நமக்குள் இருக்கும்
ஊடலால்
நகங்களை கடித்துக் கொண்டே
உன் வீட்டைக் கடக்கையில்..
சட்டென
ஒரு கணம் நின்று!
எட்டிப் பார்க்கிறது
என் மனம்!
நீ! வீட்டில் இருக்கிறாயா என்று!!..
------------------------------------------------------------------------
நட்பின் இறப்பு
அலுவலக பணிநிமித்தமாக
அன்றே வந்து
அன்றே திரும்புவதாக உன் எண்ணம்...
நமக்குள் இருக்கும்
சிறு ஊடலை இனம்காட்டி..
முன்னூறு மைல் கடந்து
முகம் கட்டாமலே சென்றுவிட தீர்மாணித்தாய்...
நீ வந்திருக்கும்
செய்தியறிந்து
திரும்பிச் செல்லும்
சி்ல நிமிடங்களில்
ஓடோடி வந்தேன்...
மழை அழுதுக் கொண்டிருக்க!
இடியும் மின்னலும் புன்னகைக்க!
என்
அலைபேசி அழைப்புகள்
அத்தனையும்
அலட்ச்சியப் படுத்தினாய்!...
உள்ளுணர்வின் வழிகாட்டல்
உன் பேருந்தை நெருங்க...
மீண்டும்மொரு அழைப்பில்
"பேருந்து புறப்பட்டுவிட்டது
பார்க்க முடியாது" - என்று
சொன்ன ஒரு "பொய்யின்" முடிவில்...
கிளம்பாமல் நின்று கொண்டிருந்த
பேருந்தில்- நீ!
இருக்கும்
இருக்கையை அறிந்தேன்..
நட்பின் தினத்தன்று
இறந்தது- அந்த
நண்பன்! மட்டுமல்ல
நானும்தான்!!...
|