வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

கி.ராஜநாராயணன்

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.

 

 

 

 
     
     
     
   
கதை சொல்லி
1
 
 

குட்டி ரேவதி

குட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார்.

இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.

தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர்.

இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர்.
இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.

கவிதை நூல்கள்

பூனையைப் போல அலையும் வெளிச்சம் (2000)

முலைகள் (2002)

தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003)

உடலின் கதவு (2006)

கட்டுரை நூல்

காலத்தைச் செரிக்கும் வித்தை (2009)


-------------------------------------------------

 

 
     
     
     
     
     
     
 

 

 

 
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  கதை சொல்லி

 

 
கதை சொல்லி - குட்டி ரேவதி (Kutti Revathi)

 

 

லிவி

 


" நான் பாடல்
என‌க்கு கவிதை முகம்"
------------------------------------- அனார்

நெடுநாட்கள் கழித்து சென்னை மெரினா கடற்கரைக்குச் சென்றிருந்தேன். பெரிய மாற்றம் எதுவும் நிகழ்ந்து விட்டது போல் தெரியவில்லை. மழைக் காலம் ஆகையால் க‌டற்கரை மணலில் தண்ணீர் தேங்கி சிறு குளமாகியிருந்தது. கடைகள் அதிக அளவில் இயங்காத‌தால் அதனால் வரும் வெளிச்சம் வழக்கத்திற்கு மாறாக குறைவாகவே இருந்தது. நண்டுகளின் கூட்டம் போல் காதலர்கள், இம்முறை மேகத்திற்கு பதிலாக குடை வானமாகியிருந்தது. குடை நிச்சயம் பெண்களின் முன்னெச்சரிக்கை குணத்தால் வந்ததாக இருக்கும். மல்லிகைப் பூவும் சேலையுமாக உலாவரும் மலின விலைமகளிர் காதலர் கூட்டம் கலையத் தொடங்கியவுடன் இணை தேடும் நடுவயது முதல் வயதானவர் வரை சுற்றும் ஓரினச் சேர்க்கையாளர்கள். எவ்வளவு தூரம் எட்டி நின்றும் கால்களை நனைத்து வெற்றி கொள்ள மட்டுமே தெரிந்த கடல் அலைகள் , தூரத்தில் ஏற்றி வைத்த தீபங்களைப் போல் கடலில் நங்கூரமிட்ட கப்பல்கள். உலகை வெற்றி கொண்ட நினைப் பெனக்கு. கூச்சலிட வேண்டும் போல இருந்தது. குட்டி ரேவதியிடம் கதைத்துவிட்ட சந்தோசம் எனக்குள்.

குட்டி ரேவதி தமிழின் முக்கியமான‌ பெண்ணிய கவிஞர்களில் ஒருவர். பெண்ணடிமைத் தனத்தால் சீழ் பிடித்து விட்ட மனதை ஆற்றின் மீனை போல் பற்கள் இல்லாமல் கொத்தி அழுக்ககற்றும் போராளி. பெண் சுதந்திரம் மறத்துப் போன ஆழ் மனதை சிறிதளவேணும் உசுப்பிப் பார்ப்பவை அவருடைய கவிதைகள். கட்டற்ற விடுதலையை எண்ணிப் பயணிக்கும் தமிழ் மரபுத் தொடர்ச்சியின் வீரிய உன்னதம் அவர். அடங்க மறுக்கும் கலகக்காரனின் குரல் அவருடையது. சமரசமற்ற எழுத்தில் தன் கவிதைகளையும் உணர்வுகளையும் பதிவு செய்பவர்.

'கவிதைகள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இலக்கியத்தில் கவிதை என்பது வேறு சிறுகதை நாவல்கள் போன்ற மற்றவைகள் எல்லாம் வேறு' என்றார். மேற்குடி இலக்கியமாக இருந்த சங்க இலக்கிய காலகட்டத்தில் நாற்பதிற்க்கும் மேற்பட்ட பெண் கவிஞர்கள் இருந்தார்கள். இன்றுள்ள மக்கள் தொகைக்கு குறைந்தது நான்காயிரம்பேராக இருக்க வேண்டும். தமிழின் பெண்ணிய சிந்தைனையோடு வந்த
அலையில் குட்டி ரேவதி, சுகிர்தாராணி, சல்மா, லீனா மணிமேகலையென மட்டற்ற சுதந்திரத்தை தமதாகிக் கொண்டு பெண் கவிஞ்ர்கள் வந்தார்கள். அவர்களை அடுத்து சொல்லிக் கொள்ள பெண்கவிஞர்களிடம் இன்று ஒரு வெற்றிடம் வந்து விட்டது.

