நரகவாசி..
சவங்களை எரித்த புகையினாலான
மேகங்கள் பொழியும் மழையை
இனி நான் வரவேற்கப் போவதில்லை
சுற்றிலும் சுயநலவாதிகளால் ஒரு நாளைக்கு
ஒருமுறையாவது கற்பழிக்கப்படுகிறது என் வாழ்க்கை
ஆணுறையை பலூன் ஊதி விளையாடும்
சிறுவர்களே உத்தமர்கள் இன்று
நாளைக்கு எப்படியோ..!
கலவரத்தில் கழுத்து வெட்டப்பட்ட
அப்பாவியின் குருதி கலந்த காற்று
என் முகத்தில் அறைகிறது
ஏமாற்றப்பட்ட விபச்சாரியின் ஓலம்
என் காதில் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது
வஞ்சிக்கப்பட்ட அலிகளின் இம்சைகளுக்கிடையே
நடந்து செல்கிறேன் சாலையில்
மார்பிலடித்தபடி நிர்வாணமாய் ஓடுகிறது
என் மனம்
கடந்து செல்வோர் முகத்திலெங்கும்
போலிப் புன்னகை
இனியும் நட்சத்திரங்களை
நான் என்னப் போவதில்லை
வீடு சென்று கதவடைத்து
இமை மூடிக்கொண்டேன்
இருட்டு இருட்டு, ஆழ்ந்த நிசப்தம்
காதருகே பறக்கும் கொசுவின்
ரிங்காரத்தை என்னால் கேட்க முடிந்தது
மீண்டும் நடக்கத் தொடங்கினேன்
அதே சாலையில்.
இன்னும்
நிறைய..நிறைய.. எழுதவேண்டும்
|