வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

வாழ்வில் நாம் நினைக்கும் பல இலக்குகளை நம்மால் அடைய முடிவதில்லை. சரி நம்மால் முடியாது இந்த முயற்சியை கைவிட்டு விடுவோம் என நினைக்கும் தருவாயில் புதிய நம்பிக்கைகள் தோண்றி நம்மால் சாதிக்க முடியும் என்ற சிந்தனைக்கு நம்மை கொண்டு செல்கிறது. உண்மையில் நம்முடைய இலக்குகளை அடைய இந்த புதிய நம்பிக்கைகள் எந்தவகையிலும் உதவுவதில்லை. மாறாக நம்மை ஒரு உறுதியான முடிவெடுக்க விடாமல் ஒரு நிலையற்ற வாழ்கை வாழ இந்த நம்பிக்கைகள் பயன்படுகின்றது. நம்மை நாம் தோற்றுவிட்டோம் என்று எண்ணிக்கொள்ள இயலாது. அதே சமயத்தில் நம்மை வெற்றியாளர் என்று சொல்லிக்கொள்ளவும் முடியாது. இதற்கு இடைப்பட்ட நிலையில் நாம் காலம் தள்ளிக்கொண்டிருக்க இந்த நம்பிக்கைகள் பயன்படுகின்றது. இப்படிப்பட்ட ஒரு துன்பமிக்க உணர்வை நாம் கற்பனை செய்து பார்க்கின்றோம். ஆனால் பலர் இதை தினமும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் மிக முக்கியமானவர்கள் பங்குச்சந்தையில் ஈடுபடும் நபர்கள்.

நாம் லாபம் சம்பாதித்துவிட்டோம் என்று சந்தோஷம் கொள்வதும், மறுநாளே நஷ்டம் அடைந்து துவண்டுவிடுவதும், அதற்கு அடுத்த நாள் மீண்டும் லாபம் சம்பாதித்து... இப்படியே லாபம், நஷ்டம் என்று மாறி மாறி நிகழும் நிகழ்வில் நிலையான சந்தோஷமும் இல்லாமல், நிலையான துக்கமும் இல்லாமல் இடைப்பட்ட நிலையில் துவண்டுபோவார்கள். பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களிடம் பல திட்டங்கள் இருக்கும். ஆனால் எந்த செயல்பாடுகளும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்காது. ஆற்றில் விழுந்த இலைபோல, சந்தை செல்லும் போக்கில் அடித்துச் செல்லப்படுவார்கள். அப்போது ஏற்படும் இடர்பாடுகளை அவர்கள் சந்தித்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள்.

பங்குச்சந்தையில் மூன்றுவிதமான மனிதர்கள் இருக்கின்றாகள்.

முதலாமவர்: அவருக்கு பங்குச்சந்தை பற்றி எந்த விபரமும் தெரியாது. முதலீடு செய்யலாமா வேண்டாமா என்ற சிந்தனையிலேயே இருப்பார்கள்.

இரண்டாம் நபர்: தெரியாமல் முதலீடு செய்து ஒரு குறிப்பிட்ட தொகையை இழந்தவர்கள். அந்த தொகையை எப்படியாவது பங்குச்சந்தையில் இருந்தே மீட்க வேண்டும் என்று போராடுபவர்கள்.

மூன்றாம் நபர்: பங்குச்சந்தை பற்றி அனைத்து விசயங்களும் இவர்களுக்குத் தெரியும். இவர்கள் பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்க பலவிதமான வித்தைகளை கற்று வைத்திருப்பார்கள். ஆனாலும் வெற்றிகரமாக பணம் சம்பாதிக்க இயலாமல் இருப்பவர்கள்.

மேற்கண்ட இந்த மூன்று நபர்களுக்குமே பிரச்சனை ஒன்றுதான் சந்தை அவர்களின் பிடியில் இருக்காது. சந்தை ஏற்படுத்தும் விளைவுகளுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள். இந்த சூழ்நிலையை நானும் உணர்ந்திருக்கின்றேன். இந்த சுழற்சி முறையில் இருந்து தப்பிக்க பல காரணங்களை, பல காரியங்களை தேடியிருக்கின்றேன். அகப்பட்ட விசயங்களை பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
.
தோற்றவர்களின் சிந்தனை ஒன்றிணையும் போது, அந்த சிந்தனை அவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லும் என்பது எனது நம்பிக்கை. எனவே உங்களின் சிந்தனைகளையும் என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

 

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
காணாமல் போன காளையைத் தேடி ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 



பூபதி

ஊர் : உழைப்பிற்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந்தவன்.

தொழில் :பிடித்தமான தொழிலை தேடி இன்று வரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

விருப்பம் : மனித விருப்பங்கள் மாறக்கூடியது என்பதற்க்கு நானும் ஓர் உதாரணம்.

விரும்பி படிப்பது: பாரதி, பாரதி சார்ந்த எழுத்துக்களை.

விருப்பமானவர் : பன்றி ஏன் தெருவிற்கு வந்தது என பகுத்தறிவு பேசிய பாவேந்தர்.

பிடித்த எழுத்தாளர் : இன்னும் பிடிபடவில்லை.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பூபதி தொடர்கள் வாயில்


காளையை கட்டிப்போடும் சக்தி

பூபதி  

காளையை கட்டிப்போட முடியவில்லையே என்ற கவலையை சிறிது காலம் தள்ளிப்போட்டுவிட்டு, நாம் வேறு பாதையில் பயணம் செய்வோம். எதற்காக இந்த மாற்றுப்பாதை! என மனதில் சஞ்சலம் கொள்ளத்தேவையில்லை. ஏனெனில் இறுதியில் இந்தப்பாதையும் காளையின் கால்தடங்களை நோக்கித்தான் செல்லும்.

என்ன செய்தாலும், எந்த மாதிரியான வித்தையை பயன்படுத்தினாலும் பங்குச்சந்தையில் நம்மால் பணம் சம்பாதிக்க முடியாது என்கிறபோது, நாம் எதற்காக இது போன்ற விசயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்?

வெற்றி உறுதி என வீம்பாக இருந்து இழப்பதைவீட, தோல்வியின் தோற்றத்தை புரிந்துகொண்டு பயணத்தை தொடர்வதுதான் புத்திசாலித்தனம். காலையில் தொலைக்காட்சியை பாருங்கள் யாராவது ஒருவர் பங்குச்சந்தை பற்றிய சந்தேகங்களை தொலைபேசியில் தொடர்புகொள்பவர்களுக்கு விளக்கிச்சொல்லிக்கொண்டிருப்பார். தொடர்ந்து அவற்றை கேட்டுக்கொண்டு வாருங்கள். ஒருநாள் சந்தை வீழ்ச்சியடையும் போது ஏன் வீழ்ச்சியடைந்தது, எப்படி வீழ்ச்சியடைந்தது என விளக்கிச் சொல்லிக்கொண்டிருப்பார்களே தவிர இந்த வீழ்ச்சியை அவர்களால் முன்கூட்டியே ஏன் கணிக்கமுடியவில்லை என்பதை பற்றி அவர்களும் பேச மாட்டார்கள் அவர்களை தொடர்புகொள்பவர்களும் கேட்மாட்டார்கள். அவர்களை சொல்லி குற்றமில்லை ஏனெனில் பங்குச்சந்தையை பொருந்தவரையில் ஐரோப்பாவில் இடி இடித்தால் இந்தியாவில் மழை பெய்யும். எனவே வீழ்ச்சிக்கான காரணங்களை கணக்கிட முடியாது.

மரணம் உறுதி என தெரிந்த பின்பும் நாம் மகிழ்ச்சியாக வாழ்வதுபோல, பங்குச்சந்தை என்றால் வீழ்ச்சி என்பது உறுதி என்ற சிந்தனையையும் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அந்த வீழ்ச்சியில் நாம் சிக்கிக்கொள்ளாமல் பயணம் செய்வது எப்படி என்ற விதத்திலேயே நம் கவணம் செல்ல வேண்டும்.

சாதிக்க தேவைப்படும் சக்தி:

பங்குச்சந்தையில் உங்களால் எவ்வளவு காலத்திற்கு தாக்குப்பிடிக்க முடியும்? அதற்கு ஒரு அளவுகோல் உள்ளது “எவ்வளவு அடியை நீங்கள் தாங்குவீர்கள்!” என்பதே அந்த அளவுகோல். இந்த அளவுகோல் ஒவ்வொரு மனிதரிடமும் மாறுபட்டு இருக்கும். ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருக்கலாம், மற்றொருவர் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்திருக்கலாம், சந்தை வீழ்ச்சியடையும் போது பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்தவரின் கதை ஓர் நாள் அல்லது இரண்டு நாட்களில் முடிந்துவிடும். ஆனால் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தவர் தொடர்ந்து சில நாட்களுக்கு தாக்குபிடிக்க முடியும். இதுதான் அவர்கள் அடியை தாங்கும் அளவு. அதற்கு மேல் அவர்களால் தாக்குப்பிடிக்க இயலாது.

