எவரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள்,
எப்போது வேண்டுமானாலும் கேளுங்கள்,
முடிந்தால் எல்லோரிடமும் கேளுங்கள்,
எல்லோரும் ஒன்றினையேச் சொல்லுவார்கள்,
ஒருவர் சொன்னதையே
மற்றொருவரும் சொல்லுவார்!
எப்படி முடிகிறது அவர்களால்!
சொல்லி வைத்தாற்போல் சொல்வதற்கு!
யாரிடமாவது கேட்டுப் பாருங்கள்! ஓ அப்படியா!
அப்படியும் இருக்குமோ!
என ஆச்சரிய படுவர் சிலர்.
இல்லை இல்லை
அப்படி இருக்காது
என அடித்துச் சொல்லுவர் சிலர்.
ஆமாம் அப்படித்தான்
எனக்குத் தொ¢யும்
என உரக்கச் சொல்லுவர் சிலர்.
அப்படியும் இருக்கலாம்
இல்லாமலும் போகலாம்
என குழப்பிச் சொல்லுவர் சிலர்.
எது எப்படியானாலும்
யார் எப்படிச் சொன்னாலும்
எனக்கு மட்டும் எதுவும் தெரியாதென்பேன்யாரேனும் என்னைக் கேட்டால்...
|