வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி

கவிஞர் விக்ரமாதித்தன் நம்பி.. தமிழின் மிக முக்கியமான ஆளுமை.. எப்போதும் விக்ரமாதித்தன் ஒருவரை கவிஞர் என்று அங்கீகரித்தால் அவரது கவிதை சக்தி வாய்ந்த சொல்லாடல்களின் கூடலாக இருக்கும். எப்போது விக்ரமாதித்தன் நம்மை கவிஞர் என்று சொல்லுவாரோ என்று பல பெருங்கவிகள் ஏங்கியக் காலங்கள் கூட உண்டு... இப்போதும் தொடர்ந்து நல்ல கவிதைகளை அடையாளம் கண்டு அதனை ஊரறிய செய்து வருகிறார் விக்ரமாதித்தன். அந்த வகையில் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு கவிஞரின் சில கவிதைகளை எடுத்துக் கொண்டு அது பற்றி விவாதிக்க இருக்கிறார்.

 
     
     
     
   
அரும் பெறல் மரபின் கரும்பு இவண்...
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


மேலும் ஒளிப்படங்களைக் காண:

விக்ரமாதித்தன் நம்பி

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TSஅரும் பெறல் மரபின் கரும்பு இவண்... தொடர்கள் வாயில்

அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - க.நா.சு.

விக்ரமாதித்தன் நம்பி  


சித்திரம்போலத் துலங்கும் கவிதை

மணப்பெண்

திரையிட்டு மறைத்த முகமும்
பெண்மை கூசும் பட்டாடையும்
மறைத்து வைக்கும்
உண்மை அறியாவண்ணம்
அழகி என்று
அவளை அறிவு தெப்படி?
அவள் அழகு
ஆடை உடுத்தி
அழகு படுத்தி
அலங்கரித்து
மணமேடை யேற்றிக்
கண்டின் புற்றது
நாங்கள்.

அவள் அழகைத்
திரையிட்டு மூடுவானேன்?
அழகு கண்டு
கண் மங்காதிருக்க
அவன் அதிர்ஷ்டங் கண்டு
பிறர் பொங்காதிருக்க,
பின் அவளழகை
உரக்கப் பாடுவானேன்?
பாட்டை நம்புவார் யார்?
வெறும் சொல்லடுக் கென்று
எண்ணி ஏமாறுவார்
யாருமே என்று
அவளழகைப் பாடுவோம்.

நாரியர் புடைசூழ
மேக மண்டலத்தில்
மின்னென நடக்கிறார்

மாலை வானத்திலே
மின்னும் சுடரெனவே
மணவறை சேருவாள்
அவன் கூடுவான்
அழகுடன்
அழகு பொருந்த.

க.நா.சு.
(க.நா.சு கவிதைகள், பக்கம் 54 - 58)

ஏழுபத்திரெண்டாண்டு ஆகிறது இந்தக் கவிதை வெளியாகி இன்றைக்கும் புதிதாகவே இருக்கிறது. இதுதான் அசலான கவிதையின் பண்பே.

க.நா.சு. வின் முதல் கவிதையும் சரி ந.பிச்சமூர்த்தியின் முதல் கவிதையும் சரி – இரண்டுமே ரொமாண்டிக்கான விஷயம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது, அகப்பாடல்கள்.

இன்னொரு இன்றிமையாத செய்தியும் கவனத்துக்குரியது, கவிதை குறித்து இருவருமே நல்ல ஓர்மையுடையவர்கள் நவீன கவிதையின் தோற்றத்தைப் புரிந்து கொள்ள இந்தப் பின்புலம் ஏதுவாக இருக்கும்.

மணப்பெண்னைப் பற்றி எழுதத் தோன்றியிருப்பதே அருமையான விஷயம். வேறு யாரும் எழுதாதது அது அம்சமாக இருக்கிறது என்பது விசேஷம்.

யாப்பு எதுமை – மோனை இருப்பது தவறில்லை. நல்ல கவிதைக்கு முட்டுக்கட்டை அதிலில்லை என்று க.நா.சு.வே ஓரிடத்தில் சொல்லியிருப்பார். இந்தக் கவிதையில் எதுமை மோனைகள் இருப்பது பொருத்தம் தான்.

கேள்வி கேட்பது போலவும் பதில் சொல்வது போலவும் அமைந்திருப்பது, வெளியீட்டு உத்தி.

மூன்று சீர் (சொல்), இரு சீர், தனிச் சொல் விரவக் கவிதைக் கட்டமைப்பு வடிவச் சிறப்புக்கு பிரதான காரணி இது,

சித்திரம் போலத் துலங்கும் கவிதை.
சித்திரங்கள் அழியாதவை.

மூத்த கவிஞர் ஞானக்கூத்தன் கூற்றை இங்கே எடுத்துக் காட்ட வேண்டும், அவசியம்.

க.நா.சு. வின் முதல் கவிதை மணப்பெண் 1939 - ம் ஆண்டு வெளியாயிற்று, ந.பிச்சமூர்த்தியின் முதல் கவிதையான காதல் 1934 - ல் வெளியாயிற்று, இந்த இரண்டு கவிதைகளில் க.நா,சு.வின் கவிதை இயையோர் காதலைப் பற்றி இல்லாமல், மணவறைக்குப் போகும் தம்பதியரை வாழ்த்துவதாக அமைந்திருப்பது கவனிக்கத்தகுந்தது. இதன் கருத்து கண்ணேறு கழிப்பதாக இருப்பதும் கவனிக்கத்தகுந்தது. 34 வயதான பிச்சமூர்த்தி காதல் விரிவைப் பாட, 27 வயதான க.நா.சு. கண்ணேறு போக எழுதுகிறார். இது மரபிலிருந்து சிறிய விலகல் என்றாலும் க.நா.சு.வின் உள்ளனவற்றில் சிறந்ததைத் தேடும் இயல்பையும் காட்டுகிறது. அவன் கூடுவான் அழகுடன் அழகு பொருந்த என்னும் இறுதிப் பகுதி கம்பரின் தொனியை நினைவூட்டுகிறது. இக்கவிதையில் க.நா.சு. கண்டுபிடித்துக் கொண்ட நவிற்சி அமைதி இறுதிவரைக்கும் அவரிடம் இருந்து வந்தது. அடுத்த கவிதை 1958 ம் ஆண்டுதான் கிடைக்கிறது. இடைப்பட்ட 20 ஆண்டுகளில் அவரது அனுபவம்தான் மீண்டும் கவிதைப் பக்கம் அவரைத் திருப்பியிருக்க வேண்டும்.

(திணைமுதல்வர் க.நா,சு. வின் கவிதைகள் என்ற கட்டுரையில்)

க.நா.சு கவிதைகளிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவற்றில் முதலாவது, எந்த விஷயத்தையும் எழுதலாம் என்பதுதான், அடுத்ததாக அனுபவங்களையும் உணர்வுகளையும் எப்படியிருந்த போதும் சொல்லாம் என்பது.

இவையே பெரிதுதாமே முக்கியமானவையும் கூட.

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </