பறவைகள்
இந்தியத் தீபகற்பத்தின் ஏழு வடமாநிலங்களிலிருந்து தென் முனையில் உள்ள வயநாடு வரை பழங்குடிமக்கள் வாழ்ந்து வருகின்றனர். பெரும் குழுமங்களின் ஆக்கிரமிப்பாலும், நிலவுடைமையாளர்களின் ஆதிக்கத்தாலும், பேராசை கொண்ட ஒப்பந்தக்காரர்கள், வட்டிக்கு விடுவோர், வணிகர்களின், காட்டு இலாக்கா அதிகாரிகளின், அரசாங்க அதிகார வர்கங்களின், காவல் துறையினரின் கொடுங்சுரண்டலுக்கும், ஒடுக்கு முறைக்கும், அடக்கு முறைக்கும் பாகுபாட்டிற்கும் காலங்காலமாய் ஆட்பட்டு இன்னலுற்று வருகின்றனர். காடுகளின் விளைபொருட்களை சேகரிக்கும் மரபுவழிப்பட்ட உரிமைகள் பழங்குடிகளுக்கு மறுக்கப்பட்டு வரும் அதேவேலையில் மலைகளை அழித்து மூன்று லட்சம் கோடி மதிப்புள்ள பிரம்மாண்டமான எஃகுத் தொழிற்சாலைகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றனர். இப்படி இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டு போகலாம். ஊடகங்களில் அவர்கலுள் சிலர் விரக்தியின் உச்சத்திற்கு சென்றிறுப்பதாக செய்திகள் வருகின்றன. குறிப்பாக பள்ளிக் கூடங்களை கூறிவைத்து தாக்குதல்கள் தொடுக்கப்படுவதாக பத்திரிக்கை செய்திகள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறது.
குறிப்பாக அந்த அடர்ந்த தண்டகாரண்யாக் காடுகளில் அநேக விதமான அறியவகை, உயர்ந்த ரக பறவை இனங்கள் காணப்படுகின்றன என்பது நாம் அறிந்த விசயம். அந்த அடர்ந்த பசுமையான மரங்களில் கூடு கட்டி, முட்டை இட கூட்டம் கூட்டமாக பறவைகள் வரும் காட்சி, கண்களுக்கு விருந்தாக அமையும் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டி இருக்காது. பறவைகளையும், அவற்றின் பழக்க வழக்கங்களையும் பார்க்க விரும்பும் அநேகர் இவ்விடத்திற்கு வருவதுண்டு. முன்பு ஒரு நாள் இந்தக் காட்டிற்கு, கருணை உள்ளம் கொண்ட ஒரு மூதாட்டி வந்தார். அங்கு இருந்த பறவைகள் தங்கள் மகிழ்ச்சியை அவற்றின் இனிமையான சப்த ஜாலங்களை அவரின் காதுகளில் அமுதகானமாக பொழிந்து, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டன. அந்த மாதிரியான சமயங்களில் அந்த மூதாட்டி, அந்த நாத வெள்ளத்தில் மெய்மறந்திருப்பார். அந்தப் பறவைகளின் கள்ளங் கபடமற்ற, ஆனந்த மயமான வாழ்க்கையை ரசிப்பதில் அலாதி பிரியம்.
ஒரு சமயம் அந்த மூதாட்டி காட்டின் வழியே போய்க் கொண்டிருக்கும் போது, அருகில் இருந்த பள்ளிக் கூடத்திலிருந்து “காக்கையின் நிறம் கருப்பு“ “நாய் குறைக்கும்“ என்று ஆசிரியர் பொது அறிவு பாடம் நடத்திக் கொன்டிருந்தார். மானவர்கள் ஒருமித்த குரலில் உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தனர். அதைக் கேட்டு சிரித்துக் கொண்டு அங்கேயே இளைப்பாரினார். காக்கை வடை திருடியது, அதை நரி ஏமாற்றியது என்றும் பாடம் நீண்டுகொண்டே இருந்தது. தூரத்தில் பலம் படைத்த சீமை தேசத்து வேடர்கள் அந்தப் மலைகளையும், மரங்களையும், பறவைகளையும் பேராசையுடன் பார்ப்பதை கண்டு, அதிர்ந்து போனால் மூதாட்டி. வேடர்கள் ஆளுக்கொரு திசையாய் சென்றனர். ஆனால் இம்முறை அந்த வேடர்கள் வில்லும், அம்பும் அற்று நிராயுதபாணிப்போல காட்சியளித்தான். அவன் முதுகில் ஒரு பெரிய வலையும், தோளில் ஒரு கூடையும் தொங்கியதைக் கண்டு யோசிக்கலானால் மூதாட்டி.
பறவைகளின் சத்தத்தைக் கேட்ட அந்த வேடனின் கண்கள் பேராசையினால் பளபளத்தன. உடனே அவன், கூடையிலிருந்து, கொஞ்சம் தானியத்தை இறைத்து, அவற்றின் மேல் வலையை விரித்து. சற்று தூரத்தில் சென்றமர்ந்து, காத்துக் கொண்டிருந்தான்.
தானியங்கள் இறைந்திருப்பதைக் கண்ட பறவைகள், கீழே பறந்து வந்து, தரையில் அமர்ந்து, தானியத்தைக் கொத்த ஆரம்பித்தன. ஐயோ! உடனே அவை வேடன் விரித்த வலையில் சிக்கிக்கொண்டன. கூட்டமாக வலையில் சிக்கிய பறவைகளை ஒன்று சேர்த்து, கூடைக்குள் தினித்து பிடித்துச் சென்றான்.
