புளியமரங்களின் வரலாறு குறித்து
ஜோசப் |
வெள்ளி , 12-03-2010, 08:05 PM |
புளியமரங்கள் மனித குலத்திற்கு
பெரிதும் பயன்படுகின்றனஇ
என்பதை அறிவேன்.
அவைகள் இன்றும்
இப்புவியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
அவைகளை கடவுள்
படைத்த காலம் தொட்டே
இங்கு இருக்கின்றன.
உலகெங்கிலும் இருப்பினும்இ
இந்தியாவிலும்இ தழிழகத்திலும்
அவைகள் இருக்கின்றனஇ
அவைகள் சந்தித்த புயல்கள்
ஆயிரக்கணக்கானவையாக இருக்கலாம்.
கொள்ளை நோய்கள் ஒரு
கோடி இருக்கலாம்.
விலங்குகளின் கொடுமைகளை மீறியும் இப்புவியில் தங்கள்
வம்சத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.
நால் வழி சாலைகள்
அழித்தவை ஆயிரமாயிரங்கள்
என்ற போதிலும்இ
அவைகளின் வம்சத்தை அடியோடு அழியாவண்ணம்
பாதுகாத்து கொண்டன.
உலகின் முடிவு பரியந்தம்
அவைகள்இ
தங்களைப் பாதுகத்துக் கொள்ளுமா?
என்பது நான் அறியாதது.
குளங்கள் நிரம்பியது குறித்து.
குளங்கள் வெறுமையாக
கிடந்தன.
முட்செடிகள் மண்டிகிடந்தன.
ஊரின் குப்பைகளுக்கும்இ
கழிவுகளுக்கும் நாளுக்கு நாள்
வளர்ந்து கொண்டேயிருந்தன.
குளங்களை காப்பாற்றுவது யார்?
மழை பெய்ய ஆரம்பித்தது
மீண்டும் பெய்ததுஇ
தொடர்ந்து பெய்தது.
குளங்கள் நிரம்ப ஆரம்பித்தன.
கசடுகளை மூடின.
குப்பைகளை மூடின.
கொஞ்சம்இ கொஞ்சமாக
நீர் மட்டம் வளர்ந்து கொண்டேயிருந்தது.
அதன்இ அனைத்து துயரங்களையும் தண்ணீர் மூழ்கடித்தது.
எங்கும் நீர்
நீர் மட்டுமே.
நிரம்பிய குளம் கண்களுக்கு இதமாகியது.
அனைவரும் வியந்தனர்.
குளம் ரம்யமானது என்று
பாராட்டினர்.
அதன் கீழ் உள்ள
கசடுகளையும்இ முட்களையும்
கழிவுகளையும்இ அவர்கள் மறந்தே போயினர்.
|