வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. சிற்றிதழ்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. தமிழில் வெளிவந்துள்ள அனைத்து சிற்றிதழ்களின் தகவல்களும் இந்தப் பகுதில் வாசிக்க கிடைக்கும்.
 
 
 

தமிழில் வெளிவரும் சிற்றிதழ்களில் சில:

கல்வெட்டு பேசுகிறது
நவீன விருட்சம்
நிழல்
முகம்
உயிர்மை
புதுவிசை
கவிதாசரண்
கூட்டாஞ்சோறு
பன்முகம்
நடவு
உன்னதம்
உங்கள் நூலகம்
புதிய புத்தகம் பேசுது
கலை
காலம்
தாய்மண்
புதுகைத் தென்றல்
சமரசம்
நம் உரத்த சிந்தனை
திரை
கதை சொல்லி
புதிய பார்வை
தீராநதி
காலச்சுவடு
படப்பெட்டி
ஆயுத எழுத்து
விழிப்புணர்வு
வடக்கு வாசல்
இனிய ஹைக்கூ
உழைப்பவர் ஆயுதம்
தை
மண்மொழி
தச்சன்
அதிர்வு
குழலோசை
தமிழ் நேயம்
யாதும் ஊரேமது
மலர்
தலித்முரசு
மீண்டும் கவிக்கொண்டல்
அநிச்ச
தமிழ் பணி
வல்லினம்
நறுமுகை
சோலைக்குயில்
கணையாழி
அணி
கிழக்குவாசல்
அணங்கு
தாமரை
கனவு
மெய்யறிவு
இனிய நந்தவனம்
அம்ருதா
பெண்ணியம்
சௌந்தரசுகன்

 

 

 
     
     
     
   
சிற்றிதழ்கள்
1
 
 
  சிற்றிதழ்


 
  சிற்றிதழ் என்பது தீவரமான உள்ளடக்கத்துடன் ஒரு குறிப்பிட்ட வாசகர்களைச் சென்றைடையும் இதழ் ஆகும். இது செய்யுள், கவிதை, சிறுகதை, தொடர்கதை போன்ற இலக்கிய ஆக்கங்களையும் கருத்துரை, விமர்சனம், திறனாய்வு, துறை ஆய்வு, விவாதம், நேர்காணல் ஆகியவற்றையும் தாங்கிவரும். சிற்றிதழின் முதன்மை நோக்கம் கருத்துப்பகிர்வே. அதாவது வியாபார நோக்கில் இலாபம் ஈட்டுவதை சிற்றிதழ் முதன்மைக் குறிக்கோளாய் கொள்வதில்லை.  
  ---------------------------------  
 

1958 ம் ஆண்டு சி. சு செல்லப்பா அவர்கள் வெளியிட்ட எழுத்து, சிற்றிதழ்களில் தொடக்க 50 களின் சிற்றிதழ்களில் குறிப்பிடத்தக்கத்து.

 
  ---------------------------------  
  சிற்றிதழ்கள்- ஓர் ஆய்வறிக்கை

 
  http://www.jeyamohan.in
/?p=249
 
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  சிற்றிதழ்கள் சிற்றிதழ்கள் வாயில்

இனிய நந்தவனம்

வலம்புரி லேனா  

மலைக்கோட்டை பல வரலாற்று நிகழ்வுகளை உள்ளடக்கிய மாநகரம். அங்கிருந்து வெளிவரும் இதழ் `இனிய நந்தவனம்’ ஜனரஞ்சமான இலக்கிய இதழுக்குரிய கூறுகளைக் கொண்டு வெளிவரும் இதழ்.

சிற்றிதழ்களில் வெற்றிகரமான தடத்தை உருவாக்கி வாசகர்களுக்கும், படைப்பாளர்களுக்கும் நல்ல வாசலைத் திறந்து வைத்திருக்கும் இதழ். ஆசிரியர், நிர்வாக ஆசிரியர், இணையாசிரியர், துணையாசிரியர், சிறப்பாசிரியர், ஆலோசகர்கள், சட்ட ஆலோசகர்கள்,

நிழற்படக் கலைஞர், ஆலோசனைக் கழு நிருபர்கள், என பத்திரிகைக்குரிய கட்டமைப்புகளில் எதனையும் குறை வைக்காமல், திறமை மிக்கவர்களைக் கொண்டு பாரத தேசத்தில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் உலா வருகின்றது.

1997- ஆம் ஆண்டு சனவரி மாதம் தொடங்கப்பட்ட இனி நந்தவனம் இதழ் தொடர்ந்து 11-ஆம் ஆண்டாக மாதந்தோறும் மலர்ந்து வருகிறது.

கலை, இலக்கியம், சுய முன்னேற்றம், மக்கள் மேம்பாட்டுக் கருத்துகள் ஆகியவற்றை முன்மொழியும் படைப்புகளை நந்தவனத்தில் பதியமிட்டு வாசகர்களின் நெஞ்சில் ஆணிவேராக அமைந்துள்ளது இதழின் பணி.

இவ்விதழ் தற்போது 650 சந்தாதாரர்களைப் பெற்று 1500 பிரதிகள் வரை வெளியிடப்படுகிறது. சந்தா விளம்பரம், புரவலர் நன்கொடை எனச் சிற்றிதழ்களின் வழக்கமான பாதிப்புகள் எதுவும் படாதவண்ணம் மிகத் திறமையான முறையில் இதழை நடத்தி வருகிறார். ஆரம்ப காலங்களில் தான் எழுத்தாளனாய், கவிஞனாய் உருவாவதற்குப் பட்ட சிரமங்களை மனதில் கொண்டு அதனைப் போன்று புதிதாய் எழுத வருபவர்கள் படைப்புகளை வெளிப்படுத்த வாய்ப்பில்லாமல் மனமொடிந்து போய்விடக் கூடாது
என்பதற்காகவே இதழைத் தொடர்ந்து நடத்தி புதியவர்களுக்கு நிறைய வாய்ப்பளித்து வருவதாக மிக்க மகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார் இனிய நந்தவனம் இதழின் ஆசிரியர் த. சந்திரசேகரன்.

இந்தப் பதினோரு ஆண்டுகளில் நிறைப் பேருக்கு எழுத வாய்ப்பளித்ததும் புதிய எழுத்தாளர்களை உருவாக்கியதும் நம்மால் இயன்ற பணியைச் செய்துள்ளோம் என்ற மன நிறைவை அளிப்பதாகவும் கூறுகிறார்.

இதழின் அட்டை பல வண்ணத்தில் கண்களைக் கவர்கிறது. ஒவ்வொரு இதழின் அட்டையிலும் சிந்தனை மற்றும் செயல்பாடுகளின் சிறந்து விளங்கும் ஒரு நபரின் படம் அலங்கரிப்பது சிறப்பம்சமாகும்.

முதல் பக்கத்தில் `நுழைவாயில்....’ என்ற தலைப்பில் ஆசிரியர் வாசகர்களோடு பேசுகிறார். கடைசிப் பக்கத்தில் மிக ஆழமான சிந்திக்க வைக்கும் கருத்துக்களைச் சுமந்து தலையங்கம் அமைந்துள்ளது. தன்னம்பிக்கையூட்டக் கூடிய கட்டுரைகள், சுயமாகத் தொழில் தொடங்கி வெற்றி பெற்றவர்களின் பேட்டி, அனுபவங்கள், பிரசுரமாகி உள்ளன.

ஆங்காங்கே விளம்பரங்களும் வந்தவனம் என்ற தலைப்பில் வாசகர் கடிதங்களும், துளிப்பாவனத்தில் நிறைய கவிஞர்களுக்கு வாய்ப்பும், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் படைப்புகளும் காண முடிகிறது. நூல் விமர்சனம் எளிமையாகவும், சிறப்பாகவும் அமைந்துள்ளது. இலக்கிய நிகழ்வுகளும் செய்திகளாக இடம் பெற்றுள்ளன.

இதழின் முத்தாய்ப்பான செய்தி இதழ்தோறும் ஒரு நேர்காணல் இருக்கும். ஸ்டாலின் குணசேகரன், பொன்னீலன், ஈழத்து மூத்த பத்திரிகையாளர் சு. சபாரத்தினம், முதல் பெண் ஓதுவார் அங்கயற்கண்ணி, கின்னஸ் சாதனையாளர் பரத நாட்டிய இளைஞர் தருமபுரி ஸ்ரீதரன், ராஜேஷ்குமார், திலகவதி ஆகியோரது நேர்காணல்கள் நேர்மையான கருத்துக்களை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

ஆரம்பத்தில் நந்தவனம் என்கிற பெயரில் வந்தபோது தமிழகப் படைப்பாளிகளின் படைப்புக்களோடு வந்தது. இனிய நந்தவனம் என்று பதிவு பெற்ற இதழாக மாறிய பின் வடிவமைப்பில், உள்ளடக்கத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன.

வெளிநாட்டுக் கவிஞர்கள், எழுத்தாளர்களின் தொடர்புகள் கிடைத்ததும், அவர்களின் படைப்புகளுக்கும், பேட்டிகளுக்கும், அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

பிரான்ஸ், இலங்கை, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர்,டென்மார்க், சுவிட்சர்லாந்து, சீசல், ஜெர்மனி, அமெரிக்கா, ஆகிய நாடுகளில் வாழும் படைப்பாளர்கள் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
மார்ச் 2009 இதழ் சிங்கப்பூர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் பேட்டியுடன். நூல் விமர்சனச் சிறப்பிதழாக மலர்ந்துள்ளது!

நுழைவாயிலில் சென்னை உயர்நீதிமன்ற வன்முறை நிகழ்வு குறித்த அச்சமும் கவலையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர். ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளம்
வற்றியதை மறந்தனர்
துள்ளும் மீன்கள்
என்ற ஓவியக் கவிஞர் அமுதபாரதியின் துளிப்பா நீர்நிலைகளின் சிதைவுகள் மற்றும் ஆக்ரமிப்புகள் பற்றி வினாவெழுப்புகிறது.

கங்காரு நாட்டுக் கடிதம் என்ற தலைப்பில் ஆஸ்திரேலியாவிலிருந்து எழுதும் செந்தமிழ்ச் செல்வர் பாடும் மீன் சு. சிறிகந்தராசாவின் கடிதக் கட்டுரை தமிழகர்கள் இலங்கையின் வந்தேறு குடிகளா? என்ற வினாவிற்கு பதிலுரைப்பது போன்று வரலாறுகளைக் கொண்டு இலங்கைக்கும் தமிழனுக்கும் உள்ள உரிமையை நிலைநாட்டுகிறது (கட்டுரை கீழே தரப்பட்டுள்ளது)

தமிழகர்கள் இலங்கையின் வந்தேறு குடிகளா? - செந்தமிழ்ச் செல்வர் பாடும்மின் சு. சிறிகந்தராசா, ஆஸ்திரேலியா.

இனிய நந்தவனம் வாசகர்களுக்கு என் கனிவான செந்தமிழ் வந்தனங்கள்!

சித்திரை மாதத்துச் சென்னை வெயிலைப் போல மெல்பேண் நகரில், சொல்லமுடியாத அளவுக்கு கொழுத்தும் வெயில், அனல் கக்கிக் கொண்டிருக்கிறது. வீட்டுக்குள்ளிருந்து வெளியில் வந்தால் குபீரென்று அடிக்கும் வெப்பத்தில் முகம் எல்லாம் எரிகிறது. வியர்வை சொரிகிறது. குளிரூட்டப் படாத வீடுகளில் வீடுகளுக்கு உள்ளேயும் வெப்பத்தைத் தாங்க முடியாது இருக்கிறது. இந்த நிலை ஒரு வாரம் அளவில் நீடித்தது. மெல்பேண் மட்டுமின்றி, சிட்னி, அடிலைட் ஆகிய நகரங்கள் அமைந்துள்ள மாநிலங்களிலும் இதே நிலைமைதான். சில இடங்களில் காட்டுத் தீயில் கருகி சிலர் உயிரிழந்தனர். வீடுகள், கார்கள், உடமைகள் தீக்கிரையாயின. ஆனால் ஆச்சரியம் என்ன வென்றால் சில மாநிலங்களில் தீயின் அகோரம் இப்படியிருக்கும் இதேசமயம், குயின்ஸ்லாந்து எனப்படும் ஒரு மாநிலத்தில் கடும் மழையும், கட்டுப்படுத்த முடியாத வெள்ளமும் மக்களைத் தத்தளிக்க வைக்கின்றன.

