வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. மற்றவை பகுதியில் செய்திகள், நிகழ்வுகள், பயனுள்ள மற்ற இணையதளங்கள் உள்ளிட்ட பல பகுதிகள் இடம்பெறும்.
 
 
 

 

 

 

 

 

 
     
     
     
   
நிகழ்வுகள்
1
 
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 

 
  ---------------------------------  
     
     
 

 

 

 
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  மற்றவை TS நிகழ்வுகள்

நிகழ்வுகள்
 

வம்சி பதிப்பகம் புத்தகங்கள் - சென்னை புத்தக கண்காட்சியில் அரங்கு எண்: 157-158 

தென்னிந்தியச் சிறுகதைகள் - ரூ. 300 - தொகுப்பு: கே.வி. ஷைலஜா
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என நான்கு தென்னிந்திய மொழிகளிருந்தும் தொகுக்கப்பட்ட நவீனச் சிறுகதைகளின் தொகுப்பு.

அனுபவங்களின் நிழல் பாதை - ரூ. 300 ரெங்கையா முருகன் - ஹரி சரவணன்
ஏழாண்டு காலம் காடு, மலை, அடர்வனமெங்கும் அலைந்து திரிந்து கொண்டுவரப்பட்ட பழங்குடிகளின் பண்பாட்டுச் சூழல் ரத்தமும் சதையுமாய்.

அத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய்த்தான் இருக்கின்றன ரூ. 300 - விஜயசங்கர்
ஃப்ரண்ட் லைன் பத்திரிகையின் இணை ஆசிரியரான விஜயசங்கர், தான் இது வரை எழுதிய சமூக, பொருளாதார, கலாச்சாரக் கட்டுரைகளின் தொகுப்பு (பெரியார், நோம்சாம்ஸ்கி, அருந்ததிராய், திராவிட இயக்கம், இடாலோ கால்வினோ, லத்தீன் அமெரிக்கா).

மாதவிகுட்டியின் கதைகள் - ரூ. 70 தமிழில்: உதயசங்கர்
கேரளாவின் ராஜகுமாரியாய் கொண்டாடப்பட்ட மாதவிகுட்டியின் அதிர்வுக்குள்ளாக்கும் மன உலகம் சார்ந்த கதைகள்.

மூன்றாம் பிறை - மம்முட்டி வாழ்வனுபவங்கள் - ரூ. 80 - தமிழில்: கே.வி. ஷைலஜா
நடிகர் மம்முட்டி, தான் வாழ்நாளில் பார்க்க நேர்ந்த நிகழ்வுகளும், அது சார்ந்த தன் உணர்வு பகிர்தலுமான இத்தொகுப்பைக் கலாபூர்வமாக்குகிறார்.

அல்போன்சம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும் - - ரூ. 100 தமிழில்- கே.வி. ஜெயஸ்ரீ
இந்திய இலக்கிய ஆளுமைகளில் மிக முக்கியமானவராக அறியப்படும் பால்சக்காரியாவின் நவீன சிறுகதைகளின் தொகுப்பு.

நத்தை போன பாதையில் - ரூ.100 தமிழில் : மிஷ்கின்
அகாலத்தில் கேட்டுக் கொண்டு இருக்கும் ஓரு சில்வண்டின் ரீங்காரம் போல தன் மனதில் கேட்டுக் கொண்டே இருக்கும் நூறு ஹைக்கூ கவிதைகளை அதன் ஆன்மாவோடு தமிழ் படுத்தி, ஆதற்கான ஓவியங்களையும் சேர்த்துத் தருகிறார் இத்தொகுப்பில் மிஷ்கின்.

ஜான் ஆபிரகாம் - கலகக்காரனின் கதை - ரூ. 200 தொகுப்பு - ஆர்.ஆர். சீனுவாசன்
கலகமும், கொண்டாட்டமுமாய் தன் வாழ்வை தகவமைத்துக் கொண்ட இயக்குனர் ஜான் ஆபிரகாமின் வாழ்வும், சினிமாவும் கருத்துருக்களும் கொண்ட தொகுப்பு.

19.டி.ஏம்.சாரோனிருந்து - ரூ. 120 பவாசெல்லதுரை
தான் சந்தித்த ஆளுமைகள், தன்னைப் பாதித்த நிகழ்வுகள், தன் பெருங்கனவுகள் என இந்த புத்தகம் விரிந்து கொண்டே போகிறது.

கதை நேரம் பாகம் 2 - ரூ. 150 பாலுமகேந்திரா
திரைப்படத்தின் மீது ஆர்வமுள்ள ஓவ்வொருவரும் வைத்திருக்க வேண்டிய நூல். கதை, அதன் திரைக்கதை, குறும்படமாக அதன் அடுத்த பரிணாமம் என சேர்த்து அளிக்கப்படும் அழகிய தொகுப்பு.

இலக்கிய ஆளுமைகளும் பிரதிகளும் - ரூ. 120 - சா. தேவதாஸ்
ஐந்து ஆளுமைகள், முக்கிய பதினைந்து நாவல்கள், மற்றும் சில இந்திய சிறுகதைகளின் மீதான தன் பார்வையை முன்வைத்து தேவதாஸ்.

