ஒரு நெடும்பகல் கடந்துசெல்லும்
நாட்களில் கண்டிருக்கிறேன்
வாழ்வறியா வெறுமையின் நீறூற்றினை
மொழியறியாதெனினும் உணர்வறிந்திருந்த காலங்கள்
இச்சை உற்றிருந்த பொழுதன்றி
வேறெதுவாயும் நினைவில் இல்லை
போகக் கடவுள் புணர்வையும் மதுவையும்
ஒருசேர படைத்துவிட்ட கொள்கைப் பிரிவை
தனதாக்கி நொந்து கொண்டார்.
ஐம்புலன் கொண்ட காமுமும்
ஆறறிவற்ற போதையும்
யாமெனக் கொண்டாட தகுதியற்ற மானுடம்.
பட்டாவாக்கிக் கொண்ட நிலமும்
முயங்கித் திரிய ஒரு புண்டையும்
எனப் பெற்றிருந்த மனிதரே வெட்கங்கெட்டோரென கடவுள் சொன்னார்.
நிலை திரிய நிலை திரிய
காமம் கடவுள் கடவுள் காமம் என்பதெல்லாம் மாறி
அடைபட்ட குமிழுக்குள் ஒருகோடி பிரபஞ்சம்
பால் வீதிக்குள் அணு உலைகள்
உலைகள் வெடிக்க மறு உற்பத்திக்குள் பிரபஞ்சம்
ஏழு வர்ணங்களையும் சொறிந்த பின் வெடிக்கிறது நீர்குமிழி
ஆறு கைகளும் அடங்கா சிறகும்
முளைக்கத் தொடங்கும் சிசுவுக்குள்
யாரற்றும் உபதேசிக்க உருவமில்லா மனிதம்
மிருகமான பட்சிக்கெதற்கு சமாதானம்
அமைதியென்ற வார்த்தை சொல்ல
விதிக்கப்படவில்லை எந்தவொரு மாமிச இனத்துக்கும்.
|