தடுப்பது யார்?
ஆர். ஈஸ்வரன், வெள்ளகோவில் |
|
வாகனத்தில் போகும்போது
முன் வாகனம் விடும் புகையின்
மூச்சுத் திணறலை
தடுப்பது யார்?
காலியான இடத்தில்
காலியான பாலித்தீன்களால்
நிலம் காணாமல் போவதை
தடுப்பது யார்?
கண்ணில் பட்ட மரங்களை
வெட்டி வெட்டி வீழ்த்திவிட்டு
நிழலையும் மழையையும்
தேடித் தேடி அலைபவனை
தடுப்பது யார்?
பொருளில், உணவில், நீரில்
கலப்படம் செய்பவனையும் மிஞ்சி
மருந்தில் கலப்படம் செய்பவனை
தடுப்பது யார்?
தன்னம்பிக்கையுள்ளவனிடம்
எதிர்மறை எண்ணங்களைப் புகுத்தி
தன்னைம்பிக்கையை
நிலைகுலையச் செய்பவனை
தடுப்பது யார்?
நம்மை காக்க வேண்டியவர்களையும்
நாமே காக்க வேண்டிய அவலத்தை
தடுப்பது யார்?
ஊட்டி வளர்த்தவர்களையே
ஊரை விட்டே துரத்தி
அனாதை விடுதிக்கு
அனுப்பும்கொடுமையை
தடுப்பது யார்?
|