அந்தபுரத்து காதல் கதை
கெ.கார்த்திக் சுப்புராஜ், பெங்களூர் |
|
ஒருநாளில் பலமுறை
அவனுக்கு காதல்
வரும்! - என்போன்றவள் மீது!
அவனுக்கு காதல்வரும்
தருணங்களில், அவன் கை
வசப்படுவாள் - எங்களுள் ஒருத்தி!
அந்த நாள் அந்த நோடி
அவனது காதலுக்கு
கைவசப்பட்டவள் - நான்!
பிறந்ததில் இருந்தே
பெட்டிக்குள் அடைக்காத்ததுபோல்
வளர்ந்தவள் - நான்!
இருப்பிடம்விட்டு வந்ததும்
இல்லை, சென்றவர்களின்
அனுபவம் கேட்டதும் இல்லை!
வெட்கமும் பயமுமாயிருந்த
என்னை சட்டென
தொட்டது, அவன்விரல்!
அடுத்த நோடியில் தொலைந்தது
வெட்கம். அனலாய்
கொதித்தது - என்தேகம்!
அவன்விரல் என்மீதிருந்த
நேரமெல்லாம் உடலில்
பரவியது காதல் தீ !
அந்தவேட்கையில் பற்றி,
நானே எரிவதை
போலொரு உணர்வு!
என்னைபோல் எரியும்
காதலோ, உணர்ச்சியோ,
துளியுமில்லை அவனிடம்!
அவனுக்கு நான் எத்தனாவது
காதலியோ?. ஒருவேளை
இருந்திருக்கலாம் முதல்காதலியுடன்!
அவன்புரிவது காதலோ,
கடமையோ எனக்குஅவனே
முதல்காதலன் கடைசிவரை!
அலட்சியமாய் சுவாசித்தான்
என்னை, - சுவாசிக்கப்பட்டு
சுவாசித்தேன் அவன்காதலை!
அவன்விரல்கள் எப்போதும்
என்மீதே இருந்தது.
அவனிதழ்கள் அவ்வப்போது!
இதழ்பட்ட நேரங்களில்,என்
அச்சம் மடம் நானமெல்லாம்,
பொறுக்காமல் புகையானது!
இப்படி காதலில் முழ்கிப்பின்
மீண்டபோது மொத்தமாய்
கரைந்திருந்தது என்தேகம்!
அதுவரை அனையாமலிருந்த
காதலை,ஏனோ தெரியவில்லை
சட்டென்று அனைத்துவிட்டான்!
அனைத்தது மட்டுமில்லை
அதன்பின் அலட்சியமாய்
விட்டுவிட்டு விடைபெற்றான்!
மாடத்தில் தோழிகளுடன்
மகிழ்ச்சியாய் பொழுதை
கழித்திருந்த என்னை!
அவன் சில நோடிகாதலுக்கு
இரையாக்கி பின் என்னை
குப்பையாக்கி சென்றுவிட்டான்!
அதுவரை புனிதமாயிருந்த
காதல், மாறியது
வலியாய் ரனமாய்!
அவனை போன்றோரின்
ஆசைக்கிணங்கி அழிவதற்காகவே
படைக்கப்பட்டது எங்கள் இனம்!
அவன்மீண்டும் வருவான்
வேறொருவளை தோடுவான்,
பின்னென்னருகே வீசிடுவான்!
எங்கள்தேகம் அழித்து
வளர்த்த காதலின்புனிதத்தை
என்றாவதொரு நாள், உணர்வான்!
காதல் புரிந்து
கைவிட்டவன், அந்த காதலாலே
ஒரு நாள் அழிவான்!
அந்த நாள் அவன்தேகமும்
அனலாய் கொதிக்கும்,
எரியும், புகையும்!
அப்போது அவன் சொல்வான்,
"நான் அவளை
காதலிருத்திருக்க கூடாது" - என்று
--
இப்படிக்கு,
சற்றுமுன் அடித்து,
அனைத்து, வீசப்பட்ட
ஒரு சிகரெட் !!!!!!!!
|