வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. சிற்றிதழ்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. தமிழில் வெளிவந்துள்ள அனைத்து சிற்றிதழ்களின் தகவல்களும் இந்தப் பகுதில் வாசிக்க கிடைக்கும்.
 
 
 

தமிழில் வெளிவரும் சிற்றிதழ்களில் சில:

கல்வெட்டு பேசுகிறது
நவீன விருட்சம்
நிழல்
முகம்
உயிர்மை
புதுவிசை
கவிதாசரண்
கூட்டாஞ்சோறு
பன்முகம்
நடவு
உன்னதம்
உங்கள் நூலகம்
புதிய புத்தகம் பேசுது
கலை
காலம்
தாய்மண்
புதுகைத் தென்றல்
சமரசம்
நம் உரத்த சிந்தனை
திரை
கதை சொல்லி
புதிய பார்வை
தீராநதி
காலச்சுவடு
படப்பெட்டி
ஆயுத எழுத்து
விழிப்புணர்வு
வடக்கு வாசல்
இனிய ஹைக்கூ
உழைப்பவர் ஆயுதம்
தை
மண்மொழி
தச்சன்
அதிர்வு
குழலோசை
தமிழ் நேயம்
யாதும் ஊரேமது
மலர்
தலித்முரசு
மீண்டும் கவிக்கொண்டல்
அநிச்ச
தமிழ் பணி
வல்லினம்
நறுமுகை
சோலைக்குயில்
கணையாழி
அணி
கிழக்குவாசல்
அணங்கு
தாமரை
கனவு
மெய்யறிவு
இனிய நந்தவனம்
அம்ருதா
பெண்ணியம்
சௌந்தரசுகன்

 

 

 
     
     
     
   
சிற்றிதழ்கள்
1
 
 
  சிற்றிதழ்


 
  சிற்றிதழ் என்பது தீவரமான உள்ளடக்கத்துடன் ஒரு குறிப்பிட்ட வாசகர்களைச் சென்றைடையும் இதழ் ஆகும். இது செய்யுள், கவிதை, சிறுகதை, தொடர்கதை போன்ற இலக்கிய ஆக்கங்களையும் கருத்துரை, விமர்சனம், திறனாய்வு, துறை ஆய்வு, விவாதம், நேர்காணல் ஆகியவற்றையும் தாங்கிவரும். சிற்றிதழின் முதன்மை நோக்கம் கருத்துப்பகிர்வே. அதாவது வியாபார நோக்கில் இலாபம் ஈட்டுவதை சிற்றிதழ் முதன்மைக் குறிக்கோளாய் கொள்வதில்லை.  
  ---------------------------------  
 

1958 ம் ஆண்டு சி. சு செல்லப்பா அவர்கள் வெளியிட்ட எழுத்து, சிற்றிதழ்களில் தொடக்க 50 களின் சிற்றிதழ்களில் குறிப்பிடத்தக்கத்து.

 
  ---------------------------------  
  சிற்றிதழ்கள்- ஓர் ஆய்வறிக்கை

 
  http://www.jeyamohan.in
/?p=249
 
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  சிற்றிதழ்கள் சிற்றிதழ்கள் வாயில்

தேடல்

வலம்புரி லேனா  

"தேடல் உள்ள உயிர்களுக்கே
தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்"

என்ற கவியரசு வைரமுத்துவின் அர்த்தம் நிறைந்த வரிகளை உரக்கச் சொல்லியபடி அருப்புக் கோட்டையிலிருந்து வெளிவரும் இதழ் `தேடல்’ 1998 தனது இலக்கியப் பயணத்தைத் தொடங்கிய இவ்விதழ் இதுவரை 75 இதழ்களை வெளியிட்டுள்ளது. ஆரம்பத்தில் மாத இதழாக வந்தது. இடையில் சிறிது காலம் தடைப்பட்டுத் தற்போது மீண்டும் தன் இலக்கியத் தேடலைத் தொடங்கியுள்ளது. சிறந்த சிற்றிதழுக்கான தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கப் பரிசினை இவ்விதழ் பெற்றுள்ளது. ஆரம்பத்தில் சட்டைப்பைக்குள் வைக்கும் பாக்கெட் சைஸ் அளவில் 16 பக்கங்களுடன் வெளியானது, அட்டைப் படத்துடன் உள்ளே கவிதைக்குரிய படம், அல்லது ஓவியம் ஆகியவற்றோடு இருந்தது. தற்போது செய்தித்தாள் வடிவில் மாதப் பத்திரிகையாக வந்து கொண்டிருக்கிறது. வாசித்து முடிக்க மிகக் குறைவான நேரமே செலவாகும். ஆனால் வாசித்து முடித்த பிறகு அதனைப் போல இரண்டு மடங்கு நேரம் நம்மை சிந்தனையில் ஆழ்த்திவிடும்.

காதல் சார்ந்த முதிர்ச்சியும் செறிவும் மிக்க கவிதைகள் இதழின் சிறப்பு என சொல்லலாம். அதற்காக சமூகம் சார்ந்த கவிதைகளிலும் குறை கொல்ல முடியாது; கன்னத்தில் அறைகிற கருத்துக்களை காகிதத்தில் இறக்கி வைத்திருப்பர்.

வாக்குறுதிப் புழுதிகளை
வாரியிறைத்துப் போயின
பிரச்சார வாகனங்கள்
வழக்கம்போல் எம்மக்கள்
ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்
ஓட்டுக்கு
எவ்வளவு தேறுமென!
அருணோதயத்தின் `வியாபாரம்’ என்ற இந்தக் கவிதை ஜனநாயகத்தின் கேலிக்கூத்தைச் சாடுகிறது.

அமரத்துவம் மிக்க காதலர்களையெல்லாம்
கவனத்தில் கொண்டு வந்தாய்
தத்துவங்கள் பல பேசி
சமாதானம் அடைந்தாய்
என்னிடம் பெற்ற யாவற்றையும்
திரும்ப தந்தாய்
உணர்வு கொன்று
உள்ளத்தைச் சிறை மீட்டாய்
எல்லாம் முடிந்ததென
இமை மூடித் திரும்பினாய்
அந்நொடி கசிந்த
உன் கண்ணீர்த் துளி
காட்டிக் கொடுத்தது
முழுதாய் என்னிடம் நீ
தோற்றுப் போனதை!

பாலப்பட்டி ஓவியர் என். அஞ்சுகத்தின் கவிதை இது. காதலர்களின் உன்னதமான பிரிவையும், அதில வெற்றி பெற்று நிற்கும் காதலையும் காட்சிப் படுத்துகிறது.

கவிதை நூல்களில் `படித்ததில் பிடித்தது’ என்று நல்ல கவிதைகளையும், `கேட்டதில் பிடித்தது’ என்ற திரை இசைப் பாடல்களில் நல்ல வரிகளையும் மறு வாசிப்புக்குத் தருகின்றனர்.

லட்சத் தீவும், காஷ்மீரும் பிரச்சனைக்குள் போய் சிக்கிக்கொண்ட வரலாற்று உண்மைகளை, தொடர் கட்டுரைகளாக்கியுள்ளனர்.

ப்ளக்ஸ் பேனர் வருகை ஓவியர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளதை அவர்களின் நேர்காணல் மூலம் கருத்துக்கள் பெற்று வெளியிட்டுள்ளார் எஸ் முருகன்.

மு. முருகேஷ், புன்னகை சிவா, ஜே. தமிழ்ச் செல்வன், கவியோவியத் தமிழன், செங்கதிர்ச் செல்வன் ஆகியோரது கவிதைகள் நறுக்கென மனதில் குத்துகிறது.

இதழின் ஆசிரியர் எஸ் முருகன் ஓர் ஓவியர் என்பதால் இதழினை நுணுக்கமான, கலை நேர்த்தி மிக்க வடிவமைப்புடன் தயாரிக்கிறார். அருணோதயமும், பா. இராஜேந்திரனும் ஆசிரியர் குழுவில் துணை நிற்கின்றனர்.

கட்டுரை, கவிதை, சிறுகதை, தகவல் தொகுப்பு, உள்ளூர் செய்திகள் என இடம் பெற்றாலும் கவிதைக்கான நல்லதொரு தேடலை வாசகர்கள் மத்தியில் உருவாக்குகிறது.

இதழ் ஆசிரியர்: எஸ். முருகன்

இதழ் முகவரி:

தேடல்,
34, வடக்கு ரத்தினசபாபதிபுரம் தெரு,
திருநகரம், அருப்புக்கோட்டை, 626 101,
செல்போன் 97889 66910


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.