காதலிக்கு
பாலகிருஷ்ணன் சுப்ரமணியன் - திருச்சி |
|
நெருப்பை இகழும் செந்நிறமுடையாளே!
நீ
என் சுவாசக் காற்று,
கோடைகால பருவக்காற்று,
தென்றல் வீசிடும் தென்னங் கீற்று,
பாலைவன நீருற்று!
நாம்
காதலெனும் வித்தையைக் கற்று ;
வாழ்ந்தோம் பலகாலம் அச்சமற்று!
அன்று
நம் காதலை வானம் பாடிற்று,
மேகக்கூட்டம் ரசிக்கக் கூடிற்று,
அந்த வெண்ணிலாவும் கூறிற்று,
கதிரவன் உலகெங்கும் முழங்கிற்று!
பெண்ணே!
பிரிவால் உன்முகம் குறுகிற்று,
அது என்றோ எனக்கு விளங்கிற்று,
திருமணம் வரை உன் ஏக்கத்தைத் தேற்று,
வாட்டத்தைக் கொஞ்சம் ஆற்று,
மறவாமல் நம் காதலை போற்று!
உன் மீது யாம்கொண்டது கடலினும் பெரியபற்று
நம் காதலை இகழ்வோரை இனி தூற்று;
உன்கரம் பிடிப்பேன்; என் தலையை விற்று;
அதன்பின்,
எல்லாவற்றிற்கும் யாம் வைப்போம்
பெரியதொரு முற்று,
இன்பமாய் இவ்வுலகை வலம் வருவோம் ஒரு சுற்று,
நீயே நம்காதலை சொலைதனில் பறைசாற்று!
பெண்ணே!
உண்மை என் கூற்று!!!!
|