நான் பேச விரும்புகிறேன் - 180- ரூ. தொகுப்பு ச. தமிழ்ச்செல்வன்
உலகம் முழுவதிலுமிருந்து தன்னை பாதித்த வ்உல்மன், ஈகான் செலீ, அபிரைடோ காலோ, காகின், ஈங்ரிட் பெர்க்மன், பில்ஹாடே ஆகிய பெண் கலை ஆளுமைகளை குறித்தான உணர்வு பொங்கும் நூல்.

இடைவெளி ரூ. 100- அல்நகரம் - தாமோதரன்
எளிய மனிதர்கள், எளிய வாழ்வு இவைகளை அவர்களில் ஒருவனாய் இருந்து பதிவு செய்த தாமோதரனின் சிறுகதைகளின் தொகுப்பு.

கருப்பு நிலா கதைகள் ரூ. 70- ஏஸ். காமராஜ்
தலித் மக்களின் வாழ்வியல் போராட்டங்களை சித்தரிக்கும் சிறுகதைகளாக காமராஜின் கதைகள் விரிகின்றன.

மேகங்களே நிலாவை நகர்த்துகின்றன - ரூ.250- பாரததேவி
நிலாக்கள் தூரதூரமாக என்ற தன் முதல் சுயசரிதையின் மூலம் வாசகப்பரப்பில் நன்கு அறியப்பட்ட பாரததேவி அதன் தொடர்ச்சியாக இந்த நாவலை முன்வைக்கிறார்.

கோடிட்ட ஈடங்களை நிரப்புதல் ரூ. 50- சுமதிராம்
தனக்கும் தன் மகளுக்குமான மனமொழியை நமக்கும் நம் குழந்தைகளுக்கும் இப்புத்தகத்தின் மூலம் கடத்துகிறார் சுமதி. முதல் தொகுப்பென அவராலேயே நம்ப முடியாதது.

இசைக்குறிப்புகளை மொழிப்பெயர்த்தல் - ரூ.90- வே. முத்துக்குமார்
இசை, நதி, நீர், வனம், என விரிந்து கொண்டே போகும் முத்துக்குமாரின் உலகம் தமிழ் கவிதைக்கு புதிதல்ல. ஆனால் இவரின் மொழியும் உள்ளடங்கி பேசும் கூச்சமும் நம்மை இவர் பக்கம் திரும்ப வைக்கிறது.

ஓசை புதையும் வெளி ரூ. 50- தி. பரமேசுவரி
எனக்கான வெளிச்சம் என்ற முதல் தொகுப்பின் மூலம் நன்கு ஆறியப்பட்ட பரமேசுவரி, ஐந்தாண்டுகளுக்கு பின் இன்னும் செறிவூட்டின தன் மொழியால் நம்மை ஈப்புத்தகம் மூலம் சந்திக்கிறார்.

பன்றிக்குட்டி ரூ. 50- ரமேஷ் பிரேதன்
நவீன ஈலக்கிய உலகில் எப்போதும் பெரும் ஆதிர்வுகளை ஏற்படுத்தும் ரமேஷ் பிரேதன் பன்றிக்குட்டிகளை படிமங்களாக்கி வேடிக்கை உலகிற்கு நம்மை அழைக்கிறார்.

புதிர்களை விடுவித்தல் ரூ. 120 - சா. தேவதாஸ்
உறவுகளின் எல்லை மீறிய காமம் பற்றிய உடிபஸ் கதைகளும், பற்றற்று வாழ முடிவெடுத்த ரமணரின் வாழ்விலும் உறவுக் கண்ணிகள் சுற்றி வளைத்ததையும், இன்னும் பல்வேறு ஆளுமைகளின் வாழ்வியல்
சிக்கல்களையும், முடிச்சுகளையும் வாசகன் முன், முன்வைக்கிறார்.

2011- ல் வம்சி புக்ஸ் - பூவுலகின் நண்பர்கள் இணைந்து வெளியிடும் எட்டு சூழியல் நூல்கள்

மௌன வசந்தம் -40/- ரேச்சல் கார்சன்
பசுமை புரட்சியின் வன்முறை -100/- வந்தனா சிவா
உயிரியல் புரட்சியின் ஓடுக்குமுறை -40/- மு. பாலசுப்ரமணியன்
இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை -40/- பூவுலகின் நண்பர்கள்
மணல் கோட்டைகள் -70/- சாண்ட்ரா போஸ்டல்
பட்டினி வயிறும் டப்பா ஊணவும் - 40/- தமிழில் : போப்பு
ஓற்றை வைக்கோல் புரட்சி - 80/- மசானபு அபுகோகா
மூன்றாம் ஊலகப் போர் தண்ணீருக்காக- 40/- சாண்ட்ரா போஸ்டல்

19.டி.ஏம். சாரோன், திருவண்ணாமலை. செல்: 9444867023- 04175-251468


வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</