அவனை வேறு கோணத்தில் முதன் முதலாக பார்த்தேன்.மிகவும் சிறியவன் அவன். தனது தாயின் மரணத்துக்குபிறகு நிம்மதியை அவன் முழுவதுமாக இழந்திருந்தான் பெருந்துக்கம் அவனை மிகவும் அலைக்கழித்திருந்தது. கொலைக்கு அதுவும் ஒருகாரணமாக இருக்கலாம் என நான் என்னுடன் வந்த நண்பனிடம் கூறினேன்.நண்பன் மறுத்தான் ”இல்லை நீயாக கற்ப்னை பண்ணீக்கொள்ளாதே .அவன் அப்படி ஒன்றும் யோக்கியம் இல்லை. இது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதுதான். வீட்டுநாயை கொல்பவன் மனிதனே அல்ல. அவனை நண்பனாக பெற்றமைகாக வெட்கப்படுகிறேன்”, என்றான். மேலும் ”தேவையில்லாமல் அவனுக்கு நீ காம்யூவின் அந்நியன் முகச்சாயல் தருகிறாய்.. இதோபோலீசார் அவனைத்தேடிக்கொண்டிருப்பதாக செய்திதாள்கள் பேசுவதைபார். அவன் பிடிபட்டுவிடுவான். எல்லாகொலைகளுக்குபின்னாலூம் தத்துவகாராணங்கள் இருக்கத்தான் செய்யும். அத்ற்காக அநியாயங்களை கூறாதே” எனக்கூறி நண்பன் என் வாயை அடைத்தான்.
இருவரும் அந்தவீட்டின் வெளிப்புறத்தில் தோட்டத்துக்குவந்திருந்தோம். அங்குமிங்குமாக ஒருசிலர் நின்று கொண்டிருந்தனர். கொலைநடந்தவீடுபோல தெரியவில்லை. உள்ளே அவ்வப்போது யாரோ சிரித்துக்கொண்டிருக்கும் சப்தம் வேறு கேட்டது. நண்பனது மனைவியின் தங்கை வெளியேவந்து எங்களை பார்த்தாள். சுமாரன அழகு .அவளை அருகேவரச்சொல்லி அழைத்தேன். ஒருபழைய சினிமாபாடல்போல நடந்துவந்தாள். ஆனாலும் அவள்முகத்தின் மவுனம் ஒரு ஓவியனையும் உடன் அழைத்து வந்தது. . அவள் சொன்னதகவல் என்னுடன் வந்தவனுக்கு ஏற்புடையதாக இல்லை. முகத்தை திருப்பிக்கொண்டான் நான் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட எனது நண்பனுக்காக பரிதாப்பட்டேன்.
கல்லூரிக்காலத்தில் நாங்கள் மூவரும் நெருங்கிய நண்பர்களாக் வலம் வந்தோம். கால்பந்தாடத்தில் அசுரன் அவன். நாங்கள் மூவரும் இதரகல்லூரிகளில் நடக்கும் போட்டிகளுக்கு செல்லும்போதெல்லாம் அந்தபுதியநகரத்தின் மாலைப்பொழுதை உற்சாகமாக முத்தமிட்டு மகிழ்வோம். ஒருமுறை அப்படி இளம் நகரத்துக்கு சென்றபோதுதான் சாலையின் எதிர்கொண்ட பெண்ணின் ஒரே புன்னகையில் தன் எதிர்காலவாழ்வைதீர்மானித்துக்கொண்டான். அவளும் நறுவிசான பெண்தான். அவளது புன்னகைவிலைமதிப்பற்றது. தேனிலவுக்கு சென்ற போது ஒருமுறை அவள் சற்று அள்வுமிகுதியுடன் புன்னகைக்கபோய் படகுமுன் அனேக பறவைகள் கூடிவிட்டதாக நண்பன் பெருமை பேசினான். உண்மையில் அவளிடம் அத்தகையதொரு மந்திரச்க்தி குடிகொண்டிருந்தது.