"பெண்ணிய சிந்தனையை கவிஞர்கள் ஒரு இயக்கமாக எடுத்துச் செல்ல தவறி விட்டோமோவெனத் தோன்றுகிறது. அன்றைய காலகட்டத்தில் இன்று இலக்கிய மேதமைகளாக வலம் வருபவர்கள் வாசகனை குழப்பச் செய்தார்கள். இது கவிதைகள் அல்லவென்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள்" என்றார். வெங்கட் சுவாமிநாதனுடன் ஒருமுறை உரையாடிக் கொண்டிருந்தபோது, கவிதையில் பெண்களின் உடல் மொழிகள், பால் உணர்ச்சிகள் கவிதையில் வருவதை கதைத்துக் கொண்டிருந்தோம். "பெண்கள் தம் உண்ர்வுகளைக் கவிதைகளாக்குவது தவறல்ல, வரவேற்க கூடியது ஆனால் அவை வலிந்து திணித்த‌வொரு முழக்கமாக இருக்க கூடாது" என்றார். வானம்பாடிகள் போல் ஆகி விடக்கூடாது என்கிற தொனி மட்டும் அதில் இருந்தது. எழுபது வயதை கடந்தவருக்கும் இன்றைய இளைஞர்களுக்கும் இல்லாத பொய்யான கட்டுக்கோப்பை நாற்பதை தாண்டிக் கொண்டு நிற்கும் இலக்கிய அப்பாக்கள் நிலை நாட்ட விரும்புகிறார்கள்.

குட்டி ரேவதிக்கு தமிழில் மிகப் பிடித்த கவிஞர் பிரமிள்." பிரமிளின் கவிதைகள் உள் நுழைவதற்கு முதலில் கடினமாக இருக்கும் அதன் பின்னர் அவருக்குள் பயணித்துக் கொண்டே இருக்கலாம். இன்றைய நவீன சிந்த‌னைகள் அனைத்தும் அவர் கவிதைகளில் இருக்கும்" என்றார். அடுத்துப் பிடித்த கவிஞர் தேவததேவன். மற்றொருவர் எம்.டி ராஜ்குமார். இவர் மாய எதார்த்தவாதத்தில் கவிதைகள் எழுதுபவர். ஈழத்துப் பெண் கவிஞர்களிடம் அதிக ஈடுபாடு கொண்டவராக‌ இருந்தார்." கவிதைகளில் ஈழத்துப் போர்ச் சூழல் காரணமாக அவர்களிடம் இருக்கும் வீச்சு நம் தமிழக பெண் கவிஞர்களிடம் இல்லை" என்றார். குட்டி ரேவதிக்குப் பிடித்த ஈழ்த்துப் பெண் கவிஞர்கள் "அனார், ஃபகிமா ஜகான், தில்லை, பானு பாரதி".

யார் தொடங்கியிருப்பார் ஆதி மனிதனில் இருந்து இந்த கதை சொல்லல் மரபை! ஒவியம், கூத்து, சிறுகதை, நாடகம் , நாவல்கள் கலையின் ஒவ்வொரு வடிவமும் கதை சொல்லலின் இருந்தே தன் பிறப்பு முறையை தேர்ந்தெடுத்திருக்கிறது. முடிவற்ற இந்த சங்கிலியின் சேர்க்கை வரலாறாகவும் பதிவு செய்யப்படுகிறது. சற்று விலகியிருந்து பார்த்தால் கதைகள் இதிகாசங்களாகவும் வேத நூல்களாகவும் உருவெடுத்து கதை மாந்தர்கள் கடவுள்கள் உப கடவுள்களாகவும் அந்தந்த பாத்திரங்களின் வசனங்கள் வேத வசனங்களாகவும் வாழ்க்கை நெறிமுறையை பின்பற்ற கடவுள் ஒதியவையாக ஆக்கப்பட்டிருக்கின்றன். கதைகளை கேட்டுக் கொண்டே இருக்கிறோம். கதைகளும் தீர்வதில்லை. கேட்டும் அலுப்பதில்லை. வாழ்வின் நிகழ்வுகளெல்லாம் வரலாறாக கதையாடிக் கொண்டே இருக்கிறது. வரும் சந்ததிக்கெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கிறோம். தொடரோட்டமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது இந்தச் செயல்.

