இந்த தெருவுல ராமசாமின்னு ரிடையர்ட் தாசில்தார் இருக்காருல்ல. அவர் வீட்டுக்குப் பெண் பார்க்க வந்திருக்கோம் சார். அவசரத்துல அவர் வீட்டு அட்ரஸை எடுத்துட்டு வரலே....எந்த வீடுன்னு சொல்றீங்களா?"
காரிலிருந்த அந்த பெரியவர் இப்படிக் கேட்டதும் சற்று யோசித்தார் பலராமன்.
~ராமசாமி வீட்டுக்கா வந்திருக்காங்க? என் பெண்ணுக்கு ஒரு வரன் தேடிக்குடுய்யான்னு எத்தனை தடவை சொல்லியும்கூட கண்டுக்க மாட்டேங் கறார்.....இவரையெல்லாம் மைத்துனருன்னு சொல்லிக்கவே கேவலமா இருக்கு!| - அவர் மனதுக்குள் ஏதோ நெருடியது.
'ரிடையர்ட் தாசில்தார் ராமசாமிதானே சார்? என்னோட மச்சினர் தான்!.......திடீர்னு ஒரு சாவு சேதி வந்து, குடும்பத்தோட ஸ்ரீரங்கம் புறப்பட்டுப் போயிருக்காரே!"
காரிலிருந்தவர் முகம் வாடிவிட்டது. 'நாங்க இன்னிக்கு வர்றோம்னு சொல்ல போன்ல ட்ரை பண்ணினேன். கிடைக்கலே!"
'காலைல தான் சாவு சேதி வந்து புறப்பட்டுப் போயிட்டார் சார்!"
சாவு சேதி என்றதும் முகத்தைச் சுளித்த அவர், காரினுள்ளேயிருந்த பெண்களிடம் ஏதோ பேசிவிட்டுத் திரும்பி பலராமனைப் பார்த்து, 'சரி சார்......பேசி முடிச்சிடலாம்னுதான் வந்தோம். சகுனமே சரியில்லே.... நாங்க வந்துட்டுப்போன விஷயத்தைமட்டும் அவர்கிட்ட சொல்லிடுங்க! வர்றோம் சார்.."
கார் புறப்பட்டுப் போய்விட்டது.
~யோவ் ராமசாமி! என் பொண்ணுக்கு ஒரு வரனைப் பாத்துக்குடுய் யான்னு பலதடவை சொல்லியும் காதுல வாங்கிக்காம, உம்ம பொண்ணுக் கேல்ல சூப்பரான மாப்பிள்ளையா தேடுறீரு....நீர் உம்ம பொண்ணுக்கு எப்படி முடிச்சிடுறீருன்னு பாத்துடுறேன்!| என்று தன் மைத்துனர் ராமசாமியை மனத்துக்குள் திட்டியவாறே நடந்தார் பலராமன், அவர் திருப்பி அனுப்பிய அந்த வரன், ராமசாமியின் மகளைப் பார்க்கவரவில்லை, தன் மகளுக்கு முடிக்கத்தான் மைத்துனர் ஏற்பாடு செய்து வரவழைத்திருந்தார் என்ற உண்மை அவருக்குத் தெரியாமல் போய் விட்டது, பாவம்!
முற்றும்
|