மெல்பேணிலும் சிட்னியிலும் இந்தக் கொழுத்தும் வெளியிலும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்தக் கோரும் ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடைபெற்ற. ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்து கொண்டு தம் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். இப்பொழுது உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டுத் தமிழர்களும் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் இடைவிடாது நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்குத் தமிழ்நாட்டில் மக்களின் உணர்வலைகள் உச்சக்கட்டத்தில் வீசிக் கொண்டிருப்பது உலகமே அறியும். இந்த நிலையில் இன்னும் பலர், ஈழத் தமிழர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சென்று குடியேறிவர்கள் என்றும், தாயகக் கோட்பாட்டை எழுப்புவதற்கு உரிமை அற்றவர்கள் என்றும் தவறான கருத்துக்களை கொண்டிருக்கின்றார்கள். ஈழத் தமிழர்கள் யார் என்பது பற்றிய விளக்கத்தை கட்டுரையாக காலத்தின் தேவை கருதி இன்றை கங்காரு நாட்டைக் கடிதத்தில் நந்தவனம் வாசகர்களுக்கு தரவிருக்கிறேன்.

இலங்கை இனப்பிரச்சினை இலங்கை மக்களின் இன்றைய வாழ்நிலை அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டியதேயன்றி, பண்டைய வரலாறுகளின் அடிப்படையில் பார்க்கப்படவேண்டியதல்ல என்கின்ற கருத்து உள்நாட்டு அரசியல்வாதிகள் பலரிடம் நிறைந்திருக்கின்றது. பன்னாட்டு அரசியல் தலைவர்கள் சிலரிடமும் இக்கருத்தே படிந்திருக்கின்றது. பண்டைய பெருமைகளைப் பேசுவதை விடுத்து இன்றைய நிலைமைகளை எண்ணிப் பார்ப்பதே சாலச் சிறந்தது என்கின்ற வாதம் மேலெழுந்த வாரியாகப் பார்க்கப்படுகின்றபோது மிகச்சரி போலவேத் தோன்றும், ஆனால், தமிழ் மக்களின் தாயக் கோட்பாட்டுக் கோரிக்கையின் அடிப்படையே தமிழ் மக்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் என்பதுதான்.

இதை எதிர்க்கின்ற சிங்களப்பேரின வாதிகள் புனைந்துரைக்கும் கதைகளும், கட்டுரைகளும் தமிழர்கள் வந்தேறு குடிகள் என்கின்ற கருத்தினை வலியுறுத்துவதற்காகவே எழுகின்றன. எனவே, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுகின்ற் முயற்சிகள் எழுகின்றபோதெல்லாம் இலங்கைக்குச் சொந்தம் கொண்டாட உரிமை கொண்டோர், முந்தி முளைத்த பரம்பரையினரேயன்றி, இடையில் வந்து அமர்ந்துகொண்ட இனத்தவரல்ல என்ற அடிப்படையிலேயே வாதங்கள் வைக்கப்படுகின்றன.

காலங்காலமாகத் தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்ற போதெல்லாம் இந்தக் கருத்தே வலியுறுத்தப்பட்டு வந்திருக்கின்றது. அந்த அடிப்படையிலேதான் இலங்கையின் முன்னைய சனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்காவும் தமிழர்களை வந்தேறு குடிகள் என்று முன்னர் ஒருமுறை வாய்மொழிந்து அருளியிருந்தார். ஸ்ரீலங்காவின் இராணுவத் தளபதியும் அண்மையில் அதே கருத்தைக் கூறியிருக்கிறார்.

எனவே, தமிழர்களே இலங்கையின் மூத்த குடிகள் என்பதும், சிங்களவர்கள் வருவதற்கு முன்பிருந்தே இலங்கையில் சீவித்த வந்தவர்கள் என்பதும் உறங்கிக் கிடக்கின்றன உண்மைகளாக மட்டும் இருந்துவிடலாகாது. உலகெங்கும் உரத்துச் சொல்லப்பட வேண்டிய வரலாற்று நிகழ்ச்சியாகும் என்பதைத் தமிழினம் உணர வேண்டும்.