கதை சொல்வதில் என்றும் பெண்களுக்கு அடுத்ததாகவே ஆண்கள் இருக்க முடியும் என்பதை நிரூபித்தார் குட்டி ரேவதி. கதை சொல்லிக்காக நேரம் ஒதுக்க இயலாததால் சந்திப்பு சில நாட்கள் தள்ளிக் கொண்டே சென்றது. 'தமிழ்ஸ்டூடியோ அலுவலகத்திற்கே வந்து கதை பதிவு செய்யலாம்' என்றார். அதன்படி ஞாயிறு பின்னேரம் குறிப்பிட்ட நேரத்திற்கு சரியாக வந்திருந்தார். கதை சொல்லத் தொடங்கும் முன் " மானசி(பவா செல்லதுரையின் குட்டி மகள்) மாதிரி எனக்கு கதை சொல்லத் தெரியாது , அவங்க பெரிய ஆள்,எனக்குத் தெரிஞ்சத நான் சொல்றேன்" என்றார்.கதை சொல்லலும் ஒரு கலை. எல்லோராலும் அது முடிவதில்லை.குட்டி ரேவதி ஆக‌ச் சிறந்த கதை சொல்லிகளில் ஒருவர்.

'க‌தை சொல்வ‌தில் ரொம்ப‌ ஆர்வ‌ம் என‌க்கு. க‌தை சொல்ல‌ மிக‌ மிக‌ பிடிக்குமென. நம்மிடம் வழக்கொழிந்து போன மரபை மீட்டுக் கொண்டு வர வேண்டுமெனச் சொன்னார்' குட்டி ரேவ‌தி. ஆனால் குட்டி ரேவ‌தி சிறிய‌ குட்டிக் குட்டிக் க‌தைக‌ளை ம‌ட்டும் சொன்னார் முத‌ல் காண‌லில். ஒரு தேர்ந்த‌ க‌தை சொல்லியின் குர‌லோடு க‌தைக‌ளின் இழைந்தாடும் த‌ன்மையை அழ‌கோடு கொண்டு வ‌ந்தார். ஒருவித‌ ல‌யிப்பு ஒட்டிக் கொண்ட‌து அவ‌ர் க‌தைக‌ளைக் சொல்ல‌ச்சொல்ல‌ கேட்கும் பொழுது.கதைகளின் சரளம் எங்கும் அவருக்கு மட்டுப் ப‌டவில்லை. தொடர்ச்சியாக கதைகளின் வரிகள் பாய்ச்சலோடு வந்து கொண்டிருந்து.ஒரு தியானத்தை முடித்த பேரமைதி மனதுக்குள் வந்து விட்டிருந்தது அவர் கதைகளை கேட்ட போது.

க‌தைக‌ளின் தாக‌த்திற்கு போதுமான‌தாக‌ இல்லை அவ‌ரின் குட்டிக் க‌தைக‌ள். சிறிய‌ வேண்டுகோள் வைக்க‌ அவ‌ரும் ஆர்வ‌மாக இருந்ததால் மிக‌ நீண்ட‌ க‌தையொன்றை குறுந்த‌க‌ட்டில் ப‌திவு செய்து கொடுத்தார்.

குட்டி ரேவ‌தியின் க‌தைக‌ளைக் கேட்க‌ கீழே உள்ள‌ ப்ளே ஐக்கானை த‌ட்டுங்க‌ள்.

(கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் திங்களன்று வெளிவரும்)

-------------------------------------------------------------------------------------------------------------------------------

 

குட்டி ரேவதி கதைகள் - வானம் ஏன் மேலே போனது (விஜயலட்சுமி சேகர்)

 

நிமிடம்: 02 --  நொடி: 59

 



குட்டி ரேவதி கதைகள் - ஐசுக்குட்டி (வைக்கம் முகமது பஷீர்)
நிமிடம்: 06 --  நொடி: 38

 
குட்டி ரேவதி கதைகள் - விடுதலை (பாமா)
நிமிடம்: 05 --  நொடி: 19
 
-------------------------------------------------------------------------------------------------------------------------------
 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </