வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

கி.ராஜநாராயணன்

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.

 

 

 

 
     
     
     
   
கதை சொல்லி
1
 
 

தமிழ்மகன்

தமிழ்மகன் சென்னையில் 1964- ல் பிறந்தவர். தற்போது தினமணியில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இளைஞர் ஆண்டையொட்டி, 1984- ல் டி.வி.எஸ்.நிறுவனமும் இதயம் பேசுகிறது இதழும் இணைந்து நடத்திய போட்டியில் இவரது "வெள்ளை நிறத்தில் ஒரு காதல்" நாவல் முதல் பரிசு பெற்றது. 1996- ல் "மானுடப் பண்ணை" என்ற நாவல் தமிழக அரசின் விருது பெற்றது.

சுஜாதா அறிவியல் புனைகதை போட்டியில் இவருடைய கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. 'சொல்லித் தந்த பூமி' (1997), "ஏவி.எம். ஸ்டூடியோ ஏழாவது தளம" (2007) ஆகிய நாவல்களும் "எட்டாயிரம் தலைமுறை" (2008), "சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்" (2006) ஆகிய சிறுகதை தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.

 
     
     
     
     
     
     
 

 

 

 
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  கதை சொல்லி

 

 
 

கதை சொல்லி - தமிழ்மகன்

கதை சொல்லி பகுதியை பல மாதங்களாக மனதில் தேக்கி வைத்திருந்தாலும், அதற்கான முதல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் திரு. தமிழ்மகன் அவர்கள். கதை சொல்லிப் பகுதியின் நோக்கம், மற்றும் கதை சொல்லியின் செயல்கள் பற்றி சொன்னதும் உடனடியாக அதனை செயல்படுத்த விழைந்தவர் அவர். இந்தக் கதை சொல்லிப் பகுதியின் ஒலிப்பதிவின்போது சிறு சப்தங்கள் கூட மிக நுட்பமாக கேட்கும் என்பதால் தனது வீட்டில் பல சிரமங்களுக்கிடையில் (மின் விசிறிக் கூட பயன்படுத்தாமல்) அதனை சிறப்பாக முடித்துக் கொடுத்தார். அவர் சொல்லியிருக்கும் ஐந்துக் கதைகளும் மிக சிறப்பாக வந்துள்ளன. அதுவும் தமிழ் மகன் போன்ற கதாசிரியர்கள் குரலில் இதுப் போன்ற கதைகளை நாம் கேட்பது உண்மையில் தொழில்நுட்பம் மூலம் நமக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம்தான். எல்லாவற்றிற்கும் மேல் தமிழ் மகன் அவர்களின் குரலின் கம்பீரத்தில் இந்தக் கதைகளை கேப்பது நமக்கு நிச்சயம் ஒரு பரவச நிலையை கொடுக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. நான் தமிழ்மகன் பேசுறேங்க.. எனும்போதே தொடங்கும் அவரது குரலின் கம்பீரம் கதைகள் முடியும் வரை சற்றும் பிசிறின்றி முடிந்திருப்பது அவரின் பலம். இந்தக் கதைகளை அவரின் குரலில் கேட்கும்போது நமக்கு ஏற்படும் அனுபவம் அலாதியானது.



தமிழ்மகன் கதைகள் - இரண்டு கடிதங்கள்

 

நிமிடம்: 07 --  நொடி: 45

 



தமிழ்மகன் கதைகள் - எட்டாயிரம் தலைமுறை

 

நிமிடம்: 09--  நொடி: 08

 



தமிழ்மகன் கதைகள் - கூட்டத்தில் கடைசி ஒருவன்

 

நிமிடம்: 10 --  நொடி: 00

 

தமிழ்மகன் கதைகள் - குரல்

 

நிமிடம்: 04 --  நொடி: 41

 

தமிழ்மகன் கதைகள் - வார்த்தையுள் ஒளிந்திருக்கும் கிருமி

 

நிமிடம்: 07 --  நொடி: 31

 

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

    </