வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி

கவிஞர் விக்ரமாதித்தன் நம்பி.. தமிழின் மிக முக்கியமான ஆளுமை.. எப்போதும் விக்ரமாதித்தன் ஒருவரை கவிஞர் என்று அங்கீகரித்தால் அவரது கவிதை சக்தி வாய்ந்த சொல்லாடல்களின் கூடலாக இருக்கும். எப்போது விக்ரமாதித்தன் நம்மை கவிஞர் என்று சொல்லுவாரோ என்று பல பெருங்கவிகள் ஏங்கியக் காலங்கள் கூட உண்டு... இப்போதும் தொடர்ந்து நல்ல கவிதைகளை அடையாளம் கண்டு அதனை ஊரறிய செய்து வருகிறார் விக்ரமாதித்தன். அந்த வகையில் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு கவிஞரின் சில கவிதைகளை எடுத்துக் கொண்டு அது பற்றி விவாதிக்க இருக்கிறார்.

 

 

 

 

 
     
     
     
   
அரும் பெறல் மரபின் கரும்பு இவண்...
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


மேலும் ஒளிப்படங்களைக் காண:

விக்ரமாதித்தன் நம்பி

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS அரும் பெறல் மரபின் கரும்பு இவண்... தொடர்கள் வாயில்


அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - பழனிவேள்

விக்ரமாதித்தன் நம்பி  

கொடும் வாசம் - பழனிவேள்

எல்லா வகையிலும்
அடைபடாத கடன்காரன்
வாசலை நெருங்க முடியாத அளவு
வளர்ந்து நிற்கிறான்
நாக்கைப் பிடுங்கிக்கொண்டு
உண்ண வேண்டும்போலப் பசி
ஜெரோனியம் புல்லைக் காய்ச்சும் போது
மிகக் கொடுமையான வாசனை
இந்த இடத்தைவிட்டு மீளவேண்டும்
ஆனால் புல்லின் சாற பிழியும்வரை
ஒவ்வாமையில் பசியில்
வாசனையூறி அங்கங்கள் சுவையற்றுப்போக
கிழத்தியின் முலைகளை முகர்வதில்லை
வறா பனியில் அல்லாடும் இரவுகளில்
அவள் உதடுகள் முலைக்காம்புகள் பாதங்கள்
பனிவெடிப்பில் ரத்தம் கசிய
அலோபதி கிரிம்கள் பயனற்று விட்டன
வலியில் அழுகிறாள்
யாருடைய சொல்லோ
குழைத்துத் தடவிய வெண்ணெயில்
அவள் உடல் உருகுகிறது
நடக்கிறாள் நடந்தேகுகிறாள்
நெய் சொட்டும் கால் தடத்தில்
மாமை சூழ் இல்லை
சுற்றி வந்து காகம் கரைகிறது காட்டிரைச்சலாக
காகத்தின் குரல்
வெகு தூரத்தில் காத்திருக்கும்
என் குரலை விழுங்கியிருந்தது
பழனிவேள்
(தவளை வீடு தொகுப்பு, பக்கம் 27)

ஜெரோனியம் ஒரு வகைப் புல்லில் இருந்து அதிக உஷ்ணத்தில் காய்ச்சி எண்ணெய் வடிக்கப்படும். காஸ்மெடிக் பொருள்களின் ஆதார தயாரிப்புப் பொருள்களில் ஒன்று. விவசாய உற்பத்தியான இது தோட்டத்தில் காய்ச்சும்போது வரும் கடுமையான வாசனை நம்மை வருத்தக் கூடியது.

கவிதை எழுதுவது யாருடைய நல்கைகளையும் பெற வேண்டியவையல்ல. அது ஒரு நோக்கில் சமூகப் பொறுப்புணர்வின் சுமை. சுமையைத் தலையில் தூக்கிக் கொண்டு திரிவது இன்பமுறும் காரியமா? ஆகவேதான் மற்ற எல்லாரைக் காட்டிலும் ஒரு சமூகத்திற்குக் கவிஞன் என்பவன் முதன்மையானவன் ஆகிறான். ஒரு மொழியை அடுத்த சந்ததிக்குச் சுமந்து செல்லும், புதுப்பிக்கும், பொறுப்பு அவனிடம்தான் இருக்கிறது.

