம் விவரிக்கப்பட்டு (வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு மனிதர்களால் ஏற்படுபவை அவை), கடைசியில் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது நிகழ்ந்ததைத் தொடர்ந்து உச்சகட்டம் பெற்று முடிகிறது. இவ்வளவும் கவிதைப்பொருள்.

ஒரு நிகழ்வு, அதன் தொடர்நிகழ்வுகள். எதிர்வினைகள் இவற்றின் பின்புலத்திலுள்ள மனித மனங்கள் மன இயல்புகளை நுணுக்கமாக கூர்மையாகச் சித்தரிப்பதாலேயே இது மேலான கவிதையாகிறது.

நீதிபதி என்ற உருவகத்தைக் கொண்டே சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லிவிடுகிறார், யூமா.

உரைநடையிலான கவிதையென்றே தோற்றவில்லை சொல்முறையினால், நிறைய வரிகளுள்ள கவிதையென்றும் படவில்லை, கவிதைமொழியினால், நிரல்பட அடுக்கியிருக்கும் விவரிப்புகள், சுவாரஸ்யமான கவிதைகூறல், நையாண்டியாக, அங்கதமாக, உணர்வுபூர்வமாக அந்தந்த இடத்துக்கேற்ப குதூகலம் கொண்டாட்டம், வேடிக்கை. ஆனந்தம் என்றொல்லாம் இருக்கும் இயல்புகளைத் தொலைத்துவீட்டு, எப்பொழுதும் சீரியசாக இருக்கும்படியாகி வாழும் மனிதர்களைத்தான் கவிதை காட்டுகிறது. தன்னை மறந்த நிலையில்தான் மனுஷன் தன்போக்கில் இருப்பானா. போதையில் இருக்கையில்தான் சகஜபாவம் திரும்புமா.

தேர்ந்த கவிஞனுக்குத்தான் இதுபோல விஷயங்களே அடைபடும். குழந்தை உள்ளம் கொண்டிருந்தால்தான் இப்படி எண்ணிப்பார்க்கவே முடியும். சும்மா, பெங்குயின் கவிதை பு°தகங்களைப் படித்து புண்யமில்லை. பின் நவீனத்துவம் கற்றுத் துறைபோய் பிரயோஜனமில்லை. கவிமனம் வேண்டும். யூமாவுக்கு அந்தக் கொடுப்பினை இருக்கிறது. எழுதுகிறார்.

யூமாவின் ஆகச்சிறந்த கவிதைகள் அனைத்துமே அபூர்வமானவை. அழிவற்றை. யூமா. இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ் கவிதை மரபில் இடம்பெறும் பேறுபெற்ற கவிஞன்.

சமகாலத்தில் ஒரு கவிஞன் உரியபடி கவனிக்கப்பெறாமல் இருக்கலாம். அவன் கவிதைகள் நல்லபடி எடுததுப்பேசப்படாமல் போகலாம். அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. காலம் எப்போதுமே உயர்ந்ததைத்தான் ஏந்திவைத்துக்கொள்ளும்.

யூமா போன்ற கவிஞர்கள் நிரந்தரமானவர்கள், அவர்களின் கவிதைகள் இந்த இனமும் மொழியும் உள்ளவரை நின்று நிலைத்திருக்கக்கூடியவை.

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </