வானம்!
நீயும் கடவுள் தான்
அறிவியல் அறிந்தவன்
வெற்றிடம் என்பான்!
ஆன்மீகத்தில் திளைத்தவன்
கடவுளின் வாழுமிடம் என்பான்!
உன்னில் பிறக்கும்
இடிக்கும், மின்னலுக்கும் சண்டை
சோகத்தை சொல்கிறாய் மழையாய்!
உன் அழுகையால்
உருவாகிறது தாவரம்
உயிர்வாழும் மானுடம்
பதரையும் பசுமையாக்கும்
உன் அழகான அழகை
எங்கள் நன்றிகெட்ட
ஆறாம் அறிவு, உன்
அழுகையும்
அபத்தமாய் ரசிக்கிறது!
அதற்கு தண்டனைதானோ!
முட்டி வரும் விதைகளை
கொட்டும் மழையால்
அடக்கி விடுகிறாய்!
உன் குணம்
மாரிபோனால்
மறித்துபோகும்
மானிடம்
என்ன நினைக்கின்றோமோ
அதையே கண்ணில்
காட்டும் மாயக்காரி
தூது போகும்
வித்தைக்காரி உன்னில்
தவழும் மேகத்தோழி!
உன் செயல்பாடு அறிய,
எத்தனை கோட்பாடுகள்
அத்தனையிலும் விளங்காமல்
திரியும் நீ ஒரு முகில் காடு
|