ஆனாலும் அவளுக்குஎன்னவோ மருமகளாக வந்ததிலிருந்து வீட்டின் வளர்ப்புநாயை பிடிக்கவில்லை.உடன் நாய்க்கும் அவளை பிடிக்காமல் போய்விட்டது. நண்பனின் தாய்க்கு அவ்வப்போது மருமகள் பூசும் நறுமண திரவியங்கள் எரிச்சலைதந்திருக்கின்றன. ஆனால் அதனை நேரடியாக வெளிப்படுத்தாமல் நாயை மருமகளின் முன் அடிக்கடி உச்சி முகர்வதும் கொஞ்சிகுலவுவதுமாக இருந்திருக்கிறாள். இதனாலேயே நண்பனின் மனைவிக்கு நாயின் மேல் தீராதவெறுப்பு. ஒரு நாள் நண்பனின் தாய் புற்றுநோய் அவதிதாளாமல் இறந்துபோக தனது தாயின்மேல் அளவற்ற பாசம் வைத்திருந்தநண்பன். நிம்மதி யற்றவனாக உழன்றுகொண்டிருந்தான். வீட்டுவாசலில் தனிமையில் கிடந்த நாய்வேறு அவனது துக்கத்தை அதிகபடுத்திக்கொண்டே இருந்தது. நாயின் துக்கம் அவனது துக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதுதான் அவன் நாயை சுட்டுக்கொல்ல காரணம். இதைத்தான் சற்றுமுன் அந்த மனைவியின் தங்கையும் கூறினாள் .இரவுகளில் நாயின் ஊளை அதிகமாக இருந்ததாகவும் அதுதான் மிக முக்கிய காரணம் என்றும் அழுத்த்மாய் கூறினாள்
ஆனாலும் என்னுடன் வந்தவனுக்கு இந்த பதிலில் திருப்தியில்லை.இருவரும் வெளியே புறப்பட இருந்தசமயம் போலிசால் தேடப்பட்ட நாயை கொலைசெய்த நண்பன் அவசரமாக உள்ளே வந்தான். அவனை போலிஸ் எப்படி விட்டது என நண்பன் என்னிடம் கேட்டான். நாயை கொலை செய்தவன் எங்களை பார்த்தும் பார்காதவனாக வேகமாக மனைவியைதேடி வீட்டிற்குள் ஓடினான். நாங்கள் மவுனமாக அங்கிருந்து வெளியேறினோம்.அங்கே நாய் கட்டிவைக்கப்பட்டிருந்த சங்கிலி மறுமுனையில் வெற்று வளையத்துடன் அனாதையாக கிடந்தது.
-------------------------------------------------------------------------------------------------------------------------
மேற்குறிப்புகள்:
சிறுகதைகளோடு அந்தந்த எழுத்தாளர்களின் சிறுகதைகள் பற்றிய ஒரு திறனாய்வை, அல்லது எழுத்தாளர்கள் பற்றிய ஒரு அறிமுகத்தை இந்தப் பகுதியுடன் கொடுத்தால் புதிதாக படிக்க வரும் வாசகருக்கு அந்தக் எழுத்தாளுமை பற்றிய ஒரு புரிதல் ஏற்படும் என்பதற்காகவே இந்தப் பகுதி இங்கே கொடுக்கப்படுகிறது. கட்டுரை எழுதியவர் ஆட்சேபனை தெரிவித்தால் இந்தப் பகுதி நீக்கப்படும்.