அந்தப் பறவைகளின் நிலையை எண்ணி, மனம் வருத்தமடைந்தாள் மூதாட்டி, உடனே அந்த அடர்ந்த காட்டிற்குள் சென்று பறவைகளுக்கு எச்சரிக்கை விடுத்தார் “நான் சொல்வதை சற்று காது கொடுத்துக் கேளுங்கள். மீண்டும் இக்காட்டுப் பகுதிக்குள் வேடர்கள் திரிகிறார்கள். இம்முறை வில்லில்லை அம்புமில்லை. வேடன் வருவான், வந்து தானியத்தை இறைப்பான், இறைத்து பேராசை தூண்டுவான், தூண்டி அதன் மேல் வலையை விரிப்பான்” என்றார்.
எந்த சலணமுமற்று இருந்தது. “நான் சொன்னது உங்களுக்குப் புரிந்ததா?” என்றாள் மூதாட்டி. பதிலில்லை. அருகில் இருந்த பள்ளிக் கூட ஆசிரியரின் உதவியை நாடினாள். முதலில் தயங்கிய ஆசிரியர் பிறகு நீண்ட யோசனைக்கு பிறகு உதவினார்.
“பறவைகளே! ஓ..! பறவைகளே! வேடன் வந்து, தானியத்தை இறைத்து, அதன் மேல் வலையை விரிப்பான். நீங்கள் தானியங்களைக் கொத்த வந்தும், வலையில் சிக்கிக் கொள்வீர்கள். அதனால் எச்சரிக்கையாக இருங்கள்! வேடன் எச்சரிக்கை” என்று சொல்லி, “நான் சொன்னது உங்களுக்குப் புரிந்ததா?” என்றார்.
“ஆம்! நன்றாகப் புரிந்தது!“ என்று ஒருமித்த குரலில் உரக்கச் சொல்லின பறவைகள்.
“என்ன புரிந்தது?”
‘வேடன் வருவான்... எனத் தொடங்கி, ‘எச்சரிக்கையாக இருங்கள்! வேடன் எச்சரிக்கை‘ என முடித்தது. இதைக்கேட்ட மூதாட்டிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. ‘எப்படியே பறவைகளை பிழைக்கச் செய்து விட்டோம்‘ என்ற மனநிறைவுடன் அந்த இடத்தைவிட்டு சென்றார். அன்று இரவு முழுவதும் ‘வேடன் வருவான்... எச்சரிக்கையாக இருங்கள்! வேடன் எச்சரிக்கை‘ என்று ஒருமித்த குரலில் உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தன.
மறுநாள், பேராசையுடன் வேடன் பெரிய வலையுடன் அவ்விடத்திற்கு வந்தான். வலையை விரிக்கப் போகும் போது, ஒருபறவை பார்த்துவிட்டு ‘வேடன் வருவான்... எனத் தொடங்கி, ‘எச்சரிக்கையாக இருங்கள்! வேடன் எச்சரிக்கை‘ என சொன்னதும் விஷயத்தைக்கேட்டு, மிகவும் அதிர்ச்சி அடைந்தான். மற்ற பறவைகளும் சேர்ந்து “வேடன் வருவான், தானியத்தை இறைப்பான், அதன் மேல் வலையை விரிப்பான். நீங்கள் தானியங்களைக் கொத்த வந்தும், வலையில் சிக்கிக் கொள்வீர்கள். அதனால் எச்சரிக்கையாக இருங்கள்! வேடன் எச்சரிக்கை” என்று சொல்லக்கேட்டு விரக்தியடைந்தான்.
சலிப்புடன் தானியங்களையும், வலையையும் கீழே போட்டுவிட்டு, ஏமாற்றத்தினால் ஏற்பட்ட களைப்புடன் மரத்தடியில் உட்கார்ந்தான். உடனே உறக்கம் அவனை அணைத்தது.
சில மணி நேரங்கள் கழித்து ‘வேடன் வருவான்... எச்சரிக்கையாக இருங்கள்! வேடன் எச்சரிக்கை‘ என்று ஒருமித்த குரலில் உரக்கச் சொல்லின வேடன் விழித்தெழுந்தான். அவன் எதிர்ப்பார்த்ததற்கு மாறாக இனிய அதிர்ச்சி காத்திருந்தது. அவனுடைய வலை பறவை கூட்டத்தின் கனத்தினால் தொய்ந்திருப்பதைக் கண்டான்.
நமக்கு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் அந்தப் பறவை கூட்டம், வலையில் சிக்கிக்கொண்டதையும் அறியாமல் ‘வேடன் வருவான்... எச்சரிக்கையாக இருங்கள்! வேடன் எச்சரிக்கை‘ எனச்சொல்லின.
அவைகளின் முட்டாள் தனமான கத்தலைக் கேட்டு வேடன் மனதார சிரித்துக் கொண்டான். பறவைகள் நிறைந்த வலையை தோளில் போட்டுக் கொண்டு, மகிழ்ச்சியால் நடையில் ஒரு துள்ளலுடன் காட்டிற்குள் நடந்தான்.
rybalaji@gmail.com
-------------------------------------முற்றும்---------------------------------------------------------- |