நகரம்
நகரம் விழிக்கத் தொடங்கியதும்
வெயில் வந்து அதன் மீது படுத்துக் கொண்டது!
சிலர் தொழுதார்கள்!
சிலர் சபித்தார்கள்!
தண்ணீரை தெளித்தனர் சிலர்,
ஈரம் உலர்த்தினர் சிலர்!
படுத்திருந்த வெயிலின் மேல் நிழல் விரித்து படுத்தனர் - சிலர் !
சிலர் அதன் மீது நடந்தார்கள்!
உழைத்தார்கள், அழுதார்கள், களித்தார்கள் சிலர் !
கடற்க்கரை சிருகுழியில் சிலர் அதை புதைத்தார்கள்!
அசந்து மக்கள் அங்குமிங்கும் அலைந்தார்கள்!
எதோ கனவில் சிலிர்த்த வெயில்,
மெதுவாய் புரண்டு படுக்க..
நகர்த்திய பாறையின் அடிமனலாய் -
நகரம்.
தெருவிளக்குச் செடிகளில்
பூக்கத்தொடங்கியது!
|