இந்த தாக்குப்பிடிக்கும் திறனை, ஒருவரின் வாங்கும் சக்தி என குறிப்பிடலாம். ஒருவர் பங்குச்சந்தை வணிகத்திற்காக எவ்வளவு தொகையை வைத்துள்ளார்? அவரால் உச்சகட்டமாக எவ்வளவு ரூபாய்க்கு பங்குகளை வாங்க முடியும்? என்பது அந்த நபரின் வாங்கும் சக்தியின் அளவைக்குறிக்கும்.

உதாரணமாக நீங்கள் பங்கு வர்த்தகத்திற்காக பத்தாயிரம் ரூபாய் வைத்திருக்கின்றீர்கள் என்றால் உங்களுடைய வாங்கும் சக்தியின் அளவு பத்தாயிரம் தான். ஒரு நல்ல வாய்ப்பை கண்டதும் நீங்கள் உங்களிடமுள்ள மொத்த பணத்திற்கும் பங்குகளை வாங்கிவிட்டால் உங்களுடைய வாங்கும் சக்தி தீர்ந்துவிட்டது என்று அர்த்தம்.

இந்த வாங்கும் சக்தியானது ஒவ்வொரு மனிதரிடமும் வேறுபட்டு இருக்கும். ஆனால் இவற்றை பொதுவாக நடுத்தர மக்களின் வாங்கும் சக்தி மற்றும் மேல்தட்டு மக்களில் வாங்கும் சக்தி என இரண்டுவிதமாக பிரித்துக்கொள்ளலாம். ஏனெனில் சந்தை வீழ்ச்சி என்றாலே அதில் அடிபட்டு முதலில் அழத்தொடங்குவது நடுத்தர மக்கள்தான், மேல்தட்டு மக்களுக்கும் அந்த முதலீட்டை பொருத்த வரையில் அப்போதைக்கு அது இழப்புதான் என்றாலும் பெரிய அடியாக அது அமையாது. அதனால்தான் இதுபோன்ற பிரிவினை. இந்த பிரிவினை நமக்கு மிகவும் அவசியமானது. அந்த அவசியத்தை நீங்கள் அடுத்தடுத்து படிக்கும் போது தெரிந்துகொள்வீர்கள்.

ஒரு விசயத்தை கவணித்தீர்களானால் உங்களுக்கொரு உண்மை புரியும் மேல்தட்டு மக்களை பொருத்தவரையில் தங்களிடமுள்ள மொத்த தொகையையும் முதலீடு செய்யாமலேயே நல்ல இலாபம் பெருகிறார்கள். ஆனால் நடுத்தர மக்களை பொருத்தவரையில் தங்களிடமுள்ள ஒட்டுமொத்த தொகையை முதலீடு செய்தாலும்கூட பெரிய அளவில் பிரச்சனைகளையும், சிறிய அளவில் இலாபத்தையும் சந்திக்கின்றார்கள். ஏனெனில் மேல்தட்டு மக்களிடம் வாங்கும் சக்தியானது மிக அதிகமாக இருக்கிறது. நடுத்தர மக்களிடம் வாங்கும் சக்தியானது மிக குறைவாக இருக்கிறது.

நடுத்தர மக்கள் தங்களிடமுள்ள பணத்தைக்கொண்டு ஒருமுறை அல்லது இருமுறை மட்டுமே பங்குகளை வாங்க இயலும். வாங்கிய பங்குகள் எதிர்பார்ப்புக்கு மாறாக எதிர் திசையில் பயணித்தால், பொறுமையாக காத்திருப்பதை தவிர வேறு எதுவும் அவர்களால் செய்ய இயலாது. அதற்கு மேல் அவர்கள் செயல்பட விரும்பினால் இருக்கும் ஒரே வழி கடன் வாங்குவதுதான், அதற்கு பேசாமல் கையை கட்டிக்கொண்டு பேசாமல் இருக்கலாம். இவ்வளவுதான் நடுத்தர மக்களின் வாங்கும் சக்தி.

இருப்பதோ குறைவான தொகை, கடன் வாங்க கூடாது, ஆனால் தங்களிடமுள்ள குறைந்த அளவு வாங்கும் சக்தியைக்கொண்டு மேல்தட்டு மக்களைப்போல் பிரச்சனைகள் இல்லாமல் அதிக அளவில் இலாபம் சம்பாதிப்பது எப்படி?

இதுதான் கேள்வி – இந்த கேள்விக்கான விடையைத்தான் இனி இங்கே தேடப்போகிறோம். எனவே காளையையும் அதற்கான கயிற்றையும் சிறிது காலத்திற்கு மறந்திருங்கள்.

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.