வெறுப்பு
அந்த பெண்ணின் முலையில் ஒரு
மழைத்துளி பட்டுத் தெரித்தது
முத்தமாகவோ தற்கொலையாகவோ இருக்கலாம்
நான் ஒருவனே சாட்சி அது
தற்கொலை நிகழ்வாயின்.
தெரிந்த துளியிடம் நான் கேட்க வேண்டியெதெல்லாம்
அது புகுந்து வந்த
மேகத்தின் நிறத்தையும்
அவ்வளவு உயரத்தில் இந்த
பிரபஞ்சத்தின் தோற்றத்தையும்
அசிங்கத்தையும்
அந்த முலையின் வலிமையையும்
நிச்சயமாக கன்னியாவென்றும்
சட்டென விரித்தால்
நிறுத்திக்கொண்டேன் கற்பனையை
குடைகளை வெறுக்கிறேன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
பண்டிகை நாள்
எந்த ஒரு பண்டிகை நாளும்
அதற்கு முந்தைய நாளின் இன்பத்தை
தந்திடவில்லை
ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் பண்டிகைகள்
பெரும்பாலானோரால் வரவேற்க்கப் படுவதில்லை
அது சராசரியான ஒரு விடுமுறை நாள் மட்டுமே
அதற்காகவே பரிச்சயமான பண்டிகைகள் சில சமயம்
வெறுக்கப் படுகின்றன.
வகுப்பு முடிவை அறிவிக்கும் மணி
தருமின்பத்தை தந்திடவேண்டும் இந்த பண்டிகைகள்
எதிரியின் வீழ்ச்சியையும்
சுயநலத்தின் வெற்றியையும்
இப்படி ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறது
கொண்டாடுவதற்கென தனிப்பட்ட ஒரு பண்டிகை நாள்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
யாருமே கொண்டாடாத பண்டிகை இன்று
நாட்காட்டியில் புதைக்கப்படுவதை.
|