சிங்கள இனத்தில் முதல் தோன்றலாக, இந்தியாவிலிருந்து வந்து இறங்கிய விஜயன் என்பவனே கொள்ளப்படுகின்றான். அவன் ஒரு பௌத்த சிங்களவன் என்று சொல்லப்படுகின்றன. விஜயன் பௌத்த சமயத்தவனா என்பதைப் பின்னர் ஆராய்வோம். அதற்கு முன்னரே அவன் ஒரு சிங்கள இனத்தவனா என்பதை நோக்குவோம்.

தென்னிந்தியாவில் இப்போதுள்ள ஆந்திராவின் மேற்குப் பகுதி லால(ராட) என்ற பெயரில் ஒரு நாடாக இருந்தது. கலிங்கம் என்பது அதன் மற்றொரு பெயர். அடர்ந்த காடுகளின் மத்தியில் அமைந்திருந்த அந்த நாட்டின் தலைநகரம் சிங்கபுரம். லால நாட்டின் மன்னன் நல்லாட்சி நடத்தினான். மக்கள் அவனில் பெருமதிப்பு வைத்திருந்தனர். அத்தகைய மன்னனுக்குக் குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்புபோல, விஜயன் என்றொரு மகன் இருந்தான். பட்டத்து இளவரசனான விஜயன் அரசனுக்கு முற்றிலும் எதிர்மாறாக இருந்தான். கெட்ட நண்பர்களோடு சேர்ந்து கொண்டு கொட்டமடித்துத் திரிந்தான். மன்னனாகவேண்டிய அவன் கள்வனாக அலைந்தான். கொள்ளை அவனின் கடமைகள்.மதுவும், மாதுவும் அவனது உடமைகள். அவனைப் பொறுத்தவரை மக்கள் அவனது அடிமைகள்.

விஜயனும் அவனது தோழர்களும் புரிகின்ற அட்டூழியங்களாலும், அடாவடித் தனங்களாலும் துன்பமுற்ற மக்கள் மன்னனிடம் முறையிட்டனர். விஜயனின் கொடுமைகளைப் பொறுக்கமாட்டாத மன்னன் அவனையும் அவனது 700 தோழர்களையும் கைது செய்து பலவந்தமாக படகுகளில் ஏற்றி நாடு கடத்தினான்.

திக்குத்தெரியாது கடலில் அலைந்த படகுகள், ஈழத்தமிழ் இனத்தின் தலைவிதி காரணமாகவே என்னவோ, இலங்கைத் தீவின் கரையொன்றில் ஒதுங்கின விஜயனும் தோழர்களும் வந்த படகுகள், இப்போதைய மன்னார் கடற்பரப்பெல்லைக்குட்பட்ட தாமிரபரணி என்னும் கதம்ப நதிக்கரையை அண்டிய பகுதியிலே கரையொதுங்கின என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். தாமிரபரணி என்பது திரிபடைந்து தம்பன்ன என்று அழைக்கப்படுகிறது. தம்பன்ன என்ற இடத்தை தலைநகராகக் கொண்டு விஜயன் 38 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறான் என்பதால் அவன் வந்திறங்கிய இடம் அதுவேயென்ற முடிவுக்கு அந்த ஆராய்ச்சியாளர்கள் வந்திருக்கிறார்கள். வேறு சில ஆராய்ச்சி முடிவுகள் விஜயன் இலங்கைத் தீவின் தென்பகுதியிலேயே கரையொதுங்கினான் என்று அறுதியிட்டுக் கூறுகின்றன.
விஜயனின் படகுகள் கரையொதுங்கிய இடம் பற்றிய இந்த இரண்டு கருத்துக்களையும் சீர்தூக்கிப் பார்ப்பதற்கு முன்னர், முக்கியமானதொரு விடயத்தைக் கவனத்திற்கு கொள்ளுதல் வேண்டும். அதாவது விஜயன் வந்து சேர்ந்தபொழுது, இலங்கை விலங்குகள் மட்டும் வாழ்கின்ற சோலை வனமாகவோ அல்லது விலங்குகளும் கூட இல்லாத வெறும் பாலைவனமாகவோ இருந்ததா என்பதே அந்த விடயமாகும்.

இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து கடற்கோளால் இலங்கை துண்டாக்கப்பட்டபோதே மக்கள் அங்கே வாழ்ந்திருந்தனர் என்பது தான் மறுக்க முடியாத வரலாற்று உண்மையாக ஆராய்ச்சியாளர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழில் தண்பொருநை என்று இருந்த பெயர். வடமொழியல் தாமிரபரணி என்று ஆனது. பாளிமொழியில் அது திரிந்து தம்பன்ன என்றானது. இரண்டாவது கடற்கோள் ஏற்படுவதற்கு முன்னர் பொதிகை மலையில் தோன்றிய பொருநையாறு கிழக்கு நோக்கி இலங்கை வரை பாய்ந்ததாக இலக்கியங்கள் இயம்புகின்றன. வரலாறும் அதனைப் பதிவு செய்திருக்கிறது.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் சந்திரகுப்த மௌரியனின் அரண்மனைக்கு செலெகஸ் நொகொதரால் அனுப்பி வைக்கப்பட்ட கிரேக்கத் தூதுவரான மெகஸ்தீனஸ் (கி.மு.302-296) என்பவரும் அவ்வாறே கூறியுள்ளார்.

இவர் இலங்கைத் தப்பிரபேன் என்று குறிப்பிடுகின்றார். தாமிரபரணி என்பதை பிறசேதத்தவர் உச்சரித்த விதமே தப்பிரபேன் ஆகும். கி.மு. 5 ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தாமிரபரணி என்ற தமிழ்ப் பெயரால் இலங்கைத் தீவு வெளிநாடுகளில் பிரபல்யமாகவிருந்தது என்பதை வரலாற்று நூல்களிலிருந்தும், இந்திய கிரேக்க இலக்கியங்களிலிருந்தும் அறிய முடிகின்றது.

தாமிரபணியாற்றங்கரையில் வாழ்ந்த மக்கள் தமிழர்கள். ஆதிப்பாண்டியர்கள், கடற்கோளுக்கு முன்னர் பாண்டிய நாட்டினராக இருந்த சைவப் பெருங்குடி மக்கள் அவர்கள். கடற்கோளால் இலங்கை தனித்தீவான நாள் முதல் வாழ்ந்து வரும் மக்கள் கூட்டத்தினர் அவர்கள்.

அதாவது இலங்கை தனித் தீவாகத் தோன்றுவதற்கு முன்னரும். அதன் பின்னரும் `பதியேழு அறியாப் பழங்குடியினர்’ என்ற இளங்கோ அடிகளின் கூற்றுங்கிணங்க ஒரே இடத்தில், ஒரே நிலத்தில் வாழ்ந்திருந்த ஒரே இனத்து மக்கள். எனவே தனியொரு தீவாக இலங்கை பிரிகின்றபோது நிலத்தோடு பிரிந்துநின்ற இனத்தவர்கள் அவர்கள் (தொடர்ச்சி அடுத்த இதழில்)

உச்சகட்டமாக நிகழும் ஈழப்போரில் இனப்பிரச்சினையின் ஆணிவேரை, வரலாற்று உண்மையை உணர்ந்து தீர்வு காண வேண்டும.

பெண்ணிரயைப் பெருமைப்படுத்தும் விதமாக கட்டுரைகளும் பொன்மொழிகளும் இடம் பெற்றுள்ளன.

உலகத் தமிழர்களிடையே உலாவரும் மக்கள் மேம்பாட்டு இதழாக வெளிவரும் இனிய நந்தவனம் வாசகர்களிடையே உன்ன மணம் வீசி உயர்ந்து நிற்கிறது.

இதழ் ஆசிரியர்: த. சந்திரசேகரன்.

இதழ் முகவரி :

இனிய நந்தவனம்,
18 பெரிய செட்டித் தெரு,
உறையூர், திருச்சி - 620 003.
செல்போன் 94432 84823/96003 63511

ஆண்டுச் சந்நா ரூ: 60 தனி இதழ் ரூ.5.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.