அஜயன் பாலாவின் படைப்புலகம் - ஒரு அறிமுகம் - லதா ராமகிருஷ்ணன்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60505261&
format=print&edition_id=20050526
'கார்ட்டூனில் ஒரு சூரியனை வரைந்து அடிக்கோடிடும் போதே அது கடலாக மாறும் அதிசயத்தை நோக்கி எழுதிக் கொண்டிருக்கிறேன், அறைக்குள் வெள்ளம் நிறைந்திருக்கிறது, என் காலை முட்டும் காகிதக் கப்பல்கள் ஒன்றிலிருந்து ஒரு இளவரசி என் தொடையைக் கிள்ளுகிறாள், கடல் என் நண்பனானதால் ஜன்னலுக்கு வெளியே பெய்யும் மழை பற்றியும் குறிப்பெடுக்க முடிகிறது.
- சமீபத்தில் 'மருதா ' பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள 'மயில்வாகனன் ' மற்றும் கதைகள் என்ற சிறுகதை தொகுதியின் ஆசிரியர் உரையிலிருந்து ஒரு பத்தியே மேலே தரப்பட்டுள்ளது, எழுத்தாளர் அஜயன்பாலாவின் சிறுகதைகள் 15 இடம் பெற்றுள்ள இந்தத் தொகுப்பில் நம்மைப் பிரதானமாக ஈர்ப்பது கதைகளின் மொழியும். தொனியும், 'மாஜிக்கல் ரியலிஸம் ' என்று வகைப்படுத்தப்படும் பாணியில் அமைந்துள்ள கதைகள் வாசிப்பனுபவம் தருவதாகவும். நிகழ்கால சமூக அரசியல் போக்குகளை சுட்டுவதாகவும். 'நையாண்டி செய்வதாகவும் உள்ளன, கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி '. 'வினோத செய்தியாளனின் ஞாபகக் குறிப்பு '. 'டினோசர் - 94 '. 'ஒரு வரலாற்றுக் கதை '. 'பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள் '. என தொகுப்பின் பெரும்பாலான கதைகள் நிறைவான வாசிப்பனுபவம் தருகின்றன,
'துரோகத்தின் நிழல் '. 'மூன்றாவது அறை நண்பனின் காதல் கதை ' முதலிய ஒன்றிரண்டு கதைகள் எனது வாசிப்பில் அத்தனை நிறைவை தரவில்லை,
நிலவும் தமிழ்ச் சூழலில் சில புத்தகங்களுக்கும். படைப்பாளிகளுக்கும் தேவைக்கு அதிகமான கவனம் கிடைத்து விடுவதும். வேறு சில தகுதிவாய்ந்த படைப்பாளிகளுக்குப் போதுமான கவனம் கிடைக்காமலிப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது, இந்த இலக்கிய எதிர் போக்கிற்கு மாற்றாய் சில 'இலக்கிய அமைப்புகள் தொடர்ந்து இயங்கி வருவதும் குறிப்பிடத் தக்கது, அப்படியான அமைப்புகளில் ஒன்றான 'வெளி 'யின் சார்பில் சமீபத்தில் 'அஜயன்பாலாவின் ' கதைத் தொகுப்பிற்கான விமர்சனக் கூட்டம் நடந்தேறியது, வெளி ரங்கராஜன். சங்கரராமசுப்பிரமணியன். ஆசதா. பால்நிலவன். யூமா வாசுகி. 'மருதா ' பாலகுருசாமி. நான் மற்றும் பலர் கலந்து கொண்ட இந்தக் கூட்டம் உண்மையிலேயே அரங்கு நிரம்பிய கூட்டமாக விளங்கியது நிறைவைத் தந்தது, அதை ஒரு புகைப்படம் கூட எடுக்கவில்லையே என்று வருத்தமாக இருந்தது,