கவிஞர் கடற்கரய்
(நிராகரிப்பின் வலி தொகுப்பின் பின்னுரையில்)

உள்ளபடியேயும், வடதமிழகம்-தென் தமிழகம் என்று பகுத்துப் பார்க்கிறார் போலத்தான் இருக்கிறது. தமிழ்நாடு-பரப்பளவில், தன்மையில், வளத்தில், வாழ்வில், வட தமிழக வாழ்க்கை, தென் தமிழகம் அறியாதது தென் தமிழக வாழ்க்கை, வட தமிழகத்துக்குத் தெரியாது. நாமும் இலக்கியம் படைத்துக் கொண்டிருக்கிறோம். இடாலோ கால்வினோ, மார்க்வஸ், எல்லோரையும் படித்துக் கொண்டிருக்கிறோம் இருக்கட்டும்.

இது வட தமிழக வாழ்வியலைக் காட்டும் கவிதை. ஜெரோனியம் புல்லைப் பற்றி எனக்கு தெரியாது. நான் திருநெல்வேலிக்காரன். எங்கள் பக்கத்துப் புஞ்சைக் காடுகூடச் சற்றே ஈரப்பதமானதுதான். கொடும் வாசம் சித்திரிக்கும் உலகம் அறியப்படாதது. நிற்க.

பழனிவேளின் கவிதைகளில் நிலம் வேறு வேறு ரூபங்களில்-மாறிமாறி-வருகிறது-சித்திரமாக. பின்புலமாக, வாழ்வாதாரமாக நம்பி வாழமுடியாததாக, இழப்பை ஏற்படுத்துவதாக அதேசமயம், விட்டு விலக இயலாததாக, மாற்றுக் காண முடியாததாக. இந்த அளவுக் பூமி சார்ந்த வெளிப்பாடுகள் இன்றைய நவீன கவிதையில் வேறு யாரிடமும் இல்லை (முன்பு மலைச்சாமி, பிறகு யவனிகா தவிர்த்து). பழனிவேளை முக்கியமான கவிஞனாக்கியிருப்பதே இந்த அம்சம்தான்.

முதல் நான்கு வரிகளில் கடன்காரன் பற்றி, அடுத்த இரண்டு வரிகளில் பசிப்பற்றி, அதற்கடுத்த மூன்று வரிகளில் ஜெரோனியம் புல்லைக் காய்ச்சுவது குறித்து, அடுத்தடுத்த வரிகளெல்லாம் அதன் விளைவுகள் குறித்து விவரிப்பு தொடர்ந்தும் விவரிப்புகள்தாம் கவிதையே விவரிப்புதான் விவரிப்புகளாலான வாழ்வு.
(இது உத்தி தன்போக்கில் அமைந்ததா)

எழுதுவது சங்கப் பாடல் போலவே இருக்கிறது. இப்படி கவிஞர்கள் எல்லோருக்கும் ஆகக் கூடியதல்ல.

வணிகப் பயிர் வைப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும். பணம். பிற பயிர்கள் பிடிக்காத மண்வாகாகவும் இருக்கலாம். சமயங்களில், ஜெரோனியம் பயிரிட எது காரணமோ. இது போல ஒரு அவலமான தமிழ் வாழ்வு ஓவியத்தைக் கண்டதேயில்லை.

பழனிவேள், இந்த இனமே கொண்டாட வேண்டிய கவிஞன்.

கவிதைதான் தமிழனின் பூர்வீக/பரம்பரைச் சொத்து.

வழிவழியாக வரும் செல்வக் களஞ்சியம்.

இதில் காலத்தில் நின்று பிடிக்கும் கவிதைகள் எழுதிவிட்ட கவிஞன் பேறுபெற்றவன்.

வார்த்தைப்பந்தல் போடுகிறவர்களை என்ன சொல்ல.

சமகாலக் கவிஞர்களுள் லக்ஷ்மிமணிவண்ணன், பிரான்சிஸ் கிருபா, யவனிகா ஸ்ரீராம், ஸ்ரீநேசன், பழனிவேள் ஆகிய ஐவரும் நவீன கவிதையின் கொடைகள்.

இளைய தளத்தின் வாசகர்கள் இவர்கள் கவிதைத் தொகுப்புகளைத் தேடிப் பிடித்து காசு கொடுத்து வாங்கி அல்லது வரவழைத்து படிப்பது தமிழ் வாழ்வியலை நவீன கவிதையை அறிந்து கொள்ள உதவும்.

 

---------------------------------------------------------------------------------------

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

</