'வெளி ' இலக்கிய அமைப்பின் நிறுவனர் 'வெளி ரங்கராஜன் ' நூலிலுள்ள கதைகளைப் பற்றிய தனது கருத்துக்களை எடுத்துரைத்தார், கதை முடிவில் என்ன சொல்கிறது என்பதைக் காட்டிலும் 'ஒன்றிற்கு மேற்பட்ட வாசகப் பிரதிகளுக்கான சாத்தியத்தைத் தனக்குள் உள்ளடக்கி இருக்கிறது என்பதே தனக்கு முக்கியமாகப் படுவதாகக் குறிப்பிட்ட அவர் இத்தகைய இலக்கிய முயற்சிகளை பரவலாக அறியச் செய்வதே 'வெளி 'யின் நோக்கம் என்றார், மொழிபெயர்ப்பு. விமர்சனம். சிறுகதைகள் என நவீன இலக்கியத்தின் ஒன்றிற்கு மேற்பட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க அளவு தொடர்ந்து இயங்கி வரும் திரு, அசதா. 'மாய யதார்த்தம் ' வகையான கதைகளை எழுதுவதில் அளப்பறிய சுதந்திரம் இருப்பதோடு அதே அளவுக்கு பொறுப்புடைமையும் இருக்கிறது என்பதை நாம் மறந்து விடலாகாது, அதற்கென்று ஒரு 'ஆன்மா ' உள்ளது, அது இல்லாத போது இத்தகைய எழுத்துக்கள் 'வெற்று வார்த்தை ஜாலமாகப் போய்விடும் அபாயமுண்டு ' என்றார், இதே கருத்தையே தமிழின் குறிப்பிடத்தக்க இளங்கவிஞர்களுள் ஒருவரான சங்கரராம சுப்பிரமணியனும் முன்வைத்தார், இதன் தொடர்பாக அவர் கூறிய 'குட்டி டினோசார் ' கதை எல்லோர் கவனத்தையும் கவர்ந்தது.
அவர் பத்திரிகையாளராகவும் இயங்கியவர் என்பதால் தன்னால் அஜயன்பாலாவின் 'வினோத செய்தியாளனின் ஞாபகக் குறிப்பு ' போன்ற கதைகளை கூடுதலாகவே உள்வாங்கிக் கொள்ள முடிவதாகக் குறிப்பிட்டார், யதார்த்த வகை கதைகள் எழுதுகையில் மொழி நடையை மாற்றிக் கொள்ள தேவையில்லை என்றும் அப்படியில்லாமல் அஜயன்பாலா கையாண்டிருக்கும் வகை கதைகளுக்கு. அவை வெற்றியடைய கூடுதல் உழைப்பு தேவைப்படுகிறது எனவும் குறிப்பிபட்ட எழுத்தாளர் 'பால்நிலவன் ' அஜயன்பாலாவின் ஒவ்வொரு கதையும். ஒன்றிலிருந்து ஒன்று மாறுப்பட்ட நடையிலும். தளத்திலும் இயங்குவதாக குறிப்பிட்டார், கூட்டத்திற்கு வந்திருந்த வேறு பலரும் அஜயன்பாலாவின் சிறுகதைகளில் தாங்கள் உணரக் கிடைக்கும் கவித்துவத்தையும். அந்நியப்பட்ட மனதையும் மற்ற நுட்பங்களையும் குறித்துப் பேசினார்கள், அஜயன்பாலா. தனது ஏற்புரையில் 'திடமென்று நாம் நம்பியிருக்கும் எதுவும் திடமானது அல்ல, சமீபத்திய சுனாமி இதற்கொரு அப்பட்டமான உதாரணம் ', இந்த அறிதலும். அலைக்கழிப்புமே தனது கதைகளின் இயக்குவிசைகளாகின்றன என்றார், கோணங்கி. எஸ், ராமகிருஷ்ணன் போன்ற படைப்பாளிகள் தனக்குள் அதிகத் தாக்கம் ஏற்படுத்தியவர்கள் என்றார், தனது தோழர்களான சங்கரராமசுப்பிரமணியன். மருதா பாலகுருசாமி. தளவாய் சுந்தரம் முதலியவர்களின் அன்பும். தோழமையும் தன் படைப்பாற்றலுக்கு உந்துசக்திகளாகின்றன என்று நெகிழ்வோடு குறிப்பிட